கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, April 30, 2021

ஆறாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 15 விடைக்குறிப்பு 6th BRIDGE COURSE TAMIL WORKSHEET 15 ANSWER KEY

ஆறாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 14 விடைக்குறிப்பு 6th BRIDGE COURSE TAMIL WORKSHEET 14 ANSWER KEY

ஆறாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 13 விடைக்குறிப்பு 6th BRIDGE COURSE TAMIL WORKSHEET 13 ANSWER KEY

ஆறாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 12 விடைக்குறிப்பு 6th BRIDGE COURSE TAMIL WORKSHEET 12 ANSWER KEY

ஆறாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 11 விடைக்குறிப்பு 6th BRIDGE COURSE TAMIL WORKSHEET 11 ANSWER KEY

Thursday, April 29, 2021

ஆறாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 10 விடைக்குறிப்பு 6th BRIDGE COURSE TAMIL WORKSHEET 10 ANSWER KEY

ஆறாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 9 விடைக்குறிப்பு 6th BRIDGE COURSE TAMIL WORKSHEET 9 ANSWER KEY

ஆறாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 8 விடைக்குறிப்பு 6th BRIDGE COURSE TAMIL WORKSHEET 8 ANSWER KEY

ஆறாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 7 விடைக்குறிப்பு 6th BRIDGE COURSE TAMIL WORKSHEET 7 ANSWER KEY

ஆறாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 6 விடைக்குறிப்பு 6th BRIDGE COURSE TAMIL WORKSHEET 6 ANSWER KEY

ஆறாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 5 விடைக்குறிப்பு 6th BRIDGE COURSE TAMIL WORKSHEET 5 ANSWER KEY

ஆறாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 4 விடைக்குறிப்பு 6th BRIDGE COURSE TAMIL WORKSHEET 4 ANSWER KEY

Wednesday, April 28, 2021

ஏழாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 10 விடைக்குறிப்பு 7th BRIDGE COURSE TAMIL WORKSHEET 10 ANSWER KEY

ஏழாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 9 விடைக்குறிப்பு 7th BRIDGE COURSE TAMIL WORKSHEET 9 ANSWER KEY

ஏழாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 8 விடைக்குறிப்பு 7th BRIDGE COURSE TAMIL WORKSHEET 8 ANSWER KEY

ஏழாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 7 விடைக்குறிப்பு 7th BRIDGE COURSE TAMIL WORKSHEET 7 ANSWER KEY

ஏழாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 6 விடைக்குறிப்பு 7th BRIDGE COURSE TAMIL WORKSHEET 6 ANSWER KEY

ஏழாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 5 விடைக்குறிப்பு 7th BRIDGE COURSE TAMIL WORKSHEET 5 ANSWER KEY

ஏழாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 4 விடைக்குறிப்பு 7th BRIDGE COURSE TAMIL WORKSHEET 4 ANSWER KEY

Tuesday, April 27, 2021

எட்டாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 10 விடைக்குறிப்பு 8th BRIDGE COURSE TAMIL WORKSHEET 10 ANSWER KEY

எட்டாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 9 விடைக்குறிப்பு 8th BRIDGE COURSE TAMIL WORKSHEET 9 ANSWER KEY

எட்டாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 8 விடைக்குறிப்பு 8th BRIDGE COURSE TAMIL WORKSHEET 8 ANSWER KEY

எட்டாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 7 விடைக்குறிப்பு 8th BRIDGE COURSE TAMIL WORKSHEET 7 ANSWER KEY

எட்டாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 6 விடைக்குறிப்பு 8th BRIDGE COURSE TAMIL WORKSHEET 6 ANSWER KEY

Monday, April 26, 2021

தேசியக் கல்விக் கொள்கை 2020 தமிழில் pdf NATIONAL EDUCATION POLICY 2020 IN TAMIL

பதிவிறக்கு/DOWNLOAD

எட்டாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 5 விடைக்குறிப்பு 8th BRIDGE COURSE TAMIL WORKSHEET 5 ANSWER KEY

எட்டாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 4 விடைக்குறிப்பு 8th BRIDGE COURSE TAMIL WORKSHEET 4 ANSWER KEY

எட்டாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 3 விடைக்குறிப்பு 8th BRIDGE COURSE TAMIL WORKSHEET 3 ANSWER KEY

தமிழும் அலைப்பேசியும் தமிழில் அலைப்பேசி கலைச்சொற்கள் CELL PHONE GLOSSARIES IN TAMIL

எட்டாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 2 விடைக்குறிப்பு 8th BRIDGE COURSE TAMIL WORKSHEET 2 ANSWER KEY

எட்டாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 1 விடைக்குறிப்பு 8th BRIDGE COURSE TAMIL WORKSHEET 1 ANSWER KEY

Sunday, April 25, 2021

ஆறாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 3 விடைக்குறிப்பு 6th BRIDGE COURSE TAMIL WORK SHEET 3 ANSWER KEY

ஆறாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 2 விடைக்குறிப்பு 6th BRIDGE COURSE TAMIL WORK SHEET 2 ANSWER KEY

ஆறாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 1 விடைக்குறிப்பு 6th BRIDGE COURSE TAMIL WORKSHEET 1 ANSWER KEY

ஏழாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 3 விடைக்குறிப்பு 7th BRIDGE COURSE TAMIL WORK SHEET 3 ANSWER KEY

ஏழாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 2 விடைக்குறிப்பு 7th BRIDGE COURSE TAMIL WORK SHEET 2 ANSWER KEY

ஏழாம் வகுப்பு தமிழ் பயிற்சித்தாள் 1 விடைக்குறிப்பு 7th BRIDGE COURSE TAMIL WORK SHEET 1 ANSWER KEY

Saturday, April 24, 2021

நிலம் பொது எட்டாம் வகுப்பு தமிழ் உரைநடை குறுவினா விடை 8th TAMIL URAINADAI ULAGAM NILAM POTHU KURUVINA

Class2|வகுப்பு2| தமிழ்|இணைப்புப்பாடப்பயிற்சி|Br course|உயிர், உயிர்மெய்யெழுத்துகள்

Cla2|வகுப்பு2|தமிழ்|இணைப்புப்பாடப்பயிற்சி|Br.course|உயிரெழுத்துகள்,மெய்யெழுத்துகள்

Class 3|வகுப்பு3| தமிழ்|இணைப்பு பாடப்பயிற்சி|Bridge course|குறில்-நெடில்...

Class 3|வகுப்பு3| தமிழ்|இணைப்புப்பாடப்பயிற்சி |Bridge course|உகர,ஊகார எழுத்துகள்

Cla5|வகு5|தமிழ்|இணைப்பாடப்பயிற்சி|Br course|சொற்றொடர்அமைத்தல்

Class 5|வகுப்பு 5| தமிழ்|இணைப்புப்பாடப்பயிற்சி | Bridge course |எழுவாய், பயனிலை

Class7|வகுப்பு7| தமிழ்|இணைப்புப்பாடப்பயிற்சி|Bridge course| ஆசியஜோதி

Class 8 |வகுப்பு 8 | தமிழ் |இணைப்புப்பாடப்பயிற்சி |Bridge course|வாக்கிய அமைப்பு

Class 8 |வகுப்பு 8| தமிழ்|Bridge Course|இணைப்பு பாடப்பயிற்சி |எழுத்துவகை

மே 1 உழைப்பாளர் நாள் வினாடிவினா மின்சான்றிதழுடன் இயங்கலைத்தேர்வு TAMIL ONLINE QUIZ WITH E-CERTIFICATE FOR MAY DAY

 

Wednesday, April 21, 2021

பத்தாம் வகுப்பு தமிழ் 50 மதிப்பெண்கள் வினாத்தாள் அலகுத்தேர்வு 9 இயல் 9 TENTH TAMIL UNIT TEST 9 QUESTION PAPER

பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு 8 இயல் 8 வினாத்தாள் 50 மதிப்பெண்கள் TENTH TAMIL UNIT TEST 8 QUESTION PAPER

பத்தாம் வகுப்பு தமிழ் 50 மதிப்பெண்கள் வினாத்தாள் அலகுத்தேர்வு 7 இயல் 7 TENTH TAMIL UNIT TEST 7 QUESTION PAPER

பத்தாம் வகுப்பு தமிழ் 50 மதிப்பெண்கள் வினாத்தாள் அலகுத்தேர்வு 6 இயல் 6 TENTH TAMIL UNIT TEST 6 QUESTION PAPER

பத்தாம் வகுப்பு தமிழ் 50 மதிப்பெண்கள் வினாத்தாள் அலகுத்தேர்வு 5 இயல் 5 TENTH TAMIL UNIT TEST 5 QUESTION PAPER

பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு 4 இயல் 4 வினாத்தாள் 50 மதிப்பெண்கள் TENTH TAMIL UNIT TEST 4 QUESTION PAPER

பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு 3 வினாத்தாள் 50 மதிப்பெண்கள் TENTH TAMIL UNIT TEST 3 QUESTION PAPER

பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு 2 இயல் 2 வினாத்தாள் 50 மதிப்பெண்கள் TENTH TAMIL UNIT TEST 2 QUESTION PAPER

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 அலகுத்தேர்வு 1 வினாத்தாள் 50 மதிப்பெண்கள் TENTH TAMIL QUESTION PAPER UNIT TEST 1

Wednesday, April 14, 2021

தர்ம கணக்கு - குட்டிக்கதை tamil kutty kathai short story

ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் இரண்டு வழிப் போக்கர்கள் அமர்ந்திருந்தனர். இரவு நேரம்…, பெருத்த மழை வேறு..., அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் "நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள்.

சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர்.

இருவரில் முன்னவர் சொன்னார், என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றார், ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள், இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார்.

 மூன்றாம் நபர், இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன், என்றார். ( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!)

நீங்கள் உங்கள் ரொட்டிகளை, ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்துக் கொள்ளலாம் என்றார். 

இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்…

ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்...

பொழுது விடிந்தது, மழையும் நின்றது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது, உங்கள் உதவிக்கு மிக்க நன்றி, என்று சொல்லி எட்டு தங்க நாணயங்களைக் கொடுத்து, நீங்கள் உங்களுக்குள் பிரித்துக் கொள்ளுங்கள், என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளைக் கொடுத்தவர், அந்த காசுகளைச் சமமாகப்பிரித்து, ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார்.

மற்றவர் இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்.
ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(3:5)

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை, என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும், நான் பங்கிட சம்மதித்தேன்…

நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது, என்றாலும் பரவாயில்லை, சமமாகவே பங்கிடுவோம் என்றார்.

முடிவு எட்டாததால், வழக்கு அரச சபைக்கு சென்றது. அரசனுக்கு யார் சொல்வது சரி, என்று புரியவில்லை. நாளை தீர்ப்பு சொல்வதாய் அறிவித்து, அரண்மனைக்குச் சென்றான். 

மன்னருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது…

அடுத்த நாள் சபை கூடியது. மன்னர் இருவரையும் அழைத்தார்.

மூன்று ரொட்டிகளைக் கொடுத்தவருக்கு ஒரு காசும், ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.

ஒரு காசு வழங்கப்பட்டவர், "மன்னா...!  இது அநியாயம். அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக் கொன்டார்" என்றார்.

அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது. ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. அதற்கு இதுவே அதிகம் . அவர் தருமம் செய்தது ஏழு துண்டுகள். ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன்(1:7) என்றார்...

ஆம் ! தரும கணக்கு இப்படி துல்லியமாகத்தான் இருக்கும்…

Sunday, April 11, 2021

தமிழில் நிறுத்தக் குறிகளைப் பயன்படுத்துவது எப்படி? tamilil niruthakurikalai payanpaduthuvathu eppadi

நிறுத்தக்குறிகள்

காற்புள்ளி ( , )
 

பொருள்களை எண்ணும் இடங்களில்  பின்னும், மேற்கோள் குறிகளுக்கு முன்னும், ‘ஆதலால்’ ‘ஆகவே’ ‘எனவே’ முதலான சொற்களுக்குப் பின்னும், முகவரியில், இறுதி வரி நீங்க ஏனைய வரிகளின் இறுதியிலும் காற்புள்ளி இடவேண்டும்.
 

அரைப்புள்ளி( ; )
 

ஒரே எழுவாயில்,  பல தொடர்கள் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும்,  ஒரே எழுவாய்க்கு உரிய உடன்பாட்டுக் கருத்தும் எதிர்மறைக் கருத்தும் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும் அரைப் புள்ளி  இடவேண்டும்.
 

முக்காற்புள்ளி ( : )
 

உள் தலைப்பு அமைக்கும்போதும், ஒருவர் கூற்றை விளக்கும் இடத்திலும் முக்காற்புள்ளி  இடவேண்டும்.
 

முற்றுப்புள்ளி ( . )
 

தொடரின் முடிவிலும் முகவரி இறுதியிலும் சொற் சுருக்கத்திலும் முற்றுப் புள்ளி  இடவேண்டும்.
 

வினாக்குறி ( ? )
 

வினாப் பொருளைத் தரும் தொடரின் இறுதியில் வினாக்குறி இடுதல் வேண்டும்.
 

 வியப்புக்குறி ( ! )
 

வியப்பு,  அவலம் முதலான உணர்ச்சிகளைக் காட்டுகின்ற தொடர்களுக்குப் பின்னும் வரவேற்றல், வாழ்த்தல்,  வைதல் ஆகிய பொருள்களைத் தெரிவிக்கின்ற தொடர்களுக்குப் பின்னும் வியப்புக்குறி  இடுதல் வேண்டும்.
 

ஒற்றை மேற்கோள் குறி ( ‘ )
 

ஏதேனும் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இடங்களிலும்,  சிறப்புக் காரணம் கருதி ஏதேனும் ஒரு சொல்லை அல்லது தொடரைக் குறித்துக் காட்டுகின்ற இடங்களிலும் ஒற்றை மேற்கோள் குறி  இட வேண்டும்.
 

இரட்டை மேற்கோள் குறி ( ‘‘ )
 

தன் கூற்றை வலியுறுத்த,  தன்னினும் சிறந்தோர் கூறியவற்றை எடுத்து ஆளுகின்ற இடங்களிலும் பிறர் கூற்றைக் கூறும் இடங்களிலும் இரட்டை மேற்கோள் குறி  இடுதல் வேண்டும்.
 

செருகற்குறி ( ^ )
 

                                      ப்               க்

 ‘தஞ்சையில் தமிழ் பல்கலை கழகம் உள்ளது’ 

                                       ^                 ^
 

இவ்வாறு, ஒரு தொடரில் விடுபட்ட எழுத்துகளைக் காட்டவேண்டிய இடங்களில் செருகற் குறி  வரும்.
 

 விடுபாட்டுக்குறி (- - - - - - - - - -)
 

- - - - - - - - - - - - - - - - - - - - - 

- - - - - - - - - - - - - - - - - - - - -  

மாட்சியில் பெரியோரை வியத்தலு மிலமே 

சிறியோரை இகழ்தல் அதனிலு மிலமே.
 
என்பது புறநானூறு.



நிறுத்தற்குறிகள் அறிவோம்…!!!

1. காற்புள்ளி (,)
2. அரைப்புள்ளி( ; )
3. முக்காற்புள்ளி (:)
4. முற்றுப்புள்ளி ( . )
5. வினாக்குறி (?)
6. உணர்ச்சிக்குறி (!)
7. இடையீட்டுக்குறி ( – )
8. பிறைக்குறி அல்லது அடைப்புக்குறி ( () )
9. ஒற்றை மேற்கோள்குறி (‘ ‘)
10.இரட்டை மேற்கோள்குறி (” “)
11. விழுக்காடு குறி (%)
12. விண்மீன் குறி (*)
13. வலம் சாய்க்கோடு (/)
14. இடம் சாய்க்கோடு (\) 15.கொத்துக்குறி(#)
16. தொப்பிக்குறி(^)

காற்புள்ளி
1)           பொருட்களைத் தனித்தனியே கூறும்போது காற்புள்ளி இடவேண்டும்.
அ) தாய், தந்தை, தமையன், தங்கை என்னும் நால்வர் வீட்டில் உள்ளனர்.
ஆ) நான் வங்கிக்குச் சென்று, பணத்தை எடுத்து, பின்பு கடையில் சில பொருட்கள வாங்கிக் கொண்டு, வரும்வழியில் கோவிலுக்கும் சென்றுவந்தேன்.
இ) ஆடுகள், மாடுகள், நாய்கள், கோழிகள் ஊரில் வாழ்கின்றன.
2)           விளிப்பெயர்களை அடுத்து, காற்புள்ளி இடவேண்டும்.
அ) ஆருயிர்த் தந்தையே, வணக்கம்
ஆ) இன்பத்திலும், துன்பத்திலும் இணைபிரியா நண்பரே, வருக.

3) வினை எச்சத்திற்குப்பின் பொருள் விளக்கத்தைக் கருதி, காற்புள்ளி இடவேண்டும்.
அ) கண்ணன் அண்ணனைப் பார்த்து, ‘ உங்கள் வரவை நெடுநேரம் எதிர்பார்த்து நிற்கின்றேன்’ என்றான்.
ஆ) ஒருவன் நன்றாகப் படித்து முடித்தபின், பரீட்சைக்குப் பயப்படமாட்டான்.
4) இணைமொழிகளுக்கு இடையில் காற்புள்ளி இடவேண்டும்.
அ) மேலோர் கீழோர், அரசன் ஆண்டி என்ற பாகுபாடு காலனிடம் இல்லை.
5) ஆனால்,ஆயின், ஆகையால், எனவே,  போன்ற சொற்களுக்கு முன் காற்புள்ளி அவசியம்.
அ) கந்தன் மிக நல்லவன் ; ஆனால் , அவன் படிப்பில் குறைந்தவன்.
ஆ) வள்ளுவர் மிகச் சிறந்த ஞானியே; ஆனால் அவர் தம்மை உலகிற்கு அறிவிக்காமல் போனது பெருங்குறையே.
இ) இளமையில் கல்வி சிலையில் எழுத்து; ஆகையால், சிறுவயது தொட்டே சிரத்தையுடன் கல்விகற்கவேண்டும்.

🔹அரைப்புள்ளி

1) பல செயல்களைக் குறிக்கும் ஓர் எழுவாய் வரும்போது அரைப்புள்ளி இடவேண்டும்.
அ) கோவலன் கொலையுண்டதைக் கேட்ட கண்ணகி எழுந்தாள் ;  மதுரை மாநகர் வீதி வழியே சென்றாள் ; அரண்மனை வாயிலை அடைந்தாள் ; காவலனிடம் தன் கருத்தை விளக்கினாள் ; அரசன் ஆணையால் அவனைக் கண்டாள்.
ஆ) பண்டை இலக்கியங்கள் அனைத்தும் சிறந்தனவே; ஆனால், அவை எளிய நடையில் அமைந்தன என்று கூறல் இயலாது.

🔹முக்காற் புள்ளி

1)சொற்றொடரில் கூறிய ஒன்றை விரித்துக் கூறும்போது முக்காற்புள்ளி இடவேண்டும்.
அ) பால் ஐந்து வகைப்படும்: ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால்,பலவின்பால் என்பன.
ஆ) பொருள் கூறுக: கோன், மஞ்சு, குஞ்சரம்.
இ) முத்தமிழ்: இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.

🔹முற்றுப்புள்ளி

1)சொற்றொடர்கள் பொருளால் முற்றுப்பெற்றல் என்பதை அறிவிக்க முற்றுப்பெறல் என்பதை அறிவிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.
அ) அன்பும் பண்பும் அமைந்ததே இல்வாழ்க்கை.
ஆ) நான் நேற்று என் பிறந்தநாளைக் கொண்டாடினேன்.
2) சொற்குறுக்கத்தையும் (திரு.) பெயர்க்குறுக்கத்தையும் (ம.ப.பா.) அறிவிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.
வினாக்குறி
வினாப்பொருளைத் தரும் சொற்றொடர்களுக்குப் பின் வினாக்குறி இடுதல் வேண்டும்.

🔹உணர்ச்சிக்குறி

1)மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் போன்ற உணர்ச்சி உரைகளுக்குப் பின் உணர்ச்சிக்குறி இடுதல் வேண்டும்.
அ) போட்டியில்  எனது நண்பர் வென்றுவிட்டார்!  (மகிழ்ச்சி)
ஆ) எனது உறவினர் ஒருவருடன் இப்பொழுததான் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தேன். அதற்குள் அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்துவிட்டதே! (வியப்பு)
இ) கொடியவன் ! கொடியவன் ! (அச்சம்)
இடையீட்டுக் குறி     (          )      ]
ஒரு சொற்றொடரின் இடையில் கருத்தை நன்கு விளக்கும் பொருட்டு, அச் சொற்றொடருடன் தொடர்புற்ற தனிக்கூற்றுச் சொற்களை அடக்கி எழுதும்போது, அவ்வாறு அடங்கி இருப்பதைக் காட்ட, அத் தனிக்கூற்றின் இருபக்கங்களிலும், இவ்வாறு சிறுகோடு அல்லது பிறைக்குறி, அல்லது பகர வளைவுக்குறி இடுதல் வேண்டும்.
அ) திருக்குறள் தமிழகத்திற்கு (ஏன் உலகத்திற்கே) பெருமை தேடித்தருகின்றது.
ஆ) சிற்றம்பலத்திற்கு இன்றோடு பன்னிரண்டு அகவை (ஆண்டு) நிறைவுற்றது.
இ) இயற்கைப் பண்பாட்டோடு வாழ்கின்றவர், உலகத்தையே பரிசாகக் கொடுத்தாலும் ஒழுக்கத்தினின்று தவறமாட்டார்.

பிறைக்குறி

மொழிபெயர்க்கும் போதும், அருஞ்சொற்பொருளை விளக்கும்போதும், சிறுபிரிவுகளை எண்ணிக்கொண்டு வரும்போதும், பிறைக்குறி இடவேண்டும். இக்குறியை இடைப்பிறவரல் என்றும் கூறுவர்.
அ) பேச்சுத்திறன் (oratory) மாணவரிடம் இருத்தல் வேண்டும்.

இரட்டை மேற்கோள் குறி

பொன்மொழிகளை மேற்கோளாகக் காட்டும்போதும், நேர்கூற்றிற்கு முன்னும் முடிவிலும், இரட்டை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
‘அறஞ்செய்ய விரும்பு’ என்று ஒளவையார் கூறியுள்ளார்.

ஒற்றை மேற்கோள் குறி

இரட்டை மேற்கோள் குறிகளுக்கு இடையில் மேற்கோள் வரும்போது ஒற்றை மேற்கோள் குறி
இடுதல் வேண்டும். எழுத்துகளையோ சொல்லையோ, ஒருவர் கருத்தில் சிறு பகுதியையோ எடுத்தாளும்போது ஒற்றை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.
(அ)  ‘அ, இ, உ’    –  இவை மூன்றும் சுட்டெழுத்துகள்.

Saturday, April 10, 2021

வேதியியல் 12 ஆம் வகுப்பு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் CHEMISTRY 12TH QUESTION PAPER VIRUDHUNAGAR DISTRICT

இயற்பியல் 12 ஆம் வகுப்பு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் PHYSICS 12TH QUESTION PAPER VIRUDHUNAGAR DISTRICT

கொரனா கால கதாநாயகர்கள் தமிழ்க்கட்டுரை - உரை CORONA KAALA KATHANAYAKARKAL TAMIL KATTURAI URAI

கொரோனா கால கதாநாயகர்கள் தமிழ்க்கட்டுரை CORONA KAALA KATHANAYAKARKAL TAMIL ESSAY

கொரோனா கால கதாநாயகர்கள் தமிழ்க் கட்டுரை CORONA KAALA KATHANAYAKARKAL TAMIL ESSAY

 பதிவிறக்கு/DOWNLOAD 

Sunday, April 04, 2021

தேர்தல் பணி வெற்றிகரமாக முடிய 50 செயல்பாடுகள்


1. காலை *9.30* மணிக்குத் தேர்தல் பணிமனைக்குச் செல்லவும்.

2. தேர்தல் தொடர்பான *இறுதி அறிவுரைகளைக்* கேளுங்கள். ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளவும்.

3. மண்டல அலுவலரின் *அலைபேசி எண்ணைப்* பெறவும்.

4. உங்கள் வாக்குச்சாவடியின் *இருப்பிடம்*, *வழி*, *அலுவலர்கள்* போன்றவற்றை உங்கள் *தனிப்பட்ட நாட் குறிப்பில்* குறித்துக் கொள்ளவும்.

5. இயன்றால், அலுவலர்கள் *இணைந்து*, வாக்குச்சாவடி செல்லவும்.

6. வாக்குச்சாவடி செல்ல, *போக்குவரத்து வசதி* செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

7. இருப்பினும், தனிப்பட்ட வாகனங்களில் செல்வது *நலம்*.

8. வாகனங்களில் *காற்று*, *எரிபொருள்* போன்றவற்றைச் சரிபார்க்கவும்.

9. வாக்குச்சாவடியை அடைந்ததும், உள்ளூர் *VAO* , *RI* போன்றோரைச் சந்தித்து, *தளவாடங்களின் அளவு*, *விளக்குகள்*, *கழிப்பிட வசதி*, *பாதுகாப்பு*, போன்றவைகளைச் சரிபார்க்கவும்.

10. அவர்களது *அலைபேசி எண்களைச்* சேகரிக்கவும்.

11. இரவு உணவு, தேர்தல் நாளன்று, உணவு, தேநீர் வழங்குதல் பற்றியும், அதற்கான *முன் பணம்*, வழங்க வேண்டிய *நேரம்* பற்றி, உறுதியாகக் கூறவும்.

12. அலுவலர்கள் உள்ளுர் கட்சி முகவர்களின்  வருகைக்குப் பின், அவர்களுக்கான *தெளிவான நெறிமுறைகள்* பற்றிக் கூறி, அவர்களது *அலைபேசி எண்களை*, நட்புணர்வோடு பெறுங்கள்.

13. மண்டல அலுவலர் வந்த பின், பொருட்களைச் *சரிபார்த்து*, வாங்கவும்.

14. *புதிய உத்தரவுகள்*, *மாறுதல்கள்* ஏதேனும் உள்ளனவா என்று அறிந்து கொள்ளுங்கள்.

15. *தேர்தல் செயலி* மூலம், தளவாடங்கள் பெற்றுக் கொண்டமைக்கு *ஒப்புகைத் தகவல்* அனுப்பவும்.

16. சிறிது ஓய்வுக்குப் பின், அலுவலர் மேசைகள், முகவர்களுக்கான *பெஞ்சுகள்*, *இயந்திரங்களுக்கான இடங்களைத்* தேர்வு செய்து, அவற்றைச் *சரியாக* அமைக்கவும்.

17. வாக்காளர் எளிதில் வந்து செல்லும் வண்ணம், முகப்புக் கதவின் குறுக்கே, *கயிற்றால்* பிரிக்கவும். (அமைத்து விட்டு, இரவில் அவிழ்த்து விடவும்)

18. *இரவில் எந்திரங்களை இயக்கிப் பார்க்க,அனுமதி இல்லை*. எனவே *முயற்சிக்க வேண்டாம்*.

19. எந்திரங்களை மண்டல அலுவலர் அனுமதித்தால், *இரவே*, சரியான இடங்களில் *அமைத்து விடவும்*.

20. அலுவலர்கள் ஒன்றாக அமர்ந்து, தேர்தல் நாளன்று செய்ய வேண்டிய நடைமுறைகளைத் *தெளிவாகத்* *திட்டமிடவும்*.

21. அனைவரும் *தெளிவாகச் செயல் படவும்*, *ஐயங்கள் தீரவும்* இது உதவும்.காற்று வீசாத, வாக்காளர் கண்களில் படுமிடங்களில் *இரவே, போஸ்டர்களை அனைவரும் சேர்ந்து, ஒட்டி விடவும்*.

22. இயன்றவரை, இரவு உணவு முடித்து, *10 மணிக்குள் உறங்கச் செல்லவும்*. (உறக்கம் வந்தால்...)

23. காலையில், *4.30* மணிக்கு எழுந்து, *தயாராக இருங்கள்*.

24. *முகவர்களின் வருகை, 5.30 க்குள்* இருந்தால் நலம்.

25. அவர்களது , *சான்றிதழ்களைச்* *சரிபார்த்து*, அவர்களுக்கான *நுழைவுச் சீட்டுகளை* வழங்கவும்.

26. மாதிரி வாக்குப்பதிவுக்குத் தயாராகி, இயன்றவரை *6.30* *மணிக்குள்* முடித்து, சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.

27. மாதிரி வாக்குப்பதிவுச் சான்றிதழ்களை நிரப்பி, *கையெழுத்துப் பெறுங்கள்*.

28. *செய்தி அனுப்பவும்*.

29. *சரியாக 7 மணிக்கு* வாக்குப்பதிவைத் தொடங்குங்கள்.

30. *செய்தி அனுப்பவும்*.

31. வாக்குப்பதிவு எண்ணிக்கையை முறையாக, உங்கள் தனிப்பட்ட நாட் குறிப்பில் குறித்து, *1 மணி* *நேரத்திற்கு ஒரு முறை* குறிக்கவும்.

32. செயலி மூலம், அவ்வப்போது விவரங்களை அனுப்ப இது *உதவிகரமாக* இருக்கும்.

33. *முகவர்களின் இருப்பை*, அவ்வப்போது சரிபார்த்து அறிவுரை வழங்கவும்.

34. அவர்களிடம் *அலைபேசி* *இல்லை* என்பதை, காவலர் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டே இருங்கள்.

35. வாக்காளர்கள் *கூட்டம் சேராமல்*, *பதட்டம் அடையாமல்*, ஒரே வேகத்தில், வாக்குப்பதிவு நடக்கட்டும்.

36. குறிப்பிட்ட கால இடைவெளிகளில், கூட்டம் குறைவான நேரத்தில், மாறி, மாறி *உணவருந்தச் செல்லவும்*.

37. *4 மணிக்குப் பின்* முகவர்கள் வெளியில் செல்ல *அனுமதி இல்லை* என்பதை, அவர்களுக்கு, முன்கூட்டியே மீண்டும் *நினைவு* *படுத்துங்கள்*.

38. *6 மணிக்கு*, சாவடியின் *கேட்டை மூடி*, நிற்கும் வாக்காளர்களுக்கு, கடைசியிலிருந்து, 1, 2 என வரிசை எண் இட்ட, *presiding officer* கையெழுத்திட்ட, *டோக்கன்களை*
காவலர் உதவியுடன் வழங்கவும்.

39. வாக்குப்பதிவு முடிந்ததும், பதிவேடு, எந்திரம் காட்டும் *எண்ணிக்கையை ஒப்பிடுங்கள்*.
(சரியாகவே இருக்கும்)

40. எந்திரங்களை, *முகவர்கள்* *முன்னிலையில்,சீலிடவும்*.

41. அவர்களுக்கான, *சான்றிதழ்களை வழங்கவும்*. படிவங்கள் போதவில்லை என்றால், படிவங்களை *நகல் எடுத்து வரச் சொல்லுங்கள்*.

42. எக்காரணம் கொண்டும், *நிரப்பிய படிவங்களை நகல் எடுக்கக் கொடுக்காதீர்கள்*.

43. மண்டல அலுவலரின் *அறிவுரையைக் கேட்டு*, VVPAT இன் மின்கலத்தைப் பிரிக்கவும்.

44. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைக் கையெழுத்திட்டு, பிற அலுவலர்களிடம் தந்து, *சரி பாருங்கள்*.

45. *பதிவேடுகளின் இறுதியில்*, *அதன் முடிப்பை எழுதிக்* *கையெழுத்திடவும்*.

46. எல்லாக் கவர்களையும், பிரித்து *அடுக்கி வைக்கவும்*.

47. சீலிட வேண்டியவற்றிற்கு *மட்டும்*, ஒட்டி, சீலிடவும்.

48. மண்டல அலுவலர் வந்ததும், முறையாக *ஒப்படைத்து, ஒப்புகை* *பெறவும்*.

49. உழைப்பூதியம் பெற்று, அலுவலர்களுக்கு *மகிழ்ச்சியுடனும்*, மன நிறைவுடனும் வழங்கி, *முகமலர்ச்சியுடனும்*, *நட்புணர்வுடனும் நன்றி கூறுங்கள்*.

50. இரவு உணவை முடித்து, புறப்பாடு பற்றிச் *சிந்திக்கவும்*. வீடு, தொலைவு எனில் சாவடியில் *தங்கிக்* *காலையில் செல்லவும்*. முடிந்தால் அலுவலர்கள் அனைவரும் *ஒன்றாகப் புறப்படுங்கள்*, நாட்டுப் பணியாற்றிய *வெற்றி வீரர்களாய்*, பாதுகாப்பாய்...

முகக்கவசம், கையுறை தேர்தல் நடைமுறை MASK, GLOVES ELECTION METHOD

விடை வகைகள் தமிழ் இலக்கணம் வகுப்பு 10 TENTH TAMIL ILAKKANAM VIDAI VAKAIKAL

தமிழ்த்துகள்

Blog Archive