கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, August 28, 2020

உயிர்மெய் எழுத்துகள் ர வரிசை தமிழ் எழுத்துகள் TAMIL LETTERS RA VARISAI

உயிர்மெய் எழுத்துகள் ய வரிசை தமிழ் எழுத்துகள் TAMIL LETTERS YA VARISAI

உயிர்மெய் எழுத்துகள் ம வரிசை தமிழ் எழுத்துகள் MA VARISAI UYIRMEY EZHUTHUGAL

உயிர்மெய் எழுத்துகள் ப வரிசை தமிழ் எழுத்துகள் PA VARISAI UYIRMEY EZHUTHUGAL

வகுப்பு வாரியான கல்வித் தொலைக்காட்சி, தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு விவரங்கள் kalvi tv, private channel

பதிவிறக்கு/DOWNLOAD

Tuesday, August 25, 2020

உயிர்மெய் எழுத்துகள் ங வரிசை TAMIL LETTERS NGA VARISAI UYIR MEY EZHUTHUGAL

ஆண்டாள் அருளிய திருப்பாவை - 30 - வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை

திருப்பாவை - பாடல் 29 - சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து

ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 28 - கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து

ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 27 - கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா !

ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 26 - மாலே மணிவண்ணா ! மார்கழி நீராடு

ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 25 - ஒருத்தி மகனாய்ப் பிறந்து

ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 24 - அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி...

ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 23 - மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்த

ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை - பாடல் 22 - அங்கண்மா ஞாலத் தரசர்

ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை - பாடல் 21 - ஏற்ற கலங்கள் எதிர்

ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாசுரம் 20 - முப்பத்து மூவர் அமரர்க்கு முன்

ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 19 - விளக்கம்.

ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை - பாடல் 18 - உந்து மதகளிற்றன் ஓடாத

ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாசுரம் - பாடல் 17 - அம்பரமே தண்ணீரே சோறே

ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் - 15 எல்லே ! இளங்கிளியே இன்னம்

ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 16 விளக்கம் - நாயகனாய் நின்ற ...

ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 14 விளக்கம் - Green Tamil TV.

ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை பாடல் 13 - புள்ளின்வாய் கீண்டானை

திருப்பாவை பாடல் 12 - கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி

ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 11 கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 10 - நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற

ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 9 - தூமணி மாடத்துச் சுற்றம்

ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 8 - கீழ்வானம் வெள்ளென்று

ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 7 - கீசு கீசு என்றெங்கும்

ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை - பாடல் 6 - புள்ளும் சிலம்பினகாண்

ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 5 - மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 4 - ஆழி.மழைக்கண்ணா !

ஆண்டாள் அருளிய திருப்பாவை மூன்றாம் பாசுரம் - ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்

ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாடல் 2 - வையத்து வாழ்வீர்காள் !

மார்கழி - 1 - ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 1 - மார்கழித் திங்கள்

தமிழ் வகுப்பு 9 இயல் 3 பலவுள் தெரிக வினாத்தாள் 9th tamil unit 3 one word question pdf

பதிவிறக்கு/DOWNLOAD

தமிழ் வகுப்பு 9 இயல் 2 பலவுள் தெரிக வினாத்தாள் 9th tamil unit 2 one word question pdf

பதிவிறக்கு/DOWNLOAD

தமிழ் வகுப்பு 9 இயல் 1 பலவுள் தெரிக வினாத்தாள் 9th tamil unit 1 one word question pdf

பதிவிறக்கு/DOWNLOAD

Monday, August 24, 2020

உயிர்மெய் எழுத்துகள் க வரிசை க முதல் கௌ வரை TAMIL LETTERS KA VARISAI

12 ஆம் வகுப்பு - அரசுப் பொதுத்தேர்வு - தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் பெறுவது எப்படி

மேல்நிலை இரண்டாம் ஆண்டு - பொதுத் தமிழ் - இயல் 4 - கல்வி - இலக்கணம் - பா இயற்றப் பழகலாம்

வகுப்பு - 12 - தமிழ் - புதிய பாடத்திட்டம் - கவிதைப்பேழை - கம்பராமாயணம்

12,ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 5 - கவிதைப்பேழை - தேவாரம்

12 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் - 5 - கவிதைப் பேழை - தெய்வமணிமாலை

12 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 7 - கவிதைப்பேழை - புறநானூறு - பிசிராந்தையார்.

12 - ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 4 - கவிதைப்பேழை - புறநானூறு - ஔவையார்

12 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கவிதைப்பேழை - தன்னேர்.இலாத தமிழ்

12 - பனிரெண்டாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கவிதைப் பேழை - மொழி - இளந்தமிழே

மேல்நிலை முதலாம் ஆண்டு - பொதுத் தமிழ் - கவிதைப்பேழை - ஏதிலிக்குருவிகள்

பதினொன்றாம் வகுப்பு - தமிழ் - இயல் 7 - கவிதைப்பேழை - ஆத்மாநாம் கவிதைகள்

மயங்கொலிச்சொற்கள் - ர,ற - பொருள் வேறுபாடு 1 மின்சான்றிதழ்த் தேர்வு TAMIL QUIZ WITH E-CERTIFICATE

 

Saturday, August 22, 2020

சர்வபள்ளி இராதாகிருட்டிணன் கட்டுரை SARVAPALLI RADHAKRISHNAN TAMIL ESSAY

 

சர்வபள்ளி இராதாகிருட்டிணன்

குறிப்புச்சட்டகம்

முன்னுரை


இளமைப்பருவம்

கல்வி

பணி

மேதைகளும் இராதாகிருட்டிணனும்

கல்வி பற்றிய கருத்துகள்

சமயங்கள் குறித்த பார்வை

ஆசிரியர் பற்றிய கருத்து

மாணவர்களின் பார்வையில்...

எழுதிய நூல்கள்

முடிவுரை

முன்னுரை

      நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

      போற்றாது புத்தேள் உலகு.

என்பது வள்ளுவனின் வாக்கு. இவ்வுலக புகழ் அனைத்தையும் ஒருங்கே பெற்று தேவர்கள் போற்றும் அளவிற்கு உயர்ந்தவர் மாண்புமிகு சர்வபள்ளி இராதாகிருட்டிணன் அவர்கள். இந்தியாவின் முதல் துணைக்குடியரசுத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான அவரைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இளமைப்பருவம்

      1888 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் திருத்தணியில் சர்வபள்ளி என்ற கிராமத்தில் வீராசாமி, சீதம்மா இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

      இவர்தம் பதினாறாம் அகவையில் சிவகாமு என்பவரை மணந்தார். இவருக்கு 5 பெண் குழந்தைகளும் கோபாலன் என்ற மகனும் பிறந்தனர்.

கல்வி

இவர் திருப்பதி லுத்தரன் மிசன் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பையும், சென்னை கிறித்துவக்கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். தத்துவப்பாடத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

பணிகள்

1918

மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவப்பேராசிரியர்.

1921

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவப்பேராசிரியர்.

சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் உதவி பேராசிரியர்.

1931

ஆந்திர  பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்.

1939

பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்.

1946

யுனெஸ்கோவிற்குத் தூதுவர்.

1948

பல்கலைக்கழக கல்வி ஆணையத்தலைவர்

    

மேதைகளும் இராதாகிருட்டிணனும்

      ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இராபர்ட் ஜோன்ஸ் இராதாகிருட்டிணனின் சொற்பொழிவில் இன்னிசை தேனாக இனிக்கிறது, முகத்தில் ஒளி வீசுகிறது எனப் புகழ்ந்துரைத்தார்.

      ஒருமுறை வெளிநாட்டு விருந்தில் அனைவரும் கரண்டியில் உணவு அருந்திய போது இராதாகிருட்டிணன் அவர்கள் கையால் உணவு அருந்தினார். இதைக் கண்ட சர்ச்சில் கரண்டியால் உணவு அருந்துவதே ஆரோக்கியமான செயல் என்றார். அதற்கு இராதாகிருட்டிணன் அவர்கள் நம் கரண்டியைக் கொண்டு பிறர் சாப்பிட்டு எச்சில்படுத்தலாம். ஆனால் நம் கையைக் கொண்டு பிறர் சாப்பிட முடியாது எனக்கூறினார். அவரின் திறமையான பதில் கேட்ட சர்ச்சில் வியந்தார்.

கல்வி பற்றிய கருத்துகள்

      மனிதனின் உடல், மனம், ஆளுமை ஆகியவற்றின் தேவையை நிறைவேற்றுவதுதான் உண்மையான கல்வி என்றார். கல்வி இயற்கையோடு இயைந்த கல்வியாக இருக்க வேண்டும் என்றார்.

      மனநோய்கள், தவறான நடத்தைகள் போன்ற அனைத்தும் தவறான கல்வியின் விளைவுகள் என்றார். மனிதனுக்குக் கல்வி பெறும் திறன் இருப்பதுதான் அவனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்றார்.

சமயங்கள் குறித்த பார்வை

      சர்வபள்ளி இராதாகிருட்டிணன் அவர்களுக்குப் பிடித்த நூல் பகவத்கீதை ஆகும். பகவத்கீதை என்பது உபநிடதங்கள் எனும் பசுவிலிருந்து கிருஷ்ணன் எனும் தெய்வீக ஆயர் அர்ச்சுனனுக்காகக் கறந்த பால் என்று கூறினார்.

      சாதி உணர்வு கூடாது, தீண்டாமை இந்து சமயத்திற்குத் தேவையில்லாதது என உறுதிபடக் கூறினார். பிற மதங்களையும், சமயக் கொள்கைகளையும் மதித்தார்.

 

ஆசிரியர் பற்றிய கருத்து

      ஒவ்வொரு ஆசிரியரும் போர் வீரராக இருக்க வேண்டும். வெற்றி தோல்விகள் பற்றி கவலைப்படாமல் மாணவர்களின் முன்னேற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறினார்.

மாணவர்களின் பார்வையில்...

      தெளிவான தீர்க்க தரிசன எண்ண ஓட்டம், தானாக வரும் தரமான சொற்கள், அழகான மொழிநடை கொண்டவர் என்று மாணவர்கள் இராதாகிருட்டிணன் அவர்கள் குறித்து புகழ்ந்துரைத்தனர்.

      மாணவர்களிடம் நட்புடன் பழகினார். வீட்டிற்குச் சந்தேகம் கேட்க வரும் மாணவர்களைப் பாராட்டி, தேநீர் தந்து இன்முகத்துடன் ஐயம் போக்கினார்.

எழுதிய நூல்கள்

      இவருடைய தலைசிறந்த நூலான இந்திய தத்துவம் 1923 ஆம் ஆண்டு வெளிவந்தது. மகாத்மா காந்தி, பகவத்கீதை விளக்க உரை, முதன்மை உபநிடதங்கள், இந்திய சமயங்களின் சிந்தனைகள், இரவீந்திரநாத்தின் தத்துவம், தம்மபதம், உண்மையான கல்வி போன்றவை இவர் எழுதிய நூல்களில் சில.

முடிவுரை

      1954 ஆம் ஆண்டு பாரதரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுத் தம் பணியைத் திறம்படச்செய்தார். ஏப்ரல் 17, 1975 ஆம் ஆண்டு தன் 86- ஆவது அகவையில் இயற்கை எய்தினார். இவரின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அவரைப் போற்றி, அவர் காட்டிய பாதையில் பயணிப்போம்.

 கட்டுரையாளர்ஞா.லாவண்யா, தமிழாசிரியர், ஆமத்தூர், விருதுநகர் மாவட்டம்.

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 8 - உரைநடை - பெரியாரின் சிந்தனைகள்.

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 9 - கவிதைப்பேழை - குறுந்தொகை

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 8 - கவிதைப் பேழை - ஒளியின் அழைப்பு.

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 8 - யசோதர காவியம் - மனப்பாடப்பாடல்

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 5 இலக்கணம் - இடைச்சொல் - உரிச்சொல்

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 - திருக்குறள் - பகுதி - 1

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 - வாழ்வியல் - திருக்குறள் - பகுதி 2

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 7 - இலக்கணம் - ஆகுபெயர்

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 7 - கவிதைப் பேழை - மதுரைக்காஞ்சி

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 - புணர்ச்சி = மெய்ம்மயக்கம்

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 7 - முத்தொள்ளாயிரம் - சேர , சோழ , பாண்டியர்

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 - கவிதைப் பேழை - நாச்சியார் திருமொழி

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 - இராவண காவியம் - பகுதி 3

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 விரிவானம் - செய்தி - தி.ஜானகி ராமன்.

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 - இராவண காவியம் - குறிஞ்சி - பகுதி 1

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 - இராவண காவியம் - புலவர் குழந்தை

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - சீவக சிந்தாமணி

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்.- இயல் 5 - கவிதைப்பேழை - குடும்ப விளக்கு

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 5 - கவிதைப் பேழை - சிறுபஞ்சமூலம்

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் -3 , உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல்

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - முதல் பருவம் - நீரின்றி அமையாது உலகு

வகுப்பு - 9 , தமிழ் - கவிதைப்பேழை - பட்டமரம்

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் , கவிதைப்பேழை - தமிழ்விடுதூது - மனப்பாடப் பாடல்

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் , கவிதைப்பேழை - பெரியபுராணம் - மனப்பாடப்பாடல்

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் , இயல் - நான்கு - கவிதைப்பேழை - உயிர்வகை

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - கவிதைப் பேழை - புறநானூறு / 9 th Tamil

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - முதல் பருவம் - கவிதைப் பேழை - ஓ , என் சமகாலத்தோழர்களே

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் , நீரின்றி அமையாது உலகு - நீர்நிலைகள்

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - நாச்சியார் திருமொழி.

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் , இரண்டாம் பருவம் - இராவண காவியம் மனப்பாடப்பாடல்.

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - சிற்பக்கலை - பாடப்பகுதி

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - சந்தை - 9th TAMIL - SANTHAI.

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - இயற்கை - நீரின்றி அமையாது உலகு

பாடமே படமாக ! எட்டாம் வகுப்பு - தமிழ் - தமிழர் இசைக்கருவிகள்

எட்டாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - திருக்குறள் - பகுதி 2

எட்டாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 3 - அணி - இரட்டுற மொழிதலணி

எட்டாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 3 - அணி - வேற்றுமை அணி

எட்டாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 3 - அணி - பிறிது மொழிதலணி

எட்டாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இலக்கணம் - வல்லினம் - மிகா இடம்

எட்டாம் வகுப்பு - தமிழ் - பருவம் மூன்று - இலக்கணம் - வல்லினம் மிகும் இடங்கள்

எட்டாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 2 - திருக்குறள் - 1

எட்டாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - உயிர்க்குணங்கள் - கவிதைப்பேழை

எட்டாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 3 - கவிதைப் பேழை - இளையதோழனுக்கு

எட்டாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - கவிதைப்பேழை - விடுதலைத் திருநாள்

எட்டாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 2 - கவிதைப்பேழை - ஒன்றே குலம்

பாடமே கதையாக ! எட்டாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - படை வேழம்

எட்டாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இயல் 3 - கொங்கு நாட்டு வணிகம்

எட்டாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இலக்கணம் - இயல் 2 - தொகைநிலைத்தொடர்

எட்டாம் வகுப்பு - தமிழ் - இலக்கணம் - இரண்டாம் பருவம் - தொகா நிலைத்தொடர்

எட்டாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இயல் 3 - திருக்குறள் - 1

எட்டாம் வகுப்பு - தமிழ் - பருவம் இரண்டு - இயல் 3 - கவிதைப்பேழை - வளம் பெருகுக

எட்டாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இயல் 3 - கவிதைப்பேழை - மழைச்சோறு

எட்டாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இயல் 1 இலக்கணம் - வேற்றுமை.

எட்டாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இயல் 2 - பாடறிந்து ஒழுகுதல்

எட்டாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - கவிதைப் பேழை - புத்தியைத் தீட்டு

எட்டாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இயல் 1 கவிதைப்பேழை - கல்வி அழகே அழகு

எட்டாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இயல் 2 - கவிதைப் பேழை - திருக்கேதாரம்

எட்டாம் வகுப்பு - தமிழ் - முதல் பருவம் - இயல் 3 - வருமுன் காப்போம் !

எட்டாம் வகுப்பு - தமிழ் - முதல் பருவம் - இயல் 1 - கவிதைப்பேழை - தமிழ்மொழி வாழ்த்து

எட்டாம் வகுப்பு - தமிழ் - புதிய பாடத்திட்டம் - இயல் 2 - ஓடை

ஏழாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம்.பருவம் - புதுமை விளக்கு - கவிதைப் பேழை

ஏழாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 2 - திருக்குறள் - அரண்

ஏழாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 2 - திருக்குறள் - பெருமை

ஏழாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - திருக்குறள் - நாடு

ஏழாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 2 - திருக்குறள் 2

ஏழாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 2 - திருக்குறள்

ஏழாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 3 - மலைப்பொழிவு - கவியரசு

ஏழாம் வகுப்பு - தமிழ். - மூன்றாம் பருவம் - இயல் 3 - இரட்டைக் கிளவி

ஏழாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 3 - ஆகுபெயர்

ஏகதேச உருவகஅணி வகுப்பு 7

ஏழாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 2 - அணி இலக்கணம் - உருவக அணி

ஏழாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 1 - அணி இலக்கணம் - இல்பொருள் உவமையணி

ஏழாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 1 - அணி இலக்கணம்

ஏழாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 1 - அணி இலக்கணம் - உவமை அணி

ஏழாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - அறம் என்னும் கதிர்

ஏழாம் வகுப்பு - தமிழ் - பருவம் 3 - இயல் 1 - கவிதைப்பேழை - விருந்தோம்பல்

பாடமே படமாக ! - ஏழாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கவிதைப் பேழை - வயலும் வாழ்வும்

ஏழாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இயல் 1 - இலக்கணம் - இலக்கிய வகைச் சொற்கள்

ஏழாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இயல் 2 - இன்பத் தமிழ்க் கல்வி

ஏழாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இயல் 1 - கவிதைப்பேழை - கவின்மிகு கப்பல்

ஏழாம் வகுப்பு - தமிழ் - முதல் பருவம் - இயல் 3 - கவிதைப் பேழை - பாஞ்சை வளம்.

ஏழாம் வகுப்பு - தமிழ் - முதல் பருவம் - இயல் 1 - மொழி - ஒன்றல்ல இரண்டல்ல

ஏழாம் வகுப்பு - தமிழ் - புதிய பாடத்திட்டம் - இயல் 2 - இயற்கை

ஏழாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கவிதைப்பேழை - எங்கள் தமிழ்

ஆறாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 3 - அணி இலக்கணம் - இயல்பு

ஆறாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - இயல் 3 - அணி இலக்கணம்

ஆறாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் இயல் 1 - இலக்கணம் - நால்வகைச் சொற்கள்

ஆறாம் வகுப்பு - பருவம் இரண்டு - இயல் 3 - கடலோடு விளையாடு

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 , இலக்கணம் - புணர்ச்சி

ஆறாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இயல் 2 இலக்கணம் - மயங்கொலிகள்

ஆறாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 உரைநடை - கல்விக்கண் திறந்தவர் - கர்மவீரர்

ஆறாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இயல் 2 கவிதைப்பேழை - ஆசாரக்கோவை

ஆறாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - இயல் 2 - கண்மணியே கண்ணுறங்கு .

ஆறாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - கவிதைப்பேழை - துன்பம் வெல்லும் கல்வி

ஆறாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - கவிதைப்பேழை - கண்மணியே கண்ணுறங்கு

ஆறாம் வகுப்பு - தமிழ் - முதல்பருவம் - சிலப்பதிகாரம் - மனப்பாடப்பாடல்

ஆறாம் வகுப்பு - தமிழ் , கவிதைப்பேழை - இன்பத்தமிழ் / Tamil - 6

ஆறாம் வகுப்பு - தமிழ் , பிறந்தநாள் வாழ்த்து / Birth day song - 6 th std

ஆறாம் வகுப்பு - தமிழ் , இயல் - 2 - இயற்கை / மாணவர் நாடகம் , Std 6 - Tamil

ஆறாம் வகுப்பு - தமிழ் - முதற்பருவம் - இயல் மூன்று - கவிதைப்பேழை - அறிவியலால் ஆள்வோம்

ஆறாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - நூலகம் நோக்கி / 6 th Tamil

ஆறாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் - கவிதைப்பேழை - கடலோடு விளையாடு

ஆறாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - கவிதைப்பேழை - பாரதம் அன்றைய நாற்றங்கால்

ஆறாம் வகுப்பு - தமிழ் - மூன்றாம் பருவம் - தமிழ்நாட்டில் காந்தி - உரைநடை

ஆறாம் வகுப்பு - தமிழ் - முதல் பருவம் - இயல் 1 - மொழி - தமிழ்க்கும்மி

ஆறாம் வகுப்பு - தமிழ்.- இயல் 2 - இயற்கை - கவிதைப்பேழை - காணிநிலம் வேண்டும்

ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றி - தமிழ்ப்பாடப்பகுதி - தாள் 2 - பண்டைய இலக்கியம் 200

ஐ.ஏ.எஸ்.தேர்விற்கான தமிழ்ப்பாடப்பகுதி - தாள் 2 - பண்டைய இலக்கியம் -199

விநாயகர் VINAYAGAR கணபதி GANAPATHY பிள்ளையார் PILLAIYAR ஒரு பார்வை









விநாயகரின் வேறு பெயர்கள் 
பிள்ளையார் 
கணபதி
கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார். ஆனைமுகன் – 
ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார். 
கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார். 
விக்னேஸ்வரன்
விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள் பிள்ளையாரை வணங்கி செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.

இந்து மதத்தினுள் உள்வாங்கப்பட்ட சமயமான காணாபத்தியம் எனும் பிரிவு விநாயகரை மையப்படுத்திய சமயம்.

இந்துக்களின் புராணங்களில் விநாயகர் மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும் முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் கூறப்படுகிறார். இக்கடவுளின் வாகனம் மூஞ்சூறு .

’கணேச புராணம்’, கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுகின்றது.

கிருத யுகம்

காஸ்யப முனிவருக்கும் அதீதீ தேவிக்கும் பிள்ளையாக அவதரித்து அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். கிருத யுக அவதாரத்தில் பிள்ளையாரின் திருநாமம் மகாகடர்.

திரேதா யுகம்

அம்பிகை பார்வதியின் பிள்ளையாக அவதரித்து, அழகான மிகப்பெரிய மயிலை தம் குழந்தைப் பருவத்தில் பிடித்து விளையாடியதால் மயூரேசர் என்ற திருநாமம்

துவாபர யுகம்

கஜானனன் என்ற திருநாமத்துடன் அவதரித்து, பராசர மகரிஷி மற்றும் பராசர மகரிஷியின் தேவி வத்ஸலாவால் சிறப்பாக வளர்க்கப்பட்டார்.

கலி யுகம்

சிவபெருமானுக்கும் அம்பிகை பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கியும் வருவதாகக் கணேச புராணம் குறிப்பிடுகின்றது

விநாயகர் பிறப்பு

விநாயகர் பிறப்பு பற்றி பல்வேறு கதைகள் இருந்தாலும் சிவமகா புராணத்தில் உள்ள கதை பரவலாக அறியப்படுகிறது. அதன்படி முற்காலத்தில் யானை முகம் கொண்ட கஜாசுரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி பல வருடங்களாக கடுந்தவம் புரிந்தான். அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்து வேண்டிய வரம் கேட்குமாறு கூறுகிறார். அதற்கு கஜாசுரன், தன் வயிற்றில் சிவபெருமான் லிங்க வடிவில் தங்கியிருக்க வேண்டும் என்று வரம் கேட்டுப் பெற்றார். இதை அறிந்து கலக்கமடைந்த பார்வதி தேவி, தன் அண்ணன் விஷ்ணுவிடம் உதவி கோரினார்.

பிறகு விஷ்ணு மற்றும் நந்தி ஆகிய இருவரும் தெருக்கூத்து நடத்துபவர்கள் போன்ற உருவம் கொண்டு கஜாசுரனின் அரண்மனைக்கு வந்தனர். நந்தியின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த கஜாசுரன், அவர் வேண்டுவதை அளிப்பதாக வாக்களிக்கிறான். அதற்கு நந்தி அவனிடம் சிவபெருமானை விடுவிக்குமாறு கேட்கிறார். கஜாசுரனும் தான் கொடுத்த வாக்கின்படி சிவபெருமானை விடுவித்தான். அவன் சிவபெருமானை நோக்கி பிரபஞ்சத்தில் தன் நினைவு என்றும் அழியாமல் நிலைக்க வேண்டும் என்று வேண்டுகிறான். அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், கஜாசுரனின் யானைத் தலையைக் கொய்து அவரைப் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கிறார். மேலும் அவனது யானைத் தோலை உடுத்திக் கொண்டு கஜசம்ஹார மூர்த்தியாக காட்சியளித்தார். பிறகு சிவபெருமான் தன் வாகனமான நந்தியில் அமர்ந்து கொண்டு கயிலாயம் வருகிறார.

சிவபெருமான் கயிலாயம் வந்து கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ந்த பார்வதி, அவரை வரவேற்கும் முன்பு தயாராக நினைத்தார். ஆனால் அப்போது நந்தி இல்லாததால் அங்கு வாயிற்காவலர் யாரும் இருக்கவில்லை. எனவே பார்வதி தாம் குளிக்கும் முன்பு மஞ்சள் விழுதால் ஒரு சிறுவனைச் செய்து அதற்கு உயிர் கொடுத்தார். அவனுக்கு விக்னங்களைத் தீர்ப்பவன் என்ற பொருளில் விநாயகர் என்ற பெயர் சூட்டினார். மேலும் தான் தயாராகி வரும் வரை ஒருவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று விநாயகரிடம் அறிவுறுத்துகிறார். விநாயகரும் அவ்வாறே செய்வதாக வாக்களிக்கிறான். பிறகு கயிலாயம் வந்தடைந்த சிவபெருமானை விநாயகர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவபெருமான் தன் திரிசூலத்தால் விநாயகரின் தலையைக் கொய்தார். பிறகு நடந்நதை அறிந்து கோபம் கொண்ட பார்வதி, பிரபஞ்சத்தையே அழிக்க முடிவெடுத்தார். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பிரம்மதேவர் வேண்டிக் கொண்டார். அதற்கு பார்வதி, விநாயகரை உயிர்த்தெழச் செய்ய வேண்டும் மற்றும் விநாயகரையே அனைவரும் முழுமுதற் கடவுளாக வணங்க வேண்டும் என்று இரு நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், வடக்கில் தலை வைத்து இறந்த நிலையில் படுத்திருக்குமாறு முதலில் தென்படும் உயிரினத்தின் தலையைக் கொய்து எடுத்து வருமாறு சிவகணங்களை அனுப்பினார். அதன்படி சிவகணங்கள் கஜாசுரனின் தலையுடன் திரும்பி வந்தனர். அதை விநாயகரின் உடலோடு பொருத்தினார் பிரம்மதேவர். பிறகு விநாயகருக்கு உயிரளித்த சிவபெருமான், அவனுக்கு முழுமுதற் கடவுள் என்ற பட்டமும் கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி என்றும் பெயரையும் வழங்கினார்.

விநாயகர் உருவ விளக்கம்

திருவடி

ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.

பெருவயிறு

ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.

ஐந்துகரங்கள்

பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார். தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார் துதிக்கை அனுக்ரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது.எனவே, இவா் ருத்ரா் ஆகிறார் மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே,இவரே சா்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்

கொம்புகள்

மகாபாரதத்தை எழுதுவதற்காக தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துவதாகக் கூறப்படுகின்றது.[8]

தாழ்செவி

விநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.

முப்பத்தியிரண்டு விநாயக மூர்த்தங்கள்

  1. உச்சிட்ட கணபதி
  2. உத்தண்ட கணபதி
  3. ஊர்த்துவ கணபதி
  4. ஏகதந்த கணபதி
  5. ஏகாட்சர கணபதி
  6. ஏரம்ப கணபதி
  7. சக்தி கணபதி
  8. சங்கடஹர கணபதி
  9. சிங்க கணபதி
  10. சித்தி கணபதி
  11. சிருஷ்டி கணபதி
  12. தருண கணபதி
  13. திரயாக்ஷர கணபதி
  14. துண்டி கணபதி
  15. துர்க்கா கணபதி
  16. துவிமுக கணபதி
  17. துவிஜ கணபதி
  18. நிருத்த கணபதி
  19. பக்தி கணபதி
  20. பால கணபதி
  21. மஹா கணபதி
  22. மும்முக கணபதி
  23. யோக கணபதி
  24. ரணமோசன கணபதி
  25. லட்சுமி கணபதி
  26. வர கணபதி
  27. விக்ன கணபதி
  28. விஜய கணபதி
  29. வீர கணபதி
  30. ஹரித்திரா கணபதி
  31. க்ஷிப்ர கணபதி
  32. க்ஷிப்ரபிரசாத கணபதி

விநாயகர் சதுர்த்தி

தமிழகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கே நிறுவப்படும் விநாயகர் சிலைகள் முக்கால் அடியில் இருந்து 70அடி வரை விதவிதமாக செய்யப்படுகின்றன. பின்னர் விநாயகர் சிலையை 3வது நாள், 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்படுகிறது.

தமிழ் நாட்டின் சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோவில்கள் இருப்பதேயாகும். கோயில் என்று பெயர் வைத்து கூரையும் விமானமும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல் அரசமரத்தடி, குளக்கரை முச்சந்தி நாற்சந்தி தெருமுனை என வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஒரே சுவாமி பிள்ளையார்தான்.

இந்தோனேசியா நாட்டின் ருபியா நோட்டில் விநாயகப் பெருமானின் திருவுருவம் உள்ளது

தமிழ்த்துகள்

Blog Archive