கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, November 25, 2024

பத்தாம் வகுப்பு தமிழ் 99 மதிப்பெண்கள் திருத்திய விடைத்தாள் 2024


tenth tamil topper high marks answer sheet 

பத்தாம் வகுப்பு தமிழ் அரசு உடனடித் தேர்வு வினாத்தாள் pdf ஜூலை 2024 துணைத்தேர்வு

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth X sslc 10th tamil govt instant public exam question paper july 2024 pdf

மிகச் சிறந்த வேலைக்காரன் ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறிக் கதை


tamil short story kathai A very good servant

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.11.2024 திங்கள்

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.11.2024 திங்கள் 

 
திருக்குறள்: 

"பால் :பொருட்பால்

 அதிகாரம் :தீ நட்பு

 குறள் எண் :820

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

 மன்றில் பழிப்பார் தொடர்பு.

பொருள்:

தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து ,பலர் கூடிய  மன்றத்தில் பழித்துப்

 பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விடவேண்டும்."


பழமொழி :

The fearless goes into the assembly.
அச்சம் இல்லாதவர்கள் அரங்கத்தில் ஏறுவார்கள்.

இரண்டொழுக்க பண்புகள் :  
  * நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.                       
  *நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.

பொன்மொழி :
முயற்சி என்பது விதை போல.... அதை விதைத்துக் கொண்டே இரு... முளைத்தால் மரம் இல்லையேல் அது மண்ணிற்கு உரம். - கோ.நம்மாழ்வார்.

பொது அறிவு : 
1. வைட்டமின் B2-வின் வேதிப் பெயர்? 
விடை : ரிபோபிளேவின்.        
2. அணுவைப் பற்றிய கருத்தை முதலில் கூறிய அறிஞர் யார்? 
விடை:  ஜான் டால்டன்

English words & meanings :

 Foolish முட்டாள்தனமான


 Glad மகிழ்ச்சி

வேளாண்மையும் வாழ்வும் : 
தீமைபயக்கும் பூச்சிகளை அழிக்க உபயோகப் படுத்த படும் கரிம மற்றும் கரிமம் அல்லாத பூச்சிக் கொல்லிகள் ஆகிய இரண்டுமே, அவை சுற்றுப் புறச் சூழல் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு விளைவிக்கும் பாதிப்புக்களால் சர்ச்சைக்குள்ளாகின்றன.
நவம்பர் 25

பிடல் காஸ்ட்ரோ அவர்களின் நினைவுநாள்


பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, (எசுப்பானியம்: [fiˈðel ˈkastro], ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.[2]


அமெரிக்காவில் இருந்து 93 மைல் தொலைவில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.


பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்


பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று உலகெங்கணும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.


உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.


ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நீதிக்கதை
 முதல் நிலை.

பேராசிரியர் ஒருவர் மூன்று கேள்விகளை கொடுத்து அதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து பதில் எழுதுமாறு மாணவர்களிடம் கூறினார். 

அதில் மிகக் கடினமான கேள்விக்கு 100 மதிப்பெண்களும், கொஞ்சம் கடினமான கேள்விக்கு 80 மதிப்பெண்களும், எளிதான கேள்விக்கு 60 மதிப்பெண்களும் தருவதாக கூறினார்.

மாணவர்களை ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து  பதில் அளிக்கக் கூறினார். தேர்வு முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்களில் உள்ள விடைகளை பார்க்காமல் கடினமான கேள்விகளை தேர்ந்தெடுவர்களுக்கு முதல் நிலையும், அடுத்தடுத்த கேள்விகளை தேர்ந்தெடுத்தவர்களுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளை  தந்தார்.

மாணவர்களோ, "பதில்களையே பார்க்காமல் மதிப்பெண் தருகிறீர்களே!  கடினமான கேள்விகளை தேர்ந்தெடுத்தவர்கள் சரியாக பதில் எழுதி உள்ளார்களா? என நீங்கள் பார்க்க வேண்டும் அல்லவா?"என்று கேட்டனர். 

அதற்கு அவர் "உங்கள் பதிலுக்காக நான் இந்த தேர்வை வைக்கவில்லை. உங்கள் இலக்கு என்ன என்று அறியவே இந்த தேர்வை வைத்தேன்" என்று கூறினார்.

 மேலும்,"கடினமாக உழைப்பவர்களே எப்பொழுதும் முதல் நிலையை அடைவார்கள் என்பதை  நீங்கள் அறியவே நான் இந்த தேர்வை வைத்தேன்" என்று கூறி முடித்தார்.

நீதி: விடாமுயற்சியுடன் கடின உழைப்பும் இருந்தால் எந்த கடினமான செயல்களையும் எளிதாக செய்ய இயலும்.

இன்றைய செய்திகள்

25.11.2024


* நவம்பர் 26ல் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்பின் முகப்புரையை வாசிக்க வேண்டும்: தமிழக முதல்வர் உத்தரவு.


* குடியாத்தம் அடுத்த மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தகவல்.


* அசாமில்   லேசான நிலநடுக்கம்: 3.8 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை.


* ஐ.எஸ்.எல். கால்பந்து; இன்றைய லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மோகன் பகான் அணி.


* ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற உலக சாதனை படைத்தார் விராட் கோலி.


Today's Headlines


* The preamble to the Constitution must be read in government offices, schools and colleges on November 26: Tamil Nadu Chief Minister's order.


* Minister Durai Murugan informed that funds will be allocated in the upcoming budget to make the Mordhana Dam near to Gudiyatham a tourist destination.


* Mild earthquake in Assam: The National Geological Survey has reported that it has been recorded at a magnitude of 3.8Richter .


* Russian President Putin warns that countries that supply missiles to Ukraine will also be attacked.


* ISL Football; Mohun Bagan team won a huge victory by defeating Jamshedpur in today's league match.


* Virat Kohli set a world record for the foreign player who scored the most centuries on Australian soil.

Saturday, November 23, 2024

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2025


RH LIST 2025
RL LIST

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2025

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2025
Restricted leave DATES 2025
RL DAYS
விடுமுறை விவரம்

ஜனவரி

வெள்ளி

10-01-2025

வைகுண்ட ஏகாதசி

13-01-2025

திங்கள்

ஆருத்திரா தரிசனம்

13-01-2025

திங்கள்

போகி

27-01-2025

திங்கள்

ஷபே மீரஜ்

பிப்ரவரி

11-02-2025

செவ்வாய்

தை பூசம்

14-02-2025

வெள்ளி

ஷபே பாரத்

26-02-2025

புதன்

மகா சிவராத்திரி

28-02-2025

வியாழன்

ரம்ஜான் முதல் நாள்

மார்ச்

04-03-2025

செவ்வாய்

அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள்

05-03-2025

புதன்

சாம்பல் புதன்

12-03-2025

புதன்

மாசி மகம்

27-03-2025

வியாழன்

ஷபே காதர்

ஏப்ரல்

14-04-2025 திங்கள்

அம்பேத்கார் பிறந்தநாள்

17-04-2025

வியாழன்

பெரிய வியாழன்

20-04-2025

ஞாயிறு

ஈஸ்டர்

மே

12-05-2024

திங்கள்

சித்ரா பௌர்ணமி

12-05-2024

திங்கள்

புத்த பூர்ணிமா

ஜூன்

06-06-2025

வெள்ளி

அர்பா ஹஜ் யாத்திரை

26-06-2025

வியாழன்

ஹிஜிரி வருடபிறப்பு

ஆகஸ்ட்

02-08-2025

சனி

ஆடிக்பெருக்கு

08-08-2025

வெள்ளி

வரலட்சுமி விரதம்

09-08-2025

சனி

ரிக் உபகர்மா/யஜூர் உபகர்மா/ ஆவணி அவிட்டம்

சனி

09-08-2025

காயத்திரி ஜெபம்

26-08-2025

செவ்வாய்

சாம உபகர்மா

செப்டம்பர்

05-09-2025

வெள்ளி

ஓணம்

21-09-2025

ஞாயிறு

மகாளய அமாவாசை

அக்டோபர்

03-10-2025

வியாழன்

கர்வீன் ஆப் மொய்தீன் அப்துல் கதர்

21-10-2025

திங்கள்

தீபாவளி நோன்பு

நவம்பர்

02-11-2025

ஞாயிறு

கல்லறைத்திருநாள்

டிசம்பர்

04-12-2025

வியாழன்

கார்த்திகை தீபம்

24-12-2025

புதன்

கிறிஸ்துமஸ் ஈவ்

31-12-2025

புதன்

நியூ இயர் ஈவ்

31-12-2025

புதன்

வைகுண்ட ஏகாதசி

தமிழர் பாரம்பரிய உணவு வகைகள் தமிழ்ப் பேச்சு, கட்டுரை


Tamil Traditional Food Types Tamil Speech, Essay

தமிழர் பாரம்பரிய உணவு வகைகள் தமிழ்ப் பேச்சு, கட்டுரை pdf

 Tamil Traditional Food Types Tamil Speech, Essay pdf 


பதிவிறக்கு/DOWNLOAD

தமிழர் பாரம்பரிய உணவு வகைகள் தமிழ்ப் பேச்சு, கட்டுரை

 Traditional Tamil food Tamil Speech, Essay

தமிழர் பாரம்பரிய உணவு வகைகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

 

'உணவே மருந்து' என்று வாழ்ந்து வந்தவர்கள் நம் முன்னோர். ஆனால் இன்றோ மருந்தே உணவு' என்னும் நிலை இருக்கிறது. பண்பாடும் நாகரிகமும் நம்மில் பிறந்தது. மேலைநாட்டு நாகரிகம் உடைகளில் தொற்றிக் கொண்டாலும் உணவில் தொற்றிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கடமை. அதற்கு நம்முடைய பாரம்பரிய உணவு வகைகள் என்ன? அதன் மருத்துவக் குணங்கள் என்ன? என்று நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தமிழ்த்துகள்

"பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்' என்கின்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கறி' என்ற சொல்லுக்கு 'மிளகுக் கறி' என்பது தான் சரியான சொல்லாகும்.

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்

காலில் வந்த கருங்கறி மூட்டையும் என்ற பட்டினப்பாலை வரிகள் மூலம் மிளகினை மூட்டை மூட்டையாக நாம் முன்னோர் அக்காலத்திலேயே ஏற்றுமதி செய்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அது மட்டுமல்ல! விலை மதிக்க முடியாத ஏலம், இலவங்கம், சீரகம், மஞ்சள் போன்ற நறுமணப் பொருள்களோடு நகர்ந்து இருக்கின்றன நம்முடைய கலங்கள் வணிகத்திற்காகப் பெருங்கடல்களுள். அன்று கிரேக்கமும் ரோமாபுரியும் தமிழ்நாட்டோடு கடல் வணிகத் தொடர்பு கொண்டிருக்கின்றன. அரிக்கமேடு அகழாய்வில் கிடைத்த நாணயங்கள் மூலம் நாம் அறிய முடிகிறது. தமிழ்த்துகள்

 

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM            தமிழ்த்துகள்

 

பூம்புகார் மிகச் சிறந்த துறைமுகமாக இருந்திருக்கிறது. இயற்கை வாழ்வு வாழ்ந்தவர்கள் நம் தமிழர். நீர் மேலாண்மையும் நேர மேலாண்மையும் நம் பாரம்பரியச் சொத்து. அது மட்டுமா? வாழ்க்கையை அகம்-புறம் என்று பிரித்து அதன் உட்கூறுகளை அன்றே பட்டியலிட்டவர்கள் நாம், அப்படி இருக்கும்போது உணவு முறையில் மட்டும் விட்டு விடுவோமா என்ன? தமிழ்த்துகள்

நம்முடைய பொற்குவையாக இருந்த சிறு தானிய உணவுகளை நாம் புறக்கணித்ததன் விளைவாகத்தான் இன்று நம்மில் பலர் உடல் பருமனோடு அலைகிறார்கள். தினை, கம்பு, வரகு, சாமை, கேழ்வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானிய வகைகள் உடலுக்குத் தேவையான தாது உப்புகள் நிறைந்தவை ஆகும். விருந்து போற்றுதல் அறம் என்று அக்காலத்தில் இருந்தது. தமிழ்த்துகள்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது என்கிறார் வள்ளுவர்.

சிறுதானிய உணவுகளில் செய்யக்கூடிய இட்லி, தோசை, சத்துமாவு உருண்டைகள் போன்றவை உடலுக்கு வலுச் சேர்க்கக் கூடியவை. அதிலும் முளைகட்டிய தானியங்கள் என்றால் இன்னும் கூடுதல் சத்துகள் நிறைந்திருக்கும். முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, அகத்திக்கீரை என இரும்புச் சத்து மிக்க கீரைகள் நம் முன்னோரின் உடல் உறுதிக்கு அடித்தளம் இட்டிருக்கின்றன. தமிழ்த்துகள்

 

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM            தமிழ்த்துகள்

 

ஒளி படைத்த கண்ணினாய் வா வா என்று பாரதி அழைக்கும் போதும் சரி, வலிமை மிகுந்த இந்தியர்களே அணிவகுத்து நில்லுங்கள் என்று அன்று நேதாஜி அழைக்கும் போதும் சரி தினவெடுத்த தோள்கள் கொண்ட நம் வீர மறவர்கள்தான் அன்று வரிசையில் நின்றார்கள். அதற்குக் காரணம் நம்முடைய பாரம்பரிய உணவு வகைகள் தான். தமிழ்த்துகள்

எள் நெய், கடலை நெய் ஆகியவற்றை நாம் பயன்படுத்தி வருகிறோம். தாவரங்களிலிருந்து கிடைக்கக்கூடிய எண்ணெய்களில் கெட்ட கொழுப்பு இல்லை. ஆனால், விலங்குகளிலிருந்து பெறக்கூடிய அனைத்திலும் கெட்ட கொழுப்பு இருக்கிறது. செந்நெற்சோறு, வரகுச் சோறு, வெண்ணெற் சோறு, பழைய சோறு என்ற சோறு வகைகளும் கம்பங்கூழ், கேழ்வரகுக் கூழ், தினைக்கூழ், சாமைக்கூழ், வரகுக் கூழ் என்ற கூழ் வகைகளும் உளுந்தங்களி, கேழ்வரகு ரொட்டி, பிரண்டைத் துவையல், எள் சாதம், ஊன்பொதி உணவு என்று வகை வகையான உணவு வகைகளைச் சமைத்து நம் முன்னோர் உண்டு மகிழ்ந்து இருக்கிறார்கள். தமிழ்த்துகள்

 

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM            தமிழ்த்துகள்

 

'இளைத்தவனுக்கு எள்ளாம் கொழுத்தவனுக்குக் கொள்ளாம்' என்று நம் பழமொழி ஒன்று கூறுகிறது ஆம் எள் நெய் உடம்பில் சேரச் சேர ஒருவருக்கு வலு கூடுகிறது. கொள்ளு உடம்பில் சேரச் சேர ஒருவரின் கொழுப்பு கரைகிறது. இதனை அன்றே நடைமுறைப்படுத்தி வாழ்ந்தவர்கள் நம் தமிழர்கள். கேழ்வரகு, கம்பு, பச்சைப் பயிறு, சிவப்பு அரிசி, பொட்டுக்கடலை, கொள்ளு, வேர்க்கடலை போன்ற ஒன்பது வகைத் தானியங்களை இட்டு இடித்து உருண்டையாக்கி சத்துமா உருண்டை என்று வளரும் பிள்ளைகளுக்குக் கொடுத்து வளர்த்தவர்கள் நம் தமிழர்கள். தமிழ்த்துகள்

சத்தான பால், வெண்ணெய், பாலாடைக் கட்டி என்று அனைத்தையும் உரிய அளவில் சேர்க்கப் பழகியவர்கள் நம் தமிழர்கள். மிளகு சீரகம், பூண்டு, இஞ்சி இவற்றை நம் உணவில் சேர்த்ததன் மூலம் உண்ட உணவு செரிப்பதற்கான அனைத்தையும் இவை செய்யும் என்று அறிந்திருக்கிறார்கள்.

அவர்கள் மா, பலா, வாழை என்ற முக்கனிகளை மட்டும் அவர்கள் உண்ணவில்லை, இலந்தை, மஞ்சனத்தி, கள்ளிப் பழங்கள், அத்திப்பழங்கள் என்று இயற்கையாகக் கிடைத்த அனைத்தையும் உண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல : இறைச்சி வகையில் கோழி, ஆடு, பன்றி, முயல், உடும்பு என்று ஒரு பட்டியலே இருக்கிறது. தமிழ்த்துகள்

கடல் உணவு நெய்தல் நிலத்து மக்களின் முக்கிய உணவாக இருந்திருக்கிறது. மருத நிலத்தில் கிடைக்கக்கூடிய நெத்திலி மீன், அயிரை மீன், விரால் மீன் ஆகியவையும் உள்நாட்டு மீன் பிடிப்பு மூலம் கிடைக்கக்கூடியதாக இருந்தது. இவற்றையும் சமைத்து நம் முன்னோர் உண்டு இருக்கிறார்கள். எள்ளு ரசம், கொள்ளு ரசம், வேப்பம்பூ ரசம், பருப்பு ரசம், மிளகு ரசம் என்று ரசத்தில் பல வகை வைத்து நம் முன்னோர் உண்டு இருக்கிறார்கள். தமிழ்த்துகள்

 

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM            தமிழ்த்துகள்

 

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்தமிழ்த்துகள்

நல்விருந்து வானத்தவர்க்கு என்று விருந்தோம்பல் செய்பவனை தேவாதி தேவர்கள் வரவேற்கத் தயாராக இருப்பார்கள் என்று கூறுகிறார் திருவள்ளுவர். தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை நாம் அறிவோம்: அதே நேரத்தில் ஒவ்வொரு உணவையும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதையும் நாம் அறிந்து சாப்பிட வேண்டும். அதற்காகத்தான் நம் முன்னோர் அருந்துதல், உண்ணல், உறிஞ்சல், குடித்தல், தின்னல், நக்கல், நுங்கல், பருகல், மாந்தல், மெல்லல் விழுங்கல் என்று உண்பதற்குப் பெயர் வைத்திருக்கிறார்கள்.    தமிழ்த்துகள்

சிறிய அளவு உண்பதை அருந்துதல் என்கிறோம் ; உண்ணல் என்பது பசி தீர உண்ணலாகும்; நீரியற் பண்டத்தைக் குடிப்பது உறிஞ்சல்; கஞ்சி போன்றவற்றைப் பசி நீங்கக் குடிப்பதே குடித்தல், தின்பண்டம் தின்பது தின்னல், சுவையூற நாக்கால் ஒற்றிச் சாப்பிடுவது நக்கல், முழுவதையும் ஒரு வாயால் ஈர்த்து உறிஞ்சி உட்கொள்வதே நுங்கல் என்கிறோம்.  தமிழ்த்துகள்

 

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

 

நீரியற்பண்டத்தைச் சிறுகச் சிறுக உறிஞ்சிக் குடிக்கும் போது அது பருகல் எனப்படுகிறது. பெருவேட்கை கொண்டு மடமட என்று சாப்பிட்டால் அதற்கு மாந்துதல் என்று பெயர். கடித்துத் துதைத்து உட்கொண்டால் அது மெல்லல் ஆகும். அப்படியே தொண்டைக் குழிக்குள் இறக்கி உண்ணுதல் விழுங்கல் எனப்படும். எத்தனை சொற்களஞ்சியம் தமிழில் இருக்கிறது.   தமிழ்த்துகள்

உண்பதற்கு வாழை இலை விரித்துப் பரிமாறக்கூடிய முறை தமிழர்கள் வைத்திருக்கிறார்கள். இலையில் உள்ள பச்சையம் உண்ணும் உணவோடு கலந்து உடலுக்குள் சென்று நல்ல செரிமானம் தருகிறது. உண்ட பின் வெற்றிலை பாக்கு போடும் வழக்கம் இருந்திருக்கிறது. கடல் உணவு, இறைச்சி, மரக்கறி, சிறப்பு உணவுகள் என்று எதையும் குறை வைக்காமல் சாப்பிட்டவர்கள் நம் தமிழர். தமிழ்த்துகள்

மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்

வளி முதலா எண்ணிய மூன்று என்று திருக்குறள் விளக்குகிறது. தமிழ்த்துகள்

2200 கலோரிக்கும் குறைவாக உண்பவர்கள் தமிழ்நாட்டில் 35% இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. சோடியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செம்பு ஆகிய தாது உப்புகள் நிறைந்த உணவையே நாம் உண்டிருக்கிறோம். வைட்டமின் ஏ அதிகம் உள்ள பப்பாளி நம் உணவில் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது. தமிழ்த்துகள்

வெயிலோடு விளையாடி வெயிலிலேயே வேலை செய்யும் உழவுத் தொழில் நம் தொழில் என்பதால் வைட்டமின் டி பெறுவதில் சிரமம் இல்லை. ஆனால், இன்றோ வறுத்த பொறித்த உணவு வகைகளை அதிகம் உண்கிறார்கள். 100 டிகிரி அளவில் இறைச்சியை வறுக்கும்போது ஹைட்ரோ சைக்ளிக் அமீன் என்ற வேதிப்பொருள் அதிலிருந்து தோன்றுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அது புற்று நோய்க்கு வித்திடுகிறது என்பதை பலர் அறிய மாட்டார்கள். தமிழ்த்துகள்

 

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM            தமிழ்த்துகள்

 

எல்டிஎல் என்று சொல்லப்படும் கெட்ட கொழுப்பு குடல் நோயை மட்டுமல்ல: இதய நோயையும் தருகிறது. தீட்டப்பட்ட அரிசியில் தையமின் என்று சொல்லப்படக்கூடிய வைட்டமின் பி1 இருக்காது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதனால் நமக்கு பெரிபெரி நோய் ஏற்படும். கெட்டித் தயிர் சேர்த்து சாப்பிடும் வழக்கம் நம் முன்னோரிடம் இருந்திருக்கிறது. தமிழ்த்துகள்

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்

கழுவுறு கலிங்கம் கலாஅது உடீஇ என்ற குறுந்தொகைப் பாடல் தலைவியின் மோர்க் குழம்பு சமையலை விளக்குகிறது. தமிழ்த்துகள்

சமையலில் சிறந்தவனாக நள மகாராஜா இருந்ததாக நாம் அறிகிறோம். அதனால் தான் சமையலை நள பாகம் என்று சொல்வதும் உண்டு. பெண்கள் மட்டுமே அடுப்படிக்குச் சொந்தக்காரர்கள் அல்ல: என்பதை இன்றைய நவீன சமுதாயம் உணர்ந்து விட்டது, இருந்தாலும் ஆயத்த உணவுகளை உண்பதால் பல்வேறு ஆபத்துகள் காத்திருக்கின்றன. தமிழ்த்துகள்

 

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM            தமிழ்த்துகள்

 

சுவையூட்டிகளும் நிறமூட்டிகளும் நமக்குப் புற்றுநோயைத் தருவதற்குக் காத்திருக்கின்றன. தவியாய்த் தவிக்கின்றன. வெங்காயம், பச்சை மிளகாய் கடித்துக்கொண்டு பழைய சோறு சாப்பிடுவதில் உள்ள சுவை இன்றைய நவீன உணவுகளில் இல்லை என்பது கண்கூடான உண்மை. தமிழ்த்துகள்

சாப்பிட்ட உணவு செரித்து விட்டதா? என்பதை அறிந்து உண்ண வேண்டும் என்று எச்சரிக்கிறார் திருவள்ளுவர்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியதுதமிழ்த்துகள்

 அற்றது போற்றி உணின் என்ற அவருடைய குறட்பா விருந்தையும் போற்றுகிறது மருந்தையும் சொல்கிறது.

பசித்துப் புசி என்ற முதுமொழி நமக்கு நினைவிருக்கலாம், பசி வந்தால் பத்தும் பறந்து போகும் அதனால்தான் பசியைப் பிணி என்று சொல்லுகிறோம். உயிர்கள் உண்ண உணவளிப்பவன் பசிப்பிணி மருத்துவன் என்று அழைக்கப்படுகிறான். இரவலர் கேட்கும் போது ஈயும் எவரும் கடவுளராவர் என்பது கண் கூடு. தமிழ்த்துகள்

தமிழர்களின் பாரம்பரியமும் பண்பாடும் நம்முடைய உணவு முறைகளில் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. உண்ணும் உணவும் பருகும் நீரும் உயிரை வளர்ப்பன. வரும் தலைமுறைக்கு அதை எடுத்துச் செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். தமிழரின் பாரம்பரிய உணவு முறைகளைப் போற்றுவோம் அவற்றை உண்டு பண்புள்ள மனிதர்களாக இப்பாரினில் உயர்வோம்:

தமிழ்த்துகள்

 

மு.முத்து முருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி. 9443323199            தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM       தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive