கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, January 30, 2024

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf கடலூர் 2024

பதிவிறக்கு/DOWNLOAD

10th tamil second revision exam model public exam question paper Cuddalore district pdf 2024 sslc tenth X 

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf சென்னை 2023

பதிவிறக்கு/DOWNLOAD 

10th tamil second revision exam model public exam question paper pdf 2023 sslc tenth X Chennai 

பத்தாம் வகுப்பு தமிழ் முக்கியமான விடைக்கேற்ற வினா அமைத்தல் வினாவிடை 10th tamil important 2 marks

பத்தாம் வகுப்பு தமிழ் விடைக்கேற்ற வினா அமைத்தல் முக்கிய வினாவிடைகள் pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


10th Tamil Important Vidaiketra Vina Amaithal question and answer pdf sslc tenth 

10th Class Tamil Answers and Questions

12 ஆம் வகுப்பு தமிழ் பயிற்சித் தேர்வு விருதுநகர் மாவட்டம் மாதிரி பொதுத் தேர்வு வினாத்தாள் 2024 மன்றத் தேர்வு

hsc 12th +2 MANDRA THERVU VINATHAL model public exam question paper virudhunagar district 2024

பத்தாம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி முதல் திருப்புதல் தேர்வு மாதிரி பொதுத் தேர்வு வினாத்தாள் கரூர் மாவட்டம் 2024

10th maths English medium first revision test model public exam question paper sslc tenth X 2024

Sunday, January 28, 2024

பத்தாம் வகுப்பு தமிழ் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல் முக்கிய வினாவிடை paadal question

பத்தாம் வகுப்பு தமிழ் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல் தேர்வு வினாத்தாள் pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


sslc Tenth Tamil public Question 12 - 15 seyyul paadal important question paper pdf

பத்தாம் வகுப்பு தமிழ் பாடலடி வினாத்தாள்



பத்தாம் வகுப்பு தமிழ் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல் முக்கிய வினாவிடை pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


10th class Tamil song reading and answering questions is the main quiz

sslc Tenth Tamil public Question 12 - 15 seyyul paadal important question and answer pdf

பத்தாம் வகுப்பு தமிழ் பாடலடி வினா விடை

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பசிப்பிணி போக்கிய பாவை

 6th Tamil Model Notes Of Lesson

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

05-02-2024 முதல் 09-02-2024

2.பருவம்

3

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

எல்லாரும் இன்புற – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

பசிப்பிணி போக்கிய பாவை

6.பக்கஎண்

24 - 27

7.கற்றல் விளைவுகள்

T-609 மிக நுட்பமாக ஒரு நூலை ஆய்ந்து, குறிப்பிட்ட செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல், ஊகித்தறிதல் மற்றும் முடிவு செய்தல்.

8. கற்றல் நோக்கங்கள்

பிறர் பசியைப் போக்கும் உயர் சிந்தனையை வளர்த்தல் திறன்.

பெற்றோரையும் பெரியோர்களையும் மதிக்கும் பண்பு பெறுதல் திறன்.

9.நுண்திறன்கள்

அறஇலக்கியங்கள் கூறும் கருத்துகள் குறித்து அறிதல்.

பசிப்பிணி போக்கும் பண்பை அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_45.html

https://tamilthugal.blogspot.com/2019/01/qr-code-video.html

https://tamilthugal.blogspot.com/2019/01/qr-code-video_19.html

https://tamilthugal.blogspot.com/2021/02/pasippini-pokkiya-pavai-kuruvina-6th.html

https://tamilthugal.blogspot.com/2023/01/3-2-6th-tamil-mindmap-term-3-unit-2_27.html   

https://tamilthugal.blogspot.com/2020/06/manimegalai.html

https://tamilthugal.blogspot.com/2022/05/chithalai-chathanar.html

11.ஆயத்தப்படுத்துதல்

பசியின் கொடுமை, பஞ்சம் பற்றிக் கூறச்செய்தல்.

மணிமேகலை குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.

12.அறிமுகம்

மணிமேகலை, துறவு பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          அமுதசுரபி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். மணிமேகலை குறித்து விளக்குதல். ஆதிரை பற்றிக் கூறுதல்.

          பசி குறித்து மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். தீவதிலகை குறித்து விளக்குதல். வாழ்வைச் செம்மைப்படுத்தும் அறம் குறித்து அறியச் செய்தல். உணவின் இன்றியமையாமை குறித்து விளக்குதல். சிறைச்சாலை அறச்சாலையாக மாற நாம் செய்ய வேண்டியவை குறித்து கலந்துரையாடல்.



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பசியோடிருப்பவருக்கு உதவும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

ஐம்பெருங்காப்பியங்கள் குறித்து விளக்குதல். பல்வேறு அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.

15.மதிப்பீடு

          LOT – அமுதசுரபியில் உணவு இட்ட பெண்..............................

          MOT – அமுதசுரபியின் சிறப்பை விளக்குக.

HOT – பசியால் வாடுபவர்களுக்கு உதவுதல் பற்றி எழுதுக.

          அறச்செயல்களாக நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

பிறர் பசி போக்க நீ செய்த செயல்களைக் கூறு.

பசிப்பிணி போக்கிய பாவை நாடகத்தைக் கதை வடிவில் எழுதுக.

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஒப்புரவு நெறி

 7th Tamil Model Notes Of Lesson

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

05-02-2024 முதல் 09-02-2024

2.பருவம்

3

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

ஒப்புரவு ஒழுகு – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

ஒப்புரவு நெறி

6.பக்கஎண்

27 - 31

7.கற்றல் விளைவுகள்

T-704 தாங்கள் படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து அவற்றின்மீதான வினாக்கள் எழுப்புதல் கருத்தாடலைத் தொடங்கிவைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

ஒரு கருத்தை மையப்படுத்திய கட்டுரைகளின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினை உணர்ந்து பயன்படுத்தும் திறன்.

9.நுண்திறன்கள்

ஒப்புரவு குறித்து அறிதல். கூடி வாழ்தலை அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_60.html

https://tamilthugal.blogspot.com/2023/01/3-2-7th-tamil-mindmap-term-3-unit-2_27.html

https://tamilthugal.blogspot.com/2021/02/2-3-oppuravu-neri-7th-tamil-kuru-vina.html

11.ஆயத்தப்படுத்துதல்

உதவுதல் பற்றிக் கூறச்செய்தல்.

அறநெறியில் வாழ்தல் குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.

12.அறிமுகம்

உதவி பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          வாழ்வின் குறிக்கோள், வாழ்வும்  ஒப்புரவும், ஒப்புரவின் இயல்பு, பொருள் ஈட்டலும் ஒப்புரவும், ஒப்புரவின் பயன், ஒப்புரவும் கடமையும் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். ஒப்புரவு நெறி குறித்து விளக்குதல்.

          புறநானூறு, திருக்குறள் பாடல்களை விளக்குதல். மாணவர்களை அறநெறிகள் குறித்து அறியச் செய்தல். ஊருணித் தண்ணீர், மருந்து மரம் குறித்து விளக்குதல்.



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிறருக்கு உதவும் பண்பை வளர்த்துக் கொள்ளுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

உதவுதலின் சிறப்பு குறித்து விளக்குதல். பல்வேறு அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.

15.மதிப்பீடு

          LOT – செல்வத்தின் பயன்............................... வாழ்வு.

          MOT – ஒப்புரவுக்கு அடிகளார் தரும் விளக்கம் யாது?

HOT – ஒப்புரவுக்கும் உதவிசெய்தலுக்குமுள்ள வேறுபாடு யாது?

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

பிறருக்காக உழைத்துப் புகழ்பெற்ற சான்றோர்களின் பெயர்களைத் திரட்டுக.

நீங்கள் செய்த உதவிகளைப் பட்டியலிடுக.

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சட்டமேதை அம்பேத்கர்

  8th Tamil Model Notes Of Lesson

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

05-02-2024 முதல் 09-02-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

9

4.பாடத்தலைப்பு

குன்றென நிமிர்ந்துநில் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

சட்டமேதை அம்பேத்கர்

6.பக்கஎண்

198 - 202

7.கற்றல் விளைவுகள்

T-809 படித்தனவற்றைப் பற்றி நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்.

8.கற்றல் நோக்கங்கள்

சான்றோர்களின் வாழ்க்கையை அறிவதன்மூலம் ஆளுமைப் பண்புகளைப் பெறும் திறன்.

இந்திய அரசியல் அமைப்பின் சிறப்புகள் குறித்து இணையத்தில் தேடி எழுதுதல்.

9.நுண்திறன்கள்

அம்பேத்கர் குறித்து அறியும் திறன்.

மனித உரிமைச் சட்டங்கள் பற்றிய நூல்களைப் படித்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_66.html

https://tamilthugal.blogspot.com/2023/04/satta-medhai-annal-ambedkar-tamil.html

https://tamilthugal.blogspot.com/2023/01/9-8th-tamil-mindmap-unit-9_8.html

https://tamilthugal.blogspot.com/2021/03/9-satta-methai-ambedkar-kuruvina.html

https://tamilthugal.blogspot.com/2022/04/ambedkar-tamil-katturai-speech.html

11.ஆயத்தப்படுத்துதல்

விரும்பும் தலைவர்களின் பெயர்களைக் கூறச்செய்தல்.

அம்பேத்கர் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          அம்பேத்கரின் பிறப்பு, கல்வி, சமூகப் பணிகள் குறித்து விளக்குதல். தீண்டாமை அரசியல் அமைப்பு குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல். தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றின் மூலம் தன்னம்பிக்கையை வளர்த்தல். கடின உழைப்பு, தியாகத்தை உணர்தல்.

          சமூகச் சீர்திருத்தம் பற்றி அறிந்துகொள்ளுதல். சட்ட அமைப்பு குறித்து அறிதல்.

        


  மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

இரட்டைமலை சீனிவாசன் குறித்துக் கூறுதல். அரசியல் அமைப்புச் சட்டம் குறித்துக் கூறுதல்.

15.மதிப்பீடு

          LOT – இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ..............................

          MOT – அம்பேத்கர் தன் பெயரை ஏன் மாற்றிக்கொண்டார்?

          HOT – நல்ல சமூகம் உருவாக நம் கடமைகளை எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

உனக்குப் பிடித்த தலைவர்களையும் அவர்களின் பண்புகளையும் எழுதுக.

அம்பேத்கர் குறித்து இணையம் மூலம் அறிதல்.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு அக்கறை, குறுந்தொகை

 9th Tamil Model Notes Of Lesson

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

05-02-2024 முதல் 09-02-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

9

4.பாடத்தலைப்பு

அன்பென்னும் அறனே – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

அக்கறை, குறுந்தொகை

6.பக்கஎண்

237 - 240

7.கற்றல் விளைவுகள்

T-9045 தற்கால கவிதைப் போக்கினை அறிந்து புதுக்கவிதைகளைப் படித்தல் அவை போல எழுதுதல்.

T-9046 அன்பின் வயப்பட்ட வாழ்க்கை சங்க காலத்திலும் நிலவி வந்ததை இலக்கியம் வாயிலாகப் படித்தறிதல்.

8.கற்றல் நோக்கங்கள்

மனிதம் சார்ந்த படைப்புகளைப் படிப்பதன் வாயிலாக மனிதநேயப் பண்புடன் வாழ்தல்.

குறிப்பிட்ட தலைப்பில் கருத்துகளைத் திரட்டிக் கலந்துரையாடுதல்.

9.நுண்திறன்கள்

புதுக்கவிதைகள் வலியுறுத்தும்  பண்புகளை எழுதுதல்.

மனித நேயத்தை வலியுறுத்தும் கவிதைகளை எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்


இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_27.html

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_94.html

https://tamilthugal.blogspot.com/2019/02/9-3-3_16.html

https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_56.html

https://tamilthugal.blogspot.com/2022/05/kalyanji.html

https://tamilthugal.blogspot.com/2020/07/kurunthokai.html

11.ஆயத்தப்படுத்துதல்

அக்கறை குறித்து மாணவர்களைக் கூறச்செய்தல்.

எட்டுத்தொகை நூல்கள் குறித்துக் கூறுதல்.

12.அறிமுகம்

வண்ணதாசனை அறிமுகப்படுத்துதல்.

சங்க இலக்கியச் சுவையை அறிமுகம் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          அக்கறை பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          நகர வாழ்க்கை, மறைந்த மனிதநேயம் குறித்து விளக்குதல்.

மனிதம் குறித்துப் பேசுதல்.

மாணவர்கள் குழுக்களாக வண்ணதாசன் குறித்து உரைத்தல்.

குறுந்தொகை – பாலைத் திணை பாடல் குறித்துப் பேசுதல்.

இறைச்சி குறித்து விளக்குதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          ஹைக்கூ கவிதைகள் பற்றி மாணவர்களை அறியச் செய்தல்.

15.மதிப்பீடு

          LOT – நசை என்பதன் பொருள் ................................

          MOT – குறுந்தொகை – பெயர்க்காரணம் எழுதுக.

HOT – மனிதநேயம் குறித்த கவிதையை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          நீங்கள் பிறருக்கு உதவி செய்து மனம் நெகிழ்ந்த நிகழ்வுகளை எழுதுக.

          புதுக்கவிதை குறித்து எழுதுக.


தமிழ்த்துகள்

Blog Archive