தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Wednesday, December 15, 2021
Monday, December 06, 2021
ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி வினாக்கள் 7th tamil refresher course questions
Tuesday, November 09, 2021
Saturday, November 06, 2021
ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 16.முழக்கத்தொடர் உருவாக்குதல் Seventh Tamil refresher course answer key 7th
மதிப்பீட்டுச் செயல்பாடு :
1. முழக்கத் தொடர்களை நிறைவு செய்க.
மழை நீர் நம் ஒவ்வொருவரின் ______________.
உயிர்நீர்
விண்ணின் மழைத்துளி ______________.
மண்ணின் உயிர்த்துளி
கால ம் ______________ போன்றது.
பொன்
2. பத்தியைப் படித்துணர்ந்து முழக்கத்தொடர்களை உருவாக்குக.
இயற்கையின் அங்கங்கள் மலைகள்; மலர்கள் பல கொண்ட நீலவண்ண மலைகள்; பனிமூடிய வெள்ளி மலைகள்; பச்சை மரங்களை ஆடையாய்க் கொண்ட பசுமலைகள்; ஆகாயத்தின் நீலவண்ணமும் பனியின் வெண்மையும் மென்மையும் கலந்த பனிமலைகள் பச்சையம் போர்த்திய துளிர்மலைகள்! இவற்றைப் போன்ற இடங்களுக்குச் சுற்றுலா செல்வது ஒரு பொழுதுபோக்கு! மனத்திற்கு நிறைவையும் அமைதியையும் தரும்.
இவ்விடங்களில் நாம் என்ன செய்துவருகிறோம்?
நெகிழிப்பைகளில் உணவை எடுத்துச்சென்று உண்டுவிட்டு அவற்றை அங்கேயே தூக்கியெறிந்துவிடுகிறோம். பசுமை போர்த்திய மலைகள் இன்று நெகிழி சூழ்ந்துகிடக்கின்றன. இயற்கை குறித்த விழிப்புணர்ச்சியை நாம் இன்னும் பெற வில்லையோ ? என நெருடலாக இருக்கிறது!
நெகிழியை ஒழிப்போம், பூமியைக் காப்போம்.
சுற்றுச்சூழல் காப்போம், இயற்கையைப் போற்றுவோம்.
இயற்கையைக் காக்க செயற்கை தவிர்ப்போம்.
வேண்டாம் வேண்டாம், நெகிழி வேண்டாம்.
3. பின்வரும் தலைப்புகள் குறித்து முழக்கத்தொடர் உருவாக்குக.
கல்வியின் சிறப்பு
தலைகுனிந்து படிப்போம், தலை நிமிர்ந்து நடப்போம்.
உடல்நலம் பேணுதல்
உடற்பயிற்சி செய்வோம், உடல் நலம் காப்போம்.
இயற்கையைப் பேணுதல்
செயற்கை நெகிழி தவிர்த்து இயற்கை வளம் காப்போம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
சுற்றுச்சூழல் காப்போம் நலமுடன் வாழ்வோம்.
சேமிப்பின் சிறப்பு
சிறுதுளி பெருவெள்ளம்
சிக்கனத்தின் தேவை
சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும்.
4. படம் உணர்த்தும் கருத்தை முழக்கத்தொடராக மாற்றுக.
ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 15.மயங்கொலிச் சொற்கள் Seventh Tamil refresher course answer key 7th
மதிப்பீட்டுச் செயல்பாடு :
1. பொருள் தருக.
காணல் - காணுதல்
கானல் - பாலைவனம்
அனல்- நெருப்பு
அணல் - கழுத்து
பலம் - உறுதி
பழம் - கனி
அறம் - உதவி
அரம் - கருவி
தலை - உடல்உறுப்பு
தளை - கட்டுதல்
கலை - ஓவியம், இசை முதலியன
களை - தேவையற்றது
கரை - ஆற்றின் ஓரம்
கறை - அழுக்கு
பரவை - கடல்
பறவை - பறக்கும் உயிரினம்
2. பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.
அ. பூனைக்குப் பிடித்தது _____________ (பால்/பாழ் ). பால்
ஆ. விண்ணின் துளி _____________ (மலை/மழை). மழை
இ. காட்டில் இருப்பது _____________ (மரம் /மறம்). மரம்
ஈ. மீன் பிடிக்க உதவுவது _____________ (வளை / வலை). வலை
உ. ஆடு உண்பது _____________ (தழை /தலை). தழை
ஊ. ஓவியம் என்பது ஒரு _____________(களை /கழை /கலை). கலை
எ. மனதில் _____________ கொள்ளல் வேண்டும். (உறுதி /உருதி). உறுதி
ஏ. ஓணான் மரத்தில் _____________ (ஏரியது /ஏறியது ). ஏறியது
ஐ. நாய் என்பது ஒரு வீட்டு _____________ (விலங்கு /விளங்கு /விழங்கு). விலங்கு
3. கீழ்க்காணும் சொற்களைக் கொண்டு சரியான இரண்டு தொடரை எழுதுக.
(எ.கா. ) வேந்தன் / கேட்டது / குரல் / சொன்னார் / குறள்.
வேந்தன் குறள் சொன்னார்.
வேந்தன் குரல் கேட்டது.
அ. கண்ணன் / வழியில் / துடித்தான் / சென்றான் / வலியால்.
கண்ணன் வழியில் சென்றான்.
கண்ணன் வலியால் துடித்தான்.
ஆ. குரங்கு / மறத்தில் / தமிழர்கள் / மரத்தில் / சிறந்தவர்கள் / ஏறியது,
குரங்கு மரத்தில் ஏறியது.
தமிழர்கள் மறத்தில் சிறந்தவர்கள்.
4. சொல்லையும் பொருளையும் பொருத்துக.
அ. ஒலி - வெளிச்சம்
ஆ. ஒளி - அரசன்
இ. இரை - ஓசை
ஈ. இறை - உணவு
ஒலி - ஓசை
ஒளி - வெளிச்சம்
இரை - உணவு
இறை - அரசன்
5. பின்வரும் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
ஆனி (மாதம்), ஆணி (சுவரில் அடிப்பது), விலங்கு (உயிரினம்), விளங்கு (திகழ்தல்), தினை (தானியம்), திணை (ஒழுக்கம்)
ஆனிக்குப் பிறகு ஆடி.
ஆணியில் படத்தை மாட்டினான்.
நாய் நன்றியுள்ள விலங்கு.
நீ புகழுடன் விளங்கு.
தினைச் சோறு உண்டோம்.
திணை தமிழர்களின் பண்பு.
ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 14.சூழலைப் புரிந்து விடையளித்தல் Seventh Tamil refresher course answer key 7th
மதிப்பீட்டுச் செயல்பாடு :
1. வினாக்களைப் படித்து விடை எழுதுக.
1. அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்தவர்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் - அது இயல்பானதா? காரணம் தருக.
இல்லை, பல குடும்பத்தினர் ஒற்றுமையாக இருந்துள்ளது மிகவும் ஆச்சரியமானது.
2. பெருந்தொற்றுக் காலத்தில் கனிமொழி செய்த செயல் எப்படிப்பட்டது? உங்களின் கருத்தைக் குறிப்பிடுக.
கனிமொழி செய்த செயல் பாராட்டத்தக்கது.
சரியான செயல் என்பது என் கருத்து.
3. கனிமொழியின் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?
நானும் உதவி செய்திருப்பேன்.
4. நிகழ்வில் வெளிப்படுகின்ற நற்பண்புகள் யாவை ?
ஒற்றுமையாக இருத்தல்
பிறருக்கு உதவுதல்
பாராட்டுதல்
2. நிகழ்வைப் படித்து உங்களின் கருத்தைக் குறிப்பிடுக.
விபத்தில் பாதிக்கப்பட்டு இதயம் மட்டுமே இயங்கிய நிலையில் ஹிதேந்திரனின் இதயத்தை இதயம் தேவைப்படும் சிறுமிக்குக் கொடையாக வழங்கினர் ஹிதேந்திரனின் பெற்றோர் .
ஹிதேந்திரனின் பெற்றோரின் கொடை சிறுமியைக் காப்பாற்றியுள்ளது.
தங்கள் மகன் இறப்பு உறுதியான நிலையில் தங்கள் மகன் இதயம் வாழ வழி செய்துள்ளனர்.
அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 13.வினாக்களுக்கு விடையளித்தல் seventh Tamil refresher course answer key 7th
மதிப்பீட்டுச் செயல்பாடு:
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
உலகில் எந்த ஆறும் தனது தாகத்திற்காக ஓடுவதில்லை. எந்த நிலமும் தன் பசிக்காக விளைவதில்லை. எந்த மரமும் தனக்காகக் கனிகளை உருவாக்குவதில்லை.
இவற்றைப் போல மனிதனும் தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ வேண்டும். அவ்வாறு வாழ்வதற்கு அருள், பொறுமை, பரிவு, நன்றி உணர்வு, இன்சொல் பேசுதல் போன்றவை தேவை.
எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துதல் வேண்டும். அதுவே மனிதநேயம் ஆகும். மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
1. படத்திற்குப் பொருத்தமான தொடரைப் பத்தியிலிருந்து எடுத்து எழுதுக.
எந்த நிலமும் தன் பசிக்காக விளைவதில்லை. எந்த மரமும் தனக்காகக் கனிகளை உருவாக்குவதில்லை.
உலகில் எந்த ஆறும் தனது தாகத்திற்காக ஓடுவதில்லை.ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 12.நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்தல் seventh Tamil refresher course answer key 7th
மதிப்பீட்டுச் செயல்பாடு:
1. பொருத்துக.
சொற்றொடர் - நிறுத்தக்குறி
அடடா நீங்கள் வந்ததைப் பார்க்கவில்லையே
உணர்ச்சிக்குறி/ வியப்புக்குறி (!)
காற் புள்ளி (,)
எனக்குக் கதை கேட்க மிகவும் பிடிக்கும்
முற்றுப்புள்ளி (.)
பனிமலை உருகிப்போகிறதே ஏன்
வினாக்குறி (?)
2. பின்வரும் பத்தியில் நிறுத்தக் குறி பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களை எடுத்து எழுதுக.
நண்பா ! நண்பா ! எங்கே இருக்கிறாய்? என் ஆருயிர் நண்பா ! இங்கேயா இருக்கிறாய்?
ஐயோ ! வலையில் மாட்டிக் கொண்டாயே ! கத்துவதற்குக்கூட வழியில்லாமல் இப்படிக் கம்பிவலையில் சிக்கிக் கொண்டாயே. சரிசரி! நீ தப்பித்துக் கொள்ள ஒரு யோசனை சொல்கிறேன், கேள். விவசாயி அருகில் வரும்போது நீ இறந்துவிட்ட து போல் நடி; அசையாமல் இரு. விவசாயி உன்னை வலையிலிருந்து விடுவித்தவுடன் நான் மரத்திலிருந்து கா! கா! கா! என்று குரல் கொடுக்கிறேன், உடனே தப்பித்துக் கொள்.
சொற்கள் - நிறுத்தக்குறி
நண்பா ! நண்பா ! - வியப்புக்குறி
எங்கே இருக்கிறாய்? - வினாக்குறி
ஆருயிர் நண்பா ! - வியப்புக்குறி
இங்கேயா இருக்கிறாய்? - வினாக்குறி
ஐயோ ! வலையில் மாட்டிக் கொண்டாயே ! - வியப்புக்குறி
சிக்கிக் கொண்டாயே. - முற்றுப்புள்ளி
சரி சரி! - வியப்புக்குறி
சொல்கிறேன், - காற்புள்ளி
கேள். - முற்றுப்புள்ளி
அசையாமல் இரு. - முற்றுப்புள்ளி
கா! கா! கா! - வியப்புக்குறி
கொடுக்கிறேன், - காற்புள்ளி
உடனே தப்பித்துக் கொள். - முற்றுப்புள்ளி
3. கீழ்க்காணும் தொடர்களுக்கு நிறுத்தக் குறியிட்டு எழுதுக.
1. ஆடுகள் மாடுகள் நாய்கள் கோழிகள் ஆகியவற்றை வளர்த்து வருகிறேன்.
ஆடுகள், மாடுகள், நாய்கள், கோழிகள் ஆகியவற்றை வளர்த்து வருகிறேன்.
2. இன்பத்திலும் துன்பத்திலும் இணை பிரியா நண்பரே வருக
இன்பத்திலும் துன்பத்திலும் இணை பிரியா நண்பரே ! வருக !
3. நான் நேற்று என் பிறந்தநாளைக் கொண்டாடினேன்
நான், நேற்று என் பிறந்தநாளைக் கொண்டாடினேன்.
4. திருக்குறளில் அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்ற மூன்று பெரும் பிரிவுகள் உண்டு
திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பெரும் பிரிவுகள் உண்டு.
5. தந்தை மகன் இருவர் முகத்திலும் மலர்ச்சி
தந்தை, மகன் இருவர் முகத்திலும் மலர்ச்சி!
6. இன்னும் இரு நாள்களில் பருவமழை பெய்யும்
இன்னும் இரு நாள்களில் பருவமழை பெய்யும்.
7. எவ்வளவு பெரிய மலை
எவ்வளவு பெரிய மலை!
ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 11.பண்பியல் திறன்கள் seventh Tamil refresher course answer key 7th
மதிப்பீட்டுச் செயல்பாடு: 1
பின்வரும் நிகழ்வைப் படித்து செயலையும் நற்பண்பையும் எழுதுக.
இரவியும் கண்ணனும் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் நெருங்கிய நண்பர்கள். ஒருநாள், இரவியின் பெற்றோர் வெளியூர் சென்றிருந்தனர். அந்நாளில் இரவியின் வீட்டிற்குக் கண்ணன் வந்திருந்தான் . அப்பொழுது இரவியின் நாய் நீர்த்தொட்டியில் விழுந்ததால் கால் முறிந்துவிட்ட து. நண்பர்கள் இருவரும் நீர்த்தொட்டியில் இருந்து கவனமாக நாயை வெளியில் எடுத்தனர்; கால்நடை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். மருத்துவர் அதற்குச் சிகிச்சை அளித்தார் . பின்னர் இரவியும் கண்ணனும் மருத்துவருக்கு நன்றி கூறி வீடு திரும்பினர். மறுநாள் இரவியின் பெற்றோரும் வீட்டிற்குத் திரும்பினர். இரவி, கண்ணன் இருவரின் செயலைக்கேட்டு மகிழ்ந்து பாராட்டினர்.
செயல்
நீர்த்தொட்டியில் இருந்து நாயை வெளியில் எடுத்தல்
நற்பண்பு
பிற உயிர்களிடம் அன்பு காட்டுதல்
செயல்
மருத்துவருக்கு நன்றி கூறுதல்
நற்பண்பு
நன்றி தெரிவித்தல்
செயல்
பெற்றோர் பாராட்டுதல்
நற்பண்பு
நற்செயலைப் பாராட்டுதல்
மதிப்பீட்டுச் செயல்பாடு : 2
பின்வரும் கதையைப் படித்துப் பார்த்துப் பட்டாம் பூச்சி என்ன பதில் கூறியிருக்கும் என்பதை எழுதுக.
பட்டம் ஒன்று வானத்தில் மிக உயரமாகப் பறந்து கொண்டிருந்தது. தான்
உயரமாகப் பறப்பதை எண்ணி அதிக ஆணவம் கொண்டிருந்தது. கீழே பூக்களின் மீது பறந்து கொண்டிருந்த வண்ணத்துப் பூச்சியைப் பார்த்து “என்னைப் பார்த்தாயா! நான் வானத்தைத் தொடுமளவு மேலே பறக்கிறேன். ”நீயோ மிகவும் தாழ்வாகப் பறந்து கொண்டிருக்கிறாய்“ என்று பெருமை பேசியது, பட்டாம்பூச்சி பதிலுக்கு
நீ நூலின் துணையோடும் காற்றின் துணையோடும்தான் பறக்கிறாய்.
நான் என் சிறகின் துணையோடு பறக்கிறேன். பறக்கும் உயரத்தை என்னால் முடிவு செய்ய இயலும். உன்னால் முடிவு செய்ய இயலாது. உணர்ந்துகொள் பட்டமே.
ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 10.கதையினைக் கேட்டு விளக்கம் அளித்தல் seventh Tamil refresher course answer key 7th
மதிப்பீட்டுச் செயல்பாடு
1. வகுப்பில் நடந்த பின்வரும் நிகழ்வினை வரிசைப்படுத்தி எழுதுக. இந்நிகழ்வினைக் கதையாகக் கூறுக.
எ.கா.
1. வளவனும் பாலனும் பேசிக் கொண்டிருந்தனர்.
2. வளவன் எல்லாருக்கும் முன்பாக முதலில் பள்ளிக்கு வந்துவிட்டான்.
3. வளவன், காலையில் உணவு உண்ணாமல் பள்ளிக்கு வந்தான்.
4. திடீரென்று வளவன் மயங்கி விழுந்தான்.
5. என்ன சத்தம்? எனக் கேட்டார்.
6. விழுந்த சத்தம் கேட்டு ஆசிரியர் உள்ளே வந்தார்.
1.வளவன், காலையில் உணவு உண்ணாமல் பள்ளிக்கு வந்தான்.
2.வளவன் எல்லாருக்கும் முன்பாக முதலில் பள்ளிக்கு வந்துவிட்டான்.
3.வளவனும் பாலனும் பேசிக் கொண்டிருந்தனர்.
4.திடீரென்று வளவன் மயங்கி விழுந்தான்.
5.விழுந்த சத்தம் கேட்டு ஆசிரியர் உள்ளே வந்தார்.
6.என்ன சத்தம்? எனக் கேட்டார்.
2. கதையைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
எறும்பும் புறாவும்
எறும்பு ஒன்று ஆற்றுநீரில் அடித்துச் செல்லும்போது மரத்திலுள்ள புறா ஒன்று அதைப் பார்த்தது. உடனே மரத்தில் உள்ள இலையைப் பறித்து தண்ணீரில் போட்டது.
அதைப் பார்த்த எறும்பு அந்த இலையின் மேல் ஏறி தப்பித்துக் கொண்ட து. ஒருநாள் வேடன் ஒருவன் மரத்திலுள்ள புறாவைக் கொல்வதற்காக வில்லில் இருந்து அம்பை எய்தினான்.
அப்பொழுது அதைப்பார்த்த எறும்பு, அவனது காலைக் கடித்து விடுகிறது. அம்பு திசைமாறிச் சென்று விடுகிறது. புறா அதை அறிந்து தப்பித்து விடுகிறது. உரிய காலத்தில் ஒருவர் செய்யும் உதவியானது, அவருக்கு பல்வேறு நன்மைகளைப் பெற்றுத்தரும் என்ற நீதியை இக்கதை உணர்த்துகிறது.
வினாக்கள்:
1.இப்பத்தியில் இடம்பெறும் உயிரினங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
எறும்பு, புறா, வேடன்.
2. புறா மரத்தில் உள்ள இலையைப் பறித்துத் தண்ணீரில் போட்டதற்கான காரணம் என்ன?
ஆற்றுநீரில் அடித்துச் சென்ற எறும்பைக் காப்பாற்ற.
3. இக்கதையின்வழி உணரப்படும் பண்பு யாது? இப்பண்பு வெளிப்பட்ட நிகழ்வு ஒன்றனைக் குறித்துப் பேசுக.
உரிய காலத்தில் செய்யும் உதவி மிகப் பெரியது.
தேர்வு நேரத்தில் என் எழுதுகோல் தொலைந்துபோன போது என் நண்பன் கொடுத்து உதவினான்.
4. இக்கதையிலிருந்து இரண்டு வினாக்களை உருவாக்குக.
1. எறும்பு ஏன் வேடனின் காலைக் கடித்தது ?
2. வேடன் எதைக் கொல்ல குறி வைத்தான் ?
ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 9.தமிழ்ப்படைப்பாளர்கள், படைப்புகள் seventh Tamil refresher course answer key 7th
மதிப்பீட்டுச் செயல்பாடு
1. கவிஞர் தமிழ்ஒளி குறித்துப் பேசுக.
கவிஞர் தமிழ்ஒளியின் இயற்பெயர் விஜயரங்கம்.
இவர் பாரதிதாசனின் மாணவர், இவர் எழுதிய 'சிற்பியின் கனவு' என்னும் மேடை நாடகம் 'வணங்காமுடி' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. வீராயி, கவிஞனின் காதல், நிலை பெற்ற சிலை போன்ற குறுங்காவியங்களைப் படைத்தார்.
2. கவிஞர் பாரதிதாசன் பாடல்களுள் உனக்குப் பிடித்த ஒரு பாடலைப் பாடநூலில் இருந்து எடுத்தெழுதுக.
"தமிழுக்கும் அமுதென்று பேர் -அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !
தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் !
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!"
3. பின்வரும் கவிஞர் வாணிதாசனின் பாடலைப் படித்து அது குறித்த உங்கள் கருத்தை ஒரு பத்தியில் எழுதுக.
"மழையே ! மழையே ! வா வா
வாழ்வின் உயிரே வா வா
உழவர் உன்னை எதிர்பார்த்தே
ஒவ்வொரு நாளும் பேசுகின்றார்
ஏரி குளங்கள் நிறைந்திடவும்
எருமை மாடு களித்திடவும்
ஊரில் உள்ள வயலெல்லாம்
பச்சைப் பட்டை உடுத்திடவும்
மரங்கள் செடிகள் தழைத்திடவும்
மலர்கள் பூத்துச் சிரித்திடவும்
தெருவில் சிறுவர் தாளாலே
கப்பல் செய்து விட்டிடவும்
காடு கரம்பு துளிர்த்திடவும்
காளை மாடு கொழுத்திடவும்
ஓடை ஆறு கல்லிடுக்கில்
ஓயாது இசையை மீட்டிடவும்
தவளை எல்லாம் ஓயாது
தத்திக் கத்திக் களித்திடவும்
குவளை பூக்க வண்டினங்கள்
தேனைக் குடித்துப் பாடிடவும். . . "
மழையின் இன்றியமையாமையைக் கூறுகிறார். மழையை யாரெல்லாம் எதிர்பார்க்கிறார்கள் என்றும் மழையினால் எவ்வாறெல்லாம் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றும் கூறுகிறார். எல்லாவற்றிற்கும் உரிய தேவையாக மழை உள்ளது என்பதை இப்பாடல் மூலம் அறியலாம்.
4. எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் அப்பாவின் வேஷ்டி என்ற கதையை உங்கள் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்க . அது குறித்த உங்கள் கருத்தை ஆசிரியரிடமும் வகுப்பு மாணவர்களிடமும் பகிர்ந்து கொள்க .
நீங்கள் பகிரவிரும்பும் கருத்து:
எல்லோருக்கும் அம்மாவைப் பிடிக்கும். எனக்கு அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும். அப்பாவைக் குறித்த பல கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அந்த ஆத்மாவுக்கு நான் செய்ய முடிந்தது இதுதான். அதனால்தான் இந்தத் தொகுதிக்கு அப்பாவின் வேஷ்டி என்று பெயர் என பிரபஞ்சன் கூறியுள்ளார். அப்பாவின் நினைவுகளை அள்ளித்தரும் சிறுகதை இது.
ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 8.மரபுத்தொடர் seventh Tamil refresher course answer key 7th
மதிப்பீட்டுச் செயல்பாடு
1. மரபுத் தொடர் உணர்த்தும் பொருளை வட்டமிடுக.
கானல் நீர் – ஏமாற்று வேலை, கிடைக்காத ஒன்று
கரையேறுதல் – துன்பத்திலிருந்து மீளுதல், ஆற்றிலிருந்து ஏறுதல்
கை கழுவுதல் – வேலை போய்விட்டது, விட்டுவிடுதல்
குரங்குப்பிடி – உறுதியாகப் பற்றுதல், கைப்பிடி
2. தேர்ந்தெடுத்து நிரப்புக.
1.தொழிலில் பேராசையின் காரணமாக அகல கால் வைத்தான் .
(அகல / நீண்ட )
2. தலைவரை மக்கள் தலையில் வைத்து கொண்டாடினார்கள்.
(தலையில் வைத்து / கையில் வைத்து)
3. மாணவர்கள் நன்றாகப் படித்தால்தான் வாழ்க்கைக் கடலில் கரையேறுவார்கள்.
(கரையேறுவார்கள் / ஓடுவார்கள்)
3. பொருத்துக.
அ. பஞ்சாகப் பறத்தல் - விடாப்பிடி
ஆ. கரையேறுதல் - இல்லாத ஒன்று
இ. ஆகாயத்தாமரை - அலைந்து திரிதல்
ஈ. குரங்குப்பிடி - துன்பத்திலிருந்து மீளுதல்
பஞ்சாகப்பறத்தல் - அலைந்து திரிதல்
கரையேறுதல் - துன்பத்திலிருந்து மீளுதல்
ஆகாயத்தாமரை - இல்லாத ஒன்று
குரங்குப்பிடி - விடாப்பிடி
4. கொடுக்கப்பட்டுள்ள மரபுத் தொடர்களைக் கொண்டு சொற்றொடர் அமைக்க.
அ. பசுமரத்தாணி
ஆசிரியர் கற்பித்த இலக்கணம் பசுமரத்தாணியாய் மனதில் பதிந்தது.
ஆ. மலையேறிவிட்டது
மாட்டுவண்டிப் பயணம் தற்போது மலையேறிவிட்டது.
இ. கல்மேல் எழுத்து
நான் கற்ற வாய்பாடு கல்மேல்எழுத்து போல் என் மனதில் உள்ளது.
ஈ. பச்சைக் கொடி
நான் மேற்படிப்பு கற்க என் தந்தை பச்சைக்கொடி காட்டினார்.
உ. ஈரமனசு
அன்னைதெரசாவிற்கு ஈரமனசு இருந்தது.
ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 7.அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி seventh Tamil refresher course answer key 7th
மதிப்பீட்டுச் செயல்பாடு
சலசலக்கும் நீரோடையில் பயந்து பயந்து மான் ஒன்று மலங்க மலங்கச் சுற்றிப் பார்த்து மசமசவென நிற்காமல் மடமடவென நீர் பருகியது. அங்கே பதுங்கிப் பதுங்கி வந்த புலி ஒன்று திகுதிகு எனத் தீப்பொறி தெறிக்கும் கண்களால் குறுகுறுவென மானைப் பார்த்தது. தொலைவில் இருந்து இதனைக் கண்ட இருவர் வெலவெலத்துப் போய்க் கால்கள் வெடவெடவென நடுநடுங்கப் ’புலி புலி‘ என கத்தவும் துணிவின்றிச் செய்வதறியாது திருதிருவென விழித்தனர். அப்போது முதலைக்குட்டி மெதுவாய் நீந்திவர, புலியின் கவனம் சற்றே சிதறியது. அச்சமயம் மரக்கிளை சடசடவென முறிந்தது.
1. இப்பத்தியில் இடம்பெற்றுள்ள அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி சொற்களை எடுத்து எழுதவும்.
அடுக்குத் தொடர்
பயந்து பயந்து, பதுங்கி பதுங்கி, புலிபுலி.
இரட்டைக்கிளவி
சலசல, மலங்க மலங்க, மச மச, மடமட, திகுதிகு, குறுகுறு, வெலவெலத்து, வெடவெட, நடுநடுங்க, திருதிரு, சடசட.
2. கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(சலசல , கலகல, மளமள)
மிட்டாயைப் பார்த்ததும் குழந்தை கலகல எனச் சிரித்தது.
ஆற்றில் நீர் சலசல என ஓடியது.
நேரமாகிவிட்டதால் சங்கவி வீட்டுப்பாடங்களை மளமள என்று எழுதினாள்.
3. தொடர் அமைத்து எழுதுக.
அ. கொழுகொழு ஆ. நன்று நன்று
அ. நாய் கொழுகொழு என இருந்தது.
ஆ.ஆசிரியர் நன்று நன்று எனப் பாராட்டினார்.
4. ‘வெடவெடத்து – பாம்பு பாம்பு’ – ஆகிய இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் இரண்டையும் சேர்த்துப் பொருளுள்ள ஒரு தொடராக எழுதுக.
கோபி இருளில் கயிற்றைக் கண்டு வெடவெடத்து பாம்பு பாம்பு என்று கத்தினான்.
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson lesson plan October 5 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2...
-
10th tamil model notes of lesson lesson plan October 12 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 ...
-
9th tamil model notes of lesson lesson plan October 5 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 ...
-
6th tamil model notes of lesson lesson plan October 5 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2....
-
9th tamil model notes of lesson lesson plan October 12 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 ...
-
8th tamil model notes of lesson lesson plan October 5 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2....
-
8th tamil model notes of lesson lesson plan October 12 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 ...
-
7th tamil model notes of lesson lesson plan October 12 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 2...
-
7th tamil model notes of lesson lesson plan October 5 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2.பர...
-
6th tamil model notes of lesson lesson plan October 12 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 2...
Blog Archive
-
▼
2026
(1610)
-
▼
October
(43)
- யார் பாவி? ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை ta...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-10-2026 புதன்
- திறன் பிளஸ் இயக்கம் thiran plus iyakkam
- பள்ளிகளுக்கான புதிய திருத்திய கால அட்டவணை 2026 - 2027
- பால்மனம் FULL AI VIDEO எட்டாம் வகுப்பு தமிழ் விரிவ...
- ஏழாம் வகுப்பு தமிழ் பூத்தொடுத்தல் FULL AI VIDEO te...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-10-2026 செவ...
- இலக்கியவகைச் சொற்கள் FULL AI VIDEO ஏழாம் வகுப்பு த...
- அறிவியல் கண்காட்சி ஆவுடையாபுரம் அரசுப் பள்ளி SCIEN...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-10-2026 திங...
- தமிழர் இசைக்கருவிகள் Full AI VIDEO எட்டாம் வகுப்ப...
- தமிழர் பெருவிழா FULL AI VIDEO ஆறாம் வகுப்பு தமிழ்...
- கண்மணியே கண்ணுறங்கு Full AI VIDEO ஆறாம் வகுப்பு த...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினா வி...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்க...
- தேன்சிட்டு 2026 அக்டோபர் 1 மாத இதழ் வினாடி வினா வி...
- தேன்சிட்டு 2026 அக்டோபர் இதழ் 1 வினாடி வினா - வினா...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-10-2026 வெள்ளி
- ஏழாம் வகுப்பு தமிழ் அழியாச் செல்வம் நாலடியார் விளக...
- சொல் வெல் வினாடி வினா மன்றச் செயல்பாடுகள் quiz clu...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இலக்கணம் துணை வினைகள் Full ...
- ஆசாரக்கோவை FULL AI VIDEO ஆறாம் வகுப்பு தமிழ் 6TH T...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-10-2026 விய...
- வீட்டிற்கோர் புத்தகசாலை விரிவானம் இயல் 4 வகுப்பு 9...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-10-2026 புதன்
- பள்ளி மறுதிறப்பு FULL AI VIDEO ஏழாம் வகுப்பு தமிழ்...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-10-2026 செவ...
- ஏழாம் வகுப்பு தமிழ் அழியாச் செல்வம் நாலடியார் விளக...
- ஏழாம் வகுப்பு தமிழ் தேயிலைத் தோட்டப்பாட்டு Full AI...
- ஒருவன் இருக்கிறான் FULL AI VIDEO எட்டாம் வகுப்பு த...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-10-2026 திங...
- காலம் உடன் வரும் எட்டாம் வகுப்பு தமிழ் விரிவானம் 8...
- செய்தி விரிவானம் FULL AI VIDEO ஒன்பதாம் வகுப்பு தம...
- சீவகசிந்தாமணி ஒன்பதாம் வகுப்பு தமிழ் full AI VIDEO...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஓ என் சமகாலத் தோழர்களே கவித...
- குடும்ப விளக்கு ஒன்பதாம் வகுப்பு தமிழ் FULL AI VID...
- உயிர்வகை ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 4 UYIR VAGAI ...
- பத்தாம் வகுப்பு தமிழ் முத்தொள்ளாயிரம் Full AI VIDE...
- பத்தாம் வகுப்பு தமிழ் சங்க இலக்கியத்தில் அறம் FULL...
- பத்தாம் வகுப்பு தமிழ் அகப்பொருள் இலக்கணம் full ai ...
- பத்தாம் வகுப்பு தமிழ் தேம்பாவணி FULL AI VIDEO 10th...
-
▼
October
(43)













