கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, February 04, 2024

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பாதம்

  6th Tamil Model Notes Of Lesson

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

17-02-2025 - 21-02-2025

2.பருவம்

3

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

எல்லாரும் இன்புற – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

பாதம்

6.பக்கஎண்

28 - 31

7.கற்றல் விளைவுகள்

T-606 தங்கள் பகுதிகளில் காணப்படும் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாட்டுப்புறப்பாடல்களை அறிந்திருத்தல், அவற்றைப் பற்றிக் கலந்துரையாடல்.

8.கற்றல் நோக்கங்கள்

பிறர் பொருளை விரும்பாமை ஓர் அறம் என்பதை உணர்தல்.

9.நுண்திறன்கள்

விந்தைக் கதைகள் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_47.html

https://tamilthugal.blogspot.com/2020/07/paatham-6th-tamil-thunaipa.html

https://tamilthugal.blogspot.com/2020/03/3-2-sixth-tamil-term-3-unit-2-paatham.html  

https://tamilthugal.blogspot.com/2023/02/3-2-6th-tamil-mindmap-term-3-unit-2.html

11.ஆயத்தப்படுத்துதல்

பிடித்த கதைகள் பற்றிக் கூறச்செய்தல்.

சிறுகதை குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.

12.அறிமுகம்

கடமை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பாதம் கதை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். கதையை விளக்குதல். மாரியின் பண்பு பற்றிக் கூறுதல்.

          நேர்மை குறித்து மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். மாரியின் நேர்மை குறித்து விளக்குதல். வாழ்வைச் செம்மைப்படுத்தும் அறம் குறித்து அறியச் செய்தல். அதிசயக் காலணி குறித்து மாணவர்களின் கருத்துகளைக் கூறச் செய்தல்.



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பசியோடிருப்பவருக்கு உதவும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

விந்தைக் கதைகள் குறித்து விளக்குதல். பல்வேறு அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – சிறுமியின் காலணியின் நிறம்..............................

          ந.சி.வி – பாதம் கதையைச் சுருக்கி எழுதுக.

உ.சி.வி– அறச்செயல்களாக நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நீ செய்த நேர்மையான செயல்களைக் கூறு.

அதிசயக் காலணி உங்களுக்குக் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என எழுதுக.

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு உண்மை ஒளி

 7th Tamil Model Notes Of Lesson

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

17-02-2025 - 21-02-2025

2.பருவம்

3

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

ஒப்புரவு ஒழுகு – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

உண்மை ஒளி

6.பக்கஎண்

32 - 37

7.கற்றல் விளைவுகள்

T-703 தாம் பார்த்த ஓவியம் அல்லது காட்சியின் அனுபவத்தைத் தம் சொந்தச் சொற்களில் / சைகை மொழியில் வெளிப்படுத்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

படக்காட்சிகள் வழி கருத்துகளைப் புரிந்துகொள்ளுதல்.

9.நுண்திறன்கள்

பெருந்தன்மை குறித்து அறிதல். ஜென் கதையை அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_98.html

https://tamilthugal.blogspot.com/2023/02/3-2-7th-tamil-mindmap-term-3-unit-2.html  

https://tamilthugal.blogspot.com/2020/06/unmai-oli-7th-tamil-th.html  

https://tamilthugal.blogspot.com/2020/04/unmai-oli-7th-virivaanam.html  

https://tamilthugal.blogspot.com/2020/03/3-2-seventh-tamil-unmai-oli-katturai.html

11.ஆயத்தப்படுத்துதல்

உதவுதல் பற்றிக் கூறச்செய்தல்.

ஜென் தத்துவம் குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.

12.அறிமுகம்

உதவி பற்றிய கதையைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          உண்மை ஒளி கதை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். உதவி செய்தல் குறித்து விளக்குதல். மாணவர்களை உண்மை ஒளி கதையைக் கூறச் செய்தல்.

          குருவின் செயலையும் திருடனின் செயலையும் ஒப்பிடுதல். மாணவர்களை நல்ல கோட்பாடுகள் குறித்து அறியச் செய்தல். தன்னலம் குறித்து விளக்குதல். பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கச் செய்தல்.

          வாய்ப்பு கிடைக்கும்போது பிறருக்கு உதவுதல்.



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிறருக்கு உதவும் பண்பை வளர்த்துக் கொள்ளுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

உதவுதலின் சிறப்பு குறித்து விளக்குதல். இதே போன்ற பிற கதைகளைக் கூறுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – ஜென் என்ற சொல்லின் பொருள்................................

          ந.சி.வி – உண்மை ஒளி படக்கதையைக் கதையாகச் சுருக்கி எழுதுக.

உ.சி.வி – நீ அறிந்த ஒரு ஜென் கதையை எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

உண்மை ஒளி படக்கதையை நாடகமாக நடித்துக் காட்டுக.

நீங்கள் செய்த உதவிகளைப் பட்டியலிடுக.

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பால் மனம்

8th Tamil Model Notes Of Lesson

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

17-02-2025 - 21-02-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

9

4.பாடத்தலைப்பு

குன்றென நிமிர்ந்துநில் – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

பால் மனம்

6.பக்கஎண்

203 - 208

7.கற்றல் விளைவுகள்

T-818 தமது சொந்த அனுபவங்களைத் தமக்கே உரிய மொழிநடையைப் பயன்படுத்தி வெவ்வேறு இலக்கிய வடிவங்களில் எழுதுதல் (கதை, கட்டுரை, பாடல் வடிவில் அனுபவங்களை வெளிப்படுத்துதல்)

8.கற்றல் நோக்கங்கள்

சிறுகதைகள் மூலம் மனிதர்களின் உளவியலைப் புரிந்துகொள்ளும் திறன்.

9.நுண்திறன்கள்

நற்பண்புகள் குறித்து அறியும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_81.html

https://tamilthugal.blogspot.com/2023/01/9-8th-tamil-mindmap-unit-9_18.html

11.ஆயத்தப்படுத்துதல்

விரும்பும் நற்குணங்களைக் கூறச்செய்தல்.

நீதிநெறிக் கதையைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

கோமகள் வாழ்க்கை வரலாற்றை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பால் மனம் கதையைக் கூறி விளக்குதல். நற்பண்புகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல். கதை மூலம் அறியும் நீதி குறித்து வினவுதல். தியாகத்தை உணர்தல்.

          குழந்தை மனம் பற்றி அறிந்துகொள்ளுதல். நற்பண்புகளுடன் வாழ உறுதிகொள்ளுதல். இது போன்ற கதைகளைப் படைக்க முயலுதல். கதைகளைக் கூறச் செய்தல்.



          மனவரைபடம் மூலம் கதையை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

கோமகள் குறித்துக் கூறுதல். குழந்தைகளின் பண்புகள் குறித்துக் கூறுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – கோமகளின் இயற்பெயர் ..............................

          ந.சி.வி – குழந்தை கிருஷ்ணாவின் பண்புநலன்களைப் பற்றித் தொகுத்து எழுதுக.

          உ.சி.வி – நல்ல சமூகம் உருவாக உதவும் நற்பண்புகளை எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

உனக்குப் பிடித்த தலைவர்களையும் அவர்களின் பண்புகளையும் எழுதுக.

நல்ல பழக்கங்கள் குறித்து இணையம் மூலம் அறிதல்.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தாய்மைக்கு வறட்சி இல்லை

  9th Tamil Model Notes Of Lesson

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

17-02-2025 - 21-02-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

9

4.பாடத்தலைப்பு

அன்பென்னும் அறனே – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

தாய்மைக்கு வறட்சி இல்லை

6.பக்கஎண்

241 - 245

7.கற்றல் விளைவுகள்

T-9047 மனிதம் சார்ந்த படைப்புகளைப் படிப்பதன் வாயிலாக மனிதநேயப் பண்புகளைத் தக்க சூழலில் உணர்ந்து பின்பற்றுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

மனிதம் சார்ந்த படைப்புகளைப் படிப்பதன் வாயிலாக மனிதநேயப் பண்புடன் வாழ்தல்.

9.நுண்திறன்கள்

தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_6.html

https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_70.html

https://tamilthugal.blogspot.com/2020/09/9-9-thaimaiku-varatchi-illai-pdf.html

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_91.html

https://tamilthugal.blogspot.com/2020/08/9-9-thaymaiku-varat.html

https://tamilthugal.blogspot.com/2020/09/9-9-9th-ta.html

11.ஆயத்தப்படுத்துதல்

தாய்மை குறித்து மாணவர்களைக் கூறச்செய்தல்.

கதையாசிரியர் குறித்துக் கூறுதல்.

12.அறிமுகம்

சமுத்திரம் அவர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.

கதையை அறிமுகம் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தாய்மை பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          மறைந்த மனிதநேயம் குறித்து கதை மூலம் விளக்குதல்.

கதை சொல்லும் மனிதம் குறித்துப் பேசுதல்.

மாணவர்கள் குழுக்களாக கதையின் தாக்கம் குறித்து உரைத்தல்.

கதை குறித்து விளக்குதல். சிறுகதை நடையை மாணவர்கள் அறிதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் கதையை அறிதல், கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          சிறுகதைகள் பற்றி மாணவர்களை அறியச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – வாடாமல்லி நூலின் ஆசிரியர் ................................

          ந.சி.வி – சு.சமுத்திரம் – குறிப்பு வரைக.

உ.சி.வி – தாய்மையின் பெருமை போற்றும் கதையை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          தாயின் பெருமையை உணர்த்தும் நிகழ்வுகளை எழுதுக.

          உனக்குப் பிடித்த சிறுகதை குறித்து எழுதுக.

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பிப்ரவரி 17

  நாள் - 17-02-2025 - 21-02-2025

 வகுப்பு - 10

பாடம் - தமிழ்

தலைப்பு - திருப்புதல்

மூன்றாம் திருப்புதல் தேர்விற்கான பயிற்சி வினாக்கள்

1.‘வேங்கை’ என்பதைத் தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

2. ‘மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!

   முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!’ - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.                   

  ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

  ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டிஎஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

4. ‘உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

   வடுக்காண் வற்றாகும் கீழ்’

- இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டிஅதன் இலக்கணம் தருக.

5.‘நமக்கு உயிர் காற்று                                  

காற்றுக்கு வரம் மரம் –மரங்களை

வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்’ – இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக.

6. வசன கவிதை – குறிப்பு வரைக.

7. தண்ணீர் குடிதயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுகதொடரில் அமைக்க.

8. மாஅல் – பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.                    

9. ‘எழுது என்றாள்’ என்பது விரைவு காரணமாக  ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத்தொடரானது.

‘சிரித்துப் பேசினார்’ என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

10.பாரதியார் கவிஞர்நூலகம் சென்றார்அவர் யார்ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

11. ‘நச்சப் படாதவன்’ செல்வம் – இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

12. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

  கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

13. பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.                      தமிழ்த்துகள்

உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது உயிரின் ஓம்பப் படும்

ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்    நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று

 

14.எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்ப்பாடு எது?

அ. கூவிளம் தேமா மலர்                                

ஆ. கூவிளம் புளிமா நாள்

இ. தேமா புளிமா காசு                                     

ஈ. புளிமா தேமா பிறப்பு

15.வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் -  இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?                

16.மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

17. “சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.

18.செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

19. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறதுஇதோ... இருக்கிறதே சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதாஇல்லையா?

மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

20.காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள்கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.                                    

21. “நேற்று நான் பார்த்த அருச்சுனன்  தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!” என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.

22.உறங்குகின்ற கும்பகன்ன ‘எழுந்திராய் எழுந்திராய்’ காலதூதர் கையிலே ‘உறங்குவாய் உறங்குவாய்’ கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?                        தமிழ்த்துகள்

23. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

o        உழவர்கள் மலையில் உழுதனர்.

o        முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

24. 'கரப்பிடும்பை இல்லார்இத்தொடரின் பொருள் கூறுக.

25. தஞ்சம் எளியர் பகைக்கு - இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.


தமிழ்த்துகள்

Blog Archive