தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Monday, August 31, 2020
Sunday, August 30, 2020
Saturday, August 29, 2020
Friday, August 28, 2020
Thursday, August 27, 2020
Wednesday, August 26, 2020
Tuesday, August 25, 2020
Monday, August 24, 2020
Saturday, August 22, 2020
சர்வபள்ளி இராதாகிருட்டிணன் கட்டுரை SARVAPALLI RADHAKRISHNAN TAMIL ESSAY
சர்வபள்ளி இராதாகிருட்டிணன்
குறிப்புச்சட்டகம்
இளமைப்பருவம்
கல்வி
பணி
மேதைகளும் இராதாகிருட்டிணனும்
கல்வி பற்றிய கருத்துகள்
சமயங்கள் குறித்த பார்வை
ஆசிரியர் பற்றிய கருத்து
மாணவர்களின் பார்வையில்...
எழுதிய நூல்கள்
முடிவுரை
முன்னுரை
“நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது
புத்தேள் உலகு.”
என்பது வள்ளுவனின் வாக்கு. இவ்வுலக புகழ் அனைத்தையும்
ஒருங்கே பெற்று தேவர்கள் போற்றும் அளவிற்கு உயர்ந்தவர் மாண்புமிகு சர்வபள்ளி
இராதாகிருட்டிணன் அவர்கள். இந்தியாவின் முதல் துணைக்குடியரசுத் தலைவரும்,
இரண்டாவது குடியரசுத் தலைவருமான அவரைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இளமைப்பருவம்
1888 ஆம் ஆண்டு செப்டம்பர்
ஐந்தாம் நாள் திருத்தணியில் சர்வபள்ளி என்ற கிராமத்தில் வீராசாமி, சீதம்மா இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
இவர்தம்
பதினாறாம் அகவையில் சிவகாமு என்பவரை மணந்தார். இவருக்கு 5 பெண் குழந்தைகளும் கோபாலன் என்ற
மகனும் பிறந்தனர்.
கல்வி
இவர் திருப்பதி லுத்தரன் மிசன் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பையும், சென்னை கிறித்துவக்கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். தத்துவப்பாடத்தில்
முதுகலைப் பட்டமும் பெற்றார்.
பணிகள்
|
1918 |
மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவப்பேராசிரியர். |
|
1921 |
கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவப்பேராசிரியர். சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் உதவி பேராசிரியர். |
|
1931 |
ஆந்திர
பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர். |
|
1939 |
பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர். |
|
1946 |
யுனெஸ்கோவிற்குத் தூதுவர். |
|
1948 |
பல்கலைக்கழக கல்வி ஆணையத்தலைவர் |
மேதைகளும் இராதாகிருட்டிணனும்
ஆக்சுபோர்டு
பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இராபர்ட் ஜோன்ஸ் “இராதாகிருட்டிணனின்
சொற்பொழிவில் இன்னிசை தேனாக இனிக்கிறது, முகத்தில் ஒளி வீசுகிறது” எனப் புகழ்ந்துரைத்தார்.
ஒருமுறை
வெளிநாட்டு விருந்தில் அனைவரும் கரண்டியில் உணவு அருந்திய போது இராதாகிருட்டிணன்
அவர்கள் கையால் உணவு அருந்தினார். இதைக் கண்ட சர்ச்சில் “கரண்டியால்
உணவு அருந்துவதே ஆரோக்கியமான செயல் ” என்றார். அதற்கு இராதாகிருட்டிணன் அவர்கள் “நம் கரண்டியைக் கொண்டு பிறர் சாப்பிட்டு
எச்சில்படுத்தலாம். ஆனால் நம் கையைக் கொண்டு பிறர் சாப்பிட முடியாது ” எனக்கூறினார். அவரின் திறமையான பதில் கேட்ட சர்ச்சில்
வியந்தார்.
கல்வி பற்றிய கருத்துகள்
“ மனிதனின் உடல், மனம், ஆளுமை ஆகியவற்றின் தேவையை
நிறைவேற்றுவதுதான் உண்மையான கல்வி ” என்றார். “கல்வி இயற்கையோடு இயைந்த கல்வியாக இருக்க வேண்டும் ” என்றார்.
“மனநோய்கள், தவறான நடத்தைகள் போன்ற அனைத்தும் தவறான
கல்வியின் விளைவுகள் ” என்றார். “மனிதனுக்குக் கல்வி பெறும் திறன்
இருப்பதுதான் அவனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது ” என்றார்.
சமயங்கள் குறித்த பார்வை
சர்வபள்ளி
இராதாகிருட்டிணன் அவர்களுக்குப் பிடித்த நூல் பகவத்கீதை ஆகும். “ பகவத்கீதை
என்பது உபநிடதங்கள் எனும் பசுவிலிருந்து கிருஷ்ணன் எனும் தெய்வீக ஆயர்
அர்ச்சுனனுக்காகக் கறந்த பால் ” என்று கூறினார்.
சாதி
உணர்வு கூடாது, தீண்டாமை இந்து சமயத்திற்குத் தேவையில்லாதது என உறுதிபடக்
கூறினார். பிற மதங்களையும், சமயக் கொள்கைகளையும் மதித்தார்.
ஆசிரியர் பற்றிய கருத்து
ஒவ்வொரு
ஆசிரியரும் போர் வீரராக இருக்க வேண்டும். வெற்றி தோல்விகள் பற்றி கவலைப்படாமல்
மாணவர்களின் முன்னேற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று
கூறினார்.
மாணவர்களின் பார்வையில்...
தெளிவான
தீர்க்க தரிசன எண்ண ஓட்டம், தானாக வரும் தரமான சொற்கள், அழகான மொழிநடை கொண்டவர்
என்று மாணவர்கள் இராதாகிருட்டிணன் அவர்கள் குறித்து புகழ்ந்துரைத்தனர்.
மாணவர்களிடம்
நட்புடன் பழகினார். வீட்டிற்குச் சந்தேகம் கேட்க வரும் மாணவர்களைப் பாராட்டி,
தேநீர் தந்து இன்முகத்துடன் ஐயம் போக்கினார்.
எழுதிய நூல்கள்
இவருடைய
தலைசிறந்த நூலான இந்திய
தத்துவம் 1923 ஆம் ஆண்டு வெளிவந்தது. மகாத்மா காந்தி, பகவத்கீதை விளக்க உரை,
முதன்மை உபநிடதங்கள், இந்திய சமயங்களின் சிந்தனைகள், இரவீந்திரநாத்தின் தத்துவம்,
தம்மபதம், உண்மையான கல்வி போன்றவை இவர் எழுதிய நூல்களில் சில.
முடிவுரை
விநாயகர் VINAYAGAR கணபதி GANAPATHY பிள்ளையார் PILLAIYAR ஒரு பார்வை
இந்து மதத்தினுள் உள்வாங்கப்பட்ட சமயமான காணாபத்தியம் எனும் பிரிவு விநாயகரை மையப்படுத்திய சமயம்.
இந்துக்களின் புராணங்களில் விநாயகர் மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும் முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் கூறப்படுகிறார். இக்கடவுளின் வாகனம் மூஞ்சூறு .
’கணேச புராணம்’, கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுகின்றது.
கிருத யுகம்
காஸ்யப முனிவருக்கும் அதீதீ தேவிக்கும் பிள்ளையாக அவதரித்து அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். கிருத யுக அவதாரத்தில் பிள்ளையாரின் திருநாமம் மகாகடர்.
திரேதா யுகம்
அம்பிகை பார்வதியின் பிள்ளையாக அவதரித்து, அழகான மிகப்பெரிய மயிலை தம் குழந்தைப் பருவத்தில் பிடித்து விளையாடியதால் மயூரேசர் என்ற திருநாமம்
துவாபர யுகம்
கஜானனன் என்ற திருநாமத்துடன் அவதரித்து, பராசர மகரிஷி மற்றும் பராசர மகரிஷியின் தேவி வத்ஸலாவால் சிறப்பாக வளர்க்கப்பட்டார்.
கலி யுகம்
சிவபெருமானுக்கும் அம்பிகை பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கியும் வருவதாகக் கணேச புராணம் குறிப்பிடுகின்றது
விநாயகர் பிறப்பு பற்றி பல்வேறு கதைகள் இருந்தாலும் சிவமகா புராணத்தில் உள்ள கதை பரவலாக அறியப்படுகிறது. அதன்படி முற்காலத்தில் யானை முகம் கொண்ட கஜாசுரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி பல வருடங்களாக கடுந்தவம் புரிந்தான். அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்து வேண்டிய வரம் கேட்குமாறு கூறுகிறார். அதற்கு கஜாசுரன், தன் வயிற்றில் சிவபெருமான் லிங்க வடிவில் தங்கியிருக்க வேண்டும் என்று வரம் கேட்டுப் பெற்றார். இதை அறிந்து கலக்கமடைந்த பார்வதி தேவி, தன் அண்ணன் விஷ்ணுவிடம் உதவி கோரினார்.
பிறகு விஷ்ணு மற்றும் நந்தி ஆகிய இருவரும் தெருக்கூத்து நடத்துபவர்கள் போன்ற உருவம் கொண்டு கஜாசுரனின் அரண்மனைக்கு வந்தனர். நந்தியின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த கஜாசுரன், அவர் வேண்டுவதை அளிப்பதாக வாக்களிக்கிறான். அதற்கு நந்தி அவனிடம் சிவபெருமானை விடுவிக்குமாறு கேட்கிறார். கஜாசுரனும் தான் கொடுத்த வாக்கின்படி சிவபெருமானை விடுவித்தான். அவன் சிவபெருமானை நோக்கி பிரபஞ்சத்தில் தன் நினைவு என்றும் அழியாமல் நிலைக்க வேண்டும் என்று வேண்டுகிறான். அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், கஜாசுரனின் யானைத் தலையைக் கொய்து அவரைப் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கிறார். மேலும் அவனது யானைத் தோலை உடுத்திக் கொண்டு கஜசம்ஹார மூர்த்தியாக காட்சியளித்தார். பிறகு சிவபெருமான் தன் வாகனமான நந்தியில் அமர்ந்து கொண்டு கயிலாயம் வருகிறார.
சிவபெருமான் கயிலாயம் வந்து கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ந்த பார்வதி, அவரை வரவேற்கும் முன்பு தயாராக நினைத்தார். ஆனால் அப்போது நந்தி இல்லாததால் அங்கு வாயிற்காவலர் யாரும் இருக்கவில்லை. எனவே பார்வதி தாம் குளிக்கும் முன்பு மஞ்சள் விழுதால் ஒரு சிறுவனைச் செய்து அதற்கு உயிர் கொடுத்தார். அவனுக்கு விக்னங்களைத் தீர்ப்பவன் என்ற பொருளில் விநாயகர் என்ற பெயர் சூட்டினார். மேலும் தான் தயாராகி வரும் வரை ஒருவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று விநாயகரிடம் அறிவுறுத்துகிறார். விநாயகரும் அவ்வாறே செய்வதாக வாக்களிக்கிறான். பிறகு கயிலாயம் வந்தடைந்த சிவபெருமானை விநாயகர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவபெருமான் தன் திரிசூலத்தால் விநாயகரின் தலையைக் கொய்தார். பிறகு நடந்நதை அறிந்து கோபம் கொண்ட பார்வதி, பிரபஞ்சத்தையே அழிக்க முடிவெடுத்தார். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பிரம்மதேவர் வேண்டிக் கொண்டார். அதற்கு பார்வதி, விநாயகரை உயிர்த்தெழச் செய்ய வேண்டும் மற்றும் விநாயகரையே அனைவரும் முழுமுதற் கடவுளாக வணங்க வேண்டும் என்று இரு நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், வடக்கில் தலை வைத்து இறந்த நிலையில் படுத்திருக்குமாறு முதலில் தென்படும் உயிரினத்தின் தலையைக் கொய்து எடுத்து வருமாறு சிவகணங்களை அனுப்பினார். அதன்படி சிவகணங்கள் கஜாசுரனின் தலையுடன் திரும்பி வந்தனர். அதை விநாயகரின் உடலோடு பொருத்தினார் பிரம்மதேவர். பிறகு விநாயகருக்கு உயிரளித்த சிவபெருமான், அவனுக்கு முழுமுதற் கடவுள் என்ற பட்டமும் கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி என்றும் பெயரையும் வழங்கினார்.
விநாயகர் உருவ விளக்கம்
திருவடி
ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.
பெருவயிறு
ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.
ஐந்துகரங்கள்
பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார். தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார் துதிக்கை அனுக்ரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது.எனவே, இவா் ருத்ரா் ஆகிறார் மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே,இவரே சா்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்
கொம்புகள்
மகாபாரதத்தை எழுதுவதற்காக தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துவதாகக் கூறப்படுகின்றது.[8]
தாழ்செவி
விநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.
முப்பத்தியிரண்டு விநாயக மூர்த்தங்கள்
- உச்சிட்ட கணபதி
- உத்தண்ட கணபதி
- ஊர்த்துவ கணபதி
- ஏகதந்த கணபதி
- ஏகாட்சர கணபதி
- ஏரம்ப கணபதி
- சக்தி கணபதி
- சங்கடஹர கணபதி
- சிங்க கணபதி
- சித்தி கணபதி
- சிருஷ்டி கணபதி
- தருண கணபதி
- திரயாக்ஷர கணபதி
- துண்டி கணபதி
- துர்க்கா கணபதி
- துவிமுக கணபதி
- துவிஜ கணபதி
- நிருத்த கணபதி
- பக்தி கணபதி
- பால கணபதி
- மஹா கணபதி
- மும்முக கணபதி
- யோக கணபதி
- ரணமோசன கணபதி
- லட்சுமி கணபதி
- வர கணபதி
- விக்ன கணபதி
- விஜய கணபதி
- வீர கணபதி
- ஹரித்திரா கணபதி
- க்ஷிப்ர கணபதி
- க்ஷிப்ரபிரசாத கணபதி
விநாயகர் சதுர்த்தி
தமிழகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கே நிறுவப்படும் விநாயகர் சிலைகள் முக்கால் அடியில் இருந்து 70அடி வரை விதவிதமாக செய்யப்படுகின்றன. பின்னர் விநாயகர் சிலையை 3வது நாள், 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்படுகிறது.
தமிழ் நாட்டின் சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோவில்கள் இருப்பதேயாகும். கோயில் என்று பெயர் வைத்து கூரையும் விமானமும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல் அரசமரத்தடி, குளக்கரை முச்சந்தி நாற்சந்தி தெருமுனை என வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஒரே சுவாமி பிள்ளையார்தான்.
இந்தோனேசியா நாட்டின் ருபியா நோட்டில் விநாயகப் பெருமானின் திருவுருவம் உள்ளது
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson new june 2026 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-06-2026 முதல் 05-06-2026 2.பாடம் ...
-
9th tamil june month weekly monthly syllabus 2026
-
6th tamil model notes of lesson lesson plan 2026 june 4 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-06-2026 முதல் 05-06-2026 2...
-
குற்றியலுகரம் தமிழ்த்துகள் வினாடி வினா மதிப்பெண்: 0 / 20 செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641 அடுத்த கேள்வி தேர்வ...
-
Tenth Tamil Choose the best answer book inside questions and answers 123 Unit 1 new syllabus பதிவிறக்கு/DOWNLOAD
-
9th tamil model notes of lesson june 2026 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-06-2026 முதல் 05-06-2026 2.பாடம் ...
-
பகுபத உறுப்பிலக்கணம் தமிழ்த்துகள் வினாடிவினா மதிப்பெண்: 0/20 செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 986544...
Blog Archive
-
▼
2020
(1294)
-
▼
August
(354)
- ஆசிரியர்கள் நாள் சிறப்புரை TEACHER'S DAY SPEECH IN...
- சர்வபள்ளி இராதாகிருட்டிணன் தமிழ்க் கட்டுரை ஆசிரியர...
- உயிர்மெய் எழுத்துகள் ன வரிசை தமிழ் எழுத்துகள் TAMI...
- மயங்கொலிச்சொற்கள் - ர,ற - பொருள் வேறுபாடு 2 மின்சா...
- உயிர்மெய் எழுத்துகள் ற வரிசை தமிழ் எழுத்துகள் TAMI...
- உயிர்மெய் எழுத்துகள் ள வரிசை தமிழ் எழுத்துகள் TAMI...
- உயிர்மெய் எழுத்துகள் ழ வரிசை தமிழ் எழுத்துகள் TAMI...
- உயிர்மெய் எழுத்துகள் வ வரிசை தமிழ் எழுத்துகள் TAMI...
- உயிர்மெய் எழுத்துகள் ல வரிசை தமிழ் எழுத்துகள் TAMI...
- உயிர்மெய் எழுத்துகள் ர வரிசை தமிழ் எழுத்துகள் TAMI...
- உயிர்மெய் எழுத்துகள் ய வரிசை தமிழ் எழுத்துகள் TAMI...
- உயிர்மெய் எழுத்துகள் ம வரிசை தமிழ் எழுத்துகள் MA V...
- உயிர்மெய் எழுத்துகள் ப வரிசை தமிழ் எழுத்துகள் PA V...
- வகுப்பு வாரியான கல்வித் தொலைக்காட்சி, தனியார் தொல...
- உயிர்மெய் எழுத்துகள் ந வரிசை தமிழ் எழுத்துகள் TAMI...
- உயிர்மெய் எழுத்துகள் த வரிசை தமிழ் எழுத்துகள் TAMI...
- உயிர்மெய் எழுத்துகள் ண வரிசை தமிழ் எழுத்துகள் TAMI...
- உயிர்மெய் எழுத்துகள் ட வரிசை தமிழ் எழுத்துகள் TAMI...
- உயிர்மெய் எழுத்துகள் ஞ வரிசை தமிழ் எழுத்துகள் TAMI...
- உயிர்மெய் எழுத்துகள் ச வரிசை தமிழ் எழுத்துகள் TAMI...
- உயிர்மெய் எழுத்துகள் ங வரிசை TAMIL LETTERS NGA VAR...
- ஆண்டாள் அருளிய திருப்பாவை - 30 - வங்கக் கடல்கடைந்...
- திருப்பாவை - பாடல் 29 - சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை...
- ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 28 - கறவைகள் பின...
- ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 27 - கூடாரை வெல்...
- ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 26 - மாலே மணிவண்...
- ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 25 - ஒருத்தி மகன...
- ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 24 - அன்றிவ் வுல...
- ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 23 - மாரி மலைமுழ...
- ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை - பாடல் 22 - ...
- ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை - பாடல் 21 - ...
- ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாசுரம் 20 - முப்பத்து...
- ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 19 - விளக்கம்.
- ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை - பாடல் 18 - ...
- ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாசுரம் - பாடல் 17 - அ...
- ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் - 15 எல்லே ! இள...
- ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 16 விளக்கம் - நா...
- ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 14 விளக்கம் - Gr...
- ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை பாடல் 13 - பு...
- திருப்பாவை பாடல் 12 - கனைத்திளங் கற்றெருமை கன்றுக்...
- ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 11 கற்றுக் கறவைக...
- ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 10 - நோற்றுச் சு...
- ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 9 - தூமணி மாடத...
- ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 8 - கீழ்வானம் வெ...
- ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 7 - கீசு கீசு என...
- ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை - பாடல் 6 - ப...
- ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 5 - மாயனை மன்னு ...
- ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 4 - ஆழி.மழைக்க...
- ஆண்டாள் அருளிய திருப்பாவை மூன்றாம் பாசுரம் - ஓங்கி...
- ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 2 - வையத்து வாழ்...
- மார்கழி - 1 - ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் ...
- தமிழ் வகுப்பு 9 இயல் 3 பலவுள் தெரிக வினாத்தாள் 9th...
- தமிழ் வகுப்பு 9 இயல் 2 பலவுள் தெரிக வினாத்தாள் 9th...
- தமிழ் வகுப்பு 9 இயல் 1 பலவுள் தெரிக வினாத்தாள் 9th...
- உயிர்மெய் எழுத்துகள் க வரிசை க முதல் கௌ வரை TAMIL ...
- 12 ஆம் வகுப்பு - அரசுப் பொதுத்தேர்வு - தமிழ் பாடத்...
- மேல்நிலை இரண்டாம் ஆண்டு - பொதுத் தமிழ் - இயல் 4 - ...
- வகுப்பு - 12 - தமிழ் - புதிய பாடத்திட்டம் - கவிதைப...
- 12,ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 5 - கவிதைப்பேழை - தே...
- 12 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் - 5 - கவிதைப் பேழை ...
- 12 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 7 - கவிதைப்பேழை - பு...
- 12 - ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 4 - கவிதைப்பேழை - ...
- 12 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கவிதைப்பேழை - தன...
- 12 - பனிரெண்டாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கவிதைப...
- மேல்நிலை முதலாம் ஆண்டு - பொதுத் தமிழ் - கவிதைப்பேழ...
- பதினொன்றாம் வகுப்பு - தமிழ் - இயல் 7 - கவிதைப்பேழை...
- மயங்கொலிச்சொற்கள் - ர,ற - பொருள் வேறுபாடு 1 மின்சா...
- சர்வபள்ளி இராதாகிருட்டிணன் கட்டுரை SARVAPALLI RADH...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 8 - உரைநடை - பெரிய...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 9 - கவிதைப்பேழை - ...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 8 - கவிதைப் பேழை -...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 8 - யசோதர காவியம் ...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 5 இலக்கணம் - இடைச்...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 - திருக்குறள் - ...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 - வாழ்வியல் - தி...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 7 - இலக்கணம் - ஆகு...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 7 - கவிதைப் பேழை -...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 - புணர்ச்சி = மெ...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 7 - முத்தொள்ளாயிரம...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 - கவிதைப் பேழை -...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 - இராவண காவியம் ...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 விரிவானம் - செய்...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 - இராவண காவியம் ...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 - இராவண காவியம் ...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - சீவக...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ்.- இயல் 4 - கவிதைப்பேழை - ...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 5 - கவிதைப் பேழை -...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் -3 , உள்ளத்தின் சீ...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - முதல் பருவம் - நீரின்ற...
- வகுப்பு - 9 , தமிழ் - கவிதைப்பேழை - பட்டமரம்
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் , கவிதைப்பேழை - தமிழ்விட...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் , கவிதைப்பேழை - பெரியபுரா...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் , இயல் - நான்கு - கவிதைப...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - கவிதைப் பேழை - புறநானூற...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - முதல் பருவம் - கவிதைப் ...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் , நீரின்றி அமையாது உலகு -...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - நாச்ச...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் , இரண்டாம் பருவம் - இராவண...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - சிற்ப...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - சந்தை...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - இயற்கை - நீரின...
- பாடமே படமாக ! எட்டாம் வகுப்பு - தமிழ் - தமிழர் இசை...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - திருக்...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 3...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 3...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 3...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இலக்கண...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - பருவம் மூன்று - இலக்கணம்...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - உயிர்க...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 3...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - கவிதைப...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 2...
- பாடமே கதையாக ! எட்டாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் ...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இயல் ...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இலக்க...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - இலக்கணம் - இரண்டாம் பருவ...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இயல் 3...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - பருவம் இரண்டு - இயல் 3 -...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இயல் 3...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இயல் 1...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இயல் 2...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - கவிதை...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இயல் 1...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இயல் 2...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - முதல் பருவம் - இயல் 3 - ...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - முதல் பருவம் - இயல் 1 - ...
- எட்டாம் வகுப்பு - தமிழ் - புதிய பாடத்திட்டம் - இயல...
-
▼
August
(354)
