10th tamil model notes of lesson
lesson plan October 6
பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
06-10-2025 முதல்
10-10-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
5
4.பாடத்தலைப்பு
நிலாமுற்றம் – உரைநடை உலகம், கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
பன்முகக் கலைஞர், கம்பராமாயணம்
6.பக்கஎண்
94 - 101
7.கற்றல் விளைவுகள்
T-1018 கலைகளில் பன்முக வல்லவராகத் திகழ்ந்த
ஆளுமை ஒருவரைப் பற்றி அறிவதன் வாயிலாகச் சமூகத்திற்குத் தம்மால் இயன்ற பங்களிப்பை
அளித்தல்.
T-1019 கவிநயம் நனிசொட்டச் சொட்டப் பாடப்பட்ட
பாடல்களைக் கற்று மகிழ்வதுடன் அவை போன்ற பாடல்களைத் தேடித் தேர்ந்து படித்தல்,
படைத்தல்.
8.கற்றல்
நோக்கங்கள்
பன்முகக் கலைஞர் குறித்து அறிந்து படைப்பாக்கத் திறனை வளர்த்தல்.
கவிதையைப் படித்து
அதன் மையக் கருத்தை அறிந்து எழுதுதல்.
பாடப்பகுதியில் அமைந்த பாடலைச் சீர்பிரித்துப் படித்தல், புதிய சொற்களுக்குப் பொருளறிதல்.
9.நுண்திறன்கள்
கலைகளின் மேன்மை பற்றி வகுப்பறையில் பேசுதல்.
உணர்வதை உள்ளபடி கூறும் கவிதைகளைப் படித்தல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/08/6.html
https://tamilthugal.blogspot.com/2024/06/10th-tamil-panmuka-kalaignar-big.html
https://tamilthugal.blogspot.com/2024/06/10th-tamil-new-lesson-q-a.html
https://tamilthugal.blogspot.com/2023/09/3-kalaignar-karunanithi-nootrandu-vizha_3.html
https://tamilthugal.blogspot.com/2022/07/panmuka-thiramaiyalar-kalaignar-tamil.html
https://tamilthugal.blogspot.com/2023/08/1-kalaignar-karunanithi-nootrandu-vizha.html
https://tamilthugal.blogspot.com/2024/03/blog-post_56.html
https://tamilthugal.blogspot.com/2023/08/2-kalaignar-karunanithi-nootrandu-vizha.html
https://tamilthugal.blogspot.com/2024/07/kalaithayin-thavaputhalvan-kalaignar.html
https://tamilthugal.blogspot.com/2024/07/muthamil-arignar-kalaignar-karunanithi.html
https://tamilthugal.blogspot.com/2020/06/kamba-ramayanam.html#more
https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_71.html
https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_7.html
https://tamilthugal.blogspot.com/2019/05/kambaramayanam-balakaandam.html
https://tamilthugal.blogspot.com/2019/05/kambaramayanam-ayothiya-kaandam.html
https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_12.html
https://tamilthugal.blogspot.com/2025/05/10-5-15.html
https://tamilthugal.blogspot.com/2024/05/10th-tamil-memory-song-veyyonoli-kamba.html
https://tamilthugal.blogspot.com/2024/05/kamba-ramayanam-10th-tamil-memory-poem.html
https://tamilthugal.blogspot.com/2024/09/blog-post_3.html
https://tamilthugal.blogspot.com/2024/09/blog-post_17.html
https://tamilthugal.blogspot.com/2023/08/10-10th-tamil-ppt-power-point_24.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள்
அறிந்த தமிழக முதல்வர்களைக் கூறச் செய்தல்.
கம்பரின்
சந்தநயத்தை அறிமுகப்படுத்துதல்.
12.அறிமுகம்
கலைகள், கலைஞர் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
சந்தக்கவிதையை நயத்துடன் அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
குழந்தை உள்ளக் கலைஞர், போராட்டக் கலைஞர், பேச்சுக் கலைஞர், நாடகக் கலைஞர்,
திரைக் கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ்க் கலைஞர், கவிதைக் கலைஞர், கட்டுமான
ஆர்வலர் கலைஞர், செம்மொழிக் கலைஞர் குறித்து மாணவர்களுடன் உரையாடுதல்.
இயல், இசை, நாடகம், பேச்சு, திரைப்படம்
குறித்து விளக்குதல். கலையின் பெருமையை மாணவர்கள் மனதில் விதைத்தல்.
செய்யுளில் சந்தநயம் குறித்து அறியச்
செய்தல்.
கம்பரின்
கவிநயம், சந்த நயம் அறிதல்.
பாடப்பொருளின்
ஐந்து பாடல்களையும் பொருளுடன் விளக்குதல்.
உவமைகளையும்
சொல்லாடல்களையும் விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின்
கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
கலையின் பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
கலைஞர்களுக்கு அளிக்கப்படும் பட்டங்கள், பரிசுகள் குறித்து இணையம், ஊடகங்கள் வழியாக அறிந்து வகுப்பறையில் கூறச் செய்தல்.
கம்பராமாயணம்
குறித்து இணையம், ஊடகங்கள் வழியாக அறிந்து வகுப்பறையில் கூறச்
செய்தல்
15.மதிப்பீடு
எ.சி.வி – யாருடைய வசனங்கள் சொல்
புதிது சுவை புதிது என்று கேட்போர் வியக்கும் வண்ணம் அமைந்தன?
எழினி என்பதன்
பொருள் ..............
ந.சி.வி – தமிழ்மொழிக்காகக்
கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள்
அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக.
கம்பராமாயணம் குறித்து எழுதுக.
உ.சி.வி – போராட்டக் கலைஞர் - பேச்சுக் கலைஞர் - நாடகக் கலைஞர் - திரைக்
கலைஞர் - இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.
சந்தக்கவிதையில் சிறக்கும்
கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
செம்மொழித் தமிழ் குறித்த தகவல்களைத் திரட்டுதல்.
கலைஞர் குறித்து அறிந்து வருதல்.
கம்பர் குறித்து அறிந்து வருதல்.
புதுக்கவிதை ஒன்று படைத்தல்.


