கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Showing posts with label பாடக்குறிப்புகள் வகுப்பு 10. Show all posts
Showing posts with label பாடக்குறிப்புகள் வகுப்பு 10. Show all posts

Sunday, June 14, 2026

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு புயலிலே ஒரு தோணி ஜூன் 22 - 2026

 10th tamil model notes of lesson

lesson plan June 22

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

22-06-2026 முதல் 25-06-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

அமுத ஊற்று – விரிவானம்.

5.உட்பாடத்தலைப்பு

புயலிலே ஒரு தோணி.

6.பக்கஎண்

10 - 12

7.கற்றல் விளைவுகள்

T-1003 கதை நிகழ்வுகளுக்குள் பொதிந்திருக்கும் மொழி வீச்சையும் நயத்தையும் செறிவையும் படித்துச் சுவைத்தல், எண்ணங்களோடு இணைத்து விவரித்து எழுதுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

இயற்கைச் சீற்றத்தை உணர்தல்.

9.நுண்திறன்கள்

புதினத்தில் காற்று குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2020/05/10-2-puyaliley-oru-thoni-tenth.html 

https://tamilthugal.blogspot.com/2020/05/10-2-puyalile-oru.html 

https://tamilthugal.blogspot.com/2023/06/10th-tamil-ppt-power-point-presentation_29.html 

https://tamilthugal.blogspot.com/2021/06/2-10th-tamil-online-test-puyaliley-oru.html 

https://tamilthugal.blogspot.com/2024/12/ai-10_5.html 

https://tamilthugal.blogspot.com/2026/02/10th-tamil-puyalile-oru-thoni-virivanam.html 

https://tamilthugal.blogspot.com/2025/06/1_98.html 

https://tamilthugal.blogspot.com/2025/07/1.html 

https://tamilthugal.blogspot.com/2025/05/10-1-10_8.html 

https://tamilthugal.blogspot.com/2024/08/10th-tamil-important-notes-tnpsc-tet_7.html 

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்கள் அறிந்த இயற்கைச் சீற்றங்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

ஐம்பூதங்கள் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          கப்பித்தான், தொங்கான், அவுலியா மீன்கள் குறித்து விளக்குதல். புயலில் தோணி  பட்ட பாட்டை விவரித்தல். அடுக்குத்தொடர், ஒலிக்குறிப்புச் சொல், வருணனைகள் குறித்து விளக்குதல். மாணவர்களின் பயண அனுபவங்களைக் கேட்டல்.



மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

புயல் சீற்றங்கள் குறித்து அறிதல்.

15.மதிப்பீடு

எ.சி.வி –       புயலிலே ஒரு தோணி நூலின் ஆசிரியர் ...............

ந.சி.வி – புயலிலே ஒரு தோணி கதையைச் சுருக்கி எழுதுக.

உ.சி.வி – நீங்கள் எதிர்கொண்ட இயற்கை இடர் குறித்து எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

இயற்கை இடர் குறித்து இணையத்தில் கண்டு பாதுகாப்பு முறைகளை எழுதுக.

Sunday, June 07, 2026

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு காலக்கணிதம் ஜூன் 15

10th tamil model notes of lesson

lesson plan June 15

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

15-06-2026 முதல் 19-06-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

அமுத ஊற்று – கவிதைப்பேழை.

5.உட்பாடத்தலைப்பு

காலக்கணிதம்.

6.பக்கஎண்

8 - 9

7.கற்றல் விளைவுகள்

T-1001 தமிழ்  மொழியின் செழுமை குறித்து ஆற்றலுடன் தனித்தமிழில் உரையாற்றுதல், கவிதையைப் படித்துச் சுவைத்தல், பொருளுணர்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

தத்துவக் கருத்துகளைச் சொல்வதற்கு ஏற்ற மொழி தமிழ் என்பதைப் பாடல்கள் வழி உணர்ந்து சுவைத்தல்.

9.நுண்திறன்கள்

கவிஞன் பற்றி கண்ணதாசன் கூறும் தத்துவக் கருத்துகளைப் படித்து வெளிப்படுத்துதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2019/05/kaalakanitham-song.html 

https://tamilthugal.blogspot.com/2019/05/kalakanitham.html 

https://tamilthugal.blogspot.com/2019/10/blog-post.html 

https://tamilthugal.blogspot.com/2021/07/8-10th-tamil-online-test-kaalakanitham.html 

https://tamilthugal.blogspot.com/2023/10/10th-tamil-ppt-power-point-presentation_16.html 

https://tamilthugal.blogspot.com/2023/10/pdf_68.html 

https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_84.html 

11.ஆயத்தப்படுத்துதல்

          தத்துவம் குறித்துக் கேட்டல்.

12.அறிமுகம்

கவிஞர் கண்ணதாசனை அறிமுகம் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          கவிஞர்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். அறம் குறித்து மாணவர்கள் அறிதல். புதுக்கவிதை வடிவங்களை அறிதல். காலத்தை வென்ற கவிஞர்கள் குறித்து உணர்தல்.





மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

கண்ணதாசன்  குறித்து இணையம், ஊடகங்கள் வழியாக அறிந்து வகுப்பறையில் கூறச் செய்தல்.

15.மதிப்பீடு

எ.சி.வி –       கண்ணதாசனின் இயற்பெயர் ...............

ந.சி.வி – காலக்கணிதம் – குறிப்பு வரைக.

உ.சி.வி – காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

கவிதைகள் குறித்த தகவல்களைத் திரட்டுதல்.

Wednesday, June 03, 2026

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பாவாணர் பார்வையில் தமிழ்ச்சொல் வளம் ஜூன் 8

 10th tamil model notes of lesson

lesson plan June 8

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-06-2026 முதல் 12-06-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

அமுத ஊற்று – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

பாவாணர் பார்வையில் தமிழ்ச்சொல் வளம்

6.பக்கஎண்

4 - 7

7.கற்றல் விளைவுகள்

T-1002 மொழியிலுள்ள வகைப்படுத்தப்பட்ட சொல்வளங்களைச் சொற்களின் வாயிலாகப் பேச்சிலும் எழுத்திலும் இடமறிந்து கையாளுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

தமிழ் மொழியின் சிறப்பியல்புகளை அறிதல்.

9.நுண்திறன்கள்

தமிழ்ச் சொல் வளங்கள் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/10/1-1-10th-tamilcholvalam-one-word.html

https://tamilthugal.blogspot.com/2021/12/1-10th-tamil-online-test-with.html

https://tamilthugal.blogspot.com/2022/04/tamilchol-valam-tenth-tamil-nedu-vina-q.html

https://tamilthugal.blogspot.com/2020/01/blog-post_19.html

https://tamilthugal.blogspot.com/2021/03/thaavara-ilaikalin-peyarkal-tamilil.html

https://tamilthugal.blogspot.com/2021/03/thavara-adippakuthi-10th-tamilcholvalam.html

https://tamilthugal.blogspot.com/2020/05/6-poovin-paruvangal-sixth-tamil.html

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த இலையின் வகைளைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

பாவாணர் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

தமிழ்ச்சொல் வளத்தை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

தமிழ்ச்சொல் வளம் பாடத்தின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.          தமிழின் பெருமையை தொன்மையை அறியச் செய்தல்.

          அடிவகை, கிளைப்பிரிவுகள், காய்ந்த அடி, கிளை, இலை வகை, கொழுந்து வகை, பிஞ்சு, குலை, கெட்டுப்போன காய்கனி, பழத்தோல், மணி, இளம் பயிர் வகைகள் குறித்து விளக்குதல். தமிழ்ச்சொல் வளங்கள் குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல். பாவாணர் பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.



          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

அலைபேசி, செயலிகளின் தமிழ்ச்சொற்களை அறியச் செய்தல்.

          தமிழ்ச் சொற்களின் சிறப்புகளை அறிந்து வரல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       கிளைப்பெயர் வகைகளை எழுதுக.

          ந.சி.வி – ’புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’

இதுபோல் இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

உ.சி.வி –      நாட்டுவளமும் சொல்வளமும் தொர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

பிறதுறைகளின் தமிழ்ச் சொல் வளங்களைத் தொகுத்தல்.

தமிழ் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

Sunday, May 31, 2026

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு அன்னை மொழியே ஜூன் 4

 10th tamil model notes of lesson new june 2026

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

04-06-2026 முதல் 05-06-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

அமுத ஊற்று – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

அன்னை மொழியே

6.பக்கஎண்

2 - 3

7.கற்றல் விளைவுகள்

T-1001 தமிழ்  மொழியின் செழுமை குறித்து ஆற்றலுடன் தனித்தமிழில் உரையாற்றுதல், கவிதையைப் படித்துச் சுவைத்தல், பொருளுணர்தல்

8.கற்றல் நோக்கங்கள்

கவிதையில் அமைந்த சொற்களின் பொருளுணர்ந்து எழுதுதல்.

9.நுண்திறன்கள்

கவிதை வெளிப்படுத்தும் நயங்களைப்  பாராட்டிப் பேசுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2025/05/10-1-15.html

https://tamilthugal.blogspot.com/2025/05/10-1-65.html

https://tamilthugal.blogspot.com/2024/06/1_3.html

https://tamilthugal.blogspot.com/2024/06/1_98.html

https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post.html 

https://tamilthugal.blogspot.com/2019/07/blog-post_20.html 

https://tamilthugal.blogspot.com/2021/06/10th-tamil-online-test-annai-moliye-one.html 

https://tamilthugal.blogspot.com/2023/06/10th-tamil-ppt-power-point-presentation.html

https://tamilthugal.blogspot.com/2022/06/annai-moliye-tenth-tam.html

https://tamilthugal.blogspot.com/2023/06/10th-tamil-annai-moliye.html

https://tamilthugal.blogspot.com/2021/02/10th-tamil-annai-moliye-online-test.html

https://tamilthugal.blogspot.com/2021/01/annai-mozhiye-10th-tamil-mind-map.html

https://tamilthugal.blogspot.com/2019/06/blog-post_6.html

11.ஆயத்தப்படுத்துதல்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் பொருளைக் கூறச் செய்தல்.      

12.அறிமுகம்

மொழி வாழ்த்து பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          கனிச்சாறு நூலில் உள்ள அன்னை மொழியே பாடலைப் பொருளுடன் விளக்குதல். தமிழின் பெருமையை தொன்மையை அறியச் செய்தல்.

அன்னை மொழியே பாடலின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.

          மொழியின் சிறப்புகள் குறித்து மாணவர்களுடன் உரையாடுதல்.

          தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல். பெருஞ்சித்திரனார் பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.



          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          தமிழின் சிறப்புகள் குறித்துக் கூறுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       எந்தமிழ்நா என்பதைப் பிரித்தெழுதுக.

          ந.சி.வி – ’புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’

இதுபோல் இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

உ.சி.வி –      நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          எட்டுத் தொகை நூல்களின் பெயர்க்காரணங்களை அறிந்து வருதல்.

தமிழ் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

Sunday, February 22, 2026

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 2

10th tamil model notes of lesson

lesson plan March 2

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

02-03-2026 முதல் 06-03-2026

2.அலகு

1 - 7

3.பாடத்தலைப்பு

7 இயல்கள்

பொதுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/10-2025_27.html

https://tamilthugal.blogspot.com/2025/11/5_21.html

https://tamilthugal.blogspot.com/2025/11/4_20.html

https://tamilthugal.blogspot.com/2025/11/3_19.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2_18.html

https://tamilthugal.blogspot.com/2025/11/1.html

4.திருப்புதல் வினாக்கள்

விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.

அ)அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் 'வாழை இலை விருந்து விழாவை' ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. தமிழ்த்துகள்

ஆ) தமது முதல் படத்திலேயே புகழின் உச்சத்தைத் தொட்டார் சிவாஜிகணேசன்.

தமிழர்கள் வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?

இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக.

விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக. தமிழ்த்துகள்

குறிப்பு வரைக - அவையம்.

'வினை' -  என முடியும் திருக்குறளை எழுதுக.   தமிழ்த்துகள்

கலைச்சொல் தருக.       தமிழ்த்துகள்

அ) Screenplay -                         ஆ)Tempest -

அறியேன் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.         

எழுது என்றாள்’ என்பது விரைவு காரணமாக  ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத்தொடரானது. ‘சிரித்துப் பேசினார்’ என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்? தமிழ்த்துகள்

பழமொழிகளை நிறைவு செய்க.

அ) ஒரு பானை ...................................    ஆ) விருந்தும் .................................................

கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத முதல், கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

 உழவர்கள் மலையில் உழுதனர். தமிழ்த்துகள்

 முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர். தமிழ்த்துகள்

மரபுத் தொடருக்கான பொருள் அறிந்து தொடரில் அமைத்து எழுதுக.  

அ) கண்ணும் கருத்தும்               ஆ) அள்ளி இறைத்தல்

குறள்வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.     

வாய்மை பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கருத்துகளை எழுதுக.

புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’ தமிழ்த்துகள்

இதுபோல் இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க. தமிழ்த்துகள்

உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

'காற்றுள்ள போதே மின்சாரம் எடுத்துக் கொள்' என்னும் புது மொழிக்கு வித்தாகிறேன். புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளமான என்னைப் பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்கும்போது நிலக்கரியின் தேவை குறைந்து கனிம வளங்கள் பாதுகாக்கப்படக் காரணமாகிறேன். உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடம் பெற்றுள்ளது என்பதும் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்பதும் எனக்குப் பெருமையே.

அ) உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா பெறும் இடம் யாது?

ஆ) காற்றை அடிப்படையாகக் கொண்டு பிறந்துள்ள புது மொழியைக் கூறு. தமிழ்த்துகள்

இ) காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் பெறும் மாநிலம் எது?     

மருத நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலைநயத்துடன் எழுதுக.

வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக. தமிழ்த்துகள்

அ) "தென்னன் மகளே" -  எனத் தொடங்கும் அன்னை மொழியே பாடலை எழுதுக.    அல்லது

ஆ) அள்ளல் - எனத் தொடங்கும் முத்தொள்ளாயிரம் பாடலை எழுதுக.  தமிழ்த்துகள்

நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், “இலச்சுமி கூப்பிடுகிறாள், போய்ப் பார்” என்றார். ”இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய  குட்டியைத் தடவிக்கொடுத்து, ”என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன். என் தங்கை அங்கே வந்தாள். அவளிடம் ”நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன். அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.

இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக. தமிழ்த்துகள்

"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்" -   இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.    

"தேவர் அனையர் கயவர் அவரும் தாம் தமிழ்த்துகள்

மேவன செய்தொழுகலான்" - இக்குறளில் வஞ்சப்புகழ்ச்சி அணி இடம் பெற்றுள்ளதை விளக்குக.

Sunday, February 15, 2026

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பிப்ரவரி 23

 10th tamil model notes of lesson

lesson plan February 23

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

23-02-2026 முதல் 27-02-2026

2.அலகு

1 - 7

3.பாடத்தலைப்பு

7 இயல்கள்

பொதுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/10-2025_27.html

https://tamilthugal.blogspot.com/2025/11/5_21.html

https://tamilthugal.blogspot.com/2025/11/4_20.html

https://tamilthugal.blogspot.com/2025/11/3_19.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2_18.html

https://tamilthugal.blogspot.com/2025/11/1.html

4.திருப்புதல் வினாக்கள்

1. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் ..............               தமிழ்த்துகள்

அ.முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்                ஆ.குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

இ.குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்              ஈ.மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

2.”மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ” இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறி.

அ.கருமை                        ஆ.பச்சை                         இ.பழுப்பு                 ஈ.நீலம்

3. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது - இத்தொடருக்கான வினா எது?

அ) தூக்கு மேடை நாடகத்தில் நடித்தவர் யார்?

ஆ) கலைஞர் என்ற சிறப்புப் பெயர் எப்போது வழங்கப்பட்டது?

இ) தூக்கு மேடை என்பது திரைப்படமா? நாடகமா?

ஈ) யாருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது?

4. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது -

அ.குலைப்பெயர் வகை                                    ஆ.மணிப்பெயர் வகை                 

இ.கிளைப்பெயர் வகை                                     ஈ.இலைப்பெயர் வகை

5 சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

6. பலகை என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

7. கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

 உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது”.

பாடல் அடிகளில் உள்ள மோனை, எதுகைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

8. இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக.

9. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக; தொடரில் அமைக்க.

10. ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழி நின்று விளக்குக.

11, நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழி நின்று விளக்குக.  

12. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

13. 'இன்மையிலும் விருந்தோம்பல்' குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.

படிப்போம் பயன்படுத்துவோம்.      

14. Storyteller                                                 

15. Screenplay                   

16. வெய்யோனொளி... எனத் தொடங்கும் கம்பராமாயண மனப்பாடப்பாடலை எழுதுக.

தமிழ்த்துகள்

Blog Archive