கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, May 28, 2025

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 6th tamil model notes of lesson 2026 june 4

 6th tamil model notes of lesson

lesson plan 2026 june 4

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

04-06-2026 முதல் 05-06-2026

2.பருவம்

1

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

தமிழ்த்தேன் – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

இன்பத்தமிழ்

6.பக்கஎண்

2-4

7.கற்றல் விளைவுகள்

T-612 பல வடிவங்களில் எழுதப்பட்ட இலக்கியப் பாடப்பகுதிகளை உரிய ஒலிப்புமுறை, குரல் ஏற்ற இறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்.

8.திறன்கள்

செய்யுளின் பொருளைச் சொந்த நடையில் எடுத்து உரைக்கும் திறன் பெறுதல்.

9.நுண்திறன்கள்

தமிழின் பெருமைகள் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2019/08/blog-post_21.html 

https://tamilthugal.blogspot.com/2021/06/6th-tamil-worksheet-with-pdf-inbatamil.html 

https://tamilthugal.blogspot.com/2021/06/1-1-6th-tamil-kuruvina-vidai-inbatamil.html 

https://tamilthugal.blogspot.com/2022/06/1-1-6th-tamil-mindmap-term-1-unit-1.html 

https://tamilthugal.blogspot.com/2019/08/6.html 

https://tamilthugal.blogspot.com/2019/02/bharathidasan.html 

https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_51.html 

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்கள் அறிந்த தமிழின் சிறப்பைக் கூறும் பாடலைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

பாரதிதாசன் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தமிழ் அமுது போல இனிமையானது, உயிருக்கு இணையானது, நிலவு போன்றது, நீர் போன்றது, மணமானது, ஊர் போன்றது. பால் போன்றது, புலவர்க்கு வேல் போன்றது. வானம், தேன், தோள், வாள் போன்றது தமிழ் என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.

          தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல். பாரதிதாசன் பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.

 



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          இன்பத்தமிழ் பாடலை இசையுடன் மாணவர்களைப் பாடச் செய்தல்.

          தமிழின் சிறப்புகளை அறிந்து வரல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       புரட்சிக்கவி என அழைக்கப்படுபவர் யார்?

          ந.சி.வி –       பொருள் கூறுக.

                    விளைவு, அசதி, சமூகம்.

                    கவிஞர் தமிழை ஏன் வேலுடன் ஒப்பிடுகிறார்?

உ.சி.வி –      நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?

                    தமிழுக்கு நீ சூட்ட விரும்பும் பெயர்களை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          தமிழின் பெருமைகளைத் தொகுத்தல்.

தமிழ் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive