தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Wednesday, June 03, 2026
Thursday, May 21, 2026
Wednesday, April 15, 2026
TET TRB TNPSC TAMIL KURUNTHOKAI FREE ONLINE QUIZ குறுந்தொகை தமிழ் போட்டித்தேர்வு வினாடிவினா
குறுந்தொகை - தமிழ்த்துகள் வினாடி வினா
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641
TET TRB TNPSC TAMIL NATRINAI FREE ONLINE QUIZ நற்றிணை தமிழ் போட்டித்தேர்வு வினாடிவினா
நற்றிணை - தமிழ்த்துகள் வினாடி வினா
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641
TET TRB TNPSC TAMIL AINKURUNOORU FREE ONLINE QUIZ ஐங்குறுநூறு தமிழ் போட்டித்தேர்வு வினாடிவினா
ஐங்குறுநூறு - தமிழ்த்துகள் வினாடி வினா
சங்க இலக்கியம் (எட்டுத்தொகை)
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641
TET TRB TNPSC TAMIL PATHITRUPATHU FREE ONLINE QUIZ பதிற்றுப்பத்து தமிழ் போட்டித்தேர்வு வினாடிவினா
பதிற்றுப்பத்து - தமிழ்த்துகள் வினாடி வினா
சங்க இலக்கியம் - எட்டுத்தொகை (சேரர் வரலாறு)
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641
TET TRB TNPSC TAMIL PARIPADAL FREE ONLINE QUIZ பரிபாடல் தமிழ் போட்டித்தேர்வு வினாடிவினா
பரிபாடல் - தமிழ்த்துகள் வினாடி வினா (TNPSC/TET/TRB)
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641
TET TRB TNPSC TAMIL KALITHOKAI FREE ONLINE QUIZ கலித்தொகை தமிழ் போட்டித்தேர்வு வினாடிவினா
கலித்தொகை - தமிழ்த்துகள் வினாடி வினா (20 வினாக்கள்)
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641
Tuesday, April 14, 2026
TET TRB TNPSC TAMIL AGANANOORU FREE ONLINE QUIZ அகநானூறு தமிழ் போட்டித்தேர்வு வினாடிவினா
அகநானூறு - தமிழ்த்துகள் வினாடி வினா
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641
TET TRB TNPSC TAMIL PURANANOORU FREE ONLINE QUIZ புறநானூறு தமிழ் போட்டித்தேர்வு வினாடிவினா
புறநானூறு - தமிழ்த்துகள் வினாடி வினா
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641
Sunday, July 12, 2020
புறநானூறு PURANAANOORU
அக்காலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன் பழக்க வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளை புறநானூறு வழி அறியலாம்.
அகப்பாடல்கள் ஐந்திணை ஒழுக்கங்களைக் குறித்தது போல, புற ஒழுக்கங்களைக் குறித்து அமைந்த பழங்கால வாய்பாட்டுப் பாடல் நமக்கு விளக்குகிறது.
பாடல்:
- வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
- வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
- தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
- அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
- பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
- செருவென் றதுவாகை யாம்.
இப்புற ஒழுக்கங்களை
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை,
வாகை, என்ற எட்டுத் திணைகளாகக் குறிப்பிடுகின்றன.
இதில் பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய திணைகளும் அடங்கும். திணையின் உட்பிரிவு துறை எனப்படுகிறது.
புறப்பாடல்கள் புற ஒழுக்கங்களான போர்த்திறம், வள்ளல் தன்மை, மகளிர் மாண்பு, சான்றோர்களின் இயல்பு போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன.
அகநானூறு AKANAANOORU
இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன.
கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. இவை
- களிற்றியானை நிரை(1-120)
- மணி மிடை பவளம் (121-300)
- நித்திலக் கோவை (301-400)
என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன.
ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை.
இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை.
இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை.
இரட்டைப்பட எண்களில் 6 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை.
இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.
களிற்றியானைநிரை
1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன.
இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை.
யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.
மணிமிடை பவளம்
121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன.
இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும், செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன.
மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.
நித்திலக் கோவை
301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை போல அமைந்துள்ளன.
இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.
ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை - அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டுகூறா தவைகுறிஞ்சிக் கூற்று.
பாட்டு வரிசை எண்களில் 1,3, 5, 7, 9 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (1, 11, 21 இப்படி \ 3, 13, 23, இப்படி \ பிறவும்) - பாலைத் திணை
பாட்டு வரிசை எண்களில் 4 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (4, 14, 24 இப்படி) - முல்லைத் திணை
பாட்டு வரிசை எண்களில் 6 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (6, 16, 26 இப்படி) - மருதத் திணை
பாட்டு வரிசை எண்களில் 10 என்னும் அடுக்கு எண்ணில் முடியும் பாடல்கள் (10, 20, 30 இப்படி) - நெய்தல் திணை
பாட்டு வரிசை எண்களில் 2, 8 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (2, 12, 22 இப்படி \ 8, 18, 28 இப்படி) - குறிஞ்சித் திணை
அகப்பொருள் நூலான அகநானூற்றில் புறப்பொருள் செய்திகளும் உள்ளன.
தித்தன், மத்தி, நன்னன், கரிகாற் பெருவளத்தான், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், போன்ற பெருநில வேந்தர்கள் பற்றியும், ஆதன்எழினி, ஆட்டனத்தி, அன்னிமிஞிலி, பாணன், பழையன் போன்ற குருநில மன்னர்கள் பற்றியும் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளைத் தருகிறது.
அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது கஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களையெல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த வரலாற்றுச் செய்தியும் இந்நூலின் 20,25 ஆம் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க "குடவோலை முறை" பழக்கத்தில் இருந்ததென்ற அரசியல் செய்திஅகநானூறு வழி தெரிகிறது.
யவனர்கள் வாசனைப் பொருளான மிளகைப் பெறுவதற்காகவே தமிழகத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற செய்தியை
- "யவனர் தந்தவினைமாண் நன்கலம்
- பொன்னோடு வந்து கறியொடு பெயரும்"
என்னும் வரிகள் மூலம் அறியலாம். இது தமிழர்களின் வாணிப வளத்தைக் காட்டுகிறது.
கலித்தொகை KALITHOGAI
கலித்தொகை எம்முறையில் தொகுக்கப்பட்டுள்ளது என் கீழ் வரும் இரு பாடல்களின் உதவியுடன் அறியலாம்.
இன்ன திணையை இன்னார் பாடினார் என்பது:
பெருங்கடுங்கோன் பாலை, கபிலன் குறிஞ்சி,
மருதனிள நாகன் மருதம், - அருஞ்சோழன்நல்லுருத்தி ரன்முல்லை, நல்லந் துவன்நெய்தல்கலவிவலார் கண்ட கலி.
கலித்தொகை நூலில் உள்ள
- பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவன் (பாலை பாடிய) பெருங்கடுங்கோ
- குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவன் கபிலன்
- மருதத்திணைப் பாடல்களைப் பாடியவன் மருதன் இளநாகன்
- முல்லைத்திணைப் பாடல்களைப் பாடியவன் சோழன் நல்லுருத்திரன்
- நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவன் நல்லந்துவன்
இந்தத் தொகைநூலில் திணைகள் வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கப்பட்டுள்ளதற்கு இந்தப் பாடலே அடிப்படை.
ஐந்திணைக்குரிய ஒழுக்கங்களுள் இன்னின்ன திணைக்கு உரிய பொருள் இன்னின என எளிமைப்படுத்தித் தெளிவாக்கும் பாடல்
போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சிஆக்கமளி ஊடல் அணிமருதம் - நோக்கொன்றிஇல்லிருத்தல் முல்லை இரங்கியபோக் கேர் நெய்தல்புல்லும் கலிமுறைக் கோப்பு.
பாடல் தொகைகள்
கலித்தொகைப் பாடல்களில் நல்லந்துவனார் பாடிய கடவுள் வாழ்த்துப்பாடல் தவிர்த்து 149 பாடல்களுள்,
பாலைக்கலியில் 35
குறிஞ்சிக்கலியில் 29 பாடல்களும்,
மருதக்கலியில் 35 பாடல்களும்,
முல்லைக்கலியில் 17 பாடல்களும்,
நெய்தற்கலியில் 33 பாடல்களும் பாடப்பட்டுள்ளன.
குறிஞ்சிக்கலி
முல்லைக்கலி
முல்லைக்கலிப் பாடல்கள், நோக்கம் ஒன்றுபட்டு இல்லிருக்கும் தலைவி ஆற்றியிருத்தலைக் கூறுகின்றன.
கைக்கிளைப் பாக்கள் இதில் மிகுந்துள்ளன.
ஆடவர் ஏறுதழுவுதலைச் சில பாடல்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.
மருதக்கலி
பரத்தையின் காரணமாக தலைவன் பிரிவதும்,
அவ்வாறு பிரிந்த தலைவன் திரும்ப வருகையில் தலைவனிடத்து ஊடல் கொள்வதும்,
தலைவியின் ஊடலைத் தலைவன் தீர்த்தலையும் நோக்கமாகக் கொண்டவை மருதக்கலிப் பாடல்களாகும்.
நெய்தற்கலி
பிரிவாற்றாத தலைவி, தலைவனின் துன்பங்களைப் புலப்படுத்தும், மடலேறுதல், மாலைப் பொழுதில் புலத்தல் போன்ற துறைகளைப் பற்றிப் பாடுவது நெய்தற்கலி ஆகும்
பாலைக்கலி
பாலை நிலத்தின் கொடுமையைக் கூறுவதோடு, தலைமகனின் பிரிவைத் தடுப்பதையும், தோழியர், தலைவனின் வரவு குறித்து தலைவிக்கு உணர்த்தி தலைவியை மகிழ்விப்பதையும் முக்கியக் கருத்தாகக் கொண்டவை பாலைக்கலிப் பாடல்கள் ஆகும்.
கலித்தொகை உணர்த்தும் அறக் கருத்துகள்
'கற்றறிந்தார் ஏத்தும் கலி', 'கல்வி வலவர் கண்ட கலி' என்று சிறப்பித்துக் கூறப்படும் கலித்தொகையில் பழமொழிகள் போன்று ஒரே வரியில் அறக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தார்க்கு உதவுதல்போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமைபண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்அன்பு எனப்படுவது தன்கிளை செறாமைஅறிவு எனப்படுவது பேதையர் சொல் நோண்றல்செறிவு எனப்படுவது மறை பிறர் அறியாமைமுறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்(கலி ,133)
கலித்தொகை காட்டும் சமூகம்
களிற்றையும் அடக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு என்ற உண்மையும்,
நீராடல் பற்றிய செய்தியும்,
மக்களின் நல்வாழ்விற்கான நெறிகளும் இவற்றில் விளக்கப்பட்டுள்ளன.
மடலேறுதல், பொருந்தாக் காதல், ஒருதலைக் காமம் ஆகியன பற்றிய செய்திகள் அதிகம் உள்ளன.
மக்கள் காமனை வழிபாடு செய்தமை பற்றி அறிய முடிகிறது.
வரலாற்று, புராணச் செய்திகள்
கலித்தொகையில் சேர,சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை.
பாண்டிய மன்னர், பாண்டிய நாட்டுக் கூடல்மாநகர், வைகையாறு போன்ற பாண்டிய நாட்டுச் செய்திகளே அதிகம் கூறப்பட்டுள்ளன.
பாரதக் கதை நிகழ்ச்சியான அரக்கு மாளிகை தீப்பிடித்தல், பீமன் காப்பாற்றல், திரௌபதியின் கூந்தலை துச்சாதனன் பற்றியிழுத்தல், பீமன் வஞ்சினம், துரியன் தொடையை பீமன் முறித்தது ஆகிய புராணச் செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. திருமால், முருகன், கண்ணன், பலராமன் முதலிய கடவுளர்கள் பற்றியும் பிற தொகை நூல்களில் இடம்பெறாத 'காமன் வழிபாடு' பற்றியும் கலித்தொகை கூறுகிறது.
முருகனின் படைவீடுகள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது.
பரிபாடல் PARIPAADAL
பரிபாடல் சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
பரிபாடலின் தொகுப்பைப் பின்வரும் வெண்பாவின் துணைகொண்டு அறியலாகும்:
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்பசெய்யபரி பாடற் றிறம்.
பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல்,
செவ்வேளுக்கு (முருகனுக்கு) 31 பாடல்,
காடுகாள் (காட்டில் இருக்கும் காளிக்கு அதாவது கொற்றவைக்கு) 1 பாடல்,
படிப்பதற்கு இனிமையுள்ள வையைக்கு 26 பாடல், பெருநகரமாகிய மதுரைக்கு 4 பாடல் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. (ஆனால் இவை முழுமையாகக் கிடைக்கவில்லை.)
- தொல்காப்பியம் பரிபாடலுக்கு இலக்கணம் கூறுகிறது. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்கு வகைப் பாவில் இது பரிபாடல் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவை நான்கினுக்கும் பொதுவாய் அமைந்த யாப்பினை உடையது பரிபாடல் என அது குறிப்பிடுகிறது.
- நான்கு பாவின் உறுப்புகளும் கொண்ட பாடல்.
- வெண்டளையும், ஆசிரியத்தளையும் விராய் வந்து துள்ளலோசைப்படச் சொல்லப்படும்.
- வெண்பா உறுப்பாகப் பரிபாடல் வரும்.
- கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய நான்கு உறுப்புக்களையும் கொண்டிருக்கும். காமப் பொருளில் வரும்.
- சொற்சீர் அடியும், முடுகியல் அடியம் கொள்வது உண்டு.
- 25 முதல் 400 வரை அடிகள் கொண்டிருக்கும்.
- பரி போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூல் 'பரிபாடல்' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson lesson plan October 5 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2...
-
10th tamil model notes of lesson lesson plan October 12 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 ...
-
9th tamil model notes of lesson lesson plan October 5 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 ...
-
6th tamil model notes of lesson lesson plan October 5 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2....
-
9th tamil model notes of lesson lesson plan October 12 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 ...
-
8th tamil model notes of lesson lesson plan October 5 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2....
-
8th tamil model notes of lesson lesson plan October 12 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 ...
-
7th tamil model notes of lesson lesson plan October 12 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 2...
-
7th tamil model notes of lesson lesson plan October 5 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2.பர...
-
6th tamil model notes of lesson lesson plan October 12 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 2...
Blog Archive
-
▼
2026
(1610)
-
▼
October
(43)
- யார் பாவி? ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை ta...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-10-2026 புதன்
- திறன் பிளஸ் இயக்கம் thiran plus iyakkam
- பள்ளிகளுக்கான புதிய திருத்திய கால அட்டவணை 2026 - 2027
- பால்மனம் FULL AI VIDEO எட்டாம் வகுப்பு தமிழ் விரிவ...
- ஏழாம் வகுப்பு தமிழ் பூத்தொடுத்தல் FULL AI VIDEO te...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-10-2026 செவ...
- இலக்கியவகைச் சொற்கள் FULL AI VIDEO ஏழாம் வகுப்பு த...
- அறிவியல் கண்காட்சி ஆவுடையாபுரம் அரசுப் பள்ளி SCIEN...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-10-2026 திங...
- தமிழர் இசைக்கருவிகள் Full AI VIDEO எட்டாம் வகுப்ப...
- தமிழர் பெருவிழா FULL AI VIDEO ஆறாம் வகுப்பு தமிழ்...
- கண்மணியே கண்ணுறங்கு Full AI VIDEO ஆறாம் வகுப்பு த...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினா வி...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்க...
- தேன்சிட்டு 2026 அக்டோபர் 1 மாத இதழ் வினாடி வினா வி...
- தேன்சிட்டு 2026 அக்டோபர் இதழ் 1 வினாடி வினா - வினா...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-10-2026 வெள்ளி
- ஏழாம் வகுப்பு தமிழ் அழியாச் செல்வம் நாலடியார் விளக...
- சொல் வெல் வினாடி வினா மன்றச் செயல்பாடுகள் quiz clu...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இலக்கணம் துணை வினைகள் Full ...
- ஆசாரக்கோவை FULL AI VIDEO ஆறாம் வகுப்பு தமிழ் 6TH T...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-10-2026 விய...
- வீட்டிற்கோர் புத்தகசாலை விரிவானம் இயல் 4 வகுப்பு 9...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-10-2026 புதன்
- பள்ளி மறுதிறப்பு FULL AI VIDEO ஏழாம் வகுப்பு தமிழ்...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-10-2026 செவ...
- ஏழாம் வகுப்பு தமிழ் அழியாச் செல்வம் நாலடியார் விளக...
- ஏழாம் வகுப்பு தமிழ் தேயிலைத் தோட்டப்பாட்டு Full AI...
- ஒருவன் இருக்கிறான் FULL AI VIDEO எட்டாம் வகுப்பு த...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-10-2026 திங...
- காலம் உடன் வரும் எட்டாம் வகுப்பு தமிழ் விரிவானம் 8...
- செய்தி விரிவானம் FULL AI VIDEO ஒன்பதாம் வகுப்பு தம...
- சீவகசிந்தாமணி ஒன்பதாம் வகுப்பு தமிழ் full AI VIDEO...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஓ என் சமகாலத் தோழர்களே கவித...
- குடும்ப விளக்கு ஒன்பதாம் வகுப்பு தமிழ் FULL AI VID...
- உயிர்வகை ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 4 UYIR VAGAI ...
- பத்தாம் வகுப்பு தமிழ் முத்தொள்ளாயிரம் Full AI VIDE...
- பத்தாம் வகுப்பு தமிழ் சங்க இலக்கியத்தில் அறம் FULL...
- பத்தாம் வகுப்பு தமிழ் அகப்பொருள் இலக்கணம் full ai ...
- பத்தாம் வகுப்பு தமிழ் தேம்பாவணி FULL AI VIDEO 10th...
-
▼
October
(43)

