கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, December 30, 2018

பாரதியார் ஆசிரியர் குறிப்பு - BHARATHIYAR















பாரதியார் - குறிப்பு


இயற்பெயர் - சுப்பையா (எ) சுப்பிரமணியன்

பிறந்த நாள் - திசம்பர் 11, 1882

ஊர் - எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம்.

சிறப்புப் பெயர்கள் - 
பாரதியார், 
சுப்பையா, 
முண்டாசுக் கவிஞன், 
மகாகவி, 
சக்தி தாசன்
பணி - 
செய்தியாளர்
கவிஞர், 
எழுத்தாளர், 
பத்திரிக்கையாசிரியர், 
விடுதலை வீரர், 
சமூக சீர்திருத்தவாதி.

பணியாற்றிய இதழ்கள் - 

சுதேசமித்திரன் 
சக்கரவர்த்தினி
இந்தியா 
சூரியோதயம்
கர்மயோகி
தர்மம்
பாலபாரத யங் இண்டியா

இயற்றிய நூல்கள் - 

  1. குயில் பாட்டு
  2. கண்ணன் பாட்டு
  3. சுயசரிதை (பாரதியார்)
  4. தேசிய கீதங்கள்
  5. பாரதி அறுபத்தாறு
  6. ஞானப் பாடல்கள்
  7. தோத்திரப் பாடல்கள்
  8. விடுதலைப் பாடல்கள்
  9. விநாயகர் நான்மணிமாலை
  10. பாரதியார் பகவத் கீதை (பேருரை)
  11. பதஞ்சலியோக சூத்திரம்
  12. நவதந்திரக்கதைகள்
  13. உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு
  14. இந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)
  15. சின்னஞ்சிறு கிளியே
  16. ஞான ரதம்
  17. பகவத் கீதை
  18. சந்திரிகையின் கதை
  19. பாஞ்சாலி சபதம்
  20. புதிய ஆத்திசூடி
  21. பொன் வால் நரி
  22. ஆறில் ஒரு பங்கு 

பாரதி என்பதன் பொருள் - கலைமகள்.

கேலிச்சித்திரம், கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்.

அறிந்த மொழிகள் - 
தமிழ், 
ஆங்கிலம்
இந்தி
சமற்கிருதம்,
பிரான்சியம், 
வங்காள மொழி .

பெற்றோர் - சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள்.

திருமணம் - 1897

மனைவி - செல்லம்மாள்.

பிள்ளைகள் - தங்கம்மாள் (1904)

சகுந்தலா (1908)


குரு - சகோதரி நிவேதிதா.

பாட்டி -  பாகீரதி அம்மாள்.

இறப்பு - செப்டம்பர் 11, 1921(அகவை 38)

1921இல் செப்டம்பர் 12 அதிகாலை 01:30 மணிக்கு காலமானார்

கையொப்பம்

தமிழ்த்துகள்

Blog Archive