தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Wednesday, December 15, 2021
Monday, December 06, 2021
ஆறாம் வகுப்பு தமிழ் - பயிற்சிக் கட்டகம் தேர்வு வினாக்கள் - TAMIL SIXTH REFRESHER COURSE QUESTIONS
பயிற்சிக் கட்டகம் தேர்வு வினாக்கள் - TAMIL SIXTH REFRESHER COURSE QUESTIONS
வகுப்பு : 6
Monday, November 08, 2021
Sunday, November 07, 2021
Saturday, November 06, 2021
Friday, November 05, 2021
ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 16.கட்டுரை எழுதுதல் sixth Tamil refresher course answer key 6th
மதிப்பீட்டுச் செயல்பாடு
அ) ’கரிக்கோல் தன் வரலாறு கூறுதல் ‘ என்னும் கட்டுரையை நிறைவு செய்க.
முன்னுரை
நான் ஒரு கரிக்கோல் என் கதையைப்
பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
எனது பண்புகள்
நான் மரத்தால் செய்யப்பட்டேன் .
மேலும் நான் பல வண்ணங்களில் இருப்பேன் .
குழந்தைகள் என்னை கூர்மையாக செதுக்கிப்
பயன்படுத்துவார்கள்.
எனது பயன்கள்
நான் அழகாக எழுத ப் பயன்படுவேன் . பல
வடிவங்களில் ஓவியம் வரையவும்
பயன்படுவேன் . குழந்தைகளுக்கு என்னை
மிகவும் பிடிக்கும்.
முடிவுரை
நான் என் வாழ்நாளில் பிறருக்கு எப்போதும்
உதவியாக இருப்பேன் . என் தியாகத்தை உணர்ந்து நீங்களும் என்னைப்
போல் பிறருக்கு உதவியாக வாழுங்கள்.
ஆ) நீங்களாக எழுதப் பயிற்சி செய்து பழகுங்கள்.
உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு பழம் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.
விரும்பினால் இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தலாம்.
மாம்பழம் சுவை மிகுந்தது. முக்கனிகளுள் ஒன்று. செந்தூரம், மல்கோவா,
பங்கனப்பள்ளி எனப் பல மாம்பழவகைகள் தமிழ்நாட்டில் உள்ளன.
மாம்பழத்தில் உயிர்ச்சத்து ஏ, பி அடங்கியுள்ளன. பழுத்த மாம்பழம்
மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு வண்ணங்களில் இருக்கும். மாம்பழத்திலிருந்து
மாம்பழச்சாறு, குளிர்பானங்கள், மாம்பழப் பனிக்குழைவு போன்றவை
செய்யப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் மாம்பழம்
மிகுதியாக விளைகின்றது. இந்திய அளவில் தமிழகம் அதிக மாம்பழ
விளைச்சலைக் கொடுக்கிறது.
நான் விரும்பும் பழம் மாம்பழம்
முன்னுரை
பழங்களில் மிகவும் சுவையானது மாம்பழம். முக்கனிகளுள் முதன்மையாக உள்ளது இம்மாம்பழமே.. நான் விரும்பும் மாம்பழம் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
வகைகள்
செந்தூரம், மல்கோவா, பங்கனப்பள்ளி, கிளிமூக்கு, காசாலட்டு என்று பல வகைகளில் தமிழகத்தில் மாம்பழங்கள் கிடைக்கின்றன.
சத்தும் வண்ணமும்
மாம்பழத்தில் உயிர்ச்சத்து ஏ, பி அடங்கியுள்ளன. பழுத்த மாம்பழம்
மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு வண்ணங்களில் இருக்கும். பழமாகும் முன்
மாங்காய் பச்சை வண்ணத்தில் இருக்கும்.
கிடைக்கும் பொருள்கள்
மாம்பழத்திலிருந்து மாம்பழச்சாறு, குளிர்பானங்கள், மாம்பழப்
பனிக்குழைவு போன்றவை செய்யப்படுகின்றன.
முடிவுரை
சேலம் மாவட்டத்தில் மாம்பழம் மிகுதியாக விளைகின்றது. இந்திய
அளவில் தமிழகம் அதிக மாம்பழ விளைச்சலைக் கொடுக்கிறது. நம்
தேசியப் பழமாக இருக்கும் மாம்பழமே நான் விரும்பும் பழமாகும்.
ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 15.கடிதம் எழுதுதல் sixth Tamil refresher course answer key 6th
மதிப்பீட்டுச் செயல்பாடு
1. உங்கள் ஊரில் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சிக்கு உனது
அத்தையை வரச்சொல்லி அழைப்பு விடுத்துக் கடிதம் எழுதுக.
7, காமராசர் தெரு,
மதுரை.
10/11/2021
அன்புள்ள அத்தைக்கு,
நாங்கள் அனைவரும் நலம். அதுபோல உங்கள் அனைவரின்
நலம் அறிய ஆவல்.
அடுத்தவாரம் எங்கள் ஊரில் புத்தகக் கண்காட்சி
நடைபெற உள்ளது. அதில் பல்வேறு புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்படும்.
நம் வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு நூல்களை ஒரே
இடத்தில் கண்டு மகிழலாம். நம்முடன் இணைந்து கலந்துகொள்ள
கதிரையும், கோமதியையும் அழைத்து வாருங்கள். நாங்கள் அனைவரும்
சேர்ந்து புத்தகக் கண்காட்சியைப் பார்த்து மகிழ்வோம். பல
புத்தகங்கள் வாங்கிப் பலரும் பயன் பெறுவோம். அனைவரும்
வாருங்கள்.
தங்கள் அன்புள்ள ,
ப.முத்து .
உறைமேல் முகவரி
மு.நந்தினி ,
11, குறிஞ்சி நகர் ,
சிவகாசி.
விருதுநகர் மாவட்டம் . 626123
2. உன் பிறந்தநாளுக்குப் பரிசு அனுப்பிய உன் மாமாவிற்கு நன்றி கூறிக் கடிதம் வரைக.
15, முகில் நகர்,
தூத்துக்குடி.
14/11/2021
அன்புள்ள மாமாவிற்கு,
நலம். நலமறிய ஆவல்.
எனது பிறந்தநாள் பரிசாக நீங்கள் அனுப்பிய பரிசு கிடை த்தது.
மிக்க மகிழ்ச்சி . எனக்கு உரிய நேரத்தில் நீங்கள் வழங்கிய பரிசு மிகவும்
பயன் உள்ளதாக இருக்கும். நான் இதனை நல்ல முறையில்
பயன்படுத்துவேன் .
நன்றி.
இப்படிக்கு,
ச.கதிரவன் .
உறைமேல் முகவரி
சி.தமிழ்ச்செல்வம்,
124, மல்லிகை வீதி ,
அண்ணாநகர் ,
மதுரை - 625020
ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 14.இணைச்சொற்கள் sixth Tamil refresher course answer key 6th
மதிப்பீட்டுச் செயல்பாடு
அ) கீழ்க்காணும் தொடர்களில் பொருத்தமான இணைச் சொற்களைத் தேர்ந்தெடுத்து நிரப்புக.
(ஈடும்எடுப்புமாக, கண்ணுங்கருத்துமாக, அடுக்கடுக்காக, இன்பமும்துன்பமும்,கீரியும்பாம்பும்)
1. பானைகள் ______________________________ வைக்கப்பட்டிருந்தன.
அடுக்கடுக்காக
2. நேற்றுவரை ______________________________ போல் இருந்தவர்கள் இன்று
நட்புடன் பழகுகிறார்கள்.
கீரியும்பாம்பும்
3. தேர்வில் ______________________________ படித்ததால் நான் வகுப்பில்
முதலாவதாக வந்தேன் .
கண்ணுங்கருத்துமாக
4. வாழ்வில் ______________________________ வரும். ஆனால், அதனைக்
கண்டு சோர்வடையக்கூடாது.
இன்பமும்துன்பமும்
5. மன்ற விழாக்களில் எங்கள் ஆசிரியரின் பேச்சு
______________________________இருக்கும்.
ஈடும்எடுப்புமாக
ஆ) விடுபட்ட இடங்களில் உரிய எதிரிணைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
1. இன்பமும் துன்பமும் = இன்பமும்துன்பமும்
2. அன்றும் இன்றும் = அன்றும்இன்றும்
3. அங்கும் இங்கும் = அங்கும்இங்கும்
4. உயர்வும் தாழ்வும் = உயர்வும்தாழ்வும்
5. விண்ணும் மண்ணும் = விண்ணும்மண்ணும்
இ) கோடிட்டுப் பொருத்துக.
ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 13.உரையாடலை எழுதுதல் sixth Tamil refresher course answer key 6th
மதிப்பீட்டுச் செயல்பா டு:
அ) கோடிட்ட இடங்களை நிரப்பி உரையாடலை நிறைவு செய்க.
[துரித உணவு – விரைவு உணவு கெடுதலை பற்றித்
தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான உரையாடல்]
இளமாறன் : தாத்தா எனக்கு வயிறு மிகவும் வலிக்கிறது.
தாத்தா : இரு, இதோ வருகிறேன் வீட்டிற்குள் சென்று ஒரு
பாத்திரத்தில் மருந்து எடுத்து வருகிறார் . இளமாறா! இந்தா இதைச்
சாப்பிடு ! வயிற்றுவலி சிறிது நேரத்தில் சரியாகிவிடும்.
இளமாறன் : தாத்தா இது என்ன ?
தாத்தா : வயிற்றுவலிக்காக நம் வீட்டில் இருக்கும் மருந்து, சரி நேற்று
இரவு நீ என்ன சாப்பிட்டாய்?
இளமாறன் : நேற்று நான் அப்பாவுடன் துரித உணவு கடைக்குச் சென்று
விரைவு உணவு சாப்பிட்டேன் .
தாத்தா : நான் நினைத்தது சரிதான் . அந்த விரைவு உணவுதான்
வயிற்று வலிக்குக் காரணம்.
இளமாறன் : ஏன் தாத்தா ! விரைவு உணவு கெடுதியா ?
தாத்தா : ஆம். விரைவு உணவில் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும்
மீண்டும் பயன்படுத்துதல்; அதிகக் காரமும் அவ்வுணவில்
சேர்க்கப்படும் சில செயற்கைச் சுவையூட்டிகள்
போன்றவையும்தான் நம் உடலுக்குக் கேடு விளைவிக்கும்.
இளமாறன் : வகுப்பில் ஆசிரியரும் இதைத் தான் கூறினார் .
தாத்தா : இனி மேல் விரைவு உணவு உண்ணாதே.
இளமாறன் : சரி தாத்தா .
ஆ. உரையாடலை நிறைவு செய்க.
(புவி வெப்பமடைதல் பற்றி நண்பர்கள் இருவருக்கு இடையிலான உரையாடல்)
கந்தன் மாலையில் பள்ளியிலிருந்து தாமதமாக வீடு
திரும்புகிறான் . வழியில் தனது நண்பன் சங்கரைச்
சந்திக்கிறான் ........
சங்கர் : என்ன கந்தா ! பள்ளியிலிருந்து இவ்வளவு
தாமதமாக வருகிறாய்?
கந்தன் : வெயில் அதிகமாக இருந்ததால்
பள்ளியிலுள்ள மரத்தடியில் அமர்ந்து
வீட்டுப்பாடம் எழுதிவிட்டு வருகிறேன் .
சங்கர் : ஆமாம். நீ சொல்வது உண்மைதான் .
நேற்று முனியாண்டி தாத்தா வெயில்
தாங்காமல் மயங்கி விழுந்துவிட்டார் .
கந்தன் : பூமி அதிக சூடாகி விட்டதுபோல.....
சங்கர் : ஆமாம். அதற்குப் பெயர்தான் புவி வெப்பமடைதல் என்று சொல்வார்கள்.
கந்தன் : அப்படியா அதை எப்படித் தடுப்பது?
சங்கர் : குளிர்சாதனப்பெட்டி, குளிரூட்டி இவைகளின் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும். இவற்றால் புவி வெப்பமடைகிறது.
கந்தன் : வேறு என்ன செய்யலாம்?
சங்கர் : மரங்கள் வளர்க்கலாம், இயற்கையைக் காப்பதே புவியைக் காக்கும் ஒரே வழி.
ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 12.படித்துப் பொருளுணர்தல் sixth Tamil refresher course answer key 6th
மதிப்பீட்டுச் செயல்பாடு
அ) பத்தியைப் படித்துப் பொருளுணர்ந்து வினாக்களுக்கு விடை எழுதுக.
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். நம் தாய் மொழியாம் தமிழ்
காலத்தால் முந்தையது மட்டுமன்று; உலகின் முதன்மொழியும் ஆகும். தமிழிலக்கணம்
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து இலக்கணக் கூறுகளைக் கொண்டு
திகழ்கிறது. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த பெருமை நம் தமிழ்மொழிக்கு மட்டுமே
உண்டு. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறநானூற்றுப் பாடலடி உலகிற்கான உயர்ந்த
கருத்தை வெளிப்படுத்துகிறது. உலகிலுள்ள எல்லா ஊரும் நம்முடைய ஊரே . உலகில்
உள்ள எல்லா மக்களும் நம் உறவினர்களே ! என்பதுதான் அக்கருத்து.
1. தமிழ் என்னும் சொல்லின் பொருள் யாது?
இனிமை
2. “உறவினர்” என்னும் பொருள் தரும் சொல்லைப் பத்தியிலிருந்து எடுத்தெழுதுக.
கேளிர்
3. தமிழ்மொழியில் என்னென்ன இலக்கணப் பிரிவுகள் உள்ளன?
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி.
4. தமிழிலக்கணம், புறநானூறு – சொற்களைப் பிரித்து எழுதுக.
தமிழ்+இலக்கணம்
புறம்+நானூறு
5. உலகிற்கான உயர்ந்த கருத்தை உணர்த்திய பாடலடியை எழுதுக.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
6. பத்தியில் உள்ள பெயர்ச்சொற்கள் ஐந்தினை எடுத்து எழுதுக
தமிழ்
இனிமை
ஊர்
அணி
வாழ்க்கை
ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 11.வினா உருவாக்குதல் sixth Tamil refresher course answer key 6th
மதிப்பீட்டுச் செயல்பாடு
அ ) பொருத்தமான வினாச்சொல்லை எடுத்து வினாத்தொடரை முழுமையாக்குக.
(யாது, யாவை , எங்கு, எது, எப்படி, என்ன, யார் , யாருடைய)
1. உன்னுடைய ஊரின் பெயர் ______________________ ?
என்ன
2. உனக்குப் பிடித்த வண்ணம் ______________________ ?
எது
3. நீ பள்ளிக்கு ______________________ வருகிறாய் ?
எப்படி
4. உன்னுடைய நண்பன் ______________________ ?
யார்
5. கோடை விடுமுறைக்கு ______________________ ச் சென்றாய்?
எங்கு
6. மெய்ப்பொருள் என்பதன் பொருள் ______________________ ?
யாது
7. குறில் எழுத்துகள் ______________________ ?
யாவை
8. சாருமதி ______________________ வீட்டிற்குச் சென்றாள் ?
யாருடைய
ஆ) படங்களுக்குப் பொருத்தமான வினாக்களை உருவாக்குக.
1. படத்திலுள்ள காயின் பெயர் என்ன?
2. முருங்கையின் பயன் 2 கூறுக.
3. முருங்கை மரம் தரும் 2 உணவுப்பொருள்களை எழுதுக.
4. படத்திலுள்ள கீரையின் பெயர் என்ன?
5. படத்திலுள்ள காய் உனக்குப் பிடிக்குமா?
ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 10.மொழிபெயர்த்தல் sixth Tamil refresher course answer key 6th
மதிப்பீட்டுச் செயல்பாடு
அ) சரியான சொற்களுடன் இணைத்து மகிழ்வோமா ?
பட்டம், பொம்மைகள்
இ) பின்வரும் படங்களின் பெயர்களைத் தமிழில் எழுதுக.
நாற்காலி, ஒலிவாங்கி, கணிப்பான்
குளிர்சாதனப்பெட்டி, சாலை, மகிழ்வுந்து
ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 9.மயங்கொலிச் சொற்கள் sixth Tamil refresher course answer key 6th
மதிப்பீட்டுச் செயல்பாடு
1. விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை எழுதுக.
எ.கா. மடியைக் குறிப்பது குறங்கு
மரத்தில் தாவுவது குரங்கு
1. ஆற்றின் ஓரம் _______ கரை
ஆடையில் இருப்ப து _______ கறை
2. பரந்து இருப்பது _______ பரவை
பறந்து செல்வது _______ பறவை
3. மரத்தை அறுப்பது _______ அரம்
மனிதர் செய்வது _______ அறம்
4. சுவரில் அடிப்பது _______ ஆணி
மாதத்தில் ஒன்று _______ ஆனி
2. கீழ்க்காணும் பத்தியைப் படித்துப் பார்த்து மயங்கொலிச் சொல்லை
வட்டமிட்டு அதனை எடுத்து எழுதவும்.
“நிலா, நீ வரைந்த படம் மிகவும் அழகாக உள்ளது. வெண்பஞ்சு போன்ற
மேகங்கள் சூழ்ந்த மலை ; அம்மலையிலிருந்து விழும் பாலாவி போன்ற அருவி;
பசுமை மிகுந்த மரம், செடி, கொடிகள்; துள்ளித்திரியும் புள்ளிமான்கள்;
சிறகடிக்கும் வண்ணப்பறவைகள்; மரக்கிளைகளில் ஊஞ்சலாடும்
குட்டிக்குரங்குகள் அப்பப்பா ! நீ எப்படி இவ்வாறு வரையக்
கற்றுக் கொண்டாய்!”.
|
ல, ள, ழ |
ந, ண, ன |
ர, ற |
|
அழகாக |
வெண்பஞ்சு |
மரம் |
|
மலை |
புள்ளிமான்கள் |
குரங்குகள் |
|
பாலாவி |
வண்ணப் பறவைகள் |
வண்ணப் பறவைகள் |
|
புள்ளிமான்கள் |
நிலா |
மரக்கிளைகளில் |
ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 8.நிறுத்தக்குறியிட்டு எழுதுதல் sixth Tamil refresher course answer key 6th
மதிப்பீட்டுச் செயல்பாடு:
1. நிறுத்தக் குறிகளுக்கு வண்ணமிட்டு அதன் பெயரை எழுதுக.
1.வினாக்குறி
2.முற்றுப்புள்ளி
3.உணர்ச்சிக்குறி
4.காற்புள்ளி
2. நிறுத்தக்குறிகளைப் பொருத்துக.
1 காற்புள்ளி - ,
2 வினாக்குறி - ?
3 உணர்ச்சிக்குறி - !
4 அரைப்புள்ளி - ;
5 முற்றுப்புள்ளி - .
3. பின்வரும் தொடர்களில் பொருத்தமான நிறுத்தக்குறிகளை இடுக; படித்து மகிழ்க.
1. பாஞ்சாலி சபதம் குயில் பாட்டு கண்ணன் பாட்டு ஆகிய
முப்பெருங்காவியங்களைப் படைத்தார் பாரதியார்
பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு ஆகிய
முப்பெருங்காவியங்களைப் படைத்தார் பாரதியார்.
2. ஆப்பிளைக் கண்டார் ஆற்றலைத் தந்தார்
வேடிக்கை பார்த்தார் வியக்க வைத்தார்
ஆவியைக் கண்டார் நீராவி இயந்திரம் தந்தார்
ஆப்பிளைக் கண்டார்; ஆற்றலைத் தந்தார்.
வேடிக்கை பார்த்தார்; வியக்க வைத்தார்.
ஆவியைக் கண்டார்; நீராவி இயந்திரம் தந்தார்.
3. கல்லணை எந்த மாவட்டத்தில் உள்ளது அதனைக்கட்டிய மன்னன் யார்
கல்லணை எந்த மாவட்டத்தில் உள்ளது ? அதனைக்கட்டிய மன்னன் யார்?
4. ஆ தவறிழைத்து விட்டேனே பிறர் சொல் கேட்டுப் பெரும்பிழை
செய்தேனே யானோ அரசன் யானே கள்வன்
ஆ! தவறிழைத்து விட்டேனே! பிறர் சொல் கேட்டுப் பெரும்பிழை
செய்தேனே! யானோ அரசன் ? யானே கள்வன்.
5. பணத்தை வைத்திருப்பவன் மட்டுமே பணக்காரன் அல்லன் சொன்ன
சொல்லை மறவாது மற்றவர்க்குப் பெருந்தன்மையுடன் கொடுக்கும்
உள்ளம் படைத்தவனே பணக்காரன் என்று அரசன் கூறினான்
"பணத்தை வைத்திருப்பவன் மட்டுமே பணக்காரன் அல்லன், சொன்ன
சொல்லை மறவாது மற்றவர்க்குப் பெருந்தன்மையுடன் கொடுக்கும்
உள்ளம் படைத்தவனே பணக்காரன்" என்று அரசன் கூறினான்.
ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 7.இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் sixth Tamil refresher course answer key 6th
மதிப்பீட்டுச் செயல்பாடு
அ. பொருத்தமான இரட்டைக் கிளவியைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(குடுகுடு, சலசல, மடமட, வெடவெட, விறுவிறு, படபட, டொக் டொக், குக்கூகுக்கூ)
1. பட்டாசு ________ வென வெடித்தது.
படபட
2. குழந்தை _______ வென ஓடியது.
குடுகுடு
3. தண்ணீர் _________ எனக் கொட்டியது.
மடமட
4. பெரியவர் ____________ வென்று நடந்தார் .
விறுவிறு
5. குயில் __________ என்று கூவியது.
குக்கூகுக்கூ
ஆ. பொருத்தமான அடுக்குத்தொடரால் நிரப்புக.
(வாழ்கவாழ்க, பாடிப்பாடி, சுவைக்கச்சுவைக்க , துள்ளித்துள்ளி, தோண்டத்தோண்ட )
1. மான் ______ _______ ஓடியது.
துள்ளித்துள்ளி
2. மணற்கேணியில் ______ _______ நீர் சுரக்கும்.
தோண்டத்தோண்ட
3. மணமக்களை _____ _____ என வாழ்த்தினார்கள்.
வாழ்கவாழ்க
4. கரும்பு, ____ _____ இனிப்பைத் தரும்.
சுவைக்கச்சுவைக்க
5. குழந்தைகள் ______ _____மகிழ்ந்தனர்.
பாடிப்பாடி
இ. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. தலைவரை _____ ______ என வரவேற்றனர்.
வருகவருக
2. நூல்களை _______ _______ அறிவு வளரும்.
படிக்கப்படிக்க
3. மாணவர்கள் ______ _______ பேசினர்.
மீண்டும்மீண்டும்
4. புதர் வழியே சென்ற மக்கள் _____ _____ என அலறினர்.
பாம்புபாம்பு
5. குடிசை எரிந்ததைக் கண்ட மக்கள் ______ ______ எனப் பதறினர்.
தீதீ
6. அழகி __________ எனச் சிரித்தாள்.
கலகல
7. பாட்டி குளிரால் __________ என நடுங்கினார் .
வெடவெட
8. வைரம் ________ என மின்னியது.
பளபள
9. மழை _________ எனப் பெய்தது.
சடசட
10. கதவை __________ எனத் தட்டினான் .
டொக்டொக்
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson lesson plan October 5 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2...
-
10th tamil model notes of lesson lesson plan september 7 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 07-09-2026 முதல் 11-09-2026 ...
-
பதிவிறக்கு/DOWNLOAD Tenth tamil quarterly exam question paper pdf virudhunagar district 2025
-
Tenth Tamil Quarterly Exam Question Paper Model 1 sslc September 2025 virudhunagar district பதிவிறக்கு/DOWNLOAD
-
9th tamil model notes of lesson lesson plan October 5 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 ...
-
8th tamil model notes of lesson lesson plan October 5 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2....
-
8th tamil model notes of lesson lesson plan september 15 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 15-09-2026 2.பாடம் தமிழ் 3.அலகு ...
-
9th Tamil Quarterly Exam Question Paper Model 1 September 2025 virudhunagar district பதிவிறக்கு/DOWNLOAD
-
6th tamil model notes of lesson lesson plan October 5 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2....
-
9th tamil model notes of lesson lesson plan september 7 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 07-09-2026 முதல் 11-09-2026 ...














