கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, November 06, 2024

சிந்தனைத் துளி இளமையாய் இருக்க sinthanai thuli Ilamaiyai irukka to be young

தேன்சிட்டு 2024 நவம்பர் மாத இதழ் 1 வினாடி வினா 84 வினாவிடை


then chittu November 1-15 paper quiz q&a 2024

தேன்சிட்டு 2024 நவம்பர் 1-15 மாத இதழ் வினாடி வினா 84 வினாவிடை pdf

        then chittu magazine 2024 November 1-15 paper quiz 84 questions answers pdf


பதிவிறக்கு/DOWNLOAD

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.11.2024 புதன்

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.11.2024 புதன் 

திருக்குறள்: 


"பால் :பொருட்பால்

 அதிகாரம்: பழைமை 

குறள் எண்:807

 அழிவந்த செய்யினும் அன்புஅறார் அன்பின்

 வழிவந்த கேண்மை யவர்.

பொருள்:அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவு தரும் செயல்களைப் பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்."


பழமொழி :

தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம் அது பனிக்கட்டியாகும்வரை பொறுத்திருந்தால்.   
  Even water can be held in a seive, if you wait  till it turns to ice.

இரண்டொழுக்க பண்புகள் :  
 ‌ *பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.
* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.

பொன்மொழி :
இன்று கை கொடுக்க யாரும் இல்லை என்று வருந்தாதே, நாளை கை தட்ட உலகமே காத்திருக்கும்,  நீ முயற்சி செய்தால் .... 
பொது அறிவு : 
1. ஆக்சிஜன் படகு என்று அழைக்கப்படுவது எது? 

விடை: ஹீமோகுளோபின்

2. மழைத்துளிகள் கோள வடிவத்தை பெறக்காரணம் என்ன?

விடை: பரப்பு இழுவிசை

English words & meanings :

 Bay Leaf-நறுமண இலை,


Chilli-மிளகாய்


வேளாண்மையும் வாழ்வும் : 
பன்னாட்டு அளவிலான இயற்கை வேளாண்மை இயக்கம் (IFOAM) இயற்கை வேளாண்மையை, சில முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்குகிறது.

நவம்பர் 06

போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலை சுரண்டுவதைத் தடுப்பதற்கான பன்னாட்டு நாள்

நீதிக்கதை
 ஒரு வயதான மேஸ்திரி தனது வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது அவரது கனவு. 

தனது முதலாளியான பொறியாளரிடம் சென்று தான் ஓய்வு பெறும் செய்தியை கூறினார். தனது நீண்ட கால பணியாளர் ஒருவர் ஓய்வு பெறுவதில் முதலாளிக்கு சிறிய வருத்தம்தான்.சிறிது நேரம் யோசித்து விட்டு அவர் "எனக்கு  எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும், இன்னும் ஒரே ஒரு வீட்டை மட்டும் கட்டிக் கொடுக்க  முடியுமா?" என்று பணிவோடு கேட்டார்.

மேஸ்திரி அதற்கு சம்மதித்து வேலையை தொடங்கி விட்டாலும் அவரால் அவரால் முழு மனதுடன் அந்த வேலையில் ஈடுபட முடியவில்லை. ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பை கொண்டு அந்த வீட்டை கட்டி முடித்தார். "வேலையில் இருந்து ஓய்வு பெற போகிறோம் இந்த வீட்டை மட்டும் ஒழுங்காக கட்டினால் மட்டும் இனிமேல் என்ன கிடைக்கப் போகிறது" என்று அலட்சியமான போக்கு அவருக்கு. 

வேலை எல்லாம் முடிந்த பிறகு வீட்டை  பார்வையிட்டு விட்டு வந்த முதலாளி  அந்த வீட்டின் சாவியை எடுத்து மேஸ்திரியிடம் கொடுத்தார். " இந்தாருங்கள் இந்த வீடு  தங்களுக்காக நாங்கள் அளிக்கும் அன்பு பரிசு. இத்தனை வருடங்கள் எங்கள் நிறுவனத்திற்காக வேலை செய்தமைக்கான வெகுமதி" என்று மிகவும் சந்தோஷத்துடன் கூறினார்.

 மேஸ்திரியின் முகத்தில்  
ஈயாடவில்லை. "அடடா! நமக்கான வீடு என்று தெரிந்திருந்தால் இன்னும் பலப்பல டிசைன்களில் வடிவமைத்திருக்கலாம், மிக உயர்தரமான பொருட்களைக் கொண்டுஅலங்கரித்திருக்கலாம் என்று மனதில் எண்ணினார்.

 நீதி : நமக்கான வாழ்க்கையை நாம் தான்  தீர்மானிக்கிறோம். செய்யும் தொழிலே தெய்வம்.

இன்றைய செய்திகள்

06.11.2024


* தமிழகத்தில் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அழைப்பு.


* மின்சாதனம் இடமாற்றம், மீட்டர் வாடகை, எரிந்த மீட்டரை மாற்றுவது, மின்இணைப்பு பெயர்மாற்றம் உள்ளிட்ட 25 சேவைகளுக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.


* ‘பொது நன்மை’க்காக தனியார் சொத்துகளை கையகப்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.


* உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் லாகூர்: டெல்லியை விட 6 மடங்கு மோசம் என தகவல்.


* பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: பெலாரஸ் வீராங்கனை சபலென்கா அரையிறுதிக்கு தகுதி.


* தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: தமிழ்நாடு அணி வெற்றி.


Today's Headlines


* Apply through website to set up 'Multhalvar Dispensary' in Tamil Nadu: Tamil Nadu Government Invitation


 * Electricity Board has exempted 25 services from charging GST including relocation of electrical equipment, meter rental, replacement of burnt meter, renaming of power connection.


* A constitution bench of the Supreme Court has ruled that the government has no power to acquire private property for 'public good'.


 * Lahore is the most polluted city in the world: 6 times worse than Delhi.


 * Women's Tennis Championships: Belarus Sabalenka advances to semi-finals


 * National Senior Hockey Tournament: Tamil Nadu team wins.

Tuesday, November 05, 2024

சிந்தனை வரிகள் பெருமை பெருந்தன்மை



Sinthanai varigal perumai perunthanmai 
 

ஒன்பதாம் வகுப்பு தமிழ் நவம்பர் மாதத் தேர்வு 50 மதிப்பெண்கள் வினாத்தாள் இயல் 6


   9th tamil November monthly test question paper pdf unit 6 exam 50 marks

ஒன்பதாம் வகுப்பு தமிழ் நவம்பர் மாதத் தேர்வு வினாத்தாள் இயல் 6 அலகுத் தேர்வு 50 மதிப்பெண்கள் pdf

   9th tamil November monthly test question paper pdf unit 6 exam 50 marks


பதிவிறக்கு/DOWNLOAD

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-11-2024. செவ்வாய்

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

05-11-2024. செவ்வாய்

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 
இயல்: நட்பியல் ; 
அதிகாரம் : நட்பு ; 
குறள் எண் : 818.

குறள் :

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல்.

பொருள்:

தம்மால் முடியக்கூடிய செயலையும், முடிக்க முடியாதபடி கெடுப்பவரின் நட்பை, அவர் அறியும்படி எதுவும் சொல்லாமலே தளரச் செய்து கை விடுதல் வேண்டும்.

பழமொழி :

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

A car without a linch-pin will not move even three spans.

இரண்டொழுக்க பண்புகள்:

1) பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.

2) தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.

பொன்மொழி :

· நடக்கும் முன்னே.. நல்லதே நடக்கும் என்று நினைத்துக்கொள், 
நடந்த பின்னே... நடந்ததும் நல்லதற்கே என்று நினைத்துக்கொள்.

பொது அறிவு :

1. கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய் எது?

ஆந்த்ராக்ஸ்.

2. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர்?

கவிஞர் சுரதா ( சுப்பு இரத்தின தாசன் )

English words & meanings :

Asafoetida - பெருங்காயம்,

Basil - துளசி

வேளாண்மையும் வாழ்வும்:

வளர்ந்து வரும் உலக நாடுகளில், கரிம வேளாண்மைத் தரத்திற்கு ஒப்பான, ஆனால் சான்றளிக்கப்படாத, பல மரபுப் படியான முறைமைகள் கொண்டு விவசாயம் செய்கின்றனர்.

நவம்பர் 05 விராட்கோலி அவர்களின் பிறந்தநாள்

விராட் கோலி பிறப்பு : நவம்பர் 5, 1988) ஓர் இந்தியத் துடுப்பாட்டவீரர் ஆவார். இந்திய அணியின், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளின் முன்னாள் தலைவருமாவார். வலது கை மட்டையாளரான இவர் சர்வதேச சிறந்த துடுப்பாட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். விராட் கோலி பல விருதுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக 2017 ஆம் ஆண்டு சோபர்ஸ் விருது, 2012 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் விருது, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சிறந்த வீரராக விசுடன் விருது இவரின் சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது. 2017 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறை பிரிவில் பத்மஸ்ரீ விருது வழங்கியது..

துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவது மட்டுமல்லாது இந்தியன் சூப்பர் லீக் போட்டித் தொடரில் எஃப்சி கோவா அணி,சர்வதேச டென்னிசு பிரீமியர் லீக் தொடரில் ஐக்கிய அரபு ராயல்ஸ் மற்றும் இந்திய மற்போர் போட்டித் தொடரில் பெங்களூரு யோதாஸ் அணிகளை இணைந்து விலைக்கு வாங்கியுள்ளார். மிகப் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவராக இவரை ஈஎஸ்பிஎன்அறிவித்தது. மேலும் மதிப்புமிக்க தடகள வீரர்களில் ஒருவராக இவரை போர்ப்ஸ் இதழ் அறிவித்தது. 2018 ஆம் ஆண்டில் டைம் இதழ் சக்தி வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக இவரை அறிவித்தது.[[ஏப்ரல் 22, 2021இல் ஐபிஎல் போட்டிகளில் 6,000 ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் எனும் சாதனை படைத்தார்.

நவம்பர் 05 உலக சுனாமி விழிப்புணர்வு நாள் (World Tsunami Awareness Day)


ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.

சுனாமியின் அபாயகரமான விளைவுகள், சுனாமி முன்னெச்சரிக்கை மற்றும்

சுனாமியின் முக்கியத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை

ஏற்படுத்துவதற்காக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.சுனாமி பாதிப்புகள் குறித்து

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அது குறித்த பாதிப்பை

பெருமளவில் குறைக்க முடியும் என்பதே இதன் நோக்கமாகும்.

நீதிக்கதை

ஒரு நாள் அதிக மழை பெய்தது. ஏரி நீரால் நிரம்பியது. ஏரியின் குளிர்ச்சியை தாங்க முடியாத தவளை ஒன்று, மழை நின்றவுடன் கிணற்று நீர் வெதுவெதுப்பாக இருக்குமே என நினைத்து அருகில் இருந்த கிணற்றுக்குள் குதித்தது. பல காலமாக அந்த கிணற்றில் வாழ்ந்து வந்த மற்றொரு தவளை இந்த புதிய தவளையை வரவேற்றது. மேலும், பொந்தில் சேமித்து வைத்திருந்த உணவுப் பொருட்களை எடுத்து புதிய தவளைக்கு கொடுத்து மகிழ்ந்தது. கிணற்றில் இருந்த மற்ற தவளைகளுக்கு புதியதாக வந்த தவளையை பிடிக்கவில்லை.

இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருப்பதை அருகே சென்று

வேடிக்கை பார்த்தன. அப்பொழுது கிணத்து தவளை ஏரி தவளையிடம்,

"நண்பனே! இத்தனை நாள் நீ எங்கே தங்கி இருந்தாய்?" என்று கேட்டது.

அதற்கு புதிய தவளை, நான் ஏரியில் தங்கி இருந்தேன் அங்கு மீன், முதலை,

ஆமை போன்றவை வாழ்கின்றன. ஏரி இந்த கிணற்றை விட மிகப்பெரியதாக

இருக்கும்" என்று கூறியது. அதற்கு அந்த கிணற்றுத் தவளை மிகவும்

கோபத்துடன் "நண்பா நீ பொய் சொல்கிறாய். இந்த கிணற்றை விட மிகப்பெரிய

நீர் நிலை இந்த உலகத்திலேயே இல்லை என்று கூறியது.ஏரி தவளை

எவ்வளவோ எடுத்து சொல்லியும் கிணற்றுத் தவளைகள் நம்பவில்லை.

எல்லா கிணற்றுத் தவளைகளும் ஏரி தவளையை பார்த்து," நீ பொய்யன். நீ பொய் சொல்கிறாய் கிணற்றை விட பெரிய நீர் நிலை உலகில் எதுவும் இல்லை என்று ஒரு சேர சத்தமிட்டன. அப்போது ஒரு பெண்மணி தண்ணீரை எடுப்பதற்காக வாளியை கிணற்றுக்குள் இறக்கினார். அந்த வாளிக்குள் ஏறி கிணற்றில் இருந்து வெளியே வந்தது ஏரி தவளை, குளிர்ச்சியான தண்ணீராக இருந்தாலும் பரவாயில்லை என்று மனதில் நினைத்துக் கொண்டே ஏரியை நோக்கி சென்றது.

நீதி: முட்டாள்களுடன் இருப்பதை விட தனியே இருப்பதே சிறந்தது

இன்றைய செய்திகள் 05.11.2024

* டிசம்பர் முதல் வாரத்தில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

* வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.

டிஜிட்டல் அரெஸ்ட்' விவகாரத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போன், சமூக வலைதளங்களில் யாரிடமும் ஏமாறக் கூடாது என்று அமலாக்கத் துறை அறிவுறுத்தி உள்ளது.

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 9 பேர் பலி, 10,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பு.

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: முதல் நாளில் கர்நாடகா, மத்திய பிரதேச அணிகள் வெற்றி.

Today's Headlines 05.11.2024

Tamil Nadu Legislative Assembly to meet in first week of December: Official announcement soon.

Weather forecast: There will be chance of rain in Tamil Nadu for next 6 days.

Public should be aware of 'Digital Arrest' issue. The enforcement department has advised that nobody should be got cheated through cell phones and social media.

There is volcano eruption in Indonesia: 9 dead and 10,000 became homeless.

Paris Masters International Tennis Tournament: Alexander Zverev of Germany won the men's singles title.

National Senior Hockey Tournament: Karnataka, Madhya Pradesh won on first day.

Monday, November 04, 2024

வகுப்பு 10 தமிழ் இரண்டாம் இடைப்பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் நவம்பர் 2024


10th tamil II mid term model question

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு நவம்பர் 2024 மாதிரி வினாத்தாள் pdf விருதுநகர் மாவட்டம்

 10th tamil second mid term exam Model question paper November 2024 Virudhunagar district sslc X


பதிவிறக்கு/DOWNLOAD

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-11-2024.திங்கள்.

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

04-11-2024.திங்கள்.

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 
இயல் : அமைச்சியல் ; 
அதிகாரம்: அவை அஞ்சாமை ; 
குறள் எண் : 724.

குறள் :

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.

பொருள்:

கற்றவர் முன், தாம் கற்றவற்றை அவர் மனதில் பதியும்படிச் சொல்லி, தம்மை விட அதிகமாகக் கற்றவரிடம் தாம் கற்கவேண்டிய மிகுதியைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

பழமொழி :

> அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான். The fearless goes into the assembly.

இரண்டொழுக்க பண்புகள்:

1) பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.

2) தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.

பொன்மொழி :

புத்தக கடையில் புரட்டி புரட்டி பார்த்து வாங்குவது நல்ல புத்தகம் அல்ல, எந்த புத்தகம் உன்னை முன்னேற்றம் நோக்கி புரட்டி போட வைக்கிறதோ அதுவே சிறந்த புத்தகம்.

பொது அறிவு:


1. நிறமாலையில் குறைவான ஒளி அலை நீளமுடைய நிறம்

ஊதா.

2. பித்தநீர் எப்பகுதியில் சுரக்கிறது?

கல்லீரல்

English words & meanings :

+ Pliers - இடுக்கி ,

Sewing Machine - தையல் இயந்திரம்

வேளாண்மையும் வாழ்வும்:

சில சமயங்களில் அரசாங்கம் இயற்கை விவசாயத்திற்கு அளித்த மானியத்தால் கவரப்பட்டு பல விவசாயிகள் இயற்கை விவசாய முறைமைக்கு மாறினர்.

நீதிக்கதை -பேச்சு

ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே ஒரு துறவி அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன் அந்த துறவியை பார்த்து, "ஏய் கிழவா, ஏற்கனவே இந்த வழியாக யாராவது சென்றார்களா?" என்று சற்று அதிகாரத்துடன் மரியாதையின்றி கேட்டான். அதற்குத் துறவி, "அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை" என்று கூறினார். சிறிது நேரம் கழித்து வேறொருவர் வந்து, "ஐயா இந்த வழியாக யாராவது சென்றார்களா?" என்று கேட்டார். அதற்குத் துறவி, "ஆம். சற்று முன்பாக இதே கேள்வியை கேட்டுக் கொண்டு ஒருவர் சென்றார்" என்று பதில் கூறினார்.

மீண்டும் சிறிது நேரம் கழித்து, இன்னொருவர் வந்து "வணங்குகிறேன் துறவியாரே ! இந்த வழியாக யாரேனும் செல்லும் சப்தம் தங்களுக்கு கேட்டதா?" என்று பணிவுடன் கேட்டார். அதற்குத் துறவி, "மன்னரே! வணக்கம் முதலில் ஒரு வீரனும் அதற்குப் பின் ஒரு அமைச்சரும் தாங்கள் கேட்ட கேள்வியையே கேட்டுக்கொண்டு சென்றார்கள்" என்று கூறினார். அப்போது மன்னர் மிகவும் ஆச்சரியத்துடன், "ஐயா, தங்களுக்கு கண் பார்வை கிடையாது ஆனால் வந்தவர் வீரன் என்றும் அமைச்சர என்றும் எவ்வாறு கண்டு கொண்டீர்கள்" என்று கேட்டார்.

அதற்குத் துறவி "இதை கண்டுகொள்ள பார்வை தேவையில்லை அவரவர் பேசும் முறையைக் கொண்டு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை கண்டு கொள்ளலாம்" என்றார். மேலும் "முதலில் வந்தவர் பேச்சில் கொஞ்சம் மரியாதையின்மையும் அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரமும் தங்களின் பேச்சில் பணிவும் இருக்கிறது" என்று துறவி கூறினார்.

நீதி : நமது பேச்சே நமது நடத்தையை தீர்மானிக்கிறது.

இன்றைய செய்திகள் 04.11.2024

வடகிழக்கு பருவமழை முடியும் வரை மருத்துவ முகாம்கள் தொடர்ந்து செயல்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரி ரூ.22 கோடியில் சீரமைப்பு: டெண்டர் கோரியது நீர்வளத் துறை.

* நோய்களை தடுத்து ஆரோக்கியமான மக்களை உருவாக்க பனிமலை, பாலைவனம், தீவாக இருந்தாலும் தடுப்பூசி சேவை வழங்கப்படுவதாக மத்திய அரசு தகவல்.

சீனர்கள் மீதான தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும்: சீன அரசு வலியுறுத்தல்.

31 அணிகள் பங்கேற்கும் தேசிய ஹாக்கி போட்டி; சென்னையில் இன்று தொடக்கம்.

ஹைலோ ஓபன் பேட்மிண்டன் போட்டி; இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோத் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

Today's Headlines 04.11.2024

Health Minister M. Subramanian has said that the medical camps will continue to function until the northeast monsoon ends.

Renovation of Chembarambakkam lake at Rs 22 crore: Water resources department calls for tender.

The central government informed that vaccination services are provided even in mountains, deserts and islands to prevent diseases and create healthy people.

Pakistan must curb terror attacks on Chinese: Chinese Government insists.

National Hockey Tournament in which 31 team participate will Start today in Chennai.

Hilo Open Badminton Tournament; Indian player Malavika Bansod advances to final.

Wednesday, October 30, 2024

தீபாவளி வாழ்த்து தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்


DEEPAVALI VALTHUGAL DIWALI WISHES

தீபாவளி வாழ்த்துக் கவிதை தீப ஒளி திருநாள் கவிதை


 DIWALI WISHES POEM DEEPAVALI KAVITHAI IN TAMIL

தீபாவளி வாழ்த்துக் கவிதை தீப ஆவளி திருநாள் கவிதை 1


DIWALI WISHES POEM 

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்30-10-2024. புதன்

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

30-10-2024. புதன் 

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 
இயல் : அமைச்சியல் ; 
அதிகாரம் : அவை அஞ்சாமை ; 
குறள் எண் : 724.

குறள் :

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.

பொருள்:

கற்றவர் முன், தாம் கற்றவற்றை அவர் மனதில் பதியும்படிச் சொல்லி, தம்மை விட அதிகமாகக் கற்றவரிடம் தாம் கற்கவேண்டிய மிகுதியைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

பழமொழி :

பகைவனை நேசித்துப்பார்

Do good to those who harm you.

இரண்டொழுக்க பண்புகள்:

1) திடீரென மழை அதிகமாக பெய்யும் நேரத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

2) மழை பெய்யும் நேரத்தில் மரங்களின் அடியிலோ, மின்கம்பங்களின் அருகிலோ நிற்க மாட்டேன்.

பொன்மொழி :

* வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு வேடிக்கை பார்த்தவர்க்கும், விமர்சனம் செய்பவர்க்கும் ஒரு வரி கூட கிடையாது வாழ்க்கை புத்தகத்தில்.

பொது அறிவு:

1. சாத்தனூர் அணை எந்த நதியின் குறுக்கே கட்டுப்பட்டுள்ளது?

தென்பெண்ணை

2. இந்தியாவின் மிகப்பெரிய நீர்ப்பாசன கால்வாய் எது?

English words & meanings:

சாரதா கால்வாய்

+ Needle ஊசி,

+ Pliers - இடுக்கி

வேளாண்மையும் வாழ்வும்:

பொது மக்களிடையே இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வும், அக்கறையும் அதிகரிக்கவே, தொடக்கத்தில் வழங்குதல்களின் அடிப்படையில் தொடங்கிய இந்த இயக்கம், தேவையின் அடிப்படையிலாக மாறியது. நுகர்வோர் இதற்காக கூடுதல் விலை கொடுக்க முன்வந்தனர்.

அக்டோபர் 30 மாரடோனா அவர்களின் பிறந்தநாள்

✓1960 அக்டோபர் 30 ஆம் தேதி அர்ஜென்டினாவின் Lanús பகுதியில் பிறந்தவர் மாரடோனா.

✓அவரது குடும்பம் எளிய பின்னணியை கொண்டது. அவருக்கு நான்கு தங்கைகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

மாரடோனா மூன்று வயது சிறுவனாக இருந்த போது கால்பந்து ஒன்று அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் கால்பந்தாட்டத்தின் மீதான காதலை பின்னாளில் வளர்த்துள்ளது.

வீட்டில் வறுமை வாட்டிய போதும் கால்பந்தை விடாமல் விரட்டியுள்ளார்

மரடோனா. 15 வயது 355 நாளில் தொழில்முறை கால்பந்தாட்ட

விளையாட்டில் முதல்முறையாக விளையாடி உள்ளார் மாரடோனா.

✓அதற்கடுத்த சில மாதங்களில் அர்ஜென்டினா அணிக்காக விளையாட ஆரம்பித்தார் மாரடோனா.

✓அதன்பிறகு நடந்த அனைத்தும் வரலாறு. அர்ஜென்டினா அணிக்காக 91 ஆட்டங்களில் விளையாடிய மாரடோனா 34 கோல்களை அடித்துள்ளார்.

நூற்றாண்டின் சிறந்த கோல் என போற்றப்படும் கோலை இங்கிலாந்துக்கு எதிராக அடித்திருந்தார் மாரடோனா. அதே ஆட்டத்தில் தான் சர்ச்சையான HAND OF GOD என்ற கோலும் அடிக்கப்பட்டது.

நீதிக்கதை -அச்சம்

அக்பரிடம் ஒரு அறிவாளி, "எனது வேலைக்காரன் ஒருவன் பெரும் தீனிக்காரன். அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுங்கள். ஆனால் அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. மாத இறுதியில் அவனுடைய உடலில் ஒரு கிலோ எடை கூட ஏறக்கூடாது" என்று சவால் விட்டார். அக்பரின் சார்பாக பீர்பால் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார். அதேபோல் அந்த வேலையாளுக்கு ஒரு மாதம் சத்தான உணவுகள் வழங்கப்பட்டது. மாத இறுதியில் அவருடைய எடையை பார்த்தபோது, அவருடைய எடை கூடவே இல்லை. அக்பருக்கு ஆச்சரியம் என்ன நடந்தது என்று விசாரித்தார்.

பீர்பால், "அரசரே அவருக்கு மூன்று வேளையும் சத்தான உணவுகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அவருடைய இரவு படுக்கை மட்டும் சிங்கத்தின் குகையின் அருகே அமைக்கப்பட்டது. அதனுடைய கதவின் பூட்டு சரியாக இல்லை என்றும் கூறினேன். அச்சத்தின் காரணமாகவே அவருடைய உடலில் ஊட்டச்சத்து ஒட்டவில்லை.

நீதி: அச்சமின்மையே ஆரோக்கியம்.

இன்றைய செய்திகள் 30.10.2024

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகளை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் உறுதி.

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும். இதன் அடிப்படையில் வரும் 2028-ம் ஆண்டில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புரோ கபடி லீக்; பெங்கால் வாரியர்ஸ் - புனேரி பால்டன் ஆட்டம் 'டிரா'.

* கால்பந்து விளையாட்டின் உயரிய விருதான பலோன் டி'ஆர் 2024 விருதை வென்றார் மான்செஸ்டர் சிட்டி மிட் பீல்டர் ரோட்ரி.

Today's Headlines

30.10.2024

Chennai Police Commissioner Arun has issued 19 restrictions on bursting crackers on the occasion of Diwali.

No chance of heavy rain in Tamil Nadu till November 1: Meteorological Department confirms.

A nationwide census will be launched next year. Based on this, the constituencies will be redefined in the coming year 2028, the central government sources said.

Pro Kabaddi League; Bengal Warriors - Puneri Paltan Match 'Draw'.

Manchester City midfielder Rodry has won football's highest award, the Ballon d'Or 2024.

தமிழ்த்துகள்

Blog Archive