கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, May 31, 2026

ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஜூன் மாதம் வாராந்திர பாடத்திட்டம் 2026


9th tamil june month weekly monthly syllabus 2026

பத்தாம் வகுப்பு தமிழ் ஜூன் மாதம் வாராந்திர பாடத்திட்டம் 2026


10th tamil june month weekly monthly syllabus 2026

11 ஆம் வகுப்பு தமிழ் மாதாந்திர பாடத்திட்டம் 2026 - 2027


11th monthly syllabus tamil 2026 - 2027

12 ஆம் வகுப்பு தமிழ் மாதாந்திர பாடத்திட்டம் 2026 - 2027


12th monthly syllabus 2026 - 2027 tamil

TET TRB Educational Psychology 50 Important Questions and Answers கல்வி உளவியல் 50 முக்கிய வினா விடை

 


TET TRB Educational Psychology 50 Important Questions and Answers 

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தமிழ்விடு தூது ஜூன் 4

 9th tamil model notes of lesson june 2026

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

04-06-2026 முதல் 05-06-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

அமுதென்று பேர் – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

தமிழ்விடு தூது

6.பக்கஎண்

2 - 3

7.கற்றல் விளைவுகள்

T-9001 மொழியின் தேவை, தோற்றம், தொன்மை, தனித்தன்மைகள் ஆகியவற்றை அறிந்து பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

தமிழ் மொழியின் தொன்மை, தோற்றம், தனித்தன்மைகள் பற்றி அறிதல்.

9.நுண்திறன்கள்

தமிழின் சிறப்பை பிற மொழிகளுடன் ஒப்பிட்டுக் கூறும் கருத்துகளை அறிதல்

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post.html  

https://tamilthugal.blogspot.com/2022/01/9-1-9th-tamil-online-test-tamilvidu.html

https://tamilthugal.blogspot.com/2024/06/1_5.html 

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்கள் அறிந்த சிற்றிலக்கியங்களைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

தூது பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தமிழ்விடு தூது பாடலின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல். தமிழ்விடு தூது நூல் குறித்து அறியச் செய்தல்.

          கண்ணி, சிற்றிலக்கியம், கவிதைகள் குறித்து விளக்குதல்.

          மொழி குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல். சிந்து பாடல் வகை பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.



          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், தமிழின் தனித்தன்மைகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          தமிழின் சிறப்புகளை அறிந்து வரல்.

தமிழின் பழைமையான இலக்கிய இலக்கணங்களை அறியச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       கண்ணி என்பதன் விளக்கம் யாது?

          ந.சி.வி – தூது – விளக்குக.

உ.சி.வி –      நீ அறிந்த தமிழின் சிறப்பு இயல்புகளை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

தமிழ் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு அன்னை மொழியே ஜூன் 4

 10th tamil model notes of lesson new june 2026

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

04-06-2026 முதல் 05-06-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

அமுத ஊற்று – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

அன்னை மொழியே

6.பக்கஎண்

2 - 3

7.கற்றல் விளைவுகள்

T-1001 தமிழ்  மொழியின் செழுமை குறித்து ஆற்றலுடன் தனித்தமிழில் உரையாற்றுதல், கவிதையைப் படித்துச் சுவைத்தல், பொருளுணர்தல்

8.கற்றல் நோக்கங்கள்

கவிதையில் அமைந்த சொற்களின் பொருளுணர்ந்து எழுதுதல்.

9.நுண்திறன்கள்

கவிதை வெளிப்படுத்தும் நயங்களைப்  பாராட்டிப் பேசுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2025/05/10-1-15.html

https://tamilthugal.blogspot.com/2025/05/10-1-65.html

https://tamilthugal.blogspot.com/2024/06/1_3.html

https://tamilthugal.blogspot.com/2024/06/1_98.html

https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post.html 

https://tamilthugal.blogspot.com/2019/07/blog-post_20.html 

https://tamilthugal.blogspot.com/2021/06/10th-tamil-online-test-annai-moliye-one.html 

https://tamilthugal.blogspot.com/2023/06/10th-tamil-ppt-power-point-presentation.html

https://tamilthugal.blogspot.com/2022/06/annai-moliye-tenth-tam.html

https://tamilthugal.blogspot.com/2023/06/10th-tamil-annai-moliye.html

https://tamilthugal.blogspot.com/2021/02/10th-tamil-annai-moliye-online-test.html

https://tamilthugal.blogspot.com/2021/01/annai-mozhiye-10th-tamil-mind-map.html

https://tamilthugal.blogspot.com/2019/06/blog-post_6.html

11.ஆயத்தப்படுத்துதல்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் பொருளைக் கூறச் செய்தல்.      

12.அறிமுகம்

மொழி வாழ்த்து பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          கனிச்சாறு நூலில் உள்ள அன்னை மொழியே பாடலைப் பொருளுடன் விளக்குதல். தமிழின் பெருமையை தொன்மையை அறியச் செய்தல்.

அன்னை மொழியே பாடலின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.

          மொழியின் சிறப்புகள் குறித்து மாணவர்களுடன் உரையாடுதல்.

          தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல். பெருஞ்சித்திரனார் பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.



          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          தமிழின் சிறப்புகள் குறித்துக் கூறுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       எந்தமிழ்நா என்பதைப் பிரித்தெழுதுக.

          ந.சி.வி – ’புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’

இதுபோல் இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

உ.சி.வி –      நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          எட்டுத் தொகை நூல்களின் பெயர்க்காரணங்களை அறிந்து வருதல்.

தமிழ் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

Thursday, May 28, 2026

வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கைக் குறிப்புகள் தமிழ் விளக்கப்படம் Veeramangai velunachiyar life chart


Veeramangai velunachiyar life chart

சுவாமி விவேகானந்தர் வாழ்க்கைக் குறிப்புகள் தமிழ் விளக்கப்படம் Swami Vivekanandar life chart


Swami Vivekanandar life chart

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கைக் குறிப்புகள் தமிழ் விளக்கப்படம் Netaji Subhash Chandra Bose life chart


Netaji Subhash Chandra Bose life chart

மகாத்மா காந்தி வாழ்க்கைக் குறிப்புகள் தமிழ் விளக்கப்படம் Gandhi life chart


Gandhi life chart

தந்தை பெரியார் வாழ்க்கைக் குறிப்புகள் தமிழ் விளக்கப்படம் Thanthai periyar life chart


Thanthai periyar life chart

அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கைக் குறிப்புகள் தமிழ் விளக்கப்படம் ambedkar life chart



Dr.B.R.AMBEDKAR life chart

சீத்தலைச் சாத்தனார் வாழ்க்கைக் குறிப்புகள் தமிழ் விளக்கப்படம் Seethalai chathanar life chart


Seethalai chathanar life chart 

குமரகுருபரர் வாழ்க்கைக் குறிப்புகள் தமிழ் விளக்கப்படம் kumarakurubarar life chart

Kumarakurubarar life chart in tamil 

TNPSC பொது அறிவு 24 வினாடிவினா 20 வினாக்கள் GK Quiz General knowledge Questions with answer 20 marks

 



GK Quiz General knowledge Questions with answer 20 marks

Tuesday, May 26, 2026

School reopen date change பள்ளி திறப்பு தேதி அறிவிப்பு


 

ஓரெழுத்து ஒரு மொழி வ வரிசை

ஒலி மரபுச் சொற்கள் பறவைகள் விலங்குகள் Oli marabu chorkal birds animals


Oli marabu chorkal birds animals 

திருக்குறளின் வியக்கத்தக்க அதிசயங்கள் The amazing wonders of Thirukkural


The amazing wonders of Thirukkural

TNPSC பொது அறிவு 22 வினாடிவினா 20 வினாக்கள் GK Quiz General knowledge Questions with answer 20 marks

 


 GK Quiz General knowledge Questions with answer 20 marks

Monday, May 25, 2026

புரட்சித்தலைவர் பாரதரத்னா எம்.ஜி.ஆர் வாழ்க்கைக் குறிப்புகள் தமிழ் விளக்கப்படம் puratchi thalaivar baratha rathna M.G.R. LIFE CHART


puratchi thalaivar baratha rathna M.G.R. LIFE CHART   



 

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் வாழ்க்கைக் குறிப்புகள் தமிழ் விளக்கப்படம் silambu chelvar ma.po.sivagnanam LIFE CHART

 


silambu chelvar ma.po.sivagnanam LIFE CHART   

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கைக் குறிப்புகள் தமிழ் விளக்கப்படம் kapalotiya tamilan V.O.C LIFE CHART

 


kapalotiya tamilan V.O.C LIFE CHART   

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வாழ்க்கைக் குறிப்புகள் தமிழ் விளக்கப்படம் Pasumpon Muthuramalinga thevar LIFE CHART

 


Pasumpon Muthuramalinga thevar LIFE CHART   

பேரறிஞர் அண்ணா வாழ்க்கைக் குறிப்புகள் தமிழ் விளக்கப்படம் perarignar Anna LIFE CHART

 


perarignar Anna LIFE CHART   

அயோத்திதாசப் பண்டிதர் வாழ்க்கைக் குறிப்புகள் தமிழ் விளக்கப்படம் Ayothidasapandithar LIFE CHART

 


Ayothidasapandithar LIFE CHART

பெருந்தலைவர் காமராசர் வாழ்க்கைக் குறிப்புகள் தமிழ் விளக்கப்படம் perunthalaivar kamarajar LIFE CHART

 


perunthalaivar kamarajar LIFE CHART

Educational Psychology: IMPORTANT 50 Questions and Answers கல்வி உளவியல்: 50 வினா-விடைகள்

 Educational Psychology: IMPORTANT 50 Questions and Answers

கல்வி உளவியல்: முக்கிய 50 வினா-விடைகள்

 

1. கல்வி உளவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

 விடை: எட்வர்ட் தார்ண்டைக்

 

 

2. அறிவுசார் வளர்ச்சியின் நான்கு நிலைகளைக் கூறியவர் யார்?

 விடை: ஜீன் பியாஜே

 

 

3. முயன்று தவறி கற்றல் (Trial and Error) கோட்பாட்டை வெளியிட்டவர்?

 விடை: எட்வர்ட் தார்ண்டைக்

 

 

4. நுண்ணறிவு ஈவு (IQ) என்பதைக் கண்டறியும் சூத்திரம் எது?

 விடை: (மன வயது / கால வயது)  100

 

 

5. உட்காட்சி வழி கற்றல் (Insight Learning) எதனோடு தொடர்புடையது?

 விடை: கொலர் (Köhler)

 

 

6. முதிர்ச்சி அடைதல் (Maturation) எதைக் குறிக்கிறது?

 விடை: இயற்கையான உயிரியல் மாற்றம்

 

 

7. நோக்கங்கள் (Motivation) எத்தனை வகைப்படும்?

 விடை: இரண்டு (அகத்தூண்டல், புறத்தூண்டல்)

 

 

8. எரிக் எரிக்சனின் ஆளுமைக் கோட்பாடு எதை மையமாகக் கொண்டது?

 விடை: சமூக-உளவியல் வளர்ச்சி

 

 

9. நேர்மறை வலுவூட்டல் (Positive Reinforcement) எதை நோக்கமாகக் கொண்டது?

 விடை: நற்பண்புகளை அல்லது நடத்தையை அதிகரிக்க

 

 

10. மறதிக்கு முக்கிய காரணம் எது?

 விடை: பயிற்சியின்மை

 

 

11. வைகாட்ஸ்கியின் சமூக-கலாச்சாரக் கோட்பாட்டில் முக்கியமானது எது?

 விடை: அண்மை வளர்ச்சி மண்டலம் (ZPD)

 

 

12. எந்த நுண்ணறிவுச் சோதனை குழுமச் சோதனையாகும்?

 விடை: ஆர்மி ஆல்பா சோதனை

 

 

13. ஆக்க நிலையுறுத்தல் (Classical Conditioning) கோட்பாட்டை வழங்கியவர்?

 விடை: இவான் பாவ்லோவ்

 

 

14. குழந்தைகள் தவழத் தொடங்கி பின் நடக்கப் பழகுவது எவ்வகை வளர்ச்சி?

 விடை: இயக்க வளர்ச்சி

 

 

15. ஆளுமை (Personality) என்பதன் பொருள் என்ன?

 விடை: தனிநபரின் ஒட்டுமொத்த நடத்தை பண்புகள்

 

 

16. படைப்பாற்றல் (Creativity) என்பதன் முக்கிய அம்சம்?

 விடை: புதுமையான சிந்தனை

 

 

17. உணர்ச்சி நுண்ணறிவு (EI) என்பது?

 விடை: உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மற்றும் கையாளும் திறன்

 

 

18. கற்றலின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படுவது?

 விடை: கவனித்தல் (Attention)

 

 

19. கற்றல் மாற்றத்தில் 'எதிர்மறை மாற்றம்' என்றால் என்ன?

 விடை: ஒரு கற்றல் மற்றொரு கற்றலைத் தடுத்தல்

 

 

20. தேவைகளின் படிநிலைக் கொள்கையை (Hierarchy of Needs) உருவாக்கியவர்?

 விடை: ஆபிரகாம் மாஸ்லோ

 

 

21. தகவல் செயலாக்கக் கோட்பாடு எதை விளக்குகிறது?

 விடை: மூளை தகவலை எவ்வாறு கையாள்கிறது

 

 

22. மிகவும் புகழ்பெற்ற ஆளுமைச் சோதனை எது?

 விடை: ரோர்ஷாக் இன்க்பிளாட் (மைத்துளி) சோதனை

 

 

23. கற்றல் ஊக்கத்தை அதிகரிக்க எது சிறந்தது?

 விடை: பாராட்டு மற்றும் வெகுமதிகள்

 

 

24. திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்குத் தரப்படும் தனித்த கல்வி எது?

 விடை: சிறப்புக் கல்வி

 

 

25. நினைவாற்றலின் நிலைகள் யாவை?

 விடை: பதிவு செய்தல், சேமித்தல், மீட்டெடுத்தல்

 

 

26. பியாஜேவின் கூற்றுப்படி தர்க்க ரீதியாகச் சிந்திக்கத் தொடங்கும் நிலை எது?

 விடை: பருப்பொருள் நிலை

 

 

27. முன்மாதிரிக் கற்றல் (Observational Learning) என்பதன் ஆசிரியர் யார்?

 விடை: ஆல்பர்ட் பாண்டுரா

 

 

28. தலைமையின் மிக முக்கியப் பண்பு எது?

 விடை: தன்னம்பிக்கை

 

 

29. IQ 140-க்கு மேல் இருந்தால் அவர் எவ்வாறு அழைக்கப்படுவார்?

 விடை: மேதை (Genius)

 

 

30. வளர்ச்சியில் 'ஆபத்தான பருவம்' என்று அழைக்கப்படுவது எது?

 விடை: குமரப்பருவம்

 

 

31. கற்றலில் 'ஆயத்த விதி' எதனை விளக்குகிறது?

 விடை: கற்கத் தயாராக இருத்தல்

 

 

32. வாய்மொழி நுண்ணறிவுச் சோதனைகள் எதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன?

 விடை: பேச்சு மற்றும் வாசிப்புத் திறன்

 

 

33. குழந்தையின் முதல் பள்ளி எது?

 விடை: குடும்பம்

 

 

34. தோல்விகளில் இருந்து மீண்டு வரும் திறன்?

 விடை: மன உறுதி (Resilience)

 

 

35. வகுப்பறையில் ஆசிரியரின் மிக முக்கியப் பங்கு?

 விடை: வழிகாட்டுதல் (Facilitator)

 

 

36. குறுகிய கால நினைவாற்றல் காலம் எவ்வளவு?

 விடை: சில விநாடிகள் முதல் சில நிமிடங்கள்

 

 

37. குழு கற்றல் (Group Learning) மூலம் வளரும் பண்பு?

 விடை: சமூக நல்லிணக்கம் மற்றும் ஒத்துழைப்பு

 

 

38. கல்வி உளவியலின் நோக்கம் என்ன?

 விடை: கற்பித்தலை மேம்படுத்தி, கற்றலைச் சிறப்பாக்குதல்

 

 

39. மரபும் சூழலும் ஆளுமையில் எப்படிச் செயல்படுகின்றன?

 விடை: இரண்டும் இணையாகச் செயல்படுகின்றன

 

 

40. கற்றல் அடைவுத் தேர்வின் நோக்கம் என்ன?

 விடை: கற்ற கற்றலை அளவிடுதல்

 

 

41. உள்ளுணர்வு சார்ந்த கற்றல் முறை யாருடையது?

 விடை: கெஸ்டால்ட் உளவியலாளர்கள்

 

 

42. மொழி வளர்ச்சிக்கு முக்கிய ஊக்கமளிப்பது எது?

 விடை: சமூகத் தொடர்பு

 

 

43. பகுப்பாய்வு (Analysis) என்பது எதைக் குறிக்கிறது?

 விடை: பெரிய தகவலைப் பிரித்து அறிதல்

 

 

44. நுண்ணறிவு சோதனைகளில் பயன்படுத்தப்படும் 'மைத்துளி' எதை அறிய உதவும்?

 விடை: மறைந்துள்ள ஆளுமைத் தன்மைகள்

 

 

45. கற்றல் வளைகோடு (Learning Curve) எதைக் காட்டுகிறது?

 விடை: கற்றலின் வேகத்தில் ஏற்படும் மாற்றங்கள்

 

 

46. உடல் தசைகளின் ஒருங்கிணைப்பு வளர்ச்சி எவ்வாறு அழைக்கப்படும்?

 விடை: இயக்க வளர்ச்சி

 

 

47. மனப்பான்மை (Attitude) என்பது எதைச் சார்ந்தது?

 விடை: தனிநபரின் அணுகுமுறை

 

 

48. ஒப்படைப்பு (Assignment) தரும்போது ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியது?

 விடை: மாணவர்களின் திறன் நிலை

 

 

49. அறிவுசார் கற்றலில் மிக முக்கிய காரணி எது?

 விடை: கவனித்தல்

 

 

50. முதிர்ச்சியும் கற்றலும் ஒன்றையொன்று எவ்வாறு பாதிக்கின்றன?

 விடை: இரண்டும் கற்றலுக்கு முக்கியத் தேவைகள்

 

 

 

TNPSC பொது அறிவு 21 வினாடிவினா 20 வினாக்கள் GK Quiz General knowledge Questions with answer 20 marks

 


GK Quiz General knowledge Questions with answer 20 marks

தமிழ்த்துகள்

Blog Archive