கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, June 28, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 காசிக்காண்டம் துணைக்கருவி 10th tamil Teaching aid kasikaandam


பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 தொகைநிலைத்தொடர்கள் துணைக்கருவி 10th tamil Teaching aid thokainilaithodarkal


முல்லைப்பாட்டு பவர் பாய்ண்ட் பத்தாம் வகுப்பு தமிழ் 10th tamil ppt power point presentation unit 2

காற்றே வா பவர் பாய்ண்ட் பத்தாம் வகுப்பு தமிழ் 10th tamil ppt power point presentation unit 2 katre va

Monday, June 26, 2023

தேன்சிட்டு ஜூன் 2 மாத இதழ் வினாடி வினா 115 வினாவிடை then chittu June 2 paper quiz questions answers

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு கேட்கிறதா என் குரல், காற்றே வா, முல்லைப்பாட்டு, புயலிலே ஒரு தோணி 10th tamil model notes of lesson

 10th tamil model notes of lesson

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

03-07-2023 முதல் 07-07-2023

2.பாடம்

தமிழ்

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

உயிரின் ஓசை – உரைநடை, கவிதைப்பேழை, விரிவானம்.

5.உட்பாடத்தலைப்பு

கேட்கிறதா என் குரல், காற்றே வா, முல்லைப்பாட்டு, புயலிலே ஒரு தோணி.

6.பக்கஎண்

26 - 39

7.கற்றல் விளைவுகள்

T-1006 காற்று மாசுபாடு குறித்துக் கலந்துரையாடி விழிப்புணர்வு பெறுதல்.

T-1007 இயற்கை ஆற்றல்களை அனுபவித்துப் போற்றும் உணர்வு பெறுதல்.

T-1008 குளிர்கால வாழ்வு செய்யுளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நுட்பத்தினைப் படித்துச் சுவைத்தல்.

T-1009 கதை நிகழ்வுகளைச் சுவையுடன் படிக்கவும் படைப்புகளை உருவாக்கவும் முனைதல்.

8.திறன்கள்

காற்றின் அவசியத்தை அறிதல்.

இயற்கைச் சீற்றத்தை உணர்தல்.

9.நுண்திறன்கள்

சங்க இலக்கியம், கவிதை, புதினத்தில் காற்று குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்




இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/06/10th-tamil-ppt-power-point-presentation_27.html

https://tamilthugal.blogspot.com/2023/06/10th-tamil-ppt-power-point-presentation_28.html

https://tamilthugal.blogspot.com/2023/06/10th-tamil-ppt-power-point-presentation_86.html

https://tamilthugal.blogspot.com/2023/06/2-10th-tamil-mind-map-ketkiratha-en.html

https://tamilthugal.blogspot.com/2023/06/2-10th-tamil-mind-map-ketkiratha-en_22.html

https://tamilthugal.blogspot.com/2021/12/2-10th-tamil-online-test-with.html

https://tamilthugal.blogspot.com/2021/06/2-10th-tamil-online-test-katrey-vaa-one.html

https://tamilthugal.blogspot.com/2018/12/bharathiyar.html

https://tamilthugal.blogspot.com/2020/07/mullaippaattu.html

https://tamilthugal.blogspot.com/2019/05/mullaipattu.html

https://tamilthugal.blogspot.com/2020/05/10-2-puyaliley-oru-thoni-tenth.html

https://tamilthugal.blogspot.com/2020/05/10-2-puyalile-oru.html

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்கள் அறிந்த இயற்கைச் சீற்றங்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

ஐம்பூதங்கள் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

இலக்கிய வகைகளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          கேட்கிறதா என் குரல் பாடத்தின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.

          பாரதியார், காற்றின் முக்கியத்துவம் குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          காற்றின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல். முல்லைப்பாட்டு பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.

          கப்பித்தான், தொங்கான், அவுலியா மீன்கள் குறித்து விளக்குதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          தமிழ் இலக்கிய நயங்களின் சிறப்புகளை அறிந்து வரல்.

புயல் சீற்றங்கள் குறித்து அறிதல்.

15.மதிப்பீடு

          LOT வசன கவிதை – குறிப்பு வரைக.

          MOT – முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விளக்குக.

புயலிலே ஒரு தோணி கதையைச் சுருக்கி எழுதுக.

HOT நீர் தன்னைப்பற்றிப் பேசினால்.... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

          சோலைக்காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

நீங்கள் எதிர்கொண்ட இயற்கை இடர் குறித்து எழுதுக.

காற்றின் முக்கியத்துவம் குறித்து அறிந்து வருதல்.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நீரின்றி அமையாது உலகு, பட்டமரம், பெரியபுராணம், புறநானூறு 9th tamil model notes of lesson

 9th tamil model notes of lesson

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

03-07-2023 முதல் 07-07-2023

2.பாடம்

தமிழ்

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

உயிருக்கு வேர் – உரைநடை உலகம், கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

நீரின்றி அமையாது உலகு, பட்டமரம், பெரியபுராணம், புறநானூறு.

6.பக்கஎண்

32 - 46

7.கற்றல் விளைவுகள்

T-906 நீரின் இன்றியமையாமையை உணர்ந்து நீர்நிலைகளைப் பாதுகாத்தல்.

T-907 கருத்தரங்கில் கருத்துகளை வெளிப்படுத்த அறிதல்.

T-909 இயற்கை அழகைப் போற்றும் கவிதைகளைப் படைத்தல்.

8.திறன்கள்

நீர் மேலாண்மையின் தேவையை உணர்தல்.

9.நுண்திறன்கள்

மரம் வளர்த்தல் குறித்து அறிதல்.

நீர் மேலாண்மை, இயற்கை வளங்கள் பற்றி அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/01/9-2-9th-tamil-online-test-neerinri.html

https://tamilthugal.blogspot.com/2021/08/9-2-9th-tamil-nerinri-amaiyathu-ulagu.html

https://tamilthugal.blogspot.com/2022/01/9-2-9th-tamil-online-test-pattamaram.html

https://tamilthugal.blogspot.com/2021/08/9-2-periya-puranam-9th-tamil-unit-2.html

https://tamilthugal.blogspot.com/2022/12/9-9th-big-question-answer-periya.html

https://tamilthugal.blogspot.com/2018/07/9.html

https://tamilthugal.blogspot.com/2020/07/periya-puranam-online-quiz-with-e.html

https://tamilthugal.blogspot.com/2022/01/9-2-9th-tamil-online-test-periya.html

https://tamilthugal.blogspot.com/2022/05/sekkilar.html

https://tamilthugal.blogspot.com/2020/07/puranaanooru.html

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்கள் அறிந்த அணைகளைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

ஐம்பூதங்களை வினவி, நீரின் முக்கியத்துவத்தைக் கேட்டல்.

இயற்கை வளங்கள் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          நீரின்றி அமையாது உலகு பாடத்தின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல். நீர் மேலாண்மை, தண்ணீர் பயன்பாடு குறித்து அறியச் செய்தல்.

          மரபார்ந்த அணுகுமுறை குறித்து விளக்குதல். தண்ணீர் குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          பட்ட மரம், புறநானூறு, பெரிய புராணம், இயற்கை வளங்கள் குறித்து விளக்குதல்.

மரத்தின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          நீர்நிலைகளின் பெயர்களை மாணவர்களை அறியச் செய்தல்.

          இயற்கை குறித்த கவிதைகளைப் படைத்தல்.

15.மதிப்பீடு

          LOT கூவல் என்று அழைக்கப்படுவது எது?

          MOT – உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்புத் தருக.

HOT நீ அறிந்த நீர்நிலைகளின் பெயர்களைக் கூறு.

          பட்ட மரத்தின் வருத்தங்களை விளக்கு.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          நீர்நிலைகளின் படங்களைத் தொகுத்தல்.

அணைக்கட்டுகள் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஓடை, கோணக்காத்துப்பாட்டு 8th tamil model notes of lesson

8th tamil model notes of lesson

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

03-07-2023 முதல் 07-07-2023

2.பாடம்

தமிழ்

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

ஈடில்லா இயற்கை - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

ஓடை, கோணக்காத்துப்பாட்டு

6.பக்கஎண்

24 - 29

7.கற்றல் விளைவுகள்

T-804 தமது சுற்றுப்புறத்தில் வழங்குகின்ற நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிப் பேசுதல்.

8.திறன்கள்

          பாடலை ஓசை நயத்துடன் படித்துச் சுவைத்தல்.

          நாட்டுப்புறப் பாடல்கள் வழி மக்களின் உணர்வுகளை அறிதல்.

9.நுண்திறன்கள்

          ஓடையின் வருணனையை அறிதல்.

          இயற்கைச் சீற்றத்தின் அழிவை உணர்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்




இணைய வளங்கள்

          https://tamilthugal.blogspot.com/2021/07/8-2-8th-tamil-worksheet-with-pdf-odai.html

          https://tamilthugal.blogspot.com/2019/07/blog-post.html

          https://tamilthugal.blogspot.com/2021/04/2-odai-8th-tamil-kuruvina-vidai.html

          https://tamilthugal.blogspot.com/2021/07/8-2-8th-tamil-worksheet-with-pdf.html

          https://tamilthugal.blogspot.com/2021/07/konakathu-pattu-8th-tamil-seyyul.html

          https://tamilthugal.blogspot.com/2021/04/2-konakathupattu-tamil-kuruvina-vidai.html

 11.ஆயத்தப்படுத்துதல்

          நீர்நிலைகளின் வகைகள் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.

இயற்கைச் சீற்றங்களின் வகைகள் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

          ஓடையைப் பார்த்தவர்கள், அதில் குளித்தவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிரச் செய்தல்.

          புயலால் ஏற்படும் துன்பங்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஓடையில் நீந்தி விளையாட மனம் ஆர்வம் கொள்வது, சலசல என ஒலி எழுப்ப ஓடை எங்கு கற்றது, வருணிக்க இயலாத அழகு ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விளக்குதல்.

          பயிர்களைச் செழிக்கச் செய்வது, உணவு தந்து வறுமை போக்குவது, கரை மோதுவது, புற்களுக்கு இன்பம் சேர்ப்பது, இரக்கம் இல்லாதவர் நாண உழைப்பைக் கொடையாகத் தருவது பெண்களின் வள்ளைப்பாட்டிற்கு ஏற்ப முழவை முழக்குவது போல் ஒலி எழுப்புவது போன்றவற்றை மாணவர்கள் மனதில் விதைத்தல்.

          புயல் காற்றின் அழிவுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். புயலால் கூரைகள் சரிந்தன, தென்னம்பிள்ளைகள் வீணாயின, பருத்திச்செடிகள் சிதைந்தன, மாடி வீடுகள் விழுந்தன, மரங்கள் ஒடிந்தன, கப்பல் கவிழ்ந்தது, மக்கள் தடுமாறினர், ஆடு மாடுகள் இறந்தன, சித்தர்களின் கொல்லிமலையைச் சுற்றி புயல் அடித்தது போன்றவற்றை மாணவர்கள் மனதில் விதைத்தல்.

        



மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          நீர் நிலைகளின் இன்றியமையாமையை மாணவர்களுக்குக் கூறுதல்.

          இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் எண்ணத்தை ஏற்படுத்துதல்.

          மக்களைப் பாதிக்கும் இயற்கைச் சீற்றங்கள் குறித்து மாணவர்களுக்குக் கூறுதல்.

          விழிப்புணர்வுடன் இருக்கும் எண்ணத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்துதல்.

15.மதிப்பீடு

          LOT கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?

                   ஓடையின் பயன்கள் யாவை?

          MOT – பொருள் கூறுக.

                   ஈரம், நாணம், முழவு, புன்செய், சேகரம், வாகு, காலன், மெத்த

                   கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?

          HOT இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

          நீ அறிந்த இயற்கைச் சீற்றங்களைக் கூறு.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          இயற்கைக் காட்சி ஒன்று வரைந்து வண்ணம் தீட்டி மகிழுதல்.

          இயற்கையின் இன்றியமையாமை குறித்துப் பேசுதல்.

          இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு உதவுதல் என திட்டமிடல்.

          மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் செய்ய வேண்டியவற்றைப் பட்டியலிடுதல்.

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு காடு, அப்படியே நிற்கட்டும் அந்த மரம் 7th tamil model notes of lesson

 பாடத்தின் 7வது தமிழ் மாதிரி குறிப்புகள்

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

03-07- 202 3 முதல் 07-07- 202 3

2.பருவம்

1

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

அணிநிழல் காடு – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

காடு, அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

6.பக்கஎண்

26 - 31

7.கற்றல் விளைவுகள்

T-713 பல்வேறு கதைகள் / பாடல்களைப் படித்துப் பல்வேறு வகையான முறைகளையும் (வருணனை , உணர்வு சார்ந்தவை , இயற்கை வருணனை போன்றவை) இனங்காணல்.

8.திறன்கள்

          செய்யுளின் வருணனைப் பகுதிகளைப் படித்துச் சுவைத்தல்.

9.நுந்திரன்கள்

          காடுகளும் காட்டுஉயிர்களும் நாட்டின் உயிர்நாடி என்று புரிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

          https :// tamilthugal . blogspot . com /2021/07/2-7 th - tamil - worksheet - with - pdf - kaadu . html

          https :// tamilthugal . blogspot . com /2019/08/ வலைப்பதிவு - post_ 59. html

          https :// tamilthugal . blogspot . com /2019/07/7- qr - code - video_ 66. html

          https :// tamilthugal . blogspot . com /2021/06/2-1-7 th - tamil - kaadu - unit -2- term -1. html

          https :// tamilthugal . blogspot . com /2021/07/2-7 th - tamil - worksheet - with - pdf - appadiye . html

          https :// tamilthugal . blogspot . com /2021/06/7 வது - தமிழ் - அப்படியே - நிறுத்தும் - அந்த - மரம் . html

          https :// tamilthugal . blogspot . com /2022/06/ கவிஞர் - ராஜா - மார்த்தாண்டன் . html

11.ஆயத்தப்படுத்துதல்

          காட்டின் மரத்தின் பயன்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

          காடு, மரம் குறித்து மாணவர்கள் அறிந்துள்ள தகவல்களைக் கூறச் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

                   காடு மலர்கள், நிழல், காய்கனிகள் போன்றவற்றைத் தரும், மயில் நடனமாடும், பன்றி கிழங்கு உண்ணும், பாம்பு கலங்கும், நரி ஊளையிடும், யானை நடைபோடும், குயில் கூவும், சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்குகள் அலையும் மாணவர்களை விளக்குகின்றன.

          காட்டின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.

          நாவற்பழ மரம், காக்கை, குருவி, மைனா, கிளிகள், அணில்கள், சுட்ட பழங்கள், பழம் பொறுக்கும் தங்கச்சிகள், வௌவால் கூட்டம், கிளியாந்தட்டின் சுவாரசியம், பேய்க்காற்றில் வேரோடு சாய்ந்துவிட்ட மரம் – கவிதையின் உணர்ச்சிப் பெருக்கை மாணவர்களுக்கு உணர்த்துதல்.

          இயற்கையின் மரத்தின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்களின் மனதில் விதைத்தல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          காடு பாடலை இசையுடன் மாணவர்களைப் பாடச் செய்தல்.

          காட்டைக் குறிக்கும் வேறு பெயர்களை அறிதல்.

          கவிதையை உணர்வுடன் மாணவர்களை வாசிக்கச் செய்தல்.

          உங்கள் பகுதிகளில் உள்ள மரங்களின் பெயர்களை அறிதல்.

15.மதிப்பீடு

          LOT விடுதி என்னும் சொல்லின் பொருள் யாது ?

                   காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை ?

MOT – காடு பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை

எழுதுக.

                   பொருள் கூறுக.

                   நச்சரவம், ஈன்று, கொம்பு.

HOT காட்டை இயற்கை விடுதி என்று கவிஞர் கூறக் காரணம் என்ன ?

                   பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தைக் கவிஞர் ஏன் பார்க்க வேண்டும் ?

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீதிற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          உவமைக் கவிஞர் பற்றிய குறிப்புகளை அறிதல்.

          ராஜமார்த்தாண்டன் பற்றிய குறிப்புகளை அறிதல்.

          மரத்தின் பெருமைகளைத் தொகுத்தல்.

          ஏதேனும் ஒரு மரம் குறித்து வருணனையாக 5 தொடர்கள் எழுதுக.

தமிழ்த்துகள்

Blog Archive