கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, January 11, 2026

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஜனவரி 19

10th tamil model notes of lesson

lesson plan January 19

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

19-01-2026 முதல் 23-01-2026

2.அலகு

1 - 7

3.பாடத்தலைப்பு

7 இயல்கள்

இரண்டாம் திருப்புதல் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/10-2025_27.html

https://tamilthugal.blogspot.com/2025/11/5_21.html

https://tamilthugal.blogspot.com/2025/11/4_20.html

https://tamilthugal.blogspot.com/2025/11/3_19.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2_18.html

https://tamilthugal.blogspot.com/2025/11/1.html

4.திருப்புதல் வினாக்கள்

1.பின்வருவனவற்றுள் முறையான தொடர் –                  தமிழ்த்துகள்

அ.தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.

ஆ.தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.                   

இ.தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

ஈ.தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.

2. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது ________

அ.சுட்டி                  ஆ.கிண்கிணி                     இ.குழை                  ஈ.சூழி

3. நன்மொழி என்பது -

அ.பண்புத்தொகை    ஆ.உவமைத்தொகை         இ.அன்மொழித்தொகை      ஈ.உம்மைத்தொகை

4.காசிக்காண்டம் என்பது –            தமிழ்த்துகள்

அ.காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்         ஆ.காசி நகரத்தைக் குறிக்கும் மறு பெயர்

இ.காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்       ஈ.காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

5. சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.

6. 'கரப்பிடும்பை இல்லார்' இத்தொடரின் பொருள் கூறுக.

7. 'நச்சப்படாதவன்' செல்வம் - இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

8. இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக.

9. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக; தொடரில் அமைக்க.

10. அ.போராட்டக் கலைஞர் - பேச்சுக் கலைஞர் - நாடகக் கலைஞர் - திரைக் கலைஞர் - இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.  

அல்லது

ஆ. பாய்ச்சல் கதையின் மையக் கருத்தைக் குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி எழுதுக.

11.வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்

 கோலொடு நின்றான் இரவு           - குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

12. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

13. 'இன்மையிலும் விருந்தோம்பல்' குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.

14 அ.உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.                                              அல்லது

ஆ. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

15. உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலைகூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

தமிழ்த்துகள்

Blog Archive