கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Showing posts with label ஆறாம் வகுப்பு கடிதம்-கட்டுரைகள். Show all posts
Showing posts with label ஆறாம் வகுப்பு கடிதம்-கட்டுரைகள். Show all posts

Saturday, December 13, 2025

Writing a thank you letter to your uncle மாமாவுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் ஆறாம் வகுப்பு தமிழ்


பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றதற்குப் பரிசு அனுப்பிய மாமாவுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதுக

Writing a thank you letter to your uncle

touch below👇

ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 2 பருவம் 2 மாமாவுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதுதல் pdf

 Writing a thank you letter to your uncle pdf 6th tamil term 2 unit 2


பதிவிறக்கு/DOWNLOAD


பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றதற்குப் பரிசு அனுப்பிய மாமாவுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதுக

Monday, December 18, 2023

பொங்கல் திருநாள் தமிழ்க் கட்டுரை தமிழர் திருநாள் தைப்பொங்கல் thai pongal tamilar thirunaal tamil katturai essay

 thai pongal tamilar thirunaal tamil katturai essay

 

பொங்கல் திருநாள்

முன்னுரை

தமிழர்களின் அறுவடைத் திருநாளே தமிழர் திருநாள். இதுவே பொங்கல் திருநாள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஒவ்வொரு தமிழரும் கொண்டாடும் திருநாளே பொங்கல் திருநாள். தமிழ்த்துகள்

போகிப் பண்டிகை

மார்கழி இறுதிநாள் பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் கொண்டாடப்படுவது போகிப்பண்டிகை, வீட்டைத் தூய்மை செய்து வண்ணம் பூசுவர், பழையன கழிதலும், புதியன புகுதலும் போகிப் பண்டிகையின் சிறப்பு ஆகும்.                    தமிழ்த்துகள்

பொங்கல் பண்டிகை

தை முதல் நாள் கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே பொங்கல் பண்டிகை, உழவர்களின் உழைப்பால் விளைந்த மஞ்சள், இஞ்சி, கரும்பு, வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றைப் படைத்து புதுப்பானையில் புதிய பச்சரிசி பொங்கலிட்டு பொங்கும் போது 'பொங்கலோ பொங்கல்' என மகிழ்ச்சியுடன் ஓசை எழுப்புவர். புத்தாடை அணிவர்.               தமிழ்த்துகள்

மாட்டுப்பொங்கல்

தை இரண்டாம் நாள் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது. மாடுகளுக்கு நன்றி கூறும் வகையில் மாடுகளைக் குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் பூசி மாலையிட்டு வழிபடுவதுதான் மாட்டுப்பொங்கல் ஆகும். ஏறுதழுவுதல் வீர விளையாட்டு நடைபெறும்.

காணும் பொங்கல்             தமிழ்த்துகள்

தை மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் ஆகும். இந்நாளில் உற்றார் உறவினர் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர். குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பர்.              தமிழ்த்துகள்

முடிவுரை

தமிழரின் பண்பாட்டை உணர்த்துவது பொங்கல் திருநாள் ஆகும். உழவுத்தொழிலுக்குப் பெருமை சேர்த்தல் உதவியோருக்கு நன்றி தெரிவித்தல் போன்ற நற்பண்புகளின் அடையாளமே பொங்கல் திருநாளாகும். தமிழ்த்துகள்

          தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

பொங்கல் விழா தமிழ்க் கட்டுரை தமிழர் திருநாள் THAI PONGAL TAMILAR THIRUNAAL KATTURAI

 THAI PONGAL TAMILAR THIRUNAAL KATTURAI essay

பொங்கல் திருவிழா

முன்னுரை

'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்', என்கிறார் திருவள்ளுவர். தமிழர் தம் வாழ்வும் பண்பாடும் இயற்கையோடு இணைந்தது. காடு கழனிகளில் விவசாயத்திற்குத் தனக்கு உறுதுணையாய் இருந்த கதிரவனுக்கும் மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவே பொங்கல் விழா. ஒவ்வோர் ஆண்டும் நான்கு நாள்கள் கொண்டாடப்படும் பொங்கல் விழா பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

போகி விழா

'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல' என்கிறது நன்னூல். மார்கழி இறுதி நாளில் வீட்டில் சேர்ந்திருக்கக்கூடிய பழையவற்றை ஒதுக்கி எரிப்பர். வீடுகளுக்கு வெள்ளையடித்துத் தைமகளை வரவேற்கத் தயாராகும் நாளே போகி விழா.

பொங்கல் விழா

புத்தரிசியில் புதுப்பானையில் சர்க்கரைப் பொங்கலிட்டு, செங்கரும்பு, இஞ்சி, மஞ்சளோடு கதிரவனை அதிகாலையில் வழிபடும் விழா பொங்கல் விழா. சிறியவரும் பெரியவரும் 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாகமாகக் குரல் கொடுத்துத் தை மகளை வரவேற்பர். கதிரவனுக்கு நன்றி பாராட்டும் விழா இதுவாகும்.

மாட்டுப் பொங்கல்

உழுதல், பரம்படித்தல், நீர் இறைத்தல், பொதி சுமக்கும் வண்டிகளை இழுத்தல் போன்ற விவசாயப் பணிகளுக்கு உழவரோடு துணை நிற்பவை மாடுகள். அவற்றிற்கு நன்றி பாராட்ட எடுக்கும் விழா மாட்டுப் பொங்கல் ஆகும். மாடுகளைக் குளிப்பாட்டி அதன் கொம்புகளுக்கு வண்ணம் பூசிப் பொட்டிட்டு வணங்குவர். செங்கரும்பும் பொங்கலும் தின்னக் கொடுப்பர். பசுந்தழைகளை வேண்டுமளவு வழங்குவர்.

காணும் பொங்கல்

'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்ற நம் பழந்தமிழரின் பண்பாடு போற்றும் விழா இதுவாகும். பெரியோர்களிடம் சென்று ஆசி வாங்கி வரும் நன்னாள் காணும் பொங்கல் திருநாள்.

முடிவுரை

உழவர்கள் சேற்றில் கால் வைக்காவிட்டால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது. வேளாண்மைக் கருவிகள் பல வந்துவிட்டாலும் விளைச்சலுக்கு உதவும் கதிரவனுக்கும் மாடுகளுக்கும் நன்றி பாராட்டுவது பொங்கல் விழா. தமிழரின் நன்றி மறவாப் பண்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு. தமிழர் திருநாளாம் பொங்கலைக் கொண்டாடுவோம், நன்றி மறவாத் தமிழராய் நடை போடுவோம்!  தமிழ்த்துகள்

-        கவிஞர் கல்லூரணி முத்து முருகன் அலைபேசி -9443323199 தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்


Wednesday, March 02, 2022

விடுதலைப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு தமிழ்க்கட்டுரை வகுப்பு 6 tamil katturai 6th standard tamil women freedom fighters

 

விடுதலைப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு

“பெண்ணடிமை பேசும் மட்டும் வாழும் திருநாட்டு

மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே" ஆம்! இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கு வித்திட்ட எண்ணற்ற தியாகிகளின் வரிசையில் தமிழகத்திற்கு எப்போதும் ஒரு சிறப்பிடம் உண்டு. அதிலும் தமிழகப் பெண்களின் பங்கு போற்றுதற்குரியது. வணிகம் செய்ய வந்த வெள்ளையர்கள் சூழ்ச்சியால் தன் கணவர் முத்துவடுகநாதரைக் கொன்றுவிட்டதைக்கண்டு வெள்ளையரை வென்று வஞ்சம் தீர்ப்பேன் என்று சூளுரைத்தார் வீரமங்கை வேலுநாச்சியார். மருதிருவரின் உதவியோடு ஹைதர் அலியின் படை உதவி கொண்டு பரங்கியரை வென்று பழி தீர்த்தார்.                   தமிழ்த்துகள்

காந்தியடிகளுக்கு தென்னாப்பிரிக்காவில் தமிழ் கற்றுக் கொடுத்தார் தில்லையாடி வள்ளியம்மை. அறப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்களில் முக்கியமானவர் அவர். காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கம் மற்றும் நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் கடலூர் அஞ்சலை அம்மாளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். தன்னைச் சிறையில் அடைத்த போதும் தன்னுடைய செல்லப் பெண் அம்மாக்கண்ணு என்பவரைச் சிறையிலேயே வளர்த்தார். இதைக் கேள்விப்பட்ட காந்தியடிகள் நேரில் சென்று சந்தித்தார். அம்மாக் கண்ணுக்கு காந்தியடிகள் லீலாவதி என்று பெயரிட்டு வளர்த்தார்.                                         தமிழ்த்துகள்

1931இல் மகளிர் காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார் கடலூர் அஞ்சலை அம்மாள். காந்தியடிகள் தமிழ்நாடு வந்த போது அவரைச் சந்திக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. மாறுவேடத்தில் குதிரை வண்டியில் சென்று சந்தித்தார் அஞ்சலை அம்மாள். இதனால் அவரைத் தென்னாட்டின் ஜான்சிராணி என்று அழைக்கிறோம். அதுமட்டுமல்ல தேவதாசி முறை ஒழிப்பிற்குக் காரணமாக இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் 1925இல் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.                                                        தமிழ்த்துகள்

அசலாம்பிகை அம்மையார் தன்னுடைய சகோதரி ருக்மணி அவர்களுடன் சேர்ந்து இரட்டைப்புலவர்களாக வலம் வந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒளவை என்று பெயர் பெற்றார். அவர் காந்தியைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு காந்திபுராணம் இயற்றியவர். தேசப்பிதா என்று நாமெல்லாம் அழைக்கும் முன்னரே காந்தியடிகளுக்குப் புகழ்மாலை சூட்டி பெருமைப்படுத்தியவர். கள்ளுக்கடை மறியல் போராட்டம் கதர் இயக்கம் என்று தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பெரியாருக்கு அவருடைய சகோதரி கண்ணம்மையாரும் நாகம்மையாரும் இரு கண்களாகச் செயல்பட்டனர். அம்புஜத்தம்மாள் என்பவர் வை.மு.கோதைநாயகி, ருக்மணி லட்சுமிபதியுடன் இணைந்து காந்தியடிகள் அறிவித்த பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.           தமிழ்த்துகள்

இம் என்றால் வனவாசம் ஏன்? என்றால் சிறைவாசம் என்று இருந்த அந்தக் காலகட்டத்தில் சென்னை மாநகராட்சியின் துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்குத் திறமையாளராக இருந்தார் அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள். ரங்கூனில் இருந்து வந்து தமிழகத்தில் இந்தி எதிர்ப்பைச் செய்த போராளி இவர். மணலூர் மணியம்மா என்பவரின் தியாகம் இவர்களில் இருந்து வேறுபட்டது. ஆம்! காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்து பாடுபட்டவர். பண்ணையடிமைகளை மீட்டெடுக்கவும் விவசாயக் கூலிகள் நிலை உயரவும் கையில் சிலம்போடு ஆண் போல் எங்கும் கூட்டங்கள் நடத்தி வெள்ளையரையும் பெருந்தனக்காரர்களையும் மிரட்டினார். பொதுவுடமைக் கட்சியின் அசைக்க முடியாத நம்பிக்கையாக தஞ்சைப்பகுதியில் உலா வந்தார்.                      தமிழ்த்துகள்

சரஸ்வதி ராஜாமணி அம்மையார் பத்து வயதுச் சிறுமியாக இருக்கும் போதே போராட்டத்தில் ஈடுபட்டார். கொல்கத்தாவில் இருந்து கிளம்பிய புரட்சிப்புயல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்திற்கு நிதி உதவி கோரிய போது தன்னுடைய நகைகளை எல்லாம் அவருக்குத் தந்து உதவினார். நகையைக் கொடுத்தவர் பத்து வயதுச் சிறுமி தான் என்று நேதாஜி கேள்வியுற்ற போது நகைகளைத் திரும்ப அளிக்க முன்வந்தார். ஆனால் சரஸ்வதியோ மறுத்துவிட்டார். பின்னாளில் இந்திய தேசிய ராணுவத்தின் உளவுப் பிரிவில் போராளியாக அவர் சேர்ந்தார்.          தமிழ்த்துகள்

இன்னும் எத்தனை எத்தனை பெண்மணிகள் தமிழகத்திலிருந்து வெள்ளையரை எதிர்க்கக் கிளம்பினார்கள் என்பது கணக்கில் அடங்காதது. காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் ஒவ்வொரு முறையும் அறப்போருக்கு அழைக்கும் போதெல்லாம் பெரும் பங்காய் நம் தமிழகப் பெண்கள் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றிருக்கிறார்கள்.

புலியை முறத்தால் விரட்டிய வீரப்பெண்கள் பரம்பரையில் வந்தவர்கள் இவர்கள் முதல் நாள் போரில் தந்தை இறந்துவிட அடுத்த நாள் போரில் தன் கணவன் இறந்து விட அன்றைய போருக்கு விளையாடிக் கொண்டிருக்கும் தன் மகனின் கையில் வாளைக் கொடுத்து போருக்குச் செல் என்று சொன்ன புறநானூற்றுத் தாயின் வழி வந்தவர்கள் .

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்;                               தமிழ்த்துகள்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என்ற புரட்சிக் கனல் சுட்டெரித்த பாவேந்தரின் வரிகளுக்கு இலக்கணமான இவ்வீரப் பெண்களின் நினைவைப் போற்றுவோம் தமிழர்கள் வீரத்திலும் ஈரத்திலும் வித்தாய் இருக்கிறார்கள் என்பதை இவ்வுலகிற்குச் சொல்வோம்!

-     கவிஞர் கல்லூரணி மு.முத்து முருகன்.                 தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive