தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Showing posts with label TAMIL தமிழ் மேற்கோள்கள். Show all posts
Showing posts with label TAMIL தமிழ் மேற்கோள்கள். Show all posts
Tuesday, August 11, 2026
Saturday, July 11, 2026
எளிய தலைவர் காமராஜர் தமிழ்க் கவிதை Eliya Thalaivar Kamarajar Kavithai karma veerar kamaraj lyric
Eliya Thalaivar Kamarajar Kavithai karma veerar kamaraj lyric
Wednesday, February 05, 2025
Tamil motivational quotes தமிழ் மேற்கோள்கள் 1
மேற்கோள்கள்
தமிழ்ப் பொன்மொழிகள்
பொன்மொழி
சிந்தனைத் துளி
சிந்தனைத்துளிகள்
Successful student
1. கடிகாரத்தைப் பார்க்காதே. அது செய்வதை நீயும் செய் (Do not watch the clock. Do what it does. Keep going) : சோர்ந்து ஓரிடத்தில் உட்கார்ந்து விடாமல் இலக்கை நோக்கி ஓடிக் கொண்டே இரு.
2. அறிவே பலம் (Knowledge is Power): கல்வி, உனக்குள் இருக்கும் திறமையை வெளிக் கொணர உதவும் மாபெரும் சக்தி.
3. வெற்றியாளர்கள் வெளியேறுவதில்லை; வெளியேறுபவர்கள் வெற்றியடைவதில்லை (Winners never quit and quitters never win): வெற்றி அடைய விடா முயற்சி தேவை. விட்டு ஓடினால் வெற்றி கிட்டாது.
4. கல்விக்காக செய்யும் முதலீடு சிறந்த வட்டியைப் பெற்றுத் தரும் (An investment in knowledge pays the best interest): கல்வி எனும் முதலீடு வாழ்க்கையில் நிச்சயமாக சிறந்த பலனைப் பெற்றுத் தரும்.
5. சந்தர்ப்பங்கள் தானா வருவதில்லை, நாமே உருவாக்குவது (Opportunities don't happen, you create them): முன் கூட்டியே செயல்பட்டு சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்.
6. சந்தேகம் கனவுகளைக் கொல்வது போல் தோல்வி கொல்வதில்லை (Doubts kill more dreams than failure ever will): இலக்கை அடைய தன்னம்பிக்கையே ஆதாரம். தோல்விகளை விட சந்தேகங்கள் கொடியவை.
7. சத்தமின்றி கடின உழைப்பைக் கொடு, வெற்றி ஆர்ப்பரிக்கட்டும் (Work hard in silence, let success make noise): நீ அமைதியாய் இரு. உன் சாதனைகள் பேசட்டும்.
8. ரோம் நகரம் ஒரே நாளில் கட்டி முடிக்கப்படவில்லை (Rome was not built in a day): பெரிய சாதனைகளை அடைய அதிக நேரமும் பொறுமையும் தேவை.
9. அமைதியான கடல் திறமையான மாலுமியை உருவாக்க உதவாது (A smooth sea never made a skilled sailor): கஷ்டமான சூழ்நிலைகள் நமக்கு விலை மதிப்புள்ள திறமைகளையும் சோதனைகளைக் கடந்து மீண்டு வரவும் கற்றுத் தருகின்றன.
10. சேமிப்பு இல்லாத குடும்பம் கூரை இல்லாத வீட்டுக்குச் சமம்.
11.பக்திக்கும் மரியாதைக்கும் உரிய இடம் கோவில் மட்டுமல்ல. நாம் பணிபுரியும் இடமும் தான்.
12.சேமிக்கக் கற்றுக் கொள், சிக்கனம் தானாக அமையும்.
13.சொல்லில் நிதானம் சுகத்தைக் கொடுக்கும்.
14.உண்மையான அன்பை வாய்ச்சொல் வெளிப்படுத்தாது , சேவைதான் வெளிப்படுத்தும்.
15.தடைகளைத் தாண்டி செல்லுவது தான் சிறந்த வெற்றியாகும்.
16.நன்மையை பலர் விரும்புவர், உண்மையை சிலரே விரும்புவர்.
17.நம்பிக்கையும் உழைப்பும் உடையவன், எதையும் எளிதில் முடிக்க வல்லவன்.
18.ஆசையை விட்டவனுக்கு அதிகாரத்தில் நாட்டம் இருக்காது.
19.உனக்கு நீயே நீதிபதியாக இரு.
20. சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை.
21.பட்டமரம் தழைக்க, பாலைவனம் பசுமை ஊற்றாக அன்பு தேவை.
22.வலிமை உண்டாவது உடல் பலத்தால் அல்ல, மனஉறுதியால்.
23.எதையும் எதிர்பார்க்காதவனுக்கு ஏமாற்றம் இல்லை.
24.சீக்கிரம் வருவதெல்லாம் சீக்கிரம் போகும்.
25.
Saturday, June 03, 2023
தமிழ்ப் பொன் மொழிகள் & சிறந்த வரிகள் TAMIL PON MOLIGAL & Best Lines in tamil part 2
26.கம்பீரமாக அவன்
உட்கார்ந்து கொண்டிருந்தான்.
எல்லோரிடமும்
கை நீட்டிச் சென்றது
யானை.
-எஸ்.நடராஜன்
27.வாழ்க்கையின் முற்பகுதி இரண்டாம் பகுதியை விரும்புவதில் கழிகின்றது.
இரண்டாம் பகுதி
முதற் பகுதிக்காக வருந்துவதில் கழிகின்றது...!!
-ரமேஷ்
28.நம்பிக்கையைத் தன்னுள்
தேட முயலாமல்,
வெளியில் தேடுவதுதான்
பலர் செய்யும்
மிகப்பெரிய தவறு
-ஆர்தர் மில்லர்
29.தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டவர்களை விட,
கற்றதைக் கொண்டு தவறு செய்தவர்களே அதிகம்.
30.வாழ்க்கையை
சிலர் மட்டுமே வாழ்கிறார்கள்.
பலர் அதை
நகர்த்துகிறார்கள்.
-இறையன்பு
31.வண்ணத்துப் பூச்சிகளைத்
துரத்திப் பிடிப்பதில்
நேரத்தை வீணடிக்காதீர்கள்...
*தோட்டத்தை சீராக*
*பராமரியுங்கள்,*
வண்ணத்துப்பூச்சிகள் தானாக வந்து சேரும்.
- *மரியோ குவிண்டனா*
32.அசிங்கப்பட்ட பின்பு காட்டப்படும் அன்பானது பகலில் ஏற்றப்படும் விளக்கிற்கு சமம்.
இருந்தும் பயனில்லை
எரிந்தும் பயனில்லை...!!
~ யாசகன் ~
33.தன்னுடைய தைரியம்,
சுயமரியாதை, தன்னம்பிக்கையை
இழக்காமல் இருப்பவனுக்குத்
*தோல்வி என்ற ஒன்று*
இருக்க முடியாது.
-ஓரிசன் ஸ்வெட்
34.கையசைத்துக் கூப்பிட
மரங்கள் இல்லாததால்
வராமல் போனது மழை!
35.தூண்டிலில் சிக்கிய மீனுக்கு உயிர் பிரிவதை விட கடலைப் பிரிவது தான் அதிகமாய் வலித்திருக்கும்.
-சுபா
36.ஒரு கனத்த மௌனத்தில்
கையசைத்து விடைதரும் போது
ஒரே ஆறுதல்
கை விரல்களுக்கு
கண் இல்லாமல் போனது தான்
-பாலாஜி
37.முட்டையிடாமல்
கொக்கரிக்கும் கோழிகள் -
விமர்சகர்கள்.
38.கொடியில் காயும்
குழந்தையின் துணிகளை
வெயில் படாமல்
சிரத்தையுடனே
பார்த்துக்கொள்கிறது
அருகில் காயும்
அம்மாவின் புடவை.
- ராமதுரை ஜெயராமன் ~
39.யார் மீதும் ஏறாமலிருக்க
எலுமிச்சைப் பழத்தின்
மீது ஏறிச்சென்றது லாரி
40.மல்லீப்பூ மொளம் பத்து ருவா’
சிறுகையால் சரமளந்து
கொஞ்சம் கொசுறும் விட்டுக் காண்பித்த
பூக்காரக் குழந்தையிடம் சொன்னார்:
‘இந்த முழத்துக்கா பத்து ரூபாய்?’
சரத்தை வாங்கி
நெடுங்கையால் துல்லியமாக அளந்து காட்டி
முறித்து வாங்கினார்,
நெடிய முழத்துக்கும் சின்ன முழத்துக்கும்
இடையிலான துண்டுச்சரத்தில்மட்டும்
மல்லிகைகள்
வாடியிருந்தன சோகம் தாளாமல்.
-சுகுமாரன்
41.எறும்புகளின் மீதான வன்முறைக்கு
பெரிதாக என்ன காரணம்
இருந்துவிடப்போகிறது...
அவை எளிது என்பதன்றி.
42."இல்லை" என்று சொன்ன அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்களால், நானே அதைச் செய்தேன்.
43.எனது வெற்றிகள் மூலம் என்னை யாரும் மதிப்பிடாதீர்கள் , நான் எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதை வைத்து மதிப்பிடுங்கள்
- நெல்சன் மண்டேலா
44.ஒரு தவறான புரிதலுக்கு விநாடிப் பொழுது போதும்.
விளக்கம் பெற / தர
ஒரு யுகம் தேவைப்படுகிறது.
-ஈரோடு கதிர்
45.வாங்குவது குழந்தை
என்றால்
முதல் விற்பனையின்
கைராசிகளை பார்ப்பதில்லை
கடைக்காரர்கள்!
46.காகம் கரைந்தது விருந்தாளிகள் வருகை என்று...
சேவல் பதறியது விருந்தாகப்போகிறோம் என்று...
47.உனக்கு தேவைப்படாத
எனது பிரியங்களை
இலைகளைப் போல
உதிர்த்துப் போட்டேன்
அள்ளவியலாத சருகுகளால்
அடைந்து கிடக்கிறது என் வனம்
-ரோஸ்லின்
48.தாமதமாக வருவோர்களை நனைப்பதெற்கென்றே மழையை சேமித்து வைக்கின்றன மரக்கிளைகள்!!"-பாமரன்
49.உறங்கும் குழந்தைக்கு
அப்பா தரும் முத்தம்
அழகானது
உறங்கியபடியே
குழந்தைக் கேட்கும்
அடுத்த முத்தம்
அற்புதமானது
-ராஜா சந்திரசேகர்
50.வெற்றியடையச் சிறந்த வழி... 'மற்றவர்கள் பார்வையில்' முட்டாளாகத் தெரிய வேண்டும், ஆனால் உண்மையில் புத்திசாலியாக இருக்கவேண்டும்
தமிழ்ப் பொன் மொழிகள் & சிறந்த வரிகள் TAMIL PON MOLIGAL & Best Lines in tamil part 3
51.வீழ்ந்துவிட்டான், இனி எழ மாட்டான் என்ற எண்ணத்தை எதிரிக்குக் கொடுத்துவிடாதே..
இவன் எழுந்தா மிரட்டலாக வருவான் என்ற பயத்தை எதிரிக்குக் கொடு.
52. போன நிமிடத்தை
விலைக்கு வாங்கி
அனுபவிக்கும்
அளவுக்கு
உலகில் யாரும்
பணக்காரர்கள் கிடையாது.
- *ஆஸ்கார் வைல்ட்* -
Monday, February 06, 2023
தமிழ்ப் பொன் மொழிகள் & சிறந்த வரிகள் TAMIL PON MOLIGAL & Best Lines in tamil part 1
1."அழகான நாட்கள் உங்களைத் தேடி வருவதில்லை. நீங்கள்தான் அவற்றை நோக்கி நகர வேண்டும்!" - ரூமி
2.பொருட்களை பயன்படுத்துங்கள்
நேசிக்காதீர்கள்....
மனிதனை நேசியுங்கள்
பயன்படுத்தாதீர்கள்.
3.பருக்கையோடு சேர்த்து
கனவையும் ஊட்டுகிறார்கள்.
எதை,மென்று விழுங்குவதென திணறுகிறார்கள் குழந்தைகள்...:-
4._*☘️முடியாதென்று வாதம் செய்பவனிடம் முகம் கொடுத்து பேசாதே.*_
_*☘️உன்னையும் சோம்பேறிக்குச் சொந்தக்காரனாக்கி விடுவார்கள்...!*_
_*☘️நடக்காதெனப் பேசுபவர்களிடம் நட்பு வைக்காதே வேதனைக் கடலுக்குள் வீழவைத்து விடுவர்...!*_
_*☘️ஆகாதெனச் சொல்பவர்களின் நிழலையும் கூட மிதிக்காதே தோல்விக்கு உன்னையும் தோழனாக்கி விடுவர்...!*_
_*☘️இயலாதெனப் பேசுபவர்களிடம் நீ எதையும் பேசாதே உன்னிடம் இருக்கும் நம்பிக்கையை நொறுக்கிப் போட்டுவிடுவர்..!*_
_*☘️வெற்றி என்பது வேறெதிலுமில்லை.. உன் உழைப்பிலும் ஓயாத முயற்சியிலும் தான் உள்ளது...!!!*
5.கேள்வி கேட்கப் பயப்படுகிறவர்கள்
எதையுமே
தெரிந்து கொள்ள முடியாது.
6.விக்கல் எடுத்ததும் மகன்தான் நினைக்கிறான் என எண்ணி மகிழ்கிறாள் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய்.
7.அன்பு மகனே!
எனக்கு எழுதும் கடிதத்தை இனி
பசை தடவி ஒட்டாதே !
உன் வீட்டுச் சோற்றுப் பருக்கையால் ஒட்டி அனுப்பு !
தாயைப் பட்டினி போட்டான் என்ற பழி வராமல் இருக்கட்டும்!
- ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து அபாக்கியவதி தாய்
8.கொடுக்கும் பொருளை விட
கொடுப்பவரின் அன்பே பெரிது.
9.பழகுபவர்கள் தந்துவிட்டு போகும் பரிசு
சிலசமயம் வலியாகவும் இருக்கலாம்..!
ஆனால்
அதுவே உங்கள் வாழ்வில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் வழியாகவும் இருக்கலாம் வருந்தாதீர்கள்...!
10.ஆறுதல் கூட
சொல்லத் தெரியாது
ஆனாலும் நிறைய
கவலைகளை மறக்கச்
செய்கின்றன குழந்தைகள்...!
11.தண்ணீரைப் போல இருங்கள்...
தண்ணீர் அமைதியாகும் போது தூசிகள் தானாகவே அடியில் அடங்கி விடும்..
பிரச்சனைகள் வரும்போது அமைதியாய் இருங்கள்...
தானாகவே அடங்கிவிடும்...
12.வேட்டையின் நுட்பம் அதன் இலக்கில் இல்லை. அதற்கான காத்திருத்தலில் தான் இருக்கிறது
-எஸ்.ரா
13.உண்மையில் கண்ணீரை விட உயர்வானது வியர்வை!
அதனால்தான் அழுவதைப்போல் நடிக்க முடிகிறது
வியர்ப்பதைப் போல்
நடிக்க முடியவில்லை
-நெல்லை ஜெயந்தா
14.எப்பறவையும்
தட்டுப்படாத பொழுதில்
வானம் எனக்கொரு
பாழ்கிணறு
-நர்சிம்
15.தங்களைப் பிடிக்கத்தான் வருகிறார்களோ என்று எண்ணிக் காகங்கள் எப்போதும் பறக்கின்றன.. பிடித்துக்கறி சமைப்பவர்கள் கால்களைச் சுற்றியே கோழிகள் வலம் வருகின்றன... நம்பிக்கெடுவதும் நம்பிக்கையின்மையால் வாழ்வதும் எப்போதும் தொடர்கின்றன.
- *இறையன்பு* -
16.யாரென்று தெரியாமலும்
கையசைத்து
வழியனுப்புகின்றன குழந்தைகள்
எல்லாம் தெரிந்து
இறுக்கமாக அமர்ந்திருக்கின்றனர்
சக பயணிகள்
அன்பைப் பகிர்ந்துகொள்ள
குழந்தைகளுக்கு மட்டும்தான்
காரணங்கள் தேவைப்படுவதில்லை
-ஜானகிராமன்
17.வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைத் தாண்டி ஒரு மனிதன் ஓட வேண்டும். அப்போதுதான் அவன் தன் தொழிலில் நிலைக்க முடியும்
-வின்சென்ட்
18.பக்கத்தில், மரத்தை திடீரென வெட்டிவிட்டார்கள். வெளிச்சத்தை விடவும் வெறுமையே அதிகமாய் இருக்கிறது.
-நர்சிம்
19.கூப்பிட முடியாது என்று தெரிந்தும் கூப்பிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதானே அவஸ்தை.
-வண்ணதாசன்.
20.தற்காலத்தினர்க்கு எல்லாவற்றின் விலையும் தெரிகிறது, ஆனால் எதன் மதிப்பும் தெரியவில்லை!
- ஆஸ்கார் வைல்ட்.
21.விருப்பப்பட்டா
அவன் பிச்சைப்பாத்திரம்
ஏந்தி நிற்கின்றான்.
வெறுப்புடனாவது
சில காசுகள் போடேன்.
உன் பணப்பையின்
பாரமாவது கொஞ்சம்
குறையுமே.
அ.சீனிவாசன்
22.தொழில் நுட்பங்கள் நேரத்தை மிச்சப்படுத்தியிருக்கிறது.. ஆனால் மிச்சப்படுத்திய நேரங்களை அவையே ஆக்கிரமித்தும் உள்ளது
23.ஏழாவது முறையாக
நாள் குறித்தும்
இறந்து போகவில்லை பாட்டி
ஊர் திரும்புகிறார்கள் எல்லோரும்
கொண்டு வந்த கண்ணீருடன்
-ராஜா சந்திரசேகர்
24.ஏதொன்றிலும் தீவிரம் புரியாமல் சிரித்து வைக்க ஆண்களாலும், நகைச்சுவை புரியாமல் அழுது விட பெண்களாலும் முடிகிறது.
-செளம்யா
25.அழுவதற்கான காரணத்தை சொல்லத் தெரியாத வயதில்
சத்தமாகவும்..
தெரிந்த வயதில்
மனதிற்குள் மௌனமாகவும்
அழுது கொள்கிறோம்..!!
-யாசகன்
Subscribe to:
Posts (Atom)
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson lesson plan October 5 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2...
-
9th tamil model notes of lesson lesson plan October 5 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 ...
-
பதிவிறக்கு/DOWNLOAD Tenth tamil quarterly exam question paper pdf virudhunagar district 2025
-
8th tamil model notes of lesson lesson plan October 5 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2....
-
6th tamil model notes of lesson lesson plan October 5 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2....
-
Tenth Tamil Quarterly Exam Question Paper Model 1 sslc September 2025 virudhunagar district பதிவிறக்கு/DOWNLOAD
-
7th tamil model notes of lesson lesson plan October 5 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2.பர...
-
10th tamil model notes of lesson lesson plan september 7 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 07-09-2026 முதல் 11-09-2026 ...
-
sslc tamil Quarterly exam question 10th important questions Pdf DOWNLOAD LINK
-
9th Tamil Quarterly Exam Question Paper Model 1 September 2025 virudhunagar district பதிவிறக்கு/DOWNLOAD
