கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Showing posts with label பாடக்குறிப்புகள் வகுப்பு 6. Show all posts
Showing posts with label பாடக்குறிப்புகள் வகுப்பு 6. Show all posts

Sunday, March 22, 2026

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பெயர்ச்சொல்

 6th tamil model notes of lesson

lesson plan March 30

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

30-03-2026

2.பருவம்

3

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

இன்னுயிர் காப்போம் – கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

பெயர்ச்சொல்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-620 பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (phrases) ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுதுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

அறுவகைப் பெயர்கள், இடுகுறிப்பெயர், காரணப்பெயர்களை அறிதல்.

9.நுண்திறன்கள்

கேட்ட தலைப்புகள் பற்றிச் சொந்த நடையில் பேசுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_90.html

https://tamilthugal.blogspot.com/2023/02/3-2-6th-tamil-mindmap-term-3-unit-2_11.html

https://tamilthugal.blogspot.com/2022/01/3-2-peyarchol-tamil-ilakkanam-6th-q.html

https://tamilthugal.blogspot.com/2020/09/6th-tamil-matching-game-peyarchol.html

https://tamilthugal.blogspot.com/2020/09/match-peyarchol-tamil-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2020/08/6-3-2-6th-tamil-unit-2-term-3-ilakanam.html

https://tamilthugal.blogspot.com/2019/01/qr-code-video_22.html

https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_96.html

11.ஆயத்தப்படுத்துதல்

அறிந்த பெயர்ச்சொற்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

பெயர்ச்சொல் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பெயர்ச்சொல் வகைகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். இடுகுறிப்பெயர், காரணப்பெயர் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல். அறன் வலியுறுத்தல், ஈகை, இன்னா செய்யாமை, கொல்லாமை, பெரியாரைப் பிழையாமை பற்றிக் கூறுதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

பெயர்ச்சொல் குறித்து விளக்குதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – காரணப்பெயர் என்றால் என்ன?

          ந.சி.வி – அறுவகைப் பெயர்ச்சொற்களை எழுதுக.

உ.சி.வி – அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கும் எடுத்துக்காட்டுகள் தருக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நீ அறிந்த காரணப்பெயர்களைக் கூறு.

Monday, March 16, 2026

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு முடிவில் ஒரு தொடக்கம்

6th tamil model notes of lesson

lesson plan March 23

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

23-03-2026 முதல் 27-03-2026

2.பருவம்

3

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

இன்னுயிர் காப்போம் – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

முடிவில் ஒரு தொடக்கம்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-611 ஒலியியைபு, சந்தம் முதலான யாப்பமைதிக் கூறுகள், மரபுத்தொடர்கள் போன்ற மொழியின் மரபு, நடை, நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில்கொண்டு, கதைகள், கட்டுரைகளின் நயம் பாராட்டல்.

8.கற்றல் நோக்கங்கள்

உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அறிதல்.

9.நுண்திறன்கள்

உறுப்புக்கொடையின் உண்மை நிகழ்வு குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_74.html

https://tamilthugal.blogspot.com/2020/07/6th-tamil-kattur.html

https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-6th-tamil-mindmap-term-3-unit-3_89.html

https://tamilthugal.blogspot.com/2020/03/3-3-sixth-tamil-term-3-unit-3-mudivil.html

11.ஆயத்தப்படுத்துதல்

உறுப்பு தானம் குறித்து அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

கண்ணப்பன் கதை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          முடிவில் ஒரு தொடக்கம் பாடப்பகுதி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். ஹிதேந்திரன், அவனின் பெற்றோர் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். இரக்க குணம் பற்றிக் கூறுதல். இதய மாற்றம் பற்றிக் கூறி கண்தானம் குருதி தானம் செய்ய உறுதி எடுத்தல்.

          மனிதநேயம் வெளிப்பட்ட மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். கொடை பற்றிய தகவல்களை மாணவர்களுக்குக் கூறுதல். முதலுதவி பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ளுதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

மனிதநேயம் குறித்து விளக்குதல். பிறர்க்கென வாழும் பண்பை வாழ்வில் கடைப்பிடிக்க முயலுதல். இயன்றவரை கொடை கொடுத்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – ஹிதேந்திரனின் பெற்றோர் பெயர் ..............................

          ந.சி.வி – முடிவில் ஒரு தொடக்கம் என்ற தலைப்பின் காரணம் குறித்துக் கூறுக.

உ.சி.வி – உறுப்பு தானம் பற்றிய வேறு ஒரு நிகழ்வினை அறிந்து எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நீங்கள் பிறருக்கு உதவி செய்த அனுபவத்தைக் கூறுங்கள்.

உறுப்பு தானம் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

Sunday, March 08, 2026

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மனிதநேயம்

6th tamil model notes of lesson

lesson plan March 16

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

16-03-2026 முதல் 20-03-2026

2.பருவம்

3

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

இன்னுயிர் காப்போம் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

மனிதநேயம்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-620 பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும்போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (Phrases)  ஆகியவற்றைப்  பயன்படுத்தி எழுதுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

உதவி செய்யும் பண்பைப் பெறுதல்

9.நுண்திறன்கள்

மனிதநேயத்துடன் வாழ்ந்தோரின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_68.html

https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-6th-tamil-mindmap-term-3-unit-3_27.html

https://tamilthugal.blogspot.com/2021/03/3-3-manithaneyam-6th-tamil-kuruvina.html

11.ஆயத்தப்படுத்துதல்

அன்னை தெரசா குறித்து அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

வள்ளலார் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          மனிதநேயம் பாடப்பகுதி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். வள்ளலார், அன்னை தெரசா, கைலாஷ் சத்யார்த்தி குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். இரக்க குணம் பற்றிக் கூறுதல். அனைத்து உயிர்களையும் தம் உயிர் போல் நேசித்தல் பற்றிக் கூறி வாழ்வில் கடைப்பிடிக்க உறுதி எடுத்தல்.

          மனிதநேயம் குறித்து மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். பொறுமை, இரக்கம், இன்சொல் பேசுதல் பற்றிய தகவல்களை மாணவர்களுக்குக் கூறுதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

மனிதநேயம் குறித்து விளக்குதல். பிறர்க்கென வாழும் பண்பை வாழ்வில் கடைப்பிடிக்க முயலுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் ..............................

          ந.சி.வி – யாரால் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது?

உ.சி.வி – அன்னை தெரசாவின் மனிதநேயம் பற்றிய வேறு ஒரு நிகழ்வினை  

எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நீங்கள் பிறருக்கு உதவி செய்த அனுபவத்தைக் கூறுங்கள்.

வள்ளலார் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

Monday, March 02, 2026

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இளைய தோழனுக்கு

6th tamil model notes of lesson

lesson plan March 9

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

09-03-2026 முதல் 13-03-2026

1.நாள்

 

2.பருவம்

3

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

இன்னுயிர் காப்போம் – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

இளைய தோழனுக்கு

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-612 பல வடிவங்களில் எழுதப்பட்ட இலக்கியப் பாடப்பகுதிகளை உரிய ஒலிப்புமுறை, குரல் ஏற்ற இறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

தன்னம்பிக்கையின் இன்றியமையாமையைப் புதுக்கவிதை வழியாக உணர்தல்.

9.நுண்திறன்கள்

தன்னம்பிக்கையை வளர்க்கும் கவிதைகளை எடுத்துக்காட்டி கலந்துரையாடுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள், விளக்கப்படம்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_80.html

https://tamilthugal.blogspot.com/2023/01/9-8th-tamil-mindmap-unit-9_2.html

https://tamilthugal.blogspot.com/2020/02/ilaya-thozhanukku.html

https://tamilthugal.blogspot.com/2022/06/mumetha.html

11.ஆயத்தப்படுத்துதல்

தன்னம்பிக்கை குறித்துக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

மு.மேத்தாவை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          மாணவர்களைத் தன்னம்பிக்கை குறித்துக் கூறச்செய்தல். புதுக்கவிதை பற்றி மாணவர்களைக் கூறச்செய்தல். மாணவர்கள் அறிந்த கவிதைகளைக் கூறச்செய்தல். தன்னம்பிக்கை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல். எளிய புதுக்கவிதைகளைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

மு.மேத்தா குறித்துக் கூறுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – கவலைகள் .............................. அல்ல.

          ந.சி.வி – தோல்வி எப்போது தூண்டுகோலாகும்?

          உ.சி.வி –      நம்பிக்கை போன்ற பிற பண்புகளை எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

தன்னம்பிக்கை எனும் தலைப்பில் ஒரு கவிதை எழுதுக.

Sunday, February 22, 2026

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஆசிய ஜோதி

6th tamil model notes of lesson

lesson plan March 2

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

02-03-2026 முதல் 06-03-2026

2.பருவம்

3

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

இன்னுயிர் காப்போம் – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

ஆசிய ஜோதி

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-609 மிக நுட்பமாக ஒரு நூலை ஆய்ந்து, குறிப்பிட்ட செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல், ஊகித்தறிதல் மற்றும் முடிவு செய்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

பிற உயிர்களைத் தம் உயிர் போல் மதித்தல்.

பிற உயிர்களுக்குத் துன்பம் தராமல் இருத்தல்.

9.நுண்திறன்கள்

புத்தரின் அறவுரைகள் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_15.html

https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-6th-tamil-mindmap-term-3-unit-3.html

https://tamilthugal.blogspot.com/2021/03/3-3-asiya-jyothi-6th-tamil-kuruvina.html

https://tamilthugal.blogspot.com/2019/02/kavimani-desiga-vinayagam.html

11.ஆயத்தப்படுத்துதல்

புத்தர் குறித்து அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

கவிமணி பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          ஆசியஜோதி பாடப்பகுதி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். பாடலை மாணவர்களுக்கு விளக்குதல். இரக்க குணம் பற்றிக் கூறுதல். அனைத்து உயிர்களையும் தம் உயிர் போல் நேசித்தல் பற்றிக் கூறி வாழ்வில் கடைப்பிடிக்க உறுதி எடுத்தல்.

          புத்தர் குறித்து மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். அறவுரை குறித்து அறியச் செய்தல். கவிமணி பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

ஆசியஜோதி குறித்து விளக்குதல். புத்தர் கூறும் பல்வேறு அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – கும்பி என்பதன் பொருள் ..............................

          ந.சி.வி – அரசனாலும் செய்ய முடியாத செயலை எழுதுக.

உ.சி.வி – விலங்குகள் சுதந்திரமாக வாழ நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நீங்கள் மிகவும் விரும்பும் தாவரங்கள், பறவைகள், விலங்குகளின் பெயர்களைக் கூறுங்கள்.

புத்தர் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

Sunday, February 15, 2026

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நால்வகைச்சொற்கள், திருக்குறள்

6th tamil model notes of lesson

lesson plan February 23

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

23-02-2026 முதல் 27-02-2026

2.பருவம்

3

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

எல்லாரும் இன்புற – கற்கண்டு, வாழ்வியல்

5.உட்பாடத்தலைப்பு

நால்வகைச்சொற்கள், திருக்குறள்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-620 பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (phrases) ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுதுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.

9.நுண்திறன்கள்

நால்வகைச் சொற்களை அறியும் திறன்.

திருக்குறளின் அறக்கருத்துகள் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/01/3-1-naalvagai-sorkal-tamil-ilakanam.html

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_58.html

https://tamilthugal.blogspot.com/2023/01/3-1-6th-tamil-mindmap-term-3-unit-1_18.html

https://tamilthugal.blogspot.com/2020/08/6-3-1-6th-tamil-ilakanam-term-3-unit-1.html

https://tamilthugal.blogspot.com/2019/01/qr-code-video-6-3_9.html

https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_97.html

https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_6.html

https://tamilthugal.blogspot.com/2018/12/thiruvalluvar.html

11.ஆயத்தப்படுத்துதல்

பல்வேறு சொற்களைக் கூறச்செய்தல்.

திருக்குறள் குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.

12.அறிமுகம்

நால்வகைச் சொற்களை அறிமுகப்படுத்துதல்.

திருக்குறளின் சிறப்புகளைக் கூறுதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

சொல் குறித்துக் கூறுதல். பெயர், வினை, இடை, உரிச்சொற்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

          உதாரணங்களுடன் விளக்குதல்.

          சொற்களைக் கொடுத்து வகைகளை அறியச் செய்தல்.

          நால்வகைச் சொற்களை அறிந்து பயன்படுத்துதல்.

          திருக்குறள் குறித்து மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். குறள்களின் பொருளை விளக்குதல். வாழ்வைச் செம்மைப்படுத்தும் அறம் குறித்து அறியச் செய்தல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பசியோடிருப்பவருக்கு உதவும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

சொற்களின் வகைகளை மாணவர்களிடம் உணர்த்துதல். சொல் பற்றி அறிந்து இனங்காணச் செய்தல். சொந்தமாகச் சொற்களை எழுதுதல்.

திருக்குறள் குறித்து விளக்குதல். குறள் கூறும் பல்வேறு அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – சொல் என்றால் என்ன?

ஏழைகளுக்கு உதவி செய்வதே ..............................

          ந.சி.வி – சொற்களின் வகைகளை எழுதுக.

உ.சி.வி – உனக்குப் பிடித்த குறளையும் அதன் பொருளையும் எழுதுக.

நீ அறிந்த உரிச்சொற்களை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

சொல் குறித்து நீங்கள் அறிந்த தகவல்களை எழுதுக.

திருக்குறள் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive