கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, May 31, 2025

மூன்று வகையான நிலாச்சோறு 3 types of moon food


 

வகுப்பு 10 தமிழ் இயல் 6 முத்தொள்ளாயிரம் வினாடிவினா 15 வினாக்கள் Tenth Tamil Quiz 1 mark Unit 6 muthollayiram


Tenth Tamil Quiz 1 mark Unit 6 muthollayiram

வகுப்பு 10 தமிழ் இயல் 6 சிலப்பதிகாரம் வினாடிவினா 20 வினாக்கள் Tenth Tamil Quiz 1 mark Unit 6 silapathikaram


Tenth Tamil Quiz 1 mark Unit 6 silapathikaram

வகுப்பு 10 தமிழ் இயல் 6 சிற்றகல் ஒளி வினாடிவினா 25 வினாக்கள் Tenth Tamil Quiz 1 mark Unit 6 ma.po.si


Tenth Tamil Quiz 1 mark Unit 6 ma.po.si

திருக்குறள் 149 நலக்குரியார்... குறளும் விளக்கமும் thirukural Explanation tamil & english - nalakuriyar


thirukural Explanation tamil & english - nalakuriyar

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

Friday, May 30, 2025

தமிழ் மாதாந்திரப் பாடத்திட்டம் 2025 - 2026 வகுப்பு 6,7,8,9,10 TAMIL MONTHLY SYLLABUS VI - X NEW


TAMIL MONTHLY SYLLABUS VI - X NEW 

Pdf Link

 

பத்தாம் வகுப்பு தமிழ்

 

https://tamilthugal.blogspot.com/2025/05/2025-26-pdf_51.html

 

ஒன்பதாம் வகுப்பு தமிழ்

 

https://tamilthugal.blogspot.com/2025/05/2025-26-pdf_46.html

 

எட்டாம் வகுப்பு தமிழ்

 

https://tamilthugal.blogspot.com/2025/05/2025-26-pdf_72.html

 

ஏழாம் வகுப்பு தமிழ்

 

https://tamilthugal.blogspot.com/2025/05/2025-26-pdf_29.html

 

ஆறாம் வகுப்பு தமிழ்

 

https://tamilthugal.blogspot.com/2025/05/2025-26-pdf.html


வகுப்பு 10 தமிழ் இயல் 5 திருக்குறள் வினாடிவினா 10 வினாக்கள் Tenth Tamil Quiz 1 mark Unit 5 thirukural


Tenth Tamil Quiz 1 mark Unit 5 thirukural

வகுப்பு 10 தமிழ் இயல் 5 அகப்பொருள் இலக்கணம் வினாடிவினா 50 வினாக்கள்


Tenth Tamil Quiz 1 mark agaporul 50 marks

திருக்குறள் 148 பிறன்மனை... குறளும் விளக்கமும் thirukural Explanation tamil & english - piranmanai


 thirukural Explanation tamil & english - piranmanai

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

Thursday, May 29, 2025

today's punch Perseverance விடாமுயற்சி


 

வகுப்பு 10 தமிழ் இயல் 5 பாய்ச்சல் வினாடிவினா 10 வினாக்கள் Tenth Tamil Quiz 1 mark paychal


Tenth Tamil Quiz 1 mark paychal 10 marks

வகுப்பு 10 தமிழ் இயல் 5 கம்பராமாயணம் வினாடிவினா 15 வினாக்கள் Tenth Tamil Quiz 1 mark kambaramayanam


Tenth Tamil Quiz 1 mark kambaramayanam 15 marks

பத்தாம் வகுப்பு தமிழ் - புதிய மாதாந்திரப் பாடத்திட்டம் 2025 - 26 pdf X TAMIL SSLC NEW MONTHLY SYLLABUS 10TH

  X TAMIL NEW MONTHLY SYLLABUS 10TH STANDARD SSLC 2025 - 26 pdf 


பதிவிறக்கு/DOWNLOAD


ஒன்பதாம் வகுப்பு தமிழ் - புதிய மாதாந்திரப் பாடத்திட்டம் 2025 - 26 pdf IX TAMIL NEW MONTHLY SYLLABUS 9TH

  IX TAMIL NEW MONTHLY SYLLABUS 9TH STANDARD 2025 - 26 pdf 


பதிவிறக்கு/DOWNLOAD


எட்டாம் வகுப்பு தமிழ் - புதிய மாதாந்திரப் பாடத்திட்டம் 2025 - 26 pdf VIII TAMIL NEW MONTHLY SYLLABUS 8TH

  VIII TAMIL NEW MONTHLY SYLLABUS 8TH STANDARD 2025 - 26 pdf 


பதிவிறக்கு/DOWNLOAD


ஏழாம் வகுப்பு தமிழ் - புதிய மாதாந்திரப் பாடத்திட்டம் 2025 - 26 pdf VII TAMIL NEW MONTHLY SYLLABUS 7TH

  VII TAMIL NEW MONTHLY SYLLABUS 7TH STANDARD 2025 - 26 pdf 


பதிவிறக்கு/DOWNLOAD


ஆறாம் வகுப்பு தமிழ் - புதிய மாதாந்திரப் பாடத்திட்டம் 2025 - 26 pdf VI TAMIL NEW MONTHLY SYLLABUS

 VI TAMIL NEW MONTHLY SYLLABUS 6TH STANDARD 2025 - 26 pdf 


பதிவிறக்கு/DOWNLOAD


வகுப்பு 10 தமிழ் இயல் 5 பன்முகக் கலைஞர் வினாடிவினா 50 வினாக்கள் Tenth Tamil Quiz 1 mark kalaignar


Tenth Tamil Quiz 1 mark kalaignar

திருக்குறள் 147 அறனியலான்... குறளும் விளக்கமும் thirukural Explanation tamil & english - Araniyalan



thirukural Explanation tamil & english - Araniyalan

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்

Wednesday, May 28, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 10th tamil model notes of lesson 2025 june 2

10th tamil model notes of lesson

tenth lesson plan 2025 june 2

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

02-06-2025 முதல் 06-06-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

அமுத ஊற்று – கவிதைப்பேழை, உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

அன்னை மொழியே, பாவாணர் பார்வையில் தமிழ்ச்சொல் வளம்

6.பக்கஎண்

2 - 7

7.கற்றல் விளைவுகள்

T-1001 தமிழ்  மொழியின் செழுமை குறித்து ஆற்றலுடன் தனித்தமிழில் உரையாற்றுதல், கவிதையைப் படித்துச் சுவைத்தல், பொருளுணர்தல்

T-1002 மொழியிலுள்ள வகைப்படுத்தப்பட்ட சொல்வளங்களைச் சொற்களின் வாயிலாகப் பேச்சிலும் எழுத்திலும் இடமறிந்து கையாளுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

கவிதையில் அமைந்த சொற்களின் பொருளுணர்ந்து எழுதுதல்.

தமிழ் மொழியின் சிறப்பியல்புகளை அறிதல்.

9.நுண்திறன்கள்

கவிதை வெளிப்படுத்தும் நயங்களைப்  பாராட்டிப் பேசுதல்.

தமிழ்ச் சொல் வளங்கள் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2025/05/10-1-15.html

https://tamilthugal.blogspot.com/2025/05/10-1-65.html

https://tamilthugal.blogspot.com/2024/06/1_3.html

https://tamilthugal.blogspot.com/2024/06/1_98.html

https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post.html

https://tamilthugal.blogspot.com/2019/07/blog-post_20.html

https://tamilthugal.blogspot.com/2021/06/10th-tamil-online-test-annai-moliye-one.html

https://tamilthugal.blogspot.com/2023/06/10th-tamil-ppt-power-point-presentation.html

https://tamilthugal.blogspot.com/2022/06/annai-moliye-tenth-tam.html

https://tamilthugal.blogspot.com/2023/06/10th-tamil-annai-moliye.html

https://tamilthugal.blogspot.com/2021/02/10th-tamil-annai-moliye-online-test.html

https://tamilthugal.blogspot.com/2021/01/annai-mozhiye-10th-tamil-mind-map.html

https://tamilthugal.blogspot.com/2019/06/blog-post_6.html

https://tamilthugal.blogspot.com/2021/10/1-1-10th-tamilcholvalam-one-word.html

https://tamilthugal.blogspot.com/2021/12/1-10th-tamil-online-test-with.html

https://tamilthugal.blogspot.com/2022/04/tamilchol-valam-tenth-tamil-nedu-vina-q.html

https://tamilthugal.blogspot.com/2020/01/blog-post_19.html

https://tamilthugal.blogspot.com/2021/03/thaavara-ilaikalin-peyarkal-tamilil.html

https://tamilthugal.blogspot.com/2021/03/thavara-adippakuthi-10th-tamilcholvalam.html

https://tamilthugal.blogspot.com/2020/05/6-poovin-paruvangal-sixth-tamil.html

11.ஆயத்தப்படுத்துதல்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் பொருளைக் கூறச் செய்தல்.      

மாணவர்கள் அறிந்த இலையின் வகைளைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

பெருஞ்சித்திரனார், பாவாணர் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

தமிழ்ச்சொல் வளத்தை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          கனிச்சாறு நூலில் உள்ள அன்னை மொழியே பாடலைப் பொருளுடன் விளக்குதல். தமிழின் பெருமையை தொன்மையை அறியச் செய்தல்.

தமிழ்ச்சொல் வளம் பாடத்தின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.

          அடிவகை, கிளைப்பிரிவுகள், காய்ந்த அடி, கிளை, இலை வகை, கொழுந்து வகை, பிஞ்சு, குலை, கெட்டுப்போன காய்கனி, பழத்தோல், மணி, இளம் பயிர் வகைகள் குறித்து விளக்குதல். தமிழ்ச்சொல் வளங்கள் குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல். பாவாணர் பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.




          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          பெருஞ்சித்திரனார் குறித்துக் கூறுதல்.

அலைபேசி, செயலிகளின் தமிழ்ச்சொற்களை அறியச் செய்தல்.

          தமிழ்ச் சொற்களின் சிறப்புகளை அறிந்து வரல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       எந்தமிழ்நா என்பதைப் பிரித்தெழுதுக.

கிளைப்பெயர் வகைகளை எழுதுக.

          ந.சி.வி – தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

’புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’

இதுபோல் இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

உ.சி.வி –      நாட்டுவளமும் சொல்வளமும் தொர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          எட்டுத் தொகை நூல்களின் பெயர்க்காரணங்களை அறிந்து வருதல்.

பிறதுறைகளின் தமிழ்ச் சொல் வளங்களைத் தொகுத்தல்.

தமிழ் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 9th tamil model notes of lesson 2025 june 2

 9th tamil model notes of lesson

lesson plan 2025 june 2

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

02-06-2025 முதல் 06-06-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

அமுதென்று பேர் – கவிதைப்பேழை, உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

தமிழ்விடு தூது, திராவிட மொழிக்குடும்பம்

6.பக்கஎண்

2 - 9

7.கற்றல் விளைவுகள்

T-9001 மொழியின் தேவை, தோற்றம், தொன்மை, தனித்தன்மைகள் ஆகியவற்றை அறிந்து பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

திராவிட மொழியின் தொன்மை, தோற்றம், தனித்தன்மைகள் பற்றி அறிதல்.

9.நுண்திறன்கள்

தமிழின் சிறப்பை பிற மொழிகளுடன் ஒப்பிட்டுக் கூறும் கருத்துகளை அறிதல்

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post.html  

https://tamilthugal.blogspot.com/2022/01/9-1-9th-tamil-online-test-tamilvidu.html

https://tamilthugal.blogspot.com/2024/06/1_5.html

https://tamilthugal.blogspot.com/2020/09/9-1-thiravida-mozhi-kudumbam-9th-tamil.html

https://tamilthugal.blogspot.com/2021/03/16-best-qualities-of-tamil.html

https://tamilthugal.blogspot.com/2022/07/9-9th-big-question-thiravida-moli.html

https://tamilthugal.blogspot.com/2022/01/9-1-9th-tamil-online-test-thiravida.html

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்கள் அறிந்த தென்னிந்திய மொழிகளைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

தூது பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

மொழி வரலாறு பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தமிழ்விடு தூது பாடலின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல். தமிழின் குணம், வண்ணங்கள், சுவைகள், அழகுகள் குறித்து அறியச் செய்தல்.

          கண்ணி, சிற்றிலக்கியம், கவிதைகள் குறித்து விளக்குதல்.

திராவிட மொழிக்குடும்பம் பாடப்பொருளின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல். ச.அகத்தியலிங்கம், மாகஸ் முல்லர், ஹீராஸ் பாதிரியார், கால்டுவெல் குறித்து அறியச் செய்தல்.

          மொழி குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல். திராவிட மொழிகளின் சொல் ஒற்றுமை பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.




          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், தமிழின் தனித்தன்மைகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          தமிழின் சிறப்புகளை அறிந்து வரல்.

தமிழின் பழைமையான இலக்கிய இலக்கணங்களை அறியச் செய்தல்.

          தமிழின் தனித்தன்மைகளை அறிந்து வரச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       கண்ணி என்பதன் விளக்கம் யாது?

நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது?

          ந.சி.வி – திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை?

உ.சி.வி –      நீ அறிந்த தமிழின் சிறப்பு இயல்புகளை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          மொழி ஆய்வாளர்களின் படங்களைத் தொகுத்தல்.

தமிழ் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 8th tamil model notes of lesson 2025 june 2

8th tamil model notes of lesson

lesson plan 2025 june 2

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

02-06-2025 முதல் 06-06-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

தமிழ் இன்பம் - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

தமிழ்மொழி வாழ்த்து

6.பக்கஎண்

2 - 4

7.கற்றல் விளைவுகள்

T-816 மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில் எழுதும்போது பயன்படுத்துதல் (சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில் ஏற்படும் ஓசை நயத்தைப் புரிந்துகொள்ளுதல்)

8.திறன்கள்

          செய்யுளைப்படித்து அதன் நயங்களைப் போற்றும் திறன் பெறுதல்.

9.நுண்திறன்கள்

          மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது மொழி. தமிழர்கள் தம் தாய்மொழியாகிய தமிழை உயிராகக் கருதிப் போற்றி வந்ததை உணர்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/06/8-8th-tamil-worksheet-with-pdf.html

https://tamilthugal.blogspot.com/2020/06/8-tamil-mozhi-vazhthu-8th-memo.html

https://tamilthugal.blogspot.com/2021/04/tamil-moli-valthu-8th-tamil-kuruvina.html

https://tamilthugal.blogspot.com/2022/06/1-8th-tamil-mindmap-unit-1-tamilmoli.html

https://tamilthugal.blogspot.com/2020/06/tamil-mozhi-vaazhthu-8th-memory-song.html

https://tamilthugal.blogspot.com/2019/06/8-mp3.html

https://tamilthugal.blogspot.com/2018/12/bharathiyar.html

https://tamilthugal.blogspot.com/2022/03/mahakavi-barathiyar-tamil-kaviyaranka.html

11.ஆயத்தப்படுத்துதல்

          தமிழ்மொழியின் பெருமைகளை மாணவர்களைக் கூறச் செய்தல்.

          தமிழின் சிறப்பைக் கூறும் கவிதையைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

பாரதியார் கவிதைகளை அறிமுகப்படுத்துதல்.

பாரதியை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தமிழ்மொழி வளமானது, புகழ்கொண்டது, அறியாமை இருளை நீக்குவது, உலகம் முழுவதையும் சிறப்படையச் செய்வது, துன்பங்கள் நீக்கி ஒளிரச் செய்வது, மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க என்று பாரதி பாடுவதை மாணவர்களுக்கு விளக்குதல்.

          தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை இசையுடன் மாணவர்களைப் பாடச் செய்தல்.

          தமிழின் சிறப்புகளை அறிந்து வரல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?

                   பாரதியார் நடத்திய இதழ்கள் எவை?

          ந.சி.வி – பொருள் கூறுக.

                   வைப்பு, இசை, சூழ்கலி.

                   பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?

          உ.சி.வி –      உனக்குப் பிடித்த தமிழின் சிறப்பைக் கூறு.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          தமிழின் சிறப்புகளைத் தொகுத்தல்.

பாரதியார் குறித்து இணையம் மூலம் அறிதல்.

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 7th tamil model notes of lesson 2025 june 2

 7th tamil model notes of lesson

lesson plan 2025 june 2

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

02-06-2025 முதல் 06-06-2025

2.பருவம்

1

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

அமுதத் தமிழ் – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

எங்கள் தமிழ்

6.பக்கஎண்

2 - 4

7.கற்றல் விளைவுகள்

T-713 பல்வேறு கதைகள் / பாடல்களைப் படித்துப் பல்வேறு வகையான முறைகளையும் நடைகளையும் (வருணனை, உணர்வு சார்ந்தவை, இயற்கை வருணனை போன்றவை) இனங்காணல்.

8.திறன்கள்

          செய்யுளைப்படித்து மையக்கருத்தை எடுத்து உரைக்கும் திறன் பெறுதல்.

9.நுண்திறன்கள்

          மென்மையும் இனிமையும் வளமையும் உடையது தமிழ்மொழி. வாழ்வுக்குத் தேவையான அன்பையும் அறத்தையும் கூறுவது தமிழ் என்பதை உணர்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/06/7-7th-tamil-worksheer-with-pdf-engal.html

https://tamilthugal.blogspot.com/2019/06/7-mp3.html

https://tamilthugal.blogspot.com/2021/06/1-1-7th-tamil-engalthamizh-term-1.html

https://tamilthugal.blogspot.com/2019/08/7.html

https://tamilthugal.blogspot.com/2022/06/1-1-7th-tamil-mindmap-term-1-unit-1.html

https://tamilthugal.blogspot.com/2019/08/7-mp3.html

https://tamilthugal.blogspot.com/2019/07/7-qr-code-video.html 

https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_51.html

11.ஆயத்தப்படுத்துதல்

          தமிழ்மொழியின் சிறப்புகளை மாணவர்களைக் கூறச் செய்தல்.

          தமிழின் சிறப்பைக் கூறும் பாடலைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

தமிழின் பெருமையைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தமிழ் அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தரும், தமிழர் பொருளுக்காக புகழ்வதில்லை, போற்றாதாரை இகழ்வது இல்லை. கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு இன்புற்று வாழ உதவும். அன்பையும் அறத்தையும் தூண்டி அச்சம் போக்கும் தேன் போன்ற மொழி தமிழ் என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.

          தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          எங்கள் தமிழ் பாடலை இசையுடன் மாணவர்களைப் பாடச் செய்தல்.

          தமிழின் சிறப்புகளை அறிந்து வரல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       நெறி என்னும் சொல்லின் பொருள் யாது?

                   காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

          ந.சி.வி – தமிழ்மொழியைக் கற்றவர்களின் இயல்புகளை எழுதுக.

                   பொருள் கூறுக.

                   குறி, விரதம், பொழிகிற.

உ.சி.வி –      கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          நாமக்கல் கவிஞர் பற்றிய குறிப்புகளை அறிதல்.

          தமிழின் பெருமைகளைத் தொகுத்தல்.

தமிழ்த்துகள்

Blog Archive