கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, November 28, 2022

பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டு & பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் pdf 10th tamil model half yearly and public exam question paper

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தயாரித்த தமிழ் மாதிரி வினாத்தாள்👇

பதிவிறக்கு/DOWNLOAD

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 8 கவிதைப்பேழை உரைநடை உலகம், விரிவானம், கற்கண்டு 8th model notes of lesson tamil unit 8

 

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

5-12-2022 முதல் 9-12-2022

2.பாடம்

தமிழ்

3.அலகு

8

4.பாடத்தலைப்பு

அறத்தால் வருவதே இன்பம் – கவிதைப்பேழை, உரைநடை உலகம், விரிவானம், கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

ஒன்றே குலம், மெய்ஞ்ஞான ஒளி, அயோத்திதாசர் சிந்தனைகள், மனித யந்திரம், யாப்பு இலக்கணம்.

6.பக்கஎண்

168 - 183

7.கற்றல் விளைவுகள்

T-808 ஒரு கட்டுரையைப் படித்த பின்னர் அதன் சமூக மதிப்புகள் குறித்துக் கலந்துரையாடல், சில வினாக்களுக்கு விடை காண முற்படல் (எ.கா) தனது சுற்றுப்புறத்தில் வாழும் குடும்பங்கள் பற்றிச் சிந்தித்தல். இதன்தொடர்ச்சியாக, ராமுமாமாவின் பெண் குழந்தை ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை? என்ற வினாவை எழுப்புதல்.

8.திறன்கள்

அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்று அவை கூறும் கருத்துகளைப் பின்பற்றுதல்.

அயோத்திதாசரின் சிந்தனைகள் வழியாகச் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை உணர்தல்.

நவீனச் சிறுகதைகளைப் படித்து அவற்றின் நுட்பங்களை அறியும் திறன்பெறுதல்.

யாப்பிலக்கணச் செய்திகளை அறிந்து கவிதை வடிவங்களைப் புரிந்துகொள்ளுதல்.

9.நுண்திறன்கள்

அயோத்திதாசர் குறித்து அறியும் திறன்.

திருமூலர், புதுமைப்பித்தன் குறித்து அறியும் திறன்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8.html

https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8_28.html

https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8_6.html

https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8_87.html

https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8_80.html

https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_37.html

https://tamilthugal.blogspot.com/2022/01/8-8th-tamil-ilakkanam-yappu-question.html

https://tamilthugal.blogspot.com/2020/01/8-3-2.html

https://tamilthugal.blogspot.com/2021/02/8-ayothithasar-sinthanaikal-8th-tamil.html

https://tamilthugal.blogspot.com/2021/01/8-meyngnana-oli-8th-tamil-kuru-vina.html

https://tamilthugal.blogspot.com/2021/01/7-ondre-kulam-8th-tamil-kuruvina.html

https://tamilthugal.blogspot.com/2020/01/ondre-kulam.html

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த புலவர்கள் குறித்து கூறச்செய்தல்.

அயோத்திதாசர் குறித்து மாணவர்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

யாப்பு இலக்கணத்தை அறிமுகப்படுத்துதல்.

புதுமைப்பித்தனை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          மனித யந்திரம் கதை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல். அயோத்திதாசரை உணரச் செய்தல். யாப்பு இலக்கணங்களை உதாரணங்களுடன் விளக்குதல். ஒன்றேகுலம், மெய்ஞ்ஞான ஒளி பாடல் குறித்து விளக்குதல்.






மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

அயோத்திதாசர் குறித்துக் கூறுதல். தமிழ்ப்புலவர்கள் குறித்துக் கூறுதல். யாப்பு குறித்து விளக்குதல்.

15.மதிப்பீடு

          LOT – நமன் என்பதன் பொருள் ..............................

                   அயோத்திதாசர் நடத்திய இதழ் .....................................

          MOT – அந்தாதி என்றால் என்ன?

                   மனித யந்திரம் கதையை மீனாட்சிசுந்தரம் கூறுவதாக மாற்றி எழுதுக.

          HOT – சமூகம் உயர்வடைய மக்களிடம் இருக்க வேண்டிய உயர்பண்புகளை எழுதுக.

                   பிறருக்கு நீங்கள் செய்த உதவிகள் 5 எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

புதுமைப்பித்தனின் கதைகளைப் பட்டியலிடுக.

அயோத்திதாசர் குறித்து இணையம் மூலம் அறிதல்.


ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பருவம் 2 இயல் 3 தமிழ் ஒளிர் இடங்கள், தொழிற்பெயர் 7th model notes of lesson tamil unit 3

 

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

5-12-2022 முதல் 9-12-2022

2.பருவம்

2

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

கலை வண்ணம் – விரிவானம், கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

தமிழ் ஒளிர் இடங்கள், தொழிற்பெயர்

6.பக்கஎண்

59 - 69

7.கற்றல் விளைவுகள்

T-715 பல்வேறு கலைகளிலும், தொழில்களிலும் (கைத்தொழில், கட்டடக்கலை. உழவு, நாட்டியம் முதலானவை) பயன்படுத்தும் மொழி பற்றிய கருத்தை ஆர்வமாக வெளிப்படுத்தல்.

8.திறன்கள்

தமிழகச் சுற்றுலா இடங்களையும் அவை வெளிப்படுத்தும் கலை, பண்பாட்டுக் கூறுகளையும் படித்தறிதல்.

தொழிற்பெயரின் வகைகளை அறிந்து பயன்படுத்தல்.

9.நுண்திறன்கள்

தமிழின் பெருமையை விளக்கும் இடங்களை அறிதல்.

தொழிற்பெயர் வகைகளை அறிதல்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/11/2-3-7th-tamil-mindmap-term-2-unit-3_28.html

https://tamilthugal.blogspot.com/2022/11/2-3-7th-tamil-mindmap-term-2-unit-3_5.html

https://tamilthugal.blogspot.com/2021/10/2-3-tholir-peyar-7th-tamil-ilakkanam-q.html

https://tamilthugal.blogspot.com/2020/06/7-2-3-7th-tamil-ilakanam-tholil-peyar.html

11.ஆயத்தப்படுத்துதல்

பிடித்த சுற்றுலா இடங்களைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த தொழிற்பெயர்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

சுற்றுலா பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

தொழிற்பெயர்களை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தஞ்சை சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம், உ.வே.சா – கீழ்த்திசை – கன்னிமாரா நூலகங்கள் குறித்து விளக்குதல். வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் சிலை, மதுரை உலகத்தமிழ்ச் சங்கம், பூம்புகார் சிற்பக் கலைக்கூடம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். சுற்றுலா குறித்து விளக்குதல்.



மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். சுற்றுலா குறித்து உணர்தல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

நம் மாவட்ட சுற்றுலா இடங்கள் குறித்து விளக்குதல்.

15.மதிப்பீடு

          LOT – முதனிலைத் தொழிற்பெயருக்கு உதாரணம் ..............................

          MOT – முதனிலைத் தொழிற்பெயர் என்றால் என்ன?

                   கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை பற்றி எழுதுக.

HOT – நீங்கள் கண்டுகளித்த இடங்களின் தனித்தன்மைகளை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நீங்கள் பயன்படுத்தும் தொழிற்பெயர்களைப் பட்டியலிடுதல்.

உங்கள் மாவட்ட சுற்றுலா இடங்களின் சிறப்புகளை எழுதுதல்.

 


ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பருவம் 2 இயல் 3 உழைப்பே மூலதனம், சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் 6th model notes of lesson tamil unit 3

 

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

5-12-2022 முதல் 9-12-2022

2.பருவம்

2

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

கூடித் தொழில் செய் – விரிவானம், கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

உழைப்பே மூலதனம், சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்

6.பக்கஎண்

61 - 69

7.கற்றல் விளைவுகள்

T-606 தங்கள் பகுதிகளில் காணப்படும் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாட்டுப்புறப்பாடல்களை அறிந்திருத்தல், அவற்றைப் பற்றிக் கலந்துரையாடல்.

8.திறன்கள்

தொழில் மூலம் அடையும் முன்னேற்றத்தை உணரும் திறன்.

சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகளைப் பொருத்தமாகப் பயன்படுத்துதல் திறன்.

9.நுண்திறன்கள்

தொழிலின் மேன்மையை அறிந்துகொள்ள முயலும் திறன்.

10.கற்பித்தல் உபகரணங்கள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2018/10/qr-code-video-6.html

https://tamilthugal.blogspot.com/2020/06/8-ulaippey-uyarvu-8th-tamil-kattur.html

https://tamilthugal.blogspot.com/2021/10/2-tamil-ilakkanam-suttu.html

https://tamilthugal.blogspot.com/2020/06/6-2-3-suttu-ezhuthugal-vina-eluthukal.html

https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post.html

https://tamilthugal.blogspot.com/2018/10/6-qr-code-video_27.html

https://tamilthugal.blogspot.com/2022/11/2-3-6th-tamil-mindmap-term-2-unit-3_28.html

https://tamilthugal.blogspot.com/2022/11/2-3-6th-tamil-mindmap-term-2-unit-3_36.html

11.ஆயத்தப்படுத்துதல்

வணிகத்தின் சிறப்பு குறித்துக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த உழைப்பின் பெருமை பற்றிய கதையைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

வினாச் சொற்களைக் கூறச்செய்தல்.

உழைப்பு பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          உழைப்பே மூலதனம் கதை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

          சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் குறித்து விளக்குதல்.

          கதையின் கதாப்பாத்திரங்களைப் பற்றி விவாதித்தல்.



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

உழைப்பின் அவசியத்தை மாணவர்களிடம் உணர்த்துதல். சுட்டு, வினா எழுத்துகளைப் பயன்படுத்தித் தொடர்களை அமைத்தல்.

15.மதிப்பீடு

          LOT – சுட்டு எழுத்துகள் என்றால் என்ன?

          MOT – அகவினா, புறவினா – வேறுபடுத்துக.

                   உழைப்பே மூலதனம் கதையைச் சுருக்கி எழுதுக.

          HOT – நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்த தொழில்கள் குறித்து எழுதுக.

                   உழைப்பே மூலதனம் கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

உழைப்பு குறித்து நீங்கள் அறிந்த தகவல்களை எழுதுக.

நீங்கள் பயன்படுத்தும் சுட்டுச் சொற்கள் சிலவற்றை எழுதுக.

 

 


எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 8 யாப்பு இலக்கணம் மனவரைபடம் 8th tamil mindmap unit 8

 


எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 8 மனித யந்திரம் மனவரைபடம் 8th tamil mindmap unit 8

 


எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 8 அயோத்திதாசர் சிந்தனைகள் மனவரைபடம் 8th tamil mindmap unit 8

 


எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 8 மெய்ஞ்ஞான ஒளி மனவரைபடம் 8th tamil mindmap unit 8

 


எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 8 ஒன்றே குலம் மனவரைபடம் 8th tamil mindmap unit 8

 


ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 3 தொழிற்பெயர் மனவரைபடம் 7th tamil mindmap term 2 unit 3

 


தமிழ்த்துகள்

Blog Archive