கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 30, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் ஜூலை வார, மாத பாடத்திட்டம் 2025

Tenth tamil july - weekly monthly syllabus 2025

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சிறகின் ஓசை ஜூலை 6 - 2026

6th tamil model notes of lesson

lesson plan 2026 july 6

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

06-07-2026 முதல் 10-07-2026

2.பருவம்

1

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

இயற்கை இன்பம் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

சிறகின் ஓசை

6.பக்கஎண்

22-26

7.கற்றல் விளைவுகள்

T-613 வெவ்வேறு வகையான கட்டுரைகளைப் படித்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

          மனிதர்களைப் போலவே பறவைகளும் வேறு இடங்களுக்கும் நாடுகளுக்கும் செல்கின்றன என்பதை அறிதல்.

9.நுண்திறன்கள்

          பறவைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான தொடர்பை அறியும் திறன் பெறுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

          https://tamilthugal.blogspot.com/2021/06/1-1-6th-tamil-sirakin-osai-term-1.html 

          https://tamilthugal.blogspot.com/2021/08/6th-tamil-siragin-osai.html 

          https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_6.html 

        https://tamilthugal.blogspot.com/2026/06/blog-post_28.html 

        https://tamilthugal.blogspot.com/2020/10/birds-kids-video-birds-in.html 

        11.ஆயத்தப்படுத்துதல்

          பிடித்த பறவைகள் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

          மாணவர்கள் அறிந்த பறவையின் சிறப்பைக் கூறச் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          வலசை போதல் குறித்து விளக்குதல். சத்திமுத்தப்புலவர் பாடலைக்கூறுதல். சிட்டுக்குருவியில் ஆண் பெண் வேறுபாடு அறிதல் குறித்து விளக்குதல். சிட்டுக்குருவியின் அழிவுக்குக்  காரணங்களை அறிதல். பறவையினங்களைக் காப்பாற்ற நாம் செய்ய வேண்டியவை குறித்து அறிதல். சலீம் அலி குறித்து அறிதல்.

          பறவையின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          பறவையின் சிறப்புகளைக் கூறுதல்.

          சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்ற வாழ்க்கை வரலாற்று நூலைப் பற்றி விளக்குதல்.

          சரணாலயங்கள் குறித்து விளக்குதல்.      

15.மதிப்பீடு

          எ.சி.வி –       பறவை பற்றிய படிப்பு ......................

பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?

          ந.சி.வி –       நீ விரும்பும் பறவைகளின் பெயர்களை எழுதுக.

                   சொற்றொடர் அமைத்து எழுதுக.

                   வாழ்நாள், செயற்கை.

உ.சி.வி –      வலசைப் பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை?

                   பறவை இனங்களைக் காக்க நாம் செய்ய வேண்டியன பற்றிச் சிந்தித்து எழுதுக.

                   சலீம் அலி குறித்து எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் முழக்கத் தொடர்களை எழுதுக.

          பறவையின் பெருமைகளையும் அவசியத்தையும் தொகுத்தல்.

          குருவி என்னும் தலைப்பில் நான்கு அடிகளில் கவிதை படைத்திடுக.

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தமிழரின் கப்பற்கலை ஜூலை 6 - 2026

7th tamil model notes of lesson

lesson plan 2026 july 6

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

06-07-2026 முதல் 10-07-2026

2.பருவம்

1

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

அணிநிழல் காடு – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

தமிழரின் கப்பற்கலை

6.பக்கஎண்

30-34

7.கற்றல் விளைவுகள்

T-715 பல்வேறு கலைகளிலும், தொழில்களிலும் (கைத்தொழில், கட்டடக்கலை. உழவு, நாட்டியம் முதலானவை) பயன்படுத்தும் மொழி பற்றிய கருத்தை ஆர்வமாக வெளிப்படுத்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

தமிழர்களின் கப்பல் கட்டும் தொழில்நுட்ப முறையை இலக்கியங்கள் வழி அறியும் திறன்.

9.நுண்திறன்கள்

கடல்வழிப் பயணம் குறித்த தகவல்களைப் பாடப்பகுதி வழி புரிந்து கொள்ளும் திறன்.

பலவகையான கப்பல்களின் வகைகளைப் பற்றிப் படித்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/06/7-1-2-7th-tamilarin-kapparkalai-kuruvina.html 

https://tamilthugal.blogspot.com/2022/10/2-1-7th-tamil-mindmap-term-2-unit-1.html 

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_74.html 

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த கடல் பயண வாகனங்களின் பெயர்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

தமிழர் தொழில்நுட்பத்தைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

கப்பல் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தமிழர்களின் கடல் பயணம் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல், நீர்வழிப் பயணத் தொடக்கம் பற்றிய தகவல்களைக் கூறுதல். கப்பல் கட்டும் கலை குறித்துக் கூறி மாணவர்கள் கருத்துகளைக் கேட்டல்.

          கடல் பயணத்தின் பயன்களைக் குழுவாக இணைந்து கூறுதல்.

பாய்மரக்கப்பல்கள், கப்பலின் உறுப்புகள் குறித்து விளக்குதல். கப்பலைச் செலுத்தும் முறை, கலங்கரை விளக்கத்தின் பயன்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், கப்பலின் தோற்றம் குறித்த கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

கப்பற்கலையை அறியச் செய்தல். தமிழரின் தொழில்நுட்பத்தை உணரச் செய்தல். கடற்பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி ..............................

                   கப்பலை அழைக்கும் விளக்கு ....................................

          ந.சி.வி – கப்பலின் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறு.

                   கலங்கரை விளக்கம் குறித்து எழுதுக.

உ.சி.வி – கடற்பயணம் குறித்து நீ அறிந்தவற்றை எழுதுக.

                   உனக்குப் பிடித்த கப்பல் போக்குவரத்தின் பெயர்களைப் பட்டியலிடுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

பயணங்கள் குறித்து வகுப்பில் கலந்துரையாடுதல்.

கப்பல் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.


எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பட்டமரம் ஜூலை 6 - 2026

8th tamil model notes of lesson

lesson plan 2026 july 6

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

06-07-2026 முதல் 10-07-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

ஈடில்லா இயற்கை – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

பட்டமரம்

6.பக்கஎண்

27 - 29

7.கற்றல் விளைவுகள்

T-811 படித்த பிறகு பல்வேறு எழுத்தியல் நடைகளையும் முறைகளையும் (விவரண முறை வரைபடமுறையில் உணர்ச்சிப் பூர்வமான நடை, இயற்கை அழகின் வருணனை முறை போன்றவை) இனங்காணுதல்.

8. கற்றல் நோக்கங்கள்

பாடலை ஓசை நயத்துடன் பாடுதல்.

9.நுண்திறன்கள்

மரம் வளர்த்தல் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள், விளக்கப்படம்

https://tamilthugal.blogspot.com/2022/01/9-2-9th-tamil-online-test-pattamaram.html 

https://tamilthugal.blogspot.com/2024/06/2_97.html 

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்கள் அறிந்த மரங்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

இயற்கை வளங்கள் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பட்ட மரம் கவிதை குறித்து விளக்குதல். கவிஞரின் உள்ளக்குமுறலை உணர்த்துதல்.

          பாடலின் தொடைநயங்களை விளக்குதல்.

மரத்தின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.



          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். இயற்கையின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          இயற்கை குறித்த கவிதைகளைப் படைத்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – பட்டமரம் எதனால் தன் அழகை இழந்தது?

          ந.சி.வி – ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்தவை எவை?

உ.சி.வி – பட்ட மரத்தின் வருத்தங்களை விளக்கு.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

மரங்கள் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.


ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மொழிப்பயிற்சி ஜூலை 7

9th tamil model notes of lesson

lesson plan 2025 july 7

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

07-07-2025 முதல் 11-07-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

உயிருக்கு வேர் – மொழிப்பயிற்சி

5.உட்பாடத்தலைப்பு

மொழிப்பயிற்சி

6.பக்கஎண்

44 – 48

7.கற்றல் விளைவுகள்

T-9010 சொற்களில் உருபுகள் அமைந்துள்ள முறையை அறிந்து அவற்றைப் பயன்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

சொற்களின் வகைகளை அறிதல்.

9.நுண்திறன்கள்

வரவேற்பு மடல் குறித்து அறிதல்.

நயம் பாராட்டுதல் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2020/06/9-deo-inviting-letter-9.html

https://tamilthugal.blogspot.com/2020/11/9-9th-tamil-katchiyai-kandu-kavinura_23.html

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்கள் அறிந்த கவிதைகளைக் கூறச் செய்தல்.

          மாணவர்கள் அறிந்த நயம் பாராட்டல் தலைப்புகளைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

மொழிப்பயிற்சியை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          நயம் பாராட்டல் குறித்து விளக்குதல். கலைச்சொல் அறிதல்.

மொழிப்பயிற்சிகளை எழுதுதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          மடல் படைத்தல்.

          தமிழ்ச் சொற்களை மாணவர்களை அறியச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       பிழை நீக்கி எழுதுக.

சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.

          ந.சி.வி – அகராதியில் காண்க

இமிழ்தல், இசைவு, துவனம், சபலை, துகலம்.

உ.சி.வி – சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்துகொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          பிடித்த பாடலுக்குப் பா நயம் பாராட்டுதல் அறிதல்.


பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தொகாநிலைத் தொடர்கள் ஜூலை 20 - 2026

10th tamil model notes of lesson

lesson plan 2026 july 20

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

20-07-2026 முதல் 24-07-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

உயிரின் ஓசை – கற்கண்டு.

5.உட்பாடத்தலைப்பு

தொகாநிலைத் தொடர்கள்.

6.பக்கஎண்

35 - 36

7.கற்றல் விளைவுகள்

T-1008 மொழிப் பயன்பாட்டில் தொகாநிலைத் தொடர்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

தொகாநிலைத் தொடர்களின் வகைகளை அறிதல்.

9.நுண்திறன்கள்

தொகாநிலைத் தொடர்கள் குறித்து உணர்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/06/3-10th-tamil-online-test-thokaanilai.html 

https://tamilthugal.blogspot.com/2024/06/3_29.html 

https://tamilthugal.blogspot.com/2021/07/3.html 

https://tamilthugal.blogspot.com/2023/07/10th-tamil-ppt-power-point-presentation_7.html 

https://tamilthugal.blogspot.com/2025/06/pdf-2_56.html 

https://tamilthugal.blogspot.com/2025/06/2-5-25.html 

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்கள் அறிந்த தொகாநிலைச்சொற்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

தொகாநிலை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          ஒன்பது வகை தொகாநிலைத் தொடர்களையும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.

கூட்டுநிலைப் பெயரெச்சத்தை அறிதல். அடுக்குத் தொடர், உரிச்சொல் தொடர்களை அறிதல்.

வினையெச்சம் பெயரெச்சம் வேறுபாடுகளை உணர்தல்.



மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

வேற்றுமைத் தொடர்கள் குறித்து அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       தொகாநிலைத்தொடர் ...................... வகைப்படும்.

ந.சி.வி – அடுக்குத்தொடரை விளக்குக.

உ.சி.வி – விளித்தொடருக்கு 5 எடுத்துக்காட்டுகள் எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

வினைமுற்றுத்தொடர் குறித்து அறிந்து வருதல்.

தொகாநிலைத் தொடர்களுக்குப் புதிய எடுத்துக்காட்டுகளை எழுதுதல்.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-06-2025. திங்கள்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

30-06-2025. திங்கள்.

திருக்குறள் :

பால் : அறத்துப்பால் ; 

இயல்: இல்லறவியல்;

அதிகாரம் : அன்புடைமை ; 

குறள் எண் : 074.

குறள் :

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு.

விளக்கம் :

அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

பழமொழி :

கற்றல் என்பது ஓட்டப்போட்டி அல்ல, ஒரு பயணம்."

Learning is a journey, not a race.

இரண்டொழுக்க பண்புகள்:

1. பெரியோர், பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

+ மக்கள் சமுதாயத்தில் புரட்சிகள் உண்டாகும் போது, அந்தச்

சமுதாயம் பழையன களைந்து புது வாழ்வு தொடங்க ஏதுவாகிறது ரூசோ.

பொது அறிவு :

01. தஞ்சை பெரிய கோயில் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்த ஆண்டு எது?

1987 ஆம் ஆண்டு

02. இந்தியாவில் உப்பு நீர் அதிகம் ஏரிகள் உள்ள மாநிலம் எது?

ராஜஸ்தான் (Rajasthan)

English words:

economy.

பொருளாதாரம்

genuine

நேர்மையான

அறிவியல் களஞ்சியம் :

முத்துச்சிப்பி கடலடியில் வாழ்வதால், அதனுள் செல்லும் மணல் ஒன்றின்மீது, முத்துச் சிப்பியுள் சுரக்கும் சுரப்புநீர் படிந்து படிந்து முத்தாக மாறுகிறது. மணலை ஆதாரமாகக் கொண்டு சுரப்புநீர் படிந்தே முத்தாக உருவாகிறது.

ஜூன் 30 மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் அவர்களின் பிறந்த நாள்

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் ||

பிறப்பு ஜூன் 30, 1985, பால்ட்டிமோர், மேரிலன்ட்.

பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் ஆவார்.

28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களைப் பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார்.

நீதிக்கதை - மனத்திருப்தி

ஒரு கோவிலில் கல்தச்சர்களின் முயற்சியால் சிற்பங்கள், சிலைகள், விக்ரகங்கள் வடிவமைக்கப் பட்டுக்கொண்டு இருந்தன. ஒரு கல்தச்சர் ஒரு சிலையை உருவாக்கிக்கொண்டு இருந்தார். அவரின் அருகில் ஒரே மாதிரியான இரண்டு சிலைகள் இருந்தன. எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்தன. அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர், "ஒரே விக்ரகத்திற்கு இரண்டு சிலைகளை உருவாக்குகிறீர்களா அய்யா?" என்றார்.

கல்தச்சர் சொன்னார், "எங்களுக்கு ஒரே ஒரு சிலையே போதுமானது ஆனால் முதலில் செய்யப்பட்ட சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இரண்டாவது சிலையை உருவாக்குகிறேன் வழிப்போக்கர் நன்றாக இரண்டு சிலைகளையும் உற்றுக் கவனித்துவிட்டுச் சொன்னார் "எந்த சேதமும் எனது கண்ணுக்குத் தெரியவில்லையே". தனது வேலையில் கவனத்துடன் இருந்த கல்தச்சர் சொன்னார் "அந்தச்சிலையின் மூக்கின் அருகில் ஒரு சிறிய சேதமுள்ளது." என்றார்.

"இந்தச் சிலையை எங்கே நிர்மாணிக்கவிருக்கிறீர்கள்?" என்றார் வழிப்போக்கர். "50 அடி உயரத்தில் மேலே நிர்மாணிக்க இருக்கிறோம்" என்றார் கல்தச்சர். அதற்கு "ஐம்பதடி உயரத்தில் இருக்கப்போகிற சிலையின் மூக்கினருகில் இருக்கும் இந்தச் சிறிய சேதத்தை யார் கவனிக்கப் போகிறார்கள்?" என்றார் வழிப்போக்கர். தனது வேலையை சற்று நிறுத்திவிட்டு வழிப்போக்கரிடம் புன்னகையுடன் கல்தச்சர், சொன்னார் "யார் கவனிக்கப் போகிறார்கள்? எனக் கேட்கிறீர்கள். வேறு யாருக்கும் அந்தச் சேதம் தெரிவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

எனது கடமையில் இப்படி ஒரு சேதத்தை நான் உருவாக்கியதை அடுத்தவரிடம் மறைப்பது எனக்குப் பிடிக்கவில்லை. சேதம் சிறியதா? பெரியதா? என்பது பற்றிக் கவலையில்லை. செய்யும் தொழிலில் பிழையேற்படலாம். ஆனால் பிழையை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கவே விரும்புகிறேன்".

நீதி: உயர்ந்த தரம் என்பது அடுத்தவரின் பார்வையில் இருந்து வரவேண்டியது இல்லை. அது தனக்குள்ளேயே இருந்து வரவேண்டும். அடுத்தவருக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் இன்பத்தை விட தன் மனத்திருப்திக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்.

இன்றைய செய்திகள் -30.06.2025

* பேருந்துகளில் படிக்கட்டில் நின்றும், தொங்கியபடியும் பயணம் செய்பவர்கள் (மாணவர்கள்) மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு. சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு.

* இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் டஜன் கணக்கான உயிர்களைக் கொன்றன. காசாவில் சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் பொதுமக்களை இழந்துள்ளன.

விளையாட்டுச் செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸில் 25வது ஸ்லாம் பட்டத்தை வெல்ல நோவக் ஜோகோவிச் இலக்கு.

கிரிகெட்-

செயின்ட் லூயிஸ் கார்டினல்ஸ் அணி 1-6 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் இருந்த நிலையில், கிளீவ்லேண்டை 9-6 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Today's Headlines - 30.06.2025

The Madurai bench of the High Court has ordered the police to register case and take action against those (students) who travel by standing on the stairs of bus or hanging on the buses.

Public exams for class 10 students to be held twice a year from now on. CBSE announcement.

Israeli airstrikes kill dozens. Recent Israeli airstrikes in Gaza have claimed the lives of civilians

SPORT SPORTS NEWS

Novak Djokovic aims for 25th Slam title at Wimbledon.

Cricket- St. Louis Cardinals came from 1-6 down to beat Cleveland 9-6.

தமிழ்த்துகள்

Blog Archive