கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Showing posts with label புத்தாக்கப்பயிற்சி வகுப்பு 8. Show all posts
Showing posts with label புத்தாக்கப்பயிற்சி வகுப்பு 8. Show all posts

Monday, December 06, 2021

தமிழ் எட்டாம் வகுப்பு - புத்தாக்கப் பயிற்சி வினாக்கள் 8th tamil refresher course questions

தமிழ் எட்டாம் வகுப்பு - புத்தாக்கப் பயிற்சி வினாக்கள் 8th tamil refresher course questions
1. தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை

2. உயிர்க்குறில் எழுத்துகள்

3. ஆய்த எழுத்து இடம்பெற்றுள்ள சொல்

4. இருவழிச் சொல் எது?

5. கீழ்க்காண்பனவற்றுள் அகர வரிசை சொற்கள்

6. ஓர் எழுத்தோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளோ சேர்ந்து நின்று பொருள் தருவது

7. கலகல என்பது

8. மரக்கிளை சடசட என முறிந்தது. இத்தொடரில் உள்ள இரட்டைக் கிளவி

9. கீழ் உள்ளவற்றுள் அடுக்குத் தொடர் எது?

10. பால் எத்தனை வகைப்படும்?

11. உயர் திணைக்கு எடுத்துக்காட்டு

12. தன்னைக் குறிப்பது------- ஆகும்.

13. காலம் ------- வகைப்படும்.

14. ஒன்றிற்கும் மேற்பட்ட பொருள்களைக் குறிப்பது

15. வினாப்பொருளில் வருவது வினாச்சொல்

16. தொழிலைக் குறிக்கும் சொல்

17. செங்கண்ணன் செய்தித்தாள் படித்தான். இத்தொடரில் உள்ள வினைச்சொல்

18. சொற்கள் தொடர்ந்து நின்று பொருள் தருவது

19. எழுவாய் செய்யும் செயலைக் குறிப்பது பயனிலை ஆகும்.

20. இரவு என்பதன் எதிர்ச்சொல்

Friday, November 26, 2021

மரக்கன்றுகள் வேண்டி வனக்காவலருக்கு விண்ணப்பம் 8ஆம் வகுப்பு கடிதம் 8th TAMIL LETTER TO FOREST OFFICER

மரக்கன்றுகள் வேண்டி வனக்காவலருக்கு விண்ணப்பம் 8ஆம் வகுப்பு கடிதம் 8th TAMIL LETTER TO FOREST OFFICER

 பதிவிறக்கு/DOWNLOAD

புத்தகங்கள் வேண்டிப் பதிப்பகத்தாருக்குக் கடிதம் LETTER TO THE PUBLISHERS FOR GETTING BOOKS PDF 8TH STD

 பதிவிறக்கு/DOWNLOAD

Sunday, November 14, 2021

எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப்பயிற்சி 10,11,12 விடைக்குறிப்பு 8th Tamil Answer Refresher Course

எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 10,11,12 Eighth Tamil refresher course answer key pdf 8th

 பதிவிறக்கு/DOWNLOAD

எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப்பயிற்சி 7,8,9 விடைக்குறிப்பு 8th Tamil Answer Key Refresher Course

எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 7,8,9 Eighth Tamil refresher course answer key pdf 8th

 பதிவிறக்கு/DOWNLOAD

Wednesday, November 10, 2021

எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 18.சொந்தக் கருத்தை எழுதுதல் Eighth Tamil refresher course answer key 8th

 

மதிப்பீட்டுச் செயல்பாடு

கீழக்காணும் துணைப்பாடப் பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

இந்திய வனமகன் (நேர்காணல்) 

கட்டெறும்புகளா ? அவை கடித்தால் உடம்பில் கடுமையான எரிச்சல் ஏற்படுமே ? ஆமாம். ஆனால் என்ன செய்வது? மண்ணின் தன்மையை மாற்ற வேண்டுமே .அதற்காக நாள் தோறும் நூற்றுக்கணக்கான எறும்புகளைக் கொண்டுவந்து இங்கு விட ஆரம்பித்தேன் . கட்டெறும்புகள் ஊர்ந்து செல்லச்செல்ல மண்ணின் தன்மை சிறிது சிறிதாக மாறத் தொடங்கியது. காடுகளில் ஆங்காங்கே பச்சைப் பசும்புற்கள் தலைகாட்டத் தொடங்கின. அப்பொழுது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . அதன்பின்பு நான் நட்ட மரங்கள் அனைத்தும் வளர்ந்தன. இவ்வளவு மரங்களை வளர்ப்பதற்கு விதைகளும் உரமும் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன? கால்நடைகளை வளர்ப்பதுதான் என்னுடைய வேலை. அவற்றின் சாணத்தை ஒரு துளிகூட வீணாக்காமல் இயற்கை உரம் தயாரிக்கத் தொடங்கினேன் . ஒரு பழம் சாப்பிட்டால் கூட அதன் கொட்டையை வீசி எறியாமல் விதையாகச் சேர்த்து வைப்பேன் .பிறகு மழைக்காலம் தொடங்குவதற்குமுன் விதைகளை எடுத்து இத்தீவில் தூவத் தொடங்கிவிடுவேன் . இப்படி ஒவ்வோர் ஆண்டும் நான் தூவிய விதைகள்தாம் இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இக்காடு. மழை இல்லாத காலங்களில் செடிக்கு எப்படித் தண்ணீர் ஊற்றினீர்கள்? ஆற்றின் கரையோரம் இருந்த செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதில் எனக்குச் சிக்கல் ஏற்படவில்லை . ஆனால் தொலைவில் இருந்த செடிகளுக்கு நீர் ஊற்றுவது சற்றுக் கடினமான செயலாக இருந்தது. அதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தேன் . செடியைச்சுற்றி மூங்கில் குச்சிகளை நட்டுவைத்து அதில் ஒரு பானையைப் பொருத்தினேன் . அதில் ஒரு சிறுதுளை இட்டு, நீர் சொட்டுச் சொட்டாக வடிவதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன் . பிறகு அதில் நீர் நிரப்பினால் ஒரு வாரத்திற்குச் சிக்கல் இருக்காது. இப்படித்தான் மற்ற செடிகளை வளர்த்து வந்தேன் .

வினாக்கள்

1. செடிகள், மரங்கள் அதிகம் வளர என்ன செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

நீர் ஊற்ற வேண்டும், மனிதர்கள், விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

2. மழையற்ற கோடைக்காலத்தில் தாவரங்களைப் பாதுகாக்க ஏற்ற வழிகளை எழுதுக.

சொட்டுநீர்ப் பாசன வசதி செய்ய வேண்டும். 

3. காடுகளால் நன்மை அடைவது மனிதர்களா? வன உயிரினங்களா? – இது சார்ந்து உங்கள் கருத்துகளை எழுதுக.

காடுகளால் நன்மை அடைவது மனிதர்களும்தான் வன உயிரினங்களும்தான்.

வன உயிரினங்களுக்குக் காடுகளே உறைவிடங்கள்.

காடுகளால் மனிதர்களுக்குப் பலவித மூலிகைகள், மரங்கள், தேன், மழை, மண்ணரிப்பைத் தடுத்தல், வன உயிரினங்கள் ஊருக்குள் வராமை போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.


எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 17.விளம்பரம் அளித்து வினாக்களை வினவுதல் Eighth Tamil refresher course answer key 8th

 

மதிப்பீட்டுச் செயல்பாடு


வினாக்கள்

1. கையுறைகள் அடங்கிய பெட்டி 4 வாங்கினால் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?

அ) 150 ஆ) 200 இ) 250 ஈ) 300

ஆ) 200 

2. விளம்பரத்தில் உள்ள மூலிகைப் பொருள்களில் பொருந்தாதது எது?

அ) ஆடாதொடை ஆ) அமுக்கரா சூரணம்

இ) சிறியாநங்கை ஈ) மாதுளை மணப்பாகு

இ) சிறியாநங்கை

3. சிறுதானியங்களில் பொருத்தமான இணை எது?

அ) சோளம் - சம்பா ஆ) கருப்பு கவுனி - சாமை

இ) வரகு – சாமை ஈ) மூங்கில் அரிசி - குதிரை வாலி

இ) வரகு – சாமை

4. சிறுதானிய இணையைத் தேர்ந்தெடு.

அ) மூங்கில் அரிசி ஆ) தினை

இ) மாப்பிள்ளை சம்பா ஈ) கருப்பு கவுனி

ஆ) தினை

5. எந்தப் பொருள் வாங்கினால் ‘சித்தர்களின் மூலிகை வைத்தியம்' என்னும் நூல் கிடைக்கும்?

அ) அரிசிவகைகள் ஆ) சிறுதானியங்கள்

இ) பழவகைகள் ஈ) மூலிகைப் பொடிகள்

ஈ) மூலிகைப் பொடிகள்

6. விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள முழக்கத் தொடர்களை எழுதுக.

இயற்கையை நேசி

இதமாய் சுவாசி


எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 16.படித்துப் பொருளுணர்தல் Eighth Tamil refresher course answer key 8th

 

மதிப்பீட்டுச் செயல்பாடு

கீழ்க்காணும் பத்தியைப் படித்துப் பொருளுணர்ந்து விடையளிக்க .

சென்னையின் அடையாளம்

மே தின நினைவாகவும், உழைப்பைப் போற்றும் விதத்திலும் சென்னை , மெரீனாக் கடற்கரையில் நினைவுச்சிலை எழுப்பப்பட்டது. இது, உழைப்பாளர் சிலை என அழைக்கப்படுகிறது. இது சென்னையின் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத் தலைவர் சிங்காரவேலர் , தொழிலாளர் பெற்ற உரிமையை நினைவுகூறும் வகையில், சென்னை , மெரீனாக் கடற்கரையில், 1923இல் பொதுக்கூட்டம் நடத்தினார் . இதுவே , மே தினத்தையொட்டி இந்தியாவில் நடந்த முதல் கூட்டமாக மதிக்கப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வின் நினைவாக, தமிழக முதல்வராக இருந்த காமராஜர், தன் ஆட்சிக் காலத்தில் ஒரு சிலை எழுப்ப உத்தரவிட்டார் . கடினமான உழைப்பில், நான்கு தொழிலாளர்கள் ஈடுபட்டிருப்பது போல் அச்சிலை உருவாக்கப்பட்டது. சென்னை , அரசு கவின்கலைக் கல்லூரி முதல்வராக இருந்த தேவி பிரசாத்ராய் சவுத்திரி அதை வடிவமைத்தார் . கவின்கலைக் கல்லூரியில் அப்போதைய காவலாளி ஸ்ரீனிவாசன் மற்றும் மாணவர் ராமு ஆகியோர் சிலைக்கான மாடலாக இருந்தனர். இச்சிலை, கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை, சென்னை மாகாணத்தின் அப்போதைய ஆளுநர் பீஷ்னுராம் மேதி, ஜனவரி 25, 1959இல் திறந்து வைத்தார் .

வினாக்கள்

1. உழைப்பாளர் சிலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

உழைப்பாளர் சிலை சென்னை , மெரீனாக் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.

2. உழைப்பாளர் சிலை எந்த நிகழ்வின் நினைவாக எழுப்பப்பட்டது?

தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத் தலைவர் சிங்காரவேலர் , தொழிலாளர் பெற்ற உரிமையை நினைவுகூறும் வகையில், சென்னை , மெரீனாக் கடற்கரையில், 1923இல் பொதுக்கூட்டம் நடத்தினார் . அதன் நினைவாக உழைப்பாளர் சிலை எழுப்பப்பட்டது.

3. இந்தியாவின் முதல் மே தினக் கூட்டம் யாரால் நடத்தப்பட்டது?

பொதுவுடைமை இயக்கத் தலைவர் சிங்காரவேலரால் நடத்தப்பட்டது.

4. உழைப்பாளர் சிலைக்கு மாதிரிகளாக இடம் பெற்றவர்கள் யாவர்?

கவின்கலைக் கல்லூரியில் அப்போதைய காவலாளி ஸ்ரீனிவாசன் மற்றும் மாணவர் ராமு ஆகியோர் சிலைக்கான மாடலாக இருந்தனர்.

5. உழைப்பாளர் சிலை எழுப்ப உத்தரவிட்டவர் யார் ?

தமிழக முதல்வராக இருந்த காமராஜர், தன் ஆட்சிக் காலத்தில் உழைப்பாளர் சிலை எழுப்ப உத்தரவிட்டார் .

தமிழ்த்துகள்

Blog Archive