கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, July 30, 2022

ஏழாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் 7th tamil I mid term model question

ஏழாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு ஆகஸ்ட் 2022 மாதிரி வினாத்தாள் 1 pdf 7th tamil I mid term model question pdf

 பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு தமிழ் மாதத்தேர்வு ஜூலை 22 தூத்துக்குடி வினாத்தாள் 10th tamil monthly exam question pdf

 பதிவிறக்கு/Download

Thursday, July 28, 2022

பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு இயல் 1 ராணிப்பேட்டை வினாத்தாள் 10th tamil unit exam question pdf

 பதிவிறக்கு/DOWNLOAD

எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் 8th tamil I mid term model question

எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு ஆகஸ்ட் 2022 மாதிரி வினாத்தாள் 1 pdf 8th tamil I mid term model question pdf

 பதிவிறக்கு/DOWNLOAD

Wednesday, July 27, 2022

Sunday, July 24, 2022

8ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 2 வெட்டுக்கிளியும் சருகுமானும் 8th model notes of lesson tamil unit 2

 

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

வகுப்பு – 8

பாடம் – தமிழ்

இயல் 2

தலைப்பு – வெட்டுக்கிளியும் சருகுமானும்

பாடத்தின் தன்மை

          விரிவானம். இயற்கை – மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ் தொகுத்த காடர்களின் கதைகளைத் தமிழாக்கம் செய்த வ.கீதாவின் யானையோடு பேசுதல் நூலில் உள்ள கதை.

கற்கும் முறை

          வாசித்தல், கேட்டல், குழுகற்றல், புரிதல், எழுதுதல், கதை சொல்லும் முறை.

துணைக்கருவிகள்

          இணைய வளங்கள்

          https://tamilthugal.blogspot.com/2021/08/2-vettukiliyum-sarukumanum-essay.html

          https://tamilthugal.blogspot.com/2021/08/2-vettukiliyum-sarukumanum-8th-tamil.html

பாட அறிமுகம்

          பஞ்சதந்திரக் கதைகள் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.

          மாணவர்கள் அறிந்த விலங்குகள் கதைகளைப் பகிரச் செய்தல்.

வாசித்தல்

          கதையை ஆசிரியர் வாசித்தல், ஆசிரியரைத் தொடர்ந்து மாணவர்களும் வாசித்தல்.

கற்றல் திறன்கள்

          மொழிபெயர்ப்புப் படைப்புகளின் மூலம் நல் உணர்வுகளை உணர்ந்து மதிக்கும் திறன்.

மனவரைபடம்


தொகுத்தல்

          சிறுத்தை பித்தக்கண்ணு, பெண் சருகுமான் கூரனைத் துரத்தி வர அதைக் கண்ட வாயாடி பச்சை வெட்டுக்கிளி அதனுடன் பேச, வாயைத் திறக்காதே என்ற கூரன் ஒளிந்துகொள்கிறது. வெட்டுக்கிளியிடம் பித்தக்கண்ணு விசாரிக்க அது தாவிக் குதிக்க புனுகுப்பூனையின் நாற்றத்தால் கூரன் தப்பித்த கதையைக் கூறுதல்.

மதிப்பீடு

          இக்கதையில்  சிறுத்தையின் பெயர் ..........................

          வெட்டுக்கிளியும் சருகுமானும் கதையைச் சுருக்கி எழுதுக.

          உனக்குப் பிடித்த விலங்குகள் கதை ஒன்றை எழுதுக.

குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

கற்றல் விளைவு

எண் – 804

தமது சுற்றுப்புறத்தில் வழங்குகின்ற நாட்டுப்புறப்பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள் ஆகியவற்றைப் பற்றிப் பேசுதல்.

தொடர்பணி

          வெட்டுக்கிளியும் சருகுமானும் கதையை நாடகமாக நடித்துக் காட்டுக.

          மாணவர்கள் விரும்பும் பஞ்ச தந்திரக் கதை ஒன்றைக் கூறச் செய்தல்.


7ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 2 பருவம் 1 இந்திய வனமகன் 7th model notes of lesson tamil india vanamakan term 1 unit 2

 

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

வகுப்பு – 7

பாடம் – தமிழ்

பருவம் 1

இயல் 2

தலைப்பு – இந்திய வனமகன்

பாடத்தின் தன்மை

          விரிவானம். இயற்கை – இந்திய வனமகன் அஸ்ஸாம் மாநிலத்தின் ஜாதவ் பயேங் அவர்களின் நேர்காணல்.

கற்கும் முறை

          வாசித்தல், கேட்டல், குழுகற்றல், புரிதல், எழுதுதல், நேர்காணல் முறை.

துணைக்கருவிகள்

          இணைய வளங்கள்

          https://tamilthugal.blogspot.com/2021/08/2-1-indiya-vanamakan-7th-katturai.html

          https://tamilthugal.blogspot.com/2019/07/7-qr-code-video_71.html

பாட அறிமுகம்

          காட்டின் பயன்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.

          மாணவர்களுக்குப் பிடித்த காடுகள் குறித்து அவர்கள் அறிந்துள்ள தகவல்களைக் கூறச் செய்தல்.

வாசித்தல்

          நேர்காணலை மாணவர்கள் வாசித்தல், உரையாடலின் பொருளை ஆசிரியர் விளக்குதல்.     

கற்றல் திறன்கள்

          நேர்காணல் வடிவத்தில் அளிக்கப்பட்ட கருத்துகளைப் படித்துணரும் திறன் பெறுதல்.

மனவரைபடம்


தொகுத்தல்

          பாம்புகள் இறந்ததைக் கண்டு காடு உருவாக்க நினைத்த ஜாதவ் பயேங் நேர்காணலை விளக்குதல். மூங்கில் மரம் வளர்த்து ஜாதுநாத் அவர்களின் கூற்றுப்படி மண்புழுக்கள், சிவப்புக் கட்டெறும்புகளைத் தீவில் விட்டு மண்தன்மையை மாற்றினார். விதைகளைத் தூவி, பானையில் துளையிட்டு நீர் ஊற்றி மரங்கள் வளர, பறவைகள், முயல், மான், காட்டு மாடுகள், யானைகள், பாம்புகள், கழுகுகள், காண்டாமிருகங்கள், புலி போன்றன வந்து தங்கிய நிகழ்வைக் கூறல்.

வலுவூட்டல்

          காட்டின் சிறப்புகளை அறிந்து வரல்.

          உங்கள் பகுதிகளில் உள்ள காடுகளின் பெயர்களை அறிதல்.

          சரணாலயங்கள் குறித்து அறிதல்.

மதிப்பீடு

          இந்திய வனமகன் என அழைக்கப்படுபவர் .....................................

          ஜாதவ் பயேங் காட்டை எவ்வாறு உருவாக்கினார்?

          உனக்குப் பிடித்த விலங்குகளையும் அதற்கான காரணங்களையும் கூறு.

குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

கற்றல் விளைவு

எண் – 707

மழைக்காலங்களில் பசுமையான சூழலை ஏற்படுத்துதல் போன்ற இயற்கை சார்ந்த தலைப்புகள் அல்லது பிரச்சனைகள் தொடர்பாக தங்கள் தருக்கவியல் முடிவுகளை அளித்தல்.

தொடர்பணி

          காடுகளின் படங்களைத் திரட்டுதல்.

          யானை குறித்து வருணனையாக 5 தொடர்கள் எழுதுக.

          மரக்கன்று நடுவதன் அவசியத்தைக் கூறு.


6ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 2 பருவம் 1 கிழவனும் கடலும் 6th model notes of lesson tamil kilavanum kadalum term 1 unit 2

 

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

வகுப்பு – 6

பாடம் – தமிழ்

பருவம் 1

இயல் 2

தலைப்பு – கிழவனும் கடலும்

பாடத்தின் தன்மை

          விரிவானம். இயற்கை – எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய ஆங்கிலப் புதினத்தின் மொழிபெயர்ப்பான கிழவனும் கடலும் படக் கதை.

கற்கும் முறை

          வாசித்தல், கேட்டல், குழுகற்றல், புரிதல், எழுதுதல், கதை சொல்லும் முறை.

துணைக்கருவிகள்

          இணைய வளங்கள்

          https://tamilthugal.blogspot.com/2020/04/kizhavanum-kadalum-6th-virivaanam.html

          https://tamilthugal.blogspot.com/2021/08/1-2-kilavanum-kadalum-6th-tamil.html

பாட அறிமுகம்

          மீன்பிடித்தல் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.

          மாணவர்கள் அறிந்த கடலின் சிறப்பைக் கூறச் செய்தல்.

          படக் கதை குறித்து மாணவர் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.

வாசித்தல்

          படக் கதையை ஆசிரியர் வாசித்தல், ஆசிரியரைத் தொடர்ந்து மாணவர்களும் வாசித்தல்.      

கற்றல் திறன்கள்

          முயற்சிகள் ஓய்வதில்லை என்பதை உணர்த்தும் மீன் பிடிக்கப் போராடும் மீனவர் ஒருவரின் வாழ்வை அறிதல்.

          மொழிபெயர்ப்புக் கதையைப் படித்து உணரும் திறன் பெறுதல்.

மனவரைபடம்


தொகுத்தல்

          எண்பத்து நான்கு நாள்களாக ஒரு மீனும் கிடைக்காத நிலையில் அன்று சாண்டியாகோ ஒரு பெரிய மீனைப் பிடிக்கப் போராடியதை விளக்குதல். பசியோடும் சோர்வோடும் இருந்தாலும் பெரிய மீனை ஈட்டியால் குத்தி, படகின் ஓரத்தில் கட்டினார். நாற்பது நாள்கள் தன்னுடன் மீன் பிடிக்க வந்த மனோலினிடம் சொல்ல நினைத்தபோது சுறாக்கள் தின்றது போக எலும்பும் தலையும் மட்டுமே மிஞ்சியிருந்ததை விளக்குதல்.

வலுவூட்டல்

          கடலின் சிறப்புகளைக் கூறுதல்.

          விடாமுயற்சி பற்றி விளக்குதல்.

          படக்கதையின் சிறப்புகளைக் கூறுதல்.    

மதிப்பீடு

          சாண்டியாகோவிற்கு எத்தனை நாள்களாக மீன் கிடைக்கவில்லை?

          படக்கதை பற்றி நீங்கள் அறிந்தவை யாவை?

          கிழவனும் கடலும் என்னும் படக்கதையை உங்கள் சொந்த நடையில் கதையாக எழுதுக.

குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

கற்றல் விளைவு

எண் – 617

செய்தித்தாள்கள், இதழ்கள், கதைகள் இணையத்தில் காணப்படும் தகவல்கள், கட்டுரைகள் போன்றவற்றைப் படித்துப் புரிந்துகொண்டு தமது விருப்பு வெறுப்புகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்துதல்.

தொடர்பணி

          கடல்காட்சி ஒன்றைப் படம் வரைந்து வண்ணம் தீட்டுக.

          சாண்டியாகோ குறித்து உன் கருத்துகளை எழுதுக.

          படக்கதை பற்றிய உன் அனுபவங்களைக் கூறு.


முல்லைப்பாட்டு பத்தாம் வகுப்பு தமிழ் நெடுவினா விடை MULLAIPATTU TENTH TAMIL NEDU VINA VIDAI Q&A 10th

Saturday, July 23, 2022

கலைஞரின் பன்முகத் திறமை தமிழ்ப்பேச்சு, கட்டுரை KALAIGNARIN PANMUKA THIRAMAI TAMIL SPEECH, KATTURAI

கலைஞரின் பன்முகத் திறமை தமிழ்ப் பேச்சு, கட்டுரை pdf kalaignarin panmuka thiramai tamil speech katturai

 பதிவிறக்கு/Download

பன்முகத் திறமையாளர் கலைஞர் மு.கருணாநிதி தமிழ்ப் பேச்சு PANMUKA THIRAMAIYALAR KALAIGNAR TAMIL SPEECH

பன்முகத் திறமையாளர் கலைஞர் மு.கருணாநிதி தமிழ்ப் பேச்சு pdf panmuha thiramaiyalar kalaignar m.karunanithi tamil speech pdf

 பதிவிறக்கு/DOWNLOAD

Sunday, July 17, 2022

ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 2 சிறகின் ஓசை மனவரைபடம் 6th tamil mindmap term 1 unit 2

 


ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 2 காணிநிலம் மனவரைபடம் 6th tamil mindmap term 1 unit 2

 


ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 2 சிலப்பதிகாரம் மனவரைபடம் 6th tamil mindmap term 1 unit 2

 


ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 2 விலங்குகள் உலகம் மனவரைபடம் 7th tamil mindmap term 1 unit 2

 


ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம் மனவரைபடம் 7th tamil mindmap term 1 unit 2

 


ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 2 காடு மனவரைபடம் 7th tamil mindmap term 1 unit 2 kadu

 


எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 2 நிலம் பொது மனவரைபடம் 8th tamil mindmap unit 2 nilam pothu

 


எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 2 கோணக்காத்துப்பாட்டு மனவரைபடம் 8th tamil mindmap unit 2 konakathupattu

 


எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 2 ஓடை மனவரைபடம் 8th tamil mindmap unit 2 odai

 


8ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 2 நிலம் பொது 8th model notes of lesson tamil nilam pothu unit 2

 

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

வகுப்பு – 8

பாடம் – தமிழ்

இயல் 2

தலைப்பு – நிலம் பொது

பாடத்தின் தன்மை

          உரைநடை உலகம். இயற்கை -              பக்தவத்சல பாரதி எழுதிய தமிழகப் பழங்குடிகள் எனும் கட்டுரையிலிருந்து சுகுவாமிஷ் பழங்குடியினர் தலைவர் சியாட்டல் அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதம்.

கற்கும் முறை

          வாசித்தல், கேட்டல், குழுகற்றல், புரிதல், எழுதுதல், விளக்க முறை.

துணைக்கருவிகள்

          இணைய வளங்கள்

          https://tamilthugal.blogspot.com/2021/08/8-2-8th-tamil-worksheet-with-pdf-nilam.html

          https://tamilthugal.blogspot.com/2021/04/8th-tamil-urainadai-ulagam-nilam-pothu.html

          https://tamilthugal.blogspot.com/2021/07/8th-tamil-nilam-pothu.html

          https://tamilthugal.blogspot.com/2021/03/96-land-names-in-tamil.html

பாட அறிமுகம்

          பழங்குடியினர் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.

          இயற்கை வளங்கள் குறித்துத் தங்கள் அனுபவங்களைப் பகிரச் செய்தல்.

          நிலத்தின் அவசியம் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.

வாசித்தல்

          கடிதம், அதன் பொருளை ஆசிரியர் வாசித்தல், ஆசிரியரைத் தொடர்ந்து மாணவர்களும் வாசித்தல்.         

கற்றல் திறன்கள்

          இயற்கை வளங்கள் சிதையாமல் காக்கப்பட வேண்டும் என்பதை உணரும் திறன்.

மனவரைபடம்


தொகுத்தல்

          நிலம் மிகவும் புனிதமானது. இயற்கை வளங்கள் அனைத்தும் பழங்குடியினரின் உறவுகள். விலங்குகளை வேட்டையாடக் கூடாது. நிலத்தை நேசிக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.

மதிப்பீடு

          தொடரில் அமைத்து எழுதுக.

          வேடிக்கை, உடன்பிறந்தார்

          நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?

          நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.

          நிலவளத்தினைக் காக்க மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீ கருதுவன யாவை?

குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

கற்றல் விளைவு

எண் – 818

தமது சொந்த அனுபவங்களைத் தமக்கே உரிய மொழிநடையைப் பயன்படுத்தி வெவ்வேறு இலக்கிய வடிவங்களில் எழுதுதல்.

தொடர்பணி

          நிலம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் செய்ய வேண்டியவற்றைப் பட்டியலிடுதல்.

          நிலவளத்தைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணிகளைத் தொகுத்தல்.


7ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 2 பருவம் 1 விலங்குகள் உலகம் 7th model notes of lesson tamil vilangukal ulagam term 1 unit 2

 

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

வகுப்பு – 7

பாடம் – தமிழ்

பருவம் 1

இயல் 2

தலைப்பு – விலங்குகள் உலகம்

பாடத்தின் தன்மை

          உரைநடை உலகம். இயற்கை -     முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவர், ஆதினி, மலர்விழி ஆகியோரின் உரையாடல் வழி காட்டு விலங்குகள் குறித்து அறிதல்.

கற்கும் முறை

          வாசித்தல், கேட்டல், குழுகற்றல், புரிதல், எழுதுதல், உரையாடல் முறை.

துணைக்கருவிகள்

          இணைய வளங்கள்

          https://tamilthugal.blogspot.com/2021/08/7-2-7th-tamil-worksheet-with-pdf.html

          https://tamilthugal.blogspot.com/2021/06/2-1-7th-tamil-vilangukal-ulakam-kuruvina.html

          https://tamilthugal.blogspot.com/2020/04/vandalur-zoo-animals-watch-online-camera.html

பாட அறிமுகம்

          காட்டின் பயன்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.

          மாணவர்களுக்குப் பிடித்த விலங்குகள் குறித்து அவர்கள் அறிந்துள்ள தகவல்களைக் கூறச் செய்தல்.

வாசித்தல்

          உரையாடலை மாணவர்கள் வாசித்தல், உரையாடலின் பொருளை ஆசிரியர் விளக்குதல்.    

கற்றல் திறன்கள்

          பல்லுயிர்களின் வாழிடமான காடு குறித்தும் காட்டு விலங்குகள் குறித்தும் புலிகள் காப்பகம் வழி அறியும் திறன் பெறுதல்.

மனவரைபடம்


தொகுத்தல்

          யானைகளின் வகைகள், தந்த அமைப்பு, உணவு, நீர், பண்புகள் பற்றியும், கரடி ஓர் அனைத்துண்ணி என்பதையும் அதன் உணவுகள் குறித்தும், எடை 160 கிலோ என்பதையும் அறிதல். புலி குறித்த தகவல்களையும் புலி பண்புள்ள விலங்கு என்பதையும் அதற்கான காரணங்களையும் அறிதல். மான்களின் வகைகள் குறித்தும் அதன் அழகையும் உணர்தல்.

வலுவூட்டல்

          காட்டின் சிறப்புகளை அறிந்து வரல்.

          உங்கள் பகுதிகளில் உள்ள விலங்குகளின் பெயர்களை அறிதல்.

          சரணாலயங்கள் குறித்து அறிதல்.

மதிப்பீடு

          யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகின்றன?

          காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பட்டியலிடுக.

          மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.

          கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் ....................

          உனக்குப் பிடித்த விலங்குகளையும் அதற்கான காரணங்களையும் கூறு.

குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

கற்றல் விளைவு

எண் – 704

தாங்கள் படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல், கருத்தாடலைத் தொடங்கிவைத்தல் ஆகியவற்றின்மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்.

தொடர்பணி

          காட்டுவிலங்குகளின் படங்களைத் திரட்டுதல்.

          ஏதேனும் ஒரு விலங்கு குறித்து வருணனையாக 5 தொடர்கள் எழுதுக.

          விலங்குகள் தொடர்பான பழமொழிகளைத் திரட்டுதல்.


தமிழ்த்துகள்

Blog Archive