கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Showing posts with label பயிற்சிப்புத்தக விடைகள்வகுப்பு 6-9. Show all posts
Showing posts with label பயிற்சிப்புத்தக விடைகள்வகுப்பு 6-9. Show all posts

Sunday, October 10, 2021

எட்டாம் வகுப்பு தமிழ் வினாடிவினா 18 விடைக்குறிப்பு 8th TAMIL QUIZ ANSWER KEY

 1.பள்ளி சென்றான் – மறைந்துள்ள வேற்றுமை உருபு

விடை – கு

2.நண்பா படி – என்ற விளித்தொடருக்கு இணையான தொடர்

விடை – கண்ணா எடு.

3.தொடர்.

விடை – சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது தொடர்.

எடுத்துக்காட்டு        பால் பருகினான்.

4.கோடிட்ட இடத்தை நிரப்புக.

விடை –  சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவது உம்மைத்தொகை எனப்படும்.

5.சரியா, தவறா.

விடை – காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை எனப்படும் – சரி

6.பாம்பு பாம்பு பாம்பு

விடை – அடுக்குத்தொடர்.

7.எவ்வகைத்தொகை என எழுதுக.

விடை – அ.பொற்றொடி – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை

ஆ.பொற்றொடி வந்தாள் - அன்மொழித்தொகை

8.கயல்விழி – இத்தொகைச்சொல்லை விரித்தெழுதுக.

விடை – கயல் போன்ற விழி

9.பொறுமை என்பது சாலச் சிறந்த நற்பண்பு – இவ்வரியில் இடம்பெற்றுள்ள உரிச்சொல்.

விடை – சால

10.விடையளி

விடை –

அ.உவமைத்தொகைச்சொற்கள்- தேன்மொழி,வெண்பஞ்சு மலர்கள்

ஆ.வினைத்தொகைச்சொற்கள்- படர்கொடி, ஊறுகாய்.

இ.உம்மைத்தொகைச்சொற்கள்- நிலவுவானம், வெற்றிலைப்பாக்கு.

ஈ.தொடுத்த மாலை – பெயரெச்சத்தொடர்.

உ.வெண்பஞ்சு – பண்புத்தொகை, வெண்மை என்ற பண்பு பஞ்சு என்ற பெயர்ச்சொல்லைத் தழுவி ஆன என்ற உருபு மறைந்துள்ளது.

எட்டாம் வகுப்பு தமிழ் வினாடிவினா 17 விடைக்குறிப்பு 8th TAMIL QUIZ ANSWER KEY

 1.மத்தளம், திமிலை – வேறுபாடு

விடை –

மத்தளம் – நடுப்பகுதி பெருத்தும் கடைப்பகுதி சிறுத்தும் காணப்படும்.

திமிலை – மணற்கடிகார வடிவத்தில் அமைந்திருக்கும்.

2.இசைக்கருவிகள் செய்யப் பயன்படுத்திய உலோகங்கள்.

விடை – பித்தளை, வெண்கலம்.

3.உடுக்கைக்கும்  குடுகுடுப்பைக்கும் இசைப்பதிலுள்ள வேறுபாடு.

விடை –

உடுக்கை – வலது வாயின் மீது கைகளால் அடிக்கப்படும்.

குடுகுடுப்பை – இருபுறமும் இணைக்கப்பட்ட கயிற்றில் உள்ள பாசியால் அடிக்கப்படும்.

4.பொருத்துக.

விடை –

அ.ஆகோட்பறை      – ஆநிரைகவர்தல்

ஆ.உடுக்கை           – குறி சொல்லுதல்

இ.கொம்பு               – திருவிழா, ஊர்வலம்

ஈ.சாலரா                 – கூட்டு வழிபாடு

5.இசைக்கருவிகளை வகைப்படுத்துக.

விடை –

அ.தோல் கருவிகள் – உடுக்கை, குடமுழா, திமிலை, பறை, மத்தளம், முரசு, முழவு.

ஆ.நரம்புக்கருவிகள் – யாழ், வீணை.

இ.காற்றுக்கருவிகள்– குழல், கொம்பு, சங்கு.

ஈ.கஞ்சக்கருவிகள் – சாலரா, சேகண்டி.

6.இடம்பெற்றுள்ள நூல்கள்.

விடை –

மாக்கண்முரசம் - மதுரைக்காஞ்சி.

மண்ணமைமுழவு - பொருநராற்றுப்படை.

7.இசைக்கருவிகள் இடம்பெறும் இலக்கியங்களின் பெயர்கள்

விடை –

குழல்            – சிலப்பதிகாரம், திருக்குறள்.

சங்கு            – திருப்பாவை

திமிலை        – பெரியபுராணம்

மத்தளம்        - நாச்சியார் திருமொழி

8.வீணை பேசுவதுபோல உரை

விடை –

நான் யாழ் போன்ற அமைப்புடைய நரம்புக்கருவி.

நான் ஏழு நரம்புகளைக் கொண்டவன்.

இடக்கை விரல்களால் நரம்புகளை அமுக்கியும் தேய்த்தும் வலக்கை சுண்டுவிரலால் கம்பிகளை மீட்டியும் என்னிலிருந்து இசை எழுப்புவர்.

நரம்புகள் மூலம் எழுப்பப்படும் இசையை என் குடம்,

தண்டு முதலிய பாகங்கள் பெருக்கி அனுப்பும்.

பரிவாதனி என்ற நான் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்தேன்.

9.சாலராவும் யாழும் - உரையாடல்

விடை –

சாலரா – என்னைக் கஞ்சக்கருவி என்பர்.

யாழ் – அப்படியா, நான் நரம்புக்கருவி.

சாலரா – நான் பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்டிருப்பேன். நீ...

யாழ் – நான் வில் போன்ற வளைந்த பொருளில் நரம்புகளால் செய்யப்பட்டிருப்பேன்.

சாலரா – எனக்குப் பாண்டில் என்ற பெயரும் உண்டு.

யாழ் – நான் 21 நரம்புகளுடன் பேரியாழ் என்றும், 19 நரம்புகளுடன் மீன் வடிவில் மகரயாழ் என்றும், 14 நரம்புகளுடன் சகோடயாழ் என்றும் அழைக்கப்படுவேன்.

சாலரா – நான் கோயில் கூட்டுவழிபாட்டில் இசைக்கப்படுவேன்.

யாழ் – நானே மெல்ல மெல்ல மாறி வீணையானேன்.

சாலரா – மகிழ்ச்சி, நான் உன்னைப்பற்றி அறிந்துகொண்டேன், மீண்டும் சந்திப்போம்.

யாழ் – நன்றி, நானும் உன்னைப்பற்றித் தெரிந்துகொண்டேன்.

10.தோல்கருவிகள் – பயன்படுத்தப்படும் இடங்கள்

விடை –

உடுக்கை – இறைவழிபாட்டில்.

குடமுழா – கோயில்கள்.

முரசு – போர்க்காலத்தில்.

முழவு – காலத்தை அறிவிக்க.

எட்டாம் வகுப்பு தமிழ் வினாடிவினா 16 விடைக்குறிப்பு 8th TAMIL QUIZ ANSWER KEY

 1.பொருத்துக.

விடை –

அ.பண்         – இசை

ஆ.சுனை      – நீர்நிலை

இ.முரலும்     – முழங்கும்

ஈ.வேழம்       - யானை

2.திருக்கேதாரம் – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

விடை – திரு+கேதாரம்.

3.தேவாரம் பாடிய மூவர்.

விடை – திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

4.பதிகம் என்பது ............... பாடல்களைக் கொண்டது.

விடை – பத்து

5.திருக்கேதாரப் பாடலில் அமைந்துள்ள இசைக்கருவிகளின் பெயர்கள்

விடை – புல்லாங்குழல், முழவு.

6.எதுகைச் சொற்கள்

விடை –

பண்ணின்     கண்ணின்     மண்நின்றன           கிண்என்று

7.தொடர் அமைத்து எழுதுக.

விடை –

அ.பழவெய் – பழவெய் புல்லாங்குழல் செய்யப் பயன்படும்.

ஆ.சொரிய – போரில் வென்ற மன்னனை மக்கள் மலர்கள் சொரிய வாழ்த்தினர்.

8.திருக்கேதார நகரின் சிறப்புகள்.

விடை –







எட்டாம் வகுப்பு தமிழ் வினாடிவினா 15 விடைக்குறிப்பு 8th TAMIL QUIZ ANSWER KEY

 1.அகர வரிசை

விடை –

கந்தர் கலிவெண்பா,

கயிலைக் கலம்பகம்,

சகலகலாவல்லிமாலை,

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்.

2.பொருந்தாத வேற்றுமைப்பொருள்

விடை –

கருவி.

3.விடையளி.

விடை –அ.கொய்யாப்பழம் – கொய்யா+பழம்

ஆ.கிளையில் உள்ளபோது கொய்யும் பழமென்றும் கொய்த பின் கொய்யாப் பழமென்றும் பெயர்ப்புதுமை.

இ.களியானை-மகிழ்ச்சியான யானை, மத யானை 

நிரல் – வரிசை, ஒப்பு.

கொய்து – பறித்து, அறுத்து.

ஈ.காட்டுமுயல் காது – இலை,  

யானைத்துதிக்கை – அடிமரம்.

4.சொல்லுருபுகள்.

விடை –

கொண்டு, பொருட்டு, நிமித்தம், வைத்து, காட்டிலும், ஆக

5.வேற்றுமை உருபுகள் எப்பொருளில் வந்துள்ளன என எழுதுக.

விடை –

அ.பணத்திற்குப் பருப்பு வாங்கினான் – அதுவாதல்

ஆ.இந்தியாவின் மேற்கு அரபிக்கடல் – எல்லை

இ.காமராசர் பதவியை அடைந்தார் – அடைதல்

ஈ.கர்ணனது கொடை - உரிமைப்பொருள்

6.கருவி, கருத்தாப் பொருள்களின் வகைகள்

விடை –

அ.புலவரால் பாடல் பாடப்பட்டது- இயற்றுதல் கருத்தா.

ஆ.தங்கத்தால் நகை செய்தான்- முதற்கருவி.

இ.காமராசரால் அணை கட்டப்பட்டது- ஏவுதல் கருத்தா.

ஈ.தூரிகையால் ஓவியம் வரைந்தான்- துணைக்கருவி.

7.கல்வி

விடை –

அன்பே ஆதாரமாக

உழைப்பே உரமாக

உண்மையும் நேர்மையும்

ஒழுக்கமும் மனிதநேயமும்

உள்ளத்தில் எழுவதே கல்வி.

எட்டாம் வகுப்பு தமிழ் வினாடிவினா 14 விடைக்குறிப்பு 8th TAMIL QUIZ ANSWER KEY

 1.ஐந்தாம், ஏழாம் வேற்றுமைகளில் வேறு வேறு பொருளில் வரும் உருபு

விடை – இல்.

2.வேற்றுமை உருபும், சொல்லுருபும் இல்லாத வேற்றுமை

விடை – எட்டாம் வேற்றுமை

3.உரிய வேற்றுமைகள்.

விடை –

அ.இராமன் - முதல்வேற்றுமை

ஆ.இராமா – எட்டாம் வேற்றுமை

4.வேற்றுமை உருபை விரித்து எழுதுக.

விடை –

அ.தலையால் வணங்கினான்.

ஆ.குளத்தை வெட்டினான்.

இ.எனது கை

5.தொடர்களின் வேறுபாடு.

விடை –

அ.கூலிக்கு வேலை – நான்காம் வேற்றுமை விரி

ஆ.கூலி வேலை – நான்காம் வேற்றுமைத்தொகை

6.பொருத்துக

விடை –

அ

கம்பரது காப்பியம்

உரிமைப்பொருள்

ஆ

தமிழிற்கு அமுதென்று பேர்

அதுவாதல்

இ

ஊரின்கண் கூடி வாழ்ந்தனர்

இடப்பொருள்

ஈ

பாடல் பாடுவதில்

ஏதுப்பொருள்

 

7.நிரப்புக.

விடை –

செயப்படுபொருள்

உறுப்புகள்

இணையாமல்

இயல்பான

8.சரியா, தவறா

விடை –

அ.வேற்றுமை உருபுகள் கொண்ட வேற்றுமைகளின் எண்ணிக்கை ஆறு. – சரி.

ஆ.ஐந்தாம் வேற்றுமையைச் செயப்படுபொருள் வேற்றுமை என்றும் கூறுவர். – தவறு.

இ.வேற்றுமை உருபுகளுக்குப் பதிலாகச் சொற்களே உருபுகளாக வருவது சொல்லுருபுகள் ஆகும். – சரி.

9.மரபுப்பிழைகள்

 விடை –

  1. கூடை பின்னி
  2. காகம் கத்துகின்ற
  3. சோற்றைத் தின்றுவிட்டு
  4. நீரைப்பருகியது
  5. கூவியவாறே

10.வேற்றுமை உருபுகள், சொல்லுருபுகள்

விடை –

இல், இருந்து, கு, உடைய, ஐ,

பொருட்டு, அருகே, உடன், ஆக

எட்டாம் வகுப்பு தமிழ் வினாடிவினா 13 விடைக்குறிப்பு 8th TAMIL QUIZ ANSWER KEY

 1.குமரகுருபரர் எழுதாத நூல்

விடை – கந்தர் அலங்காரம்

2.மயங்கொலிப் பிழையற்ற தொடர்

விடை –

கல்வி கரையில கற்பவர் நாள் சில

3.வடிவு, வனப்பு, பொழிவு, எழில்-பலசொல் தரும் ஒரு பொருள்

விடை –

அழகு

4.சரியா தவறா.

விடை –

மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டும் நூல் நீதிநெறிவிளக்கம் ஆகும். – சரி

5.சொற்றொடரில் அமைத்தெழுதுக.

விடை –

நலன் – நாம் நல்ல குணநலன்களோடு இருக்க வேண்டும்.

6.விடுபட்ட சீர்களை எழுதுக.

விடை –

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்

மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – முற்ற

முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே

அழகுக்கு அழகுசெய் வார்.

7.மோனைச் சொற்கள்

விடை –

கற்றோர்க்குக்

கல்வி

கலனல்லால்

8.விடையளி                    

 விடை –

1.சிலம்பு அணிகலன்தான் சிலப்பதிகாரம் என்ற பெயருக்குக் காரணம்.

2.பொருத்துக.

அ

சிலம்பு

தண்டை

ஆ

மேகலை

இடைநாண்

இ

வளை

வளையல்

ஈ

குண்டலம்

காதணி

உ

சிந்தாமணி

மணிக்கல்

 

3.வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த புலவர்கள் அணிகலன்களின் பெயர்களைத் தங்கள் காப்பியங்களுக்குச் சூட்டியுள்ளமை வியக்கத்தக்கது.

9. விடை –

அ. வெந்தணல் – வெம்மை+தணல்

ஆ.எதிர்ச்சொற்கள் – நிறைவு, குறைவு

இ.எதுகை – வெள்ளத்தால், கொள்ளத்தான், கள்ளர்க்கோ

மோனை – வெள்ளத்தால், வெந்தணலால்

          வேகாது, வேந்தராலும்

          கொள்ளத்தான், கொடுத்தாலும்

10.கல்வி

விடை –

 1. கற்க கசடறக் கற்பவை கற்றபின்

    நிற்க அதற்குத் தக.

2. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

    எழுமையும் ஏமாப் புடைத்து.

தமிழ்த்துகள்

Blog Archive