கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Showing posts with label அணி இலக்கணம். Show all posts
Showing posts with label அணி இலக்கணம். Show all posts

Monday, May 23, 2022

வஞ்சப் புகழ்ச்சி அணி தமிழ் இலக்கணம் tamil ILAKKANAM VANJAPUKALCHI ANI

 அணி என்றால் அழகு என்று பொருள். ஒரு செய்யுளில் அமைந்திருக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணியாகும்.


செய்யுளை வாசிக்கும் அனுபவத்தை வசீகரப்படுத்துவதில் அணி முக்கியப் பங்கு வகிக்கிறது. 

அணி இலக்கணத்தை விளக்கி படைக்கப்பட்ட தண்டியலங்காரம் எனும் இலக்கண நூலின் பொருளணியியலில் தமிழின் 35 வகையான அணிகள் விளக்கப்பட்டுள்ளன!

மனிதர்கள் ஏதேனும் ஆதாயம் வேண்டி ஒருவரைப் புகழ்வர். தமக்குப் பயனற்றவர்களை, பிடிக்காதவர்களை இகழ்வர். இவை பயன் கருதி செய்யப்படுபவை. 

ஆனால் இலக்கியங்களில் சுவை கருதி புலவர்கள் ஒருவரைப் "புகழ்வது போல இகழ்வதும்", "இகழ்வது போல புகழ்வதும்" வஞ்சப்புகழ்ச்சி அணி என்று அழைக்கப்படுகிறது. 


செய்யுளின் அழகு கருதியும், வாசிப்பை வசீகரமாக்கவும் வஞ்சப்புகழ்ச்சி அணி புலவர்களால் கையாளப்படுகிறது. வஞ்சப்புகழ்ச்சி அணிக்கு இலக்கியங்களிலிருந்து சில உதாரணங்களைப் பார்ப்போம்:


"இகழ்வது போலப் புகழ்தல்" :


1) வேள்பாரி வள்ளலின் கொடைத்திறத்தினை இகழ்வது போல இவ்வாறு புகழ்கிறார் கபிலர்.


"பாரி பாரி என்று பல ஏத்தி,


ஒருவற் புகழ்வர்,செந் நாப் புலவர்;


பாரி ஒருவனும் அல்லன்;


மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே."


- புறநானூறு


பாரி வள்ளல்! பாரி வள்ளல்! அவன் ஒருவனே பெரிய வள்ளல்! அவனால்தான் உலக மக்கள் அனைவரும் காக்கப்படுகின்றனர் எனப் பலவாறு புலவர்கள் பாரி என்ற வள்ளலைப் புகழ்ந்து பாடுகிறார்கள். பாரி ஒருவனால் மட்டும்தான் இந்த உலகம் காக்கப்படுகிறதா என்ன? ஏன்? மழையும் கூட உலகினைக் காப்பாற்றுமே! எனப் பாரியை இகழ்வது போல புகழ்கிறார் கபிலர்.


பாரி மழைக்கு நிகரான கொடைத்தன்மை உடையவன் எனப் பாரியின் பெருமை வஞ்சப் புகழ்ச்சியாக இகழ்வதுபோல இப்பாடலில் புகழப்பட்டுள்ளது.

2) போரில் தொடர்ந்து வெற்றி பெற்று அதனால் கிடைத்த செல்வத்தை தனது மக்களுக்குப் பயன்படும்படி செய்த முதுகுடுமிப் பெருவழுதியின் பெருமையை இகழ்வது போல புகழ்கிறார் நெட்டிமையார்.


"பாணர் தாமரை மலையவும், புலவர்


பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்,


அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி!


இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு,


இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே?"


- புறநானூறு


வெற்றிப் பெருமிதம் உடைய குடுமி அரசே!


வேற்று அரசருடைய நாட்டைப் போரிட்டு அவர்கள் வருந்தும்படி அபகரித்துக்கொண்டு, வேற்று நாட்டிலிருந்து பெற்ற செல்வத்தால் நீ உன் மக்களுக்கு அள்ளி வழங்குகிறாய். உன்னைப் பாடும் பாணர்கள் நீ பரிசிலாக வழங்கும் பொற்றாமரை விருது அணிகலனைத் தலையில் சூடிக்கொள்கின்றனர்.


புலவர்கள் நீ வழங்கும் யானைமீதும், தேர்மீதும் ஏறிச் செல்கின்றனர். பிறர் நாட்டைக் கைப்பற்றும் கொடுமையைச் செய்து அங்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு நீ விரும்புபவர்களுக்கு மட்டும் இன்பம் தரும் இத்தகைய செயல்களைச் செய்தல் அறச்செயலா? என்று கேட்கிறார் நெட்டிமையார்.


பகைவர் நாட்டைக் கவர்ந்து பொருள்களைக் கைப்பற்றுதலும், தன் மக்களுக்கு வேண்டியதை அளிப்பதும் மன்னனின் கடமை என்பதால் இப்பாடலில் இகழ்ந்து கூறுவது போல புகழப்பட்டுள்ளான் முதுகுடுமிப் பெருவழுதி!


3) கவி காளமேகம் தனிப்பட்ட ஒரு நபரின் நடவடிக்கைகளை இகழ்ந்து கூறுவதுபோல மனிதப் படைப்பினைப் புகழ்ந்து கூறும் இரட்டுற மொழியும் பாடல் இது.


"முன்னே கடிவாளம், மூன்று பேர் தொட்டு இழுக்கப்


பின்னே இருந்து இரண்டு பேர் தள்ள – எந்நேரம்


வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை


மாதம் போம் காத வழி!"

விகடராமன் என்பவன் ஒரு நோஞ்சான் குதிரையையும் உதவிக்குச் சில வேலைக்காரர்களையும் வைத்துக்கொண்டு ஊர் முழுக்க அலட்டல் உலா வருகிறார். அதைப் பார்த்த காளமேகம் கிண்டலாகப் பாடிய பாடல் இது.


எந்நேரமும் வேதம் படிக்கிறவன் விகடராமன். அவனுடைய குதிரைக்கு முன்னே கடிவாளம் உண்டு. ஆனால் அதைத் தொட்டு இழுத்து ஓட்டுவதற்கு ஒருவர் போதாது! மூன்று பேர் வேண்டும். அப்போதும் அந்தக் குதிரை ஓடாது. பின்னால் நின்றபடி இரண்டு பேர் குதிரையைத் தள்ளவேண்டும். இப்படி ஐந்து பேரால் ஓட்டப்படும் அந்தக் குதிரை மிக வேகமாக ஓடும். மாதம் ஒன்றுக்குக் காத தூரம் சென்றுவிடும் என்று இதன் பொருளை வெளிப்படையாகப் பார்த்தால் ஒரு நபரின் அலட்டல் செய்கையை இகழ்ந்து கூறுவது போன்று உள்ளது.


ஆனால் இதன் உண்மையான பொருளை நோக்கின், இறைவன் எனக்கு ஒரு உடம்பைத் தந்தான். அந்த உடம்பு எனும் குதிரையில் என் உயிர் அமர்ந்து கொண்டது. காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று பேர் இழுத்தனர்.


இன்பம், துன்பம் என்னும் இரண்டு பேர் பின்னே இருந்து தள்ளினர். அது சண்டிக் குதிரை என இறைவனின் படைப்பைப் புகழ்வதாய் உள்ளது இப்பாடல்.


"புகழ்வது போல இகழ்தல்: "


4) அறிவற்றவர்கள் கொள்ளும் நட்பு குறித்த இந்தத் திருக்குறள் அறிவற்றவர் நட்பைப் புகழ்வது போல இகழ்கிறது.


"பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்


பீழை தருவதொன் றில்."


அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் எதுவும் ஏற்படாது. எனவே அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது! என்கிறார் வள்ளுவர்.

5) தொண்டை நாட்டை ஆட்சி புரிந்த தொண்டைமான் எனும் அரசன், அதியமான் நெடுமான் அஞ்சி மீது பகை கொண்டான். தன்னிடம் படைவலிமை அதிகமாக இருப்பதாக எண்ணி தொண்டைமான் மிகவும் கர்வம் அடைந்திருந்தான்.


தொண்டைமானின் செருக்கை அறிந்த அதியமான், தன் படை வலிமையையும், தன்னுடன் போர்புரிந்தால் தொண்டைமான் தோல்வி அடைவது உறுதி என்பதையும் அவனுக்கு அறிவுறுத்துமாறு ஒளவையாரைத் தன் தூதுவராகத் தொண்டைமானிடம் அனுப்பினான்.


தூதின் பொருட்டு ஒளவையார் தொண்டைமானைக் காணச் சென்றார். தன் படைவலிமையை எண்ணிக் கர்வத்தோடு இருந்த தொண்டைமான், ஒளவையாரைத் தன் படைக்கலக் கொட்டிலுக்கு அழைத்துச் சென்று, தன் படைக்கருவிகளைப் பெருமையுடன் காட்டினான். அதைப் பார்த்த ஒளவையார், தொண்டைமானின் படைக்கருவிகளைப் புகழ்ந்தும், அதியமானின் படைக்கருவிகளை இகழ்ந்தும் கூறுவது போல இப்பாடல் அமைந்துள்ளது.


பகை அரசனைப் புகழ்வது போல இகழ்கிறார் ஒளவையார்.


"இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்


கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,


கடியுடை வியன்நக ரவ்வே: அவ்வே,


பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,


கொல்துறைக் குற்றில மாதோ "


- புறநானூறு

இங்கு உன் போர்ப்படைக் கருவிகள் பாதுகாப்பாகப் படைக்கொட்டிலில் மயிலிறகு அணிவிக்கப்பட்டு, மாலை சூட்டப்பட்டு, கூர்முனை திருத்தம் செய்யப்பட்டு, அதில் துருப் பிடிக்காமல் இருக்க நெய் பூசப்பட்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.


அங்கு என் தலைவன் பயன்படுத்திய வேல்கள் பகைவரைக் குத்தியதால் நுனி ஒடிந்தும், மழுங்கியும் சிதைந்து, பழுது சரிசெய்வதற்காகக் கொல்லன் உலைக்களத்தில் கிடக்கின்றன.


உன்னிடம் படை இருக்கிறது ஆனால் வீரர்களுக்குப் பயிற்சி இல்லை. என் தலைவனிடம் பயிற்சி பெற்ற வீரர்கள் மிக அதிகம். எனவே போர் நடந்தால் நீ தோற்றுப் போவாய் எனப் பகை அரசனைப் புகழ்வதுபோல இகழ்கிறார் ஒளவையார்.


Monday, May 24, 2021

பத்தாம் வகுப்பு தமிழ் அணிகள் 10TH TAMIL ANI ILAKKANAM

 

பத்தாம் வகுப்பு      தமிழ்       அணிகள்

தற்குறிப்பேற்ற அணி

அணி இலக்கணம்

தன்+ குறிப்பு +ஏற்றம் +அணி =தற்குறிப்பேற்ற அணி

இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

சான்று-                                                தமிழ்த்துகள்

      போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட

-சிலப்பதிகாரம் (இளங்கோவடிகள்)

சான்று விளக்கம்

கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் என தடுப்பது போல் கை காட்டியது.

அணிப் பொருத்தம்

கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்ற போது மதில் மேலிருந்த கொடிகள் காற்றால் இயற்கையாக அசைந்தது. ஆனால் இளங்கோவடிகள் கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி கொடிகள் கையசைத்து மதுரைக்கு வர வேண்டாம் என தெரிவிப்பது போல அசைவதாகத் தன் குறிப்பை கொடியின் மீது ஏற்றிக் கூறுவதால் இப்பாடல் தற்குறிப்பேற்றணிக்குப் பொருத்தமாகும்.

 இயல்பான நிகழ்வு - காற்றில் கொடிகள் அசைவது

 ஏற்றி கூறியது- கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வர வேண்டாம் என எச்சரிப்பது.

தீவக அணி

அணி இலக்கணம்

தீவகம் +அணி                                         தமிழ்த்துகள்

       தீவகம்=விளக்கு

ஒரு அறையில் ஒரு இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போல செய்யுளில் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் செய்யுளின் பல இடங்களுக்குச் சென்று பொருந்தி பொருளை விளக்குவது தீவக அணி எனப்படும்.

சான்று-

       சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்

ஏந்து தடந்தோள், இழிகுருதி- பாய்ந்து

       திசை அனைத்தும், வீரச்சிலைபொழிந்த அம்பும்,

மிசை அனைத்தும் புள் குலமும் வீழ்ந்து.

பாடலின் பொருள்-

அரசனுடைய கண்கள் கோபத்தால் சிவந்தன. அவை சிவந்த அளவில் பகை மன்னர்களுடைய பெரிய தோள்கள் சிவந்தன. குருதி பாய்ந்து திசைகள் அனைத்தும் சிவந்தன. வலிய வில்லால் எய்யப்பட்ட அம்புகளும் சிவந்தன. குருதி மேலே வீழ்தலால் பறவைக் கூட்டங்கள் யாவும் சிவந்தன.                                 தமிழ்த்துகள்

அணிப் பொருத்தம்-

இப்பாடலில்  சேந்தன (சிவந்தன) என்ற சொல் பாடலில் வருகின்ற கண்கள், தோள்கள், திசைகள் ,அம்புகள், பறவைகள் ஆகிய அனைத்துடன் பொருந்தி பொருள் தருவதால் இப்பாடல் தீவக அணிக்குப் பொருத்தமாகும்.

 

நிரல்நிறை அணி

அணி இலக்கணம்-

நிரல் +நிறை +அணி

நிரல்= வரிசை ;நிறை =நிறுத்துதல்

சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.

சான்று-

 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை                 தமிழ்த்துகள்

 பண்பும் பயனும் அது

-திருவள்ளுவர்  (திருக்குறள்).

சான்று விளக்கம்-

இல்வாழ்க்கை என்பது அன்பும் அறமும் உடையதாக விளங்கும் ஆனால் அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

அணிப் பொருத்தம்-

திருக்குறளில் அன்பும் அறனும் என்று சொற்களை வரிசையாக நிறுத்தி பண்பும் பயனும் என்று சொற்களை முறைப்படி உள்ளமையால் இப்பாடல் நிரல்நிறை அணிக்கு பொருத்தமாகும்.

தன்மையணி

அணி இலக்கணம்

தன்மை +அணி.

எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் அதன் இயல்புத் தன்மையோடு அமைத்துப் பாடுவது தன்மையணி ஆகும்.                                               தமிழ்த்துகள்

சான்று-

மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்… -சிலப்பதிகாரம்.

சான்று விளக்கம்-

உடம்பு முழுக்கத் தூசியும் விரிந்து கருமையான தலைமுடியும் கையில் ஒற்றை சிலம்போடு வந்த தோற்றமும் அவளது கண்ணீரும் கண்ட அளவிலே வைகை நதி பாயும் கூடல்நகர் அரசனான பாண்டியன் தோற்றான். அவளது சொல், தன் செவியில் கேட்டவுடன் உயிரை நீத்தான்.

அணிப் பொருத்தம்-

கண்ணகியின் துயர் நிறைந்த தோற்றத்தினை இயல்பாக உரிய சொற்களின் மூலம் கூறியமையால் இப்பாடல் தன்மை நவிற்சி அணிக்குப் பொருத்தமாகும்.

உவமை அணி

அணி இலக்கணம்-

உவமை+ அணி                                             தமிழ்த்துகள்

தெரிந்து ஒரு பொருளைக் கொண்டு தெரியாத ஒரு பொருளை விளக்குவது உவமை எனப்படும். அவ்வாறு விளக்கும் பொழுது போல, போன்ற உவம உருபுகள் வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும்.

சான்று-

            வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

              கோலொடு நின்றான் இரவு.

-திருவள்ளுவர் (திருக்குறள்).

சான்று விளக்கம்-

ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பது, வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானது.

அணிப் பொருத்தம்-

உவமை-ஆயுதம் காட்டி வழிப்பறி செய்வது

உவமேயம் -ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பது

உவம உருபு- போலும்                            தமிழ்த்துகள்

இப்பாடலில் போலும் எனும் உவம உருபு உவமைக்கும் உவமேயத்திற்கும் இடையில் வெளிப்படையாக வந்துள்ளதால் இப்பாடல் உவமை அணிக்குப் பொருத்தமாகும்.

எடுத்துக்காட்டு உவமையணி

அணி இலக்கணம்-

தெரிந்த ஒரு பொருளைக் கொண்டு தெரியாத ஒரு பொருளை விளக்குவது உவமையாகும். அவ்வாறு விளக்கும் பொழுது உவமைக்கும் உவமேயத்திற்கும் இடையே உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணி எனப்படும்.                     தமிழ்த்துகள்

சான்று-

       பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்

.-திருக்குறள் (திருவள்ளுவர்)

சான்று விளக்கம்-

 பாடலோடு பொருந்தவில்லை எனில் இசையால் என்ன பயன்? அதுபோலவே இரக்கம் இல்லா விட்டால் கண்களால் என்ன பயன்?                                  தமிழ்த்துகள்

அணிப் பொருத்தம்

      உவமை- பாடலோடு பொருந்தாத இசை பயனில்லை

உவமேயம்- இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் பயனில்லை.

உவம உருபு- போல (மறைந்து வந்துள்ளது)

இப்பாடலில் உவமைக்கும் உவமேயதிற்கும் இடையே உவம உருபு மறைந்து வந்துள்ளதால் இப்பாடல் எடுத்துக்காட்டு உவமை அணிக்குப் பொருத்தமாகும்.

சொற் பின்வருநிலையணி

அணி இலக்கணம்

சொல் + பின்வருநிலை +அணி

ஒரு செய்யுளில் ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது சொற் பின்வருநிலையணி ஆகும்                 தமிழ்த்துகள்

சான்று-

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்

-திருக்குறள் (திருவள்ளுவர்)

சான்று விளக்கம்-

       ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையராகச் செய்வது செல்வம். அது இல்லாமல் உலகில் சிறந்த பொருள் வேறு இல்லை. 

 அணிப் பொருத்தம்

மீண்டும் மீண்டும் வந்த சொல் - பொருள்             

இப்பாடலில் பொருள் எனும் சொல் வெவ்வேறு பொருளைத் தந்துள்ளதால் இப்பாடல் சொற் பின்வருநிலையணிக்குப் பொருத்தமாகும்.

Sunday, April 05, 2020

உயர்வு நவிற்சி அணி UYARVU NAVIRCHI ANI - TAMIL ILAKKANAM



6TH TAMIL GRAMMAR
ஆறாம் வகுப்பு தமிழ் இலக்கணம்

இயல்பு நவிற்சி அணி IYALBU NAVIRCHI ANI - TAMIL ILAKKANAM



6TH TAMIL GRAMMAR
ஆறாம் வகுப்பு தமிழ் இலக்கணம்

ஏகதேச உருவக அணி YEGATHESA URUVAGA ANI - TAMIL ILAKKANAM



7TH TAMIL GRAMMAR
ஏழாம் வகுப்பு தமிழ் இலக்கணம்

எடுத்துக்காட்டு உவமை அணி EDUTHUKATTU UVAMAI ANI TAMIL ILAKKANAM



7TH TAMIL GRAMMAR
ஏழாம் வகுப்பு தமிழ் இலக்கணம்

இல்பொருள் உவமை அணி ILPORUL UVAMAI ANI - TAMIL ILAKKANAM



7TH TAMIL GRAMMAR
ஏழாம் வகுப்பு தமிழ் இலக்கணம்

Saturday, April 04, 2020

வேற்றுமை அணி VETRUMAI ANI TAMIL ILAKKANAM



8TH TAMIL GRAMMAR

எட்டாம் வகுப்பு தமிழ ்இலக்கணம்

பிறிதுமொழிதல் அணி - ஒட்டணி PIRITHU MOZHITHAL ANI OTTANI TAMIL ILAKKANAM



8TH TAMIL GRAMMAR

எட்டாம் வகுப்பு தமிழ ்இலக்கணம்

சிலேடை - இரட்டுறமொழிதல் அணி - SILEDAI - IRATTURA MOZHITHALANI - TAMIL IL...



8TH TAMIL GRAMMAR

எட்டாம் வகுப்பு தமிழ ்இலக்கணம்

தமிழ்த்துகள்

Blog Archive