தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Wednesday, October 06, 2021
தமிழ் - புத்தாக்கப் பயிற்சி - வகுப்பு 10 ஒரு மதிப்பெண் வினாக்கள் 10th tamil refresher course one word questions
Thursday, September 30, 2021
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் வகுப்பு -10 தமிழ் செயல்பாடு 1-10 ஒரு மதிப்பெண் வினாக்கள்
Monday, September 27, 2021
Saturday, September 25, 2021
Wednesday, September 15, 2021
Tuesday, September 14, 2021
Monday, September 13, 2021
Sunday, September 12, 2021
Saturday, September 11, 2021
Friday, September 10, 2021
Thursday, September 09, 2021
Tuesday, September 07, 2021
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் பத்தாம் வகுப்பு தமிழ் செயல்பாடு 20 விடைக்குறிப்பு 10th tamil Answer key activity 20
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
பத்தாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 20
விடைக்குறிப்பு
1.கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப்
பயன்படுத்திக் கட்டுரை எழுதி, பொருத்தமான
தலைப்பும் தருக.
முன்னுரை - நோயற்ற வாழ்வு - உடற்பயிற்சியின்
அவசியம் - உடலை வலிமையாக்குதல் - நோய்
எதிர்ப்பு சக்தி - எளிய பயிற்சிகள் - நடைப்
பயிற்சி - புத்துணர்ச்சி - இளமைத்தோற்றம் -
நீண்ட ஆயுள் - முடிவுரை.
உடம்பை
வளர்த்தேன்! உயிர்வளர்த்தேனே!
முன்னுரை
உலக உயிர்கள் அனைத்திலும்
சிறந்தது மனித இனம். தாவரங்களையும் விலங்குகளையும் இன்ன பிற உயிர்களையும்
ஆட்டுவிக்கும் வல்லமை ஆறாம் அறிவுக்கு உண்டு. உடல் வலுவாக இருந்தால் தானே அறிவு
வேலை செய்யும்?
எல்லாச் செல்வங்களிலும் தலை சிறந்தது நோயற்ற வாழ்வு அன்றோ?
அதனால்தான் ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்றார் திருமூலர். உடலும் உள்ளமும் நலமுடன் இருந்தால்தான் மனித
சமுதாயம் இன்னும் சிறந்து ஓங்கும். உடலைப் பேணிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை
இனி காண்போம்!
நோயற்ற வாழ்வு
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி, ஆம் சுவர்
இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்? நம் முன்னோர் இயற்கையோடு இணைந்த வாழ்வை மேற்கொண்டனர். தொற்று நோய்கள் அண்டாமல்
தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.
தூய காற்றும் நன்னீரும்
சுண்டப் பசித்த பின் உணவும்
நோயை ஓட்டிவிடும் அப்பா
நூறு வயது தரும் அப்பா , என்று பாடியுள்ளார் கவிமணி. நீரின் மூலமே
அதிகமான நோய்கள் பரவுகின்றன. கொசுக்கள் மற்றும் பிற விலங்குகள் மூலம் பரவக் கூடிய
நோய்களும் உண்டு. நுண்ணுயிரிகளின் பெருக்கமே நோய்களின் உற்பத்திக் கூடம் ஆகும். பாக்டீரியா
வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் நம் உடலில் புகுந்து நோய்களை உண்டாக்கிவிடுகின்றன.
அதற்கு நாம் ஒரு போதும் இடம் தரக்கூடாது.
உடற்பயிற்சியின் அவசியம்
எளிய உடற்பயிற்சி
முறைகளான மூச்சுப் பயிற்சியும் யோகாசனங்களும் செய்வது நம் உடலை வலிமையாக்கும்.
மெது ஓட்டம், நடைப்பயிற்சி, விளையாட்டுகள் போன்றவற்றில் நாம் ஈடுபட்டால் வியர்வை வெளியேறிவிடும்.
சுவாசம் சீராகும். இரத்த நாளங்கள் வலுப்பெறும். தசைகள் இறுகும். எலும்புகள் உறுதிபெறும்.
காலை மாலை உலாவி
நிதம் காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஒடிப் போவானே-என்கிறார் கவிமணி.
நோய் எதிர்ப்பு சக்தி
இயற்கையில்
கிடைக்கும் காய்கறிகள், கீரைகள், பழங்கள், தேன், பால், மீன், இறைச்சி ஆகியவற்றில்
நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சத்துக்கள் உள்ளன. சரிவிகித
உணவு உண்பதோடு இயற்கையில்
கிடைக்கும் குடிநீரைச் சுடவைத்து, பின் ஆற வைத்துக் குடிக்க வேண்டும்.
உடற்பயிற்சிகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும், இதயம் சீராக இயங்கும். நுரையீரல்,
சிறுநீரகம், பித்தப்பை, கல்லீரல்,
கணையம் முதலிய உள் உறுப்புகள் சிறப்பாக இயங்க எளிய உடற்பயிற்சிகள் துணைபுரிகின்றன.
முதுமையிலும் இளமை
உழவுத் தொழிலை முக்கியத்
தொழிலாகச் செய்தனர் நம் முன்னோர். உடல் உழைப்பு அதிகமுள்ள விவசாயம் சார்ந்த
தொழில்கள் உறுதியான உடலைத் தந்தன. தானியம் விளைவித்தன. காய்கறிகள் விளைவித்தன.
கருவிகள் செய்யும் தொழிலாளர்களும் ஆடைநெய்யும் நெசவாளர்களும் இன்னபிற உடல் உழைப்புமே
அவர்களின் நல்வாழ்வுக்குப் போதுமானதாக இருந்தது. இன்றோ அம்மாவின் கைச் சோறை
விட்டுவிட்டு பீட்சா, பர்கர் என்று வீட்டிலிருந்தபடியே தருவித்து உண்ணும் நிலை பெருகிவிட்டது.
பொட்டலங்களில் அடைத்த பண்டங்களை உண்டுவிட்டு பொட்டலம் போலவே நடமாடித் திரிகின்றனர்
பிஞ்சுக் குழந்தைகள். கணினியும் கைப்பேசியும் விளையாட்டுத் திடலுக்குப் பிள்ளைகளை
வரவிடாமல் கட்டிப்போட்டு விட்டது. இந்நிலை மாற வேண்டும். கொரோனா போன்ற பெருந்
தொற்றுக் காலங்களில் இப்படிப்பட்டவர்கள் தான் அதன் கோரப் பசிக்கு இரையாகி
இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. முதுமையிலும் இளமையாய் நடமாடித்
திரியும் நம் கிராமத்தின் விவசாயிகளைப் பார்க்கும்போதெல்லாம் இத்தலைமுறை எதைத் தவற
விட்டு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
முடிவுரை
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்' என்கிறார் திருவள்ளுவர். அம்மை, காலரா போன்ற கொள்ளை நோய்களால் எண்ணற்ற
மனித உயிர்களை நாம் பறிகொடுத்தவர்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாவிட்டால் பெருந்
தொற்றுகள் மனித உயிர்களை மலிவாக எடுத்துச்சென்று விடும். வந்தபின் காப்பது மடமை. வருமுன்
காப்பதே அறிவுடைமை. உடற்பயிற்சிகளால் புத்துணர்ச்சி பெறுவோம்! உறுதியான உடல்களுக்குச்
சொந்தக்காரர்கள் ஆவோம்!
மு.முத்துமுருகன். தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ரெட்டியபட்டி.
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson lesson plan October 5 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2...
-
10th tamil model notes of lesson lesson plan October 12 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 ...
-
10th tamil model notes of lesson lesson plan October 21 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 21-10-2026 முதல் 23-10-2026 ...
-
9th tamil model notes of lesson lesson plan October 12 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 ...
-
7th tamil model notes of lesson lesson plan October 12 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 2...
-
8th tamil model notes of lesson lesson plan October 12 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 ...
-
9th tamil model notes of lesson lesson plan October 21 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 21-10-2026 முதல் 23-10-2026 ...
-
8th tamil model notes of lesson lesson plan October 21 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 21-10-2026 முதல் 23-10-2026 2...
-
8th tamil model notes of lesson lesson plan October 5 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2....
-
6th tamil model notes of lesson lesson plan October 12 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 2...
Blog Archive
-
▼
2026
(1642)
-
▼
October
(75)
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-10-2026 விய...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 ஒரு மதிப்பெண் வினாக்க...
- திறன் பிளஸ் தமிழ் விடைக்குறிப்பு வகுப்பு 6
- திறன் பிளஸ் தமிழ் விடைக்குறிப்பு வகுப்பு 7
- திறன் பிளஸ் தமிழ் விடைக்குறிப்பு வகுப்பு 8
- திறன் பிளஸ் தமிழ் விடைக்குறிப்பு வகுப்பு 9
- பன்முகக் கலைஞர் பத்தாம் வகுப்பு தமிழ் உரைநடை Full ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-10-2026 புதன்
- அறிவுசால் ஔவையார் Full AI VIDEO ஆறாம் வகுப்பு தமிழ...
- பத்தாம் வகுப்பு தமிழ் திருக்குறள் குறுவினா எளிய வி...
- சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை வழிபாடு Saraswathi Pooja Ay...
- பத்தாம் வகுப்பு தமிழ் குறுவினா எளிய விடை இயல் 5 Te...
- ஆயுத பூஜை வழிபாடு செய்ய உகந்த நல்ல நேரம்
- சிற்றகல் ஒளி FULL AI VIDEO பத்தாம் வகுப்பு தமிழ் உ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 திருக்குறள் FULL AI V...
- ஆறாம் வகுப்பு தமிழ் உழைப்பே மூலதனம் FULL AI VIDEO...
- வாழ்விக்கும் கல்வி FULL AI VIDEO ஏழாம் வகுப்பு தம...
- கடலோடு விளையாடு FULL AI VIDEO ஆறாம் வகுப்பு தமிழ் ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-10-2026 வெள்ளி
- மனித யந்திரம் FULL AI VIDEO எட்டாம் வகுப்பு தமிழ் ...
- அரசு பொதுத் தேர்வு கால அட்டவணை 2027
- 11 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு கால அட்டவணை 2027...
- 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு கால அட்டவணை 2027
- பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு கால அட்டவணை 2027
- அக்னிச் சிறகுகள் தமிழ்க் கவிதை அப்துல் கலாம் AGNIC...
- கனவுகளின் நாயகன் கலாம் தமிழ்க் கவிதை அப்துல் கலாம்...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-10-2026 விய...
- கலாம் கண்ட கனவு தமிழ்க் கவிதை அப்துல் கலாம் பிறந்த...
- யார் பாவி? ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை ta...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-10-2026 புதன்
- திறன் பிளஸ் இயக்கம் thiran plus iyakkam
- பள்ளிகளுக்கான புதிய திருத்திய கால அட்டவணை 2026 - 2027
- பால்மனம் FULL AI VIDEO எட்டாம் வகுப்பு தமிழ் விரிவ...
- ஏழாம் வகுப்பு தமிழ் பூத்தொடுத்தல் FULL AI VIDEO te...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-10-2026 செவ...
- இலக்கியவகைச் சொற்கள் FULL AI VIDEO ஏழாம் வகுப்பு த...
- அறிவியல் கண்காட்சி ஆவுடையாபுரம் அரசுப் பள்ளி SCIEN...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-10-2026 திங...
- தமிழர் இசைக்கருவிகள் Full AI VIDEO எட்டாம் வகுப்ப...
- தமிழர் பெருவிழா FULL AI VIDEO ஆறாம் வகுப்பு தமிழ்...
- கண்மணியே கண்ணுறங்கு Full AI VIDEO ஆறாம் வகுப்பு த...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினா வி...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்க...
- தேன்சிட்டு 2026 அக்டோபர் 1 மாத இதழ் வினாடி வினா வி...
- தேன்சிட்டு 2026 அக்டோபர் இதழ் 1 வினாடி வினா - வினா...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-10-2026 வெள்ளி
- ஏழாம் வகுப்பு தமிழ் அழியாச் செல்வம் நாலடியார் விளக...
- சொல் வெல் வினாடி வினா மன்றச் செயல்பாடுகள் quiz clu...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இலக்கணம் துணை வினைகள் Full ...
- ஆசாரக்கோவை FULL AI VIDEO ஆறாம் வகுப்பு தமிழ் 6TH T...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-10-2026 விய...
- வீட்டிற்கோர் புத்தகசாலை விரிவானம் இயல் 4 வகுப்பு 9...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-10-2026 புதன்
- பள்ளி மறுதிறப்பு FULL AI VIDEO ஏழாம் வகுப்பு தமிழ்...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-10-2026 செவ...
- ஏழாம் வகுப்பு தமிழ் அழியாச் செல்வம் நாலடியார் விளக...
- ஏழாம் வகுப்பு தமிழ் தேயிலைத் தோட்டப்பாட்டு Full AI...
- ஒருவன் இருக்கிறான் FULL AI VIDEO எட்டாம் வகுப்பு த...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-10-2026 திங...
- காலம் உடன் வரும் எட்டாம் வகுப்பு தமிழ் விரிவானம் 8...
- செய்தி விரிவானம் FULL AI VIDEO ஒன்பதாம் வகுப்பு தம...
- சீவகசிந்தாமணி ஒன்பதாம் வகுப்பு தமிழ் full AI VIDEO...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஓ என் சமகாலத் தோழர்களே கவித...
- குடும்ப விளக்கு ஒன்பதாம் வகுப்பு தமிழ் FULL AI VID...
- உயிர்வகை ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 4 UYIR VAGAI ...
- பத்தாம் வகுப்பு தமிழ் முத்தொள்ளாயிரம் Full AI VIDE...
- பத்தாம் வகுப்பு தமிழ் சங்க இலக்கியத்தில் அறம் FULL...
- பத்தாம் வகுப்பு தமிழ் அகப்பொருள் இலக்கணம் full ai ...
- பத்தாம் வகுப்பு தமிழ் தேம்பாவணி FULL AI VIDEO 10th...
-
▼
October
(75)
