கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Showing posts with label ஆறாம் வகுப்பு விரிவானம். Show all posts
Showing posts with label ஆறாம் வகுப்பு விரிவானம். Show all posts

Monday, February 07, 2022

அறிவுசால் ஔவையார் ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 1 விரிவானம் தமிழ்க்கட்டுரை


6th TAMIL AVVAIYAR VIRIVANAM UNIT 1 KATTURAI

அறிவுசால் ஔவையார் ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 2 விரிவானம் இயல் 1 விடை pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


6th tamil virivanam arivu saal avvaiyar question answer

அறிவுசால் ஔவையார் ஆறாம் வகுப்பு தமிழ் விரிவானம் பருவம் 2 இயல் 1 விடை

6th tamil virivanam arivu saal avvaiyar question answer

அறிவுசால் ஔவையார்

கடையேழு வள்ளல்களில் ஒருவன் அதியமான் நெடுமான் அஞ்சி. ஆத்திசூடி தந்த ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனையில் தங்கியிருந்து தமிழ்ப் பணி செய்து வந்தார். காட்டு வளத்தைக் கண்டு மகிழச் சென்ற அதியமான் அரிய வகை கருநெல்லிக்கனி ஒன்றை, தானே பறித்துவந்து ஔவையாருக்குக் கொடுத்தான். அதன் சுவையைப் பாராட்டியபடியே உண்டு மகிழ்ந்தார் ஔவையார். ‘அதை உண்டவர்கள் நோய் நொடியின்றி நீண்டகாலம் வாழ்வார்கள்’, என்று அமைச்சர் கூறக் கேட்டு அதிர்ந்தார் ஔவையார். நாட்டைக் காக்கும் பொறுப்பை உடைய அதியமான் தான் உண்ணாமல் எனக்குக் கொடுத்தது ஏன்? என்று கேட்டார். அதற்கு அவரோ ‘புலவர் ஒருவர் மறைந்தால் அந்த இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது; ஆனால், என்னைப்போன்ற ஒரு அரசன் இறந்து போனால், வேறு ஒருவர் அரசராகிவிடுவார்’, என்று கூறினான். ’ஔவையாரின் நாவில் பிறக்கும் தமிழ் என்றும் நிலைபெற்று வாழும் அதில் அதியமானின் பெயரும் ஒட்டி இருக்கும்; அதுவே தனக்கு மகிழ்ச்சி’, என்று அவன் கூறியதைக் கேட்டு ஔவையார் உள்ளம் மகிழ்ந்தார்.   தமிழ்த்துகள்

          ஒருநாள் அதியமான் முகத்தில் கவலையோடு இருப்பதைக் கண்ட ஔவையார் காரணம் கேட்டார். மன்னன் தொண்டைமான் தன் நாட்டின் மீது படையெடுத்து வர இருப்பதாகச் செய்தி அனுப்பியதைக் கூறினார். யானையானது தன்மீது ஏறிக் குதித்து விளையாடும் சிறுவர்களிடம் பணிந்து அன்பு காட்டும்; அதே யானை போர்க்களத்தில் பகைவர்களைப் பந்தாடும். அதுபோல, புலவர்களிடம் அன்பு காட்டும் அதியமானும் போர்க்களத்தில் பகைவர் படையை வெருண்டு ஓடச் செய்வது வழக்கம். பிறகு ஏன் பயப்படுகிறாய்? என்று அதியமானிடம் கேட்டார். அதற்கு அதியமான்,' ஒவ்வொரு போரின் போதும் எத்தனை உயிரிழப்புகள்? தந்தையை இழந்த பிள்ளைகள், கணவனை இழந்த பெண்கள், மகனை இழந்த தாய்மார்கள், அண்ணனை இழந்த தம்பி தங்கைகள் என எத்தனையோ பேரின் கண்ணீர் ஒவ்வொரு போர் வெற்றிக்குப் பின்னாலும் மறைந்து இருக்கிறது’. எனவே, இந்தப் போரைத் தவிர்த்தால் என்ன? என்று கேட்டான். அன்பிற் சிறந்த அதியமானே! உன் உள்ளம் எனக்குப் புரிந்தது. இப்போதே தொண்டைமானிடம் சென்று இந்தப் போர் ஏற்படாதவாறு பேசித் தடுக்கிறேன் என்றார். தன் வீர உணர்வுக்கும் தன் மனதிற்கும் சிறிதும் இழுக்கு ஏற்படாமல் ஔவையார் நடந்துகொள்வார் என்பதில் அதியமானுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது.  தமிழ்த்துகள்

          தொண்டைமான் தன் படைத் தலைவரிடம் படைவீரர்களும் போர்க் கருவிகளும் ஆயத்தமாக இருக்கின்றனவா என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது ஔவையார் அவைக்குள் நுழைந்தார். சமாதானம் பேசி போரை நிறுத்த வேண்டி தூது வந்த ஔவையே வருக! என்றான் தொண்டைமான்.  வரவேற்பைப் பார்த்தால் என் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத் தோன்றுகிறதே என்றார் ஔவை. பகைவர் நாட்டிலிருந்து வந்தாலும் தமிழ்ப் புலவரை வரவேற்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தொண்டைமான் கூறினார். தமிழ்த்துகள்

தமிழின்மீது அன்புடையவன் தொண்டைமான் என்பதை அறியும் போது தனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே என்றார் ஔவை. போர்க் கருவிகளைப் பார்வையிடுவதற்காக படைக்கலக் கொட்டிலுக்கு அவரைக் கூட்டிச் சென்றான் தொண்டைமான். வில், அம்பு, வேல், ஈட்டி, வாள், கேடயம், மழு என எத்தனை கருவிகள் எத்தனை வகைகள் எத்தனை எண்ணிக்கை! பார்க்கும்போதே வியப்பாக இருக்கிறது. புத்தம் புதிதாக நெய் பூசப்பட்டு, மாலைகள் அணிவிக்கப்பட்டுக் காட்சியளிக்கின்றது என்று புகழ்ந்தார் ஔவையார். தமிழ்த்துகள்

அதியமானின் படைக்கருவிகள் பற்றிச் சொல்லுங்களேன் என்று தொண்டைமான் கேட்டார். அதியமானின் படைக் கருவிகள் எல்லாம் பகைவர் உடலைத் துளைத்த குருதிக் கறைகளுடன்  நுனி ஒடிந்தும் கூர்மழுங்கியும் கொல்லன் உலைக்களத்தில் கிடக்கின்றன. இவ்வளவு அழகாக அடுக்கி வைக்கப்படவில்லை என்றார். ஔவையாரின் சொற்கள் தொண்டைமானைக் குழப்பி விட்டன. அதன்மூலம் அதியமான் பல்வேறு போர்களில் பகைவர்களை வெற்றி கொண்டவன். பலம் மிகுந்த அவனோடு இதுவரை போரில் ஈடுபடாத தான் மோதினால் அதிக இழப்பு ஏற்படும் என்பதைக் குறிப்பால் உணர்த்திய ஔவையாரைப் பாராட்டினான் தொண்டைமான். போரில்லா மகிழ்ச்சியில் இந்த உலகம் திளைக்கட்டும் என்று கூறி விடைபெற்றுச் சென்றார் ஔவையார்.                               தமிழ்த்துகள்

மு.முத்து முருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி.

Thursday, May 27, 2021

வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட நிகழ்வு தமிழ்க்கட்டுரை VELU NACHIYAR TAMIL KATTURAI

 

 

வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட நிகழ்வு

முன்னுரை                          

விடுதலைப்போரில் ஆண்களுக்கு நிகராக வாளெடுத்துப் போரிட்ட வீரமங்கை. இராமநாதபுர மன்னர் செல்லமுத்துசேதுபதியின் ஒரே வாரிசு. தன் கணவராம் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரைக் கொன்ற ஆங்கிலேயரைப் பழிதீர்த்து, சிவகங்கையை மீட்டெடுத்த வேங்கை வேலுநாச்சியார்.       

ஐதர் அலியின் உதவி                        

    காளையார்கோவில் போரில் தன் கணவரை நயவஞ்சகமாகக் கொன்ற ஆங்கிலேயரிடமிருந்து சிவகங்கையை மீட்க திண்டுக்கல் கோட்டையில் தங்கியிருந்தார். அமைச்சர் தாண்டவராயர், தளபதிகள் பெரிய மருது, சின்ன மருது உடனிருந்தனர். அப்போது ஐதர் அலி மைசூரிலிருந்து அனுப்பிய 5000 குதிரைப்படை வீரர்கள் வந்துசேர்ந்தனர். உருது மொழியில் ஐதர் அலியிடம் நாச்சியார் பேசியதில் மகிழ்ந்து படை அனுப்பி உதவியுள்ளார்.

குயிலியும் உடையாளும்                  WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்கள், பெண்கள் படைப்பிரிவுக்குக் குயிலி தலைமை ஏற்றனர். விஜயதசமித் திருநாளன்று சிவகங்கைக் கோட்டைக் கதவுகள் திறந்தன. பெண்கள் படை பழங்கள், பூக்கூடைகளுக்குள் ஆயுதங்களை மறைத்தபடி முதலில் நுழைந்தது. வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்க மறுத்ததால் உடையாள் என்பவர் ஆங்கிலேயரால் கொல்லப்பட்டார், அவரது நடுகல் முன்பு வணக்கம் செலுத்தினார் நாச்சியார். மாறுவேடத்தில் கோட்டைக்குள் சென்ற குயிலி தன் உடலில் தீ வைத்துக்கொண்டு ஆயுதக்கிடங்கில் குதித்து அழித்தார். அச்சமயத்தில் வேலுநாச்சியார் படையுடன் கோட்டைக்குள் நுழைந்து ஆங்கிலேயரை வென்று பழிதீர்த்தார்.            

முடிவுரை                                      

பெண் என்ற போதிலும் சிலம்பம், குதிரையேற்றம், வாள்போர், வில் பயிற்சி கற்றுத்தேர்ந்தவர் வேலுநாச்சியார். வேலுநாச்சியாரின் வீரம், மருது சகோதரர்களின் ஆற்றல், ஐதர் அலியின் உதவி இவற்றுடன் குயிலியின் தியாகமும் இணைந்ததால் சிவகங்கை மீட்டெடுக்கப்பட்டது.          

முடிவில் ஒரு தொடக்கம் - பெயர்க்காரணம் - ஹிதேந்திரன் MUDIVIL ORU THODAKKAM HITHENTHIRAN KATTURAI

 

.

முடிவில் ஒரு தொடக்கம் - பெயர்க்காரணம்

பொன்னையும் பொருளையும் வாரி வழங்குவது மட்டும் வள்ளல் தன்மை அன்று. நம் இறப்பிற்குப் பின் மண்ணுக்குச் செல்லும் உடல் உறுப்புகளைப் பிறர் வாழ வழங்குவதும் வள்ளல் தன்மையே.

    திருக்கழுக்குன்றம் அசோகன் புஷ்பாஞ்சலி என்ற மருத்துவத் தம்பதியினரின் மகனுக்குச் சாலை விபத்தில் மூளை செயலிழப்பு அடைந்துவிட்டது. பிறக்கும்போது பெற்றோரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதால் ஹிதேந்திரன் என்று பெயரிடப்பட்டவன் அவன். அத்தகைய அன்பு மகனின் இதயத்தை எடுத்துத் தேவைப்படும் யாருக்காவது பொருத்த நாங்கள் சம்மதிக்கிறோம். எங்கள் மகனுக்கு வாழ்வு கொடுங்கள் ! அவனைச் சாக விடமாட்டோம் என்று கதறினர்.

    மருத்துவக்குழுவினர் விரைவாகச் செயல்பட்டனர். ஹிதேந்திரனின் இதயம் பெங்களூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதயம் வலுவிழந்து உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த ஒரு சிறுமிக்குப் பொருத்தப்பட்டது. ஹிதேந்திரன் முடிவில் இதயம் கொடுத்து முடிவில் ஒரு தொடக்கமாய் சிறுமியுள் இன்றும் துடித்துக்கொண்டிருக்கிறார்.              

Wednesday, May 26, 2021

பாதம் தமிழ்க்கட்டுரை துணைப்பாடம் PAATHAM THUNAIPAADA KATTURAI TAMIL NON DETAIL STORY

 

 

பாதம்

முன்னுரை                          WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

திரையரங்க வாசலில் காலணி தைப்பவர் மாரி. காற்றும் மழையும் வலுத்ததால் அவர் பசியுடன் காத்திருந்தார். காரணம் – எவரும் அவரை நாடி வரவில்லை. அப்போது ஒரு விந்தை நிகழ்ந்தது.                     WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

மீன் போன்ற பெண்ணும் இளஞ்சிவப்புநிறக் காலணியும்

    ஒரு சந்திலிருந்து சிறுமியொருத்தி மீனைப்போன்று சுழன்று வந்தாள். இளம் சிவப்பு நிறக் காலணியைத் தந்து தைத்து வைக்கும்படிக் கூறிவிட்டு மின்னலென மறைந்தாள். வெல்வெட் தைத்துப் பூவேலைப்பாடுடன் இருந்த அக்காலணியில் சிறுமியின் பாதவாசனை படிந்திருந்தது. கிழிசலைத் தைத்துவிட்டுக் கிடைக்கப்போகும் இரண்டு ரூபாய்க்காகக் காத்திருந்தார் மாரி. ஆனால் அச்சிறுமி வரவேயில்லை.

விந்தைக் காலணியால் வந்தது வருமானம்

ஒருநாள் இரவு மாரியின் மனைவி கண்ணில்பட்டது அக்காலணி. மகளை அணியச்செய்தாள், சரியாக இருந்தது. மற்றொன்றைத் தேடிக்கொண்டிருக்கும்போது மாரி வந்துவிட்டார். கோபத்துடன் பறித்துத் துடைத்துப் பையில் வைக்கும் முன் தானே அணிந்து பார்த்தார். சரியாக இருந்தது, வியந்தார். இச்செய்தி நகரில் பரவியது. அணிந்து பார்த்தவர் பணம் தந்தனர்.              WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

முப்பது வருடத்திற்குப்பின் முடிந்தது கடமை

பார்வையாளர்கள் கொடுத்த பணம் பசு, வீடு என்றானது. இப்படியாக முப்பது வருடங்கள் கடந்தன. ஆனால் இன்றாவது அவளிடம் காலணியை ஒப்படைத்து விடமாட்டோமா என்ற ஏக்கம் மாரியிடம் இருந்தது. ஒரு மழை இரவில் நடுத்தர வயதுப் பெண்மணி வந்தாள். வெகு தாமதமாகிவிட்டது, என் காலணியைத் தைத்து விட்டீர்களா? என்றாள். மகிழ்ந்தார் மாரி. இடக்கால் காலணி அவள் கூடையில் இருந்தது. விந்தைக்காலணி உலகின் எல்லாப் பாதங்களுக்கும் பொருந்துகிறதே! என்றார். கொடுத்தார், கூலி பெற்றார்.

முடிவுரை                                      WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

காலணியைப் பறிக்க முயன்ற திருடர்கள் தாக்கியதில் தளர்ந்திருந்த மாரி தன் கடமை முடிந்ததும் நிம்மதியானார். அப்பெண் தைத்து வாங்கிய காலணி அவளுக்குச் சிறியதாகவே இருந்தது.       

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

தமிழ்த்துகள்

Blog Archive