Traditional Tamil food Tamil Speech, Essay
தமிழர் பாரம்பரிய உணவு வகைகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர்
கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்,
போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
'உணவே மருந்து' என்று வாழ்ந்து வந்தவர்கள் நம் முன்னோர். ஆனால்
இன்றோ மருந்தே உணவு' என்னும் நிலை இருக்கிறது. பண்பாடும்
நாகரிகமும் நம்மில் பிறந்தது. மேலைநாட்டு நாகரிகம் உடைகளில் தொற்றிக் கொண்டாலும் உணவில்
தொற்றிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கடமை. அதற்கு நம்முடைய பாரம்பரிய உணவு வகைகள் என்ன? அதன் மருத்துவக் குணங்கள் என்ன?
என்று நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தமிழ்த்துகள்
"பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்' என்கின்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கறி' என்ற சொல்லுக்கு 'மிளகுக் கறி'
என்பது தான் சரியான சொல்லாகும்.
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலில் வந்த கருங்கறி மூட்டையும் என்ற பட்டினப்பாலை வரிகள் மூலம் மிளகினை மூட்டை மூட்டையாக நாம் முன்னோர்
அக்காலத்திலேயே ஏற்றுமதி செய்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அது மட்டுமல்ல! விலை
மதிக்க முடியாத ஏலம், இலவங்கம், சீரகம்,
மஞ்சள் போன்ற நறுமணப் பொருள்களோடு நகர்ந்து இருக்கின்றன
நம்முடைய கலங்கள் வணிகத்திற்காகப் பெருங்கடல்களுள். அன்று கிரேக்கமும் ரோமாபுரியும்
தமிழ்நாட்டோடு கடல் வணிகத் தொடர்பு கொண்டிருக்கின்றன. அரிக்கமேடு
அகழாய்வில் கிடைத்த நாணயங்கள் மூலம் நாம் அறிய முடிகிறது.
தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
பூம்புகார் மிகச் சிறந்த துறைமுகமாக இருந்திருக்கிறது. இயற்கை
வாழ்வு வாழ்ந்தவர்கள் நம் தமிழர். நீர் மேலாண்மையும் நேர மேலாண்மையும் நம் பாரம்பரியச்
சொத்து. அது மட்டுமா? வாழ்க்கையை அகம்-புறம் என்று பிரித்து அதன் உட்கூறுகளை அன்றே பட்டியலிட்டவர்கள்
நாம், அப்படி இருக்கும்போது உணவு முறையில் மட்டும் விட்டு விடுவோமா என்ன? தமிழ்த்துகள்
நம்முடைய பொற்குவையாக இருந்த சிறு தானிய உணவுகளை நாம் புறக்கணித்ததன்
விளைவாகத்தான் இன்று நம்மில் பலர் உடல் பருமனோடு அலைகிறார்கள். தினை, கம்பு, வரகு, சாமை, கேழ்வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானிய வகைகள் உடலுக்குத் தேவையான தாது உப்புகள் நிறைந்தவை ஆகும். விருந்து போற்றுதல் அறம் என்று அக்காலத்தில் இருந்தது. தமிழ்த்துகள்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது என்கிறார் வள்ளுவர்.
சிறுதானிய உணவுகளில் செய்யக்கூடிய இட்லி, தோசை, சத்துமாவு உருண்டைகள் போன்றவை உடலுக்கு
வலுச் சேர்க்கக் கூடியவை. அதிலும் முளைகட்டிய தானியங்கள் என்றால் இன்னும் கூடுதல் சத்துகள்
நிறைந்திருக்கும். முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, அகத்திக்கீரை என இரும்புச் சத்து மிக்க கீரைகள் நம் முன்னோரின்
உடல் உறுதிக்கு அடித்தளம் இட்டிருக்கின்றன. தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
ஒளி படைத்த கண்ணினாய் வா வா என்று பாரதி அழைக்கும் போதும் சரி, வலிமை
மிகுந்த இந்தியர்களே அணிவகுத்து நில்லுங்கள் என்று அன்று நேதாஜி அழைக்கும் போதும் சரி தினவெடுத்த தோள்கள் கொண்ட
நம் வீர மறவர்கள்தான் அன்று வரிசையில் நின்றார்கள். அதற்குக் காரணம் நம்முடைய பாரம்பரிய
உணவு வகைகள் தான்.
தமிழ்த்துகள்
எள் நெய், கடலை நெய் ஆகியவற்றை நாம் பயன்படுத்தி வருகிறோம். தாவரங்களிலிருந்து கிடைக்கக்கூடிய எண்ணெய்களில்
கெட்ட கொழுப்பு இல்லை. ஆனால், விலங்குகளிலிருந்து பெறக்கூடிய
அனைத்திலும் கெட்ட கொழுப்பு இருக்கிறது. செந்நெற்சோறு, வரகுச் சோறு, வெண்ணெற் சோறு, பழைய
சோறு என்ற சோறு வகைகளும் கம்பங்கூழ், கேழ்வரகுக் கூழ், தினைக்கூழ், சாமைக்கூழ்,
வரகுக் கூழ் என்ற கூழ் வகைகளும் உளுந்தங்களி, கேழ்வரகு ரொட்டி, பிரண்டைத் துவையல், எள் சாதம், ஊன்பொதி உணவு என்று வகை வகையான உணவு வகைகளைச் சமைத்து நம் முன்னோர் உண்டு மகிழ்ந்து இருக்கிறார்கள்.
தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
'இளைத்தவனுக்கு எள்ளாம் கொழுத்தவனுக்குக் கொள்ளாம்'
என்று நம் பழமொழி ஒன்று கூறுகிறது ஆம் எள் நெய் உடம்பில் சேரச்
சேர ஒருவருக்கு வலு கூடுகிறது. கொள்ளு உடம்பில் சேரச் சேர ஒருவரின் கொழுப்பு கரைகிறது.
இதனை அன்றே நடைமுறைப்படுத்தி வாழ்ந்தவர்கள் நம் தமிழர்கள். கேழ்வரகு, கம்பு, பச்சைப் பயிறு, சிவப்பு
அரிசி, பொட்டுக்கடலை, கொள்ளு, வேர்க்கடலை
போன்ற ஒன்பது வகைத் தானியங்களை இட்டு இடித்து
உருண்டையாக்கி சத்துமா உருண்டை என்று வளரும் பிள்ளைகளுக்குக் கொடுத்து வளர்த்தவர்கள்
நம் தமிழர்கள். தமிழ்த்துகள்
சத்தான பால், வெண்ணெய், பாலாடைக்
கட்டி என்று அனைத்தையும் உரிய அளவில் சேர்க்கப் பழகியவர்கள்
நம் தமிழர்கள். மிளகு சீரகம், பூண்டு,
இஞ்சி இவற்றை நம் உணவில் சேர்த்ததன் மூலம் உண்ட உணவு
செரிப்பதற்கான அனைத்தையும் இவை செய்யும் என்று அறிந்திருக்கிறார்கள்.
அவர்கள் மா, பலா, வாழை என்ற முக்கனிகளை மட்டும் அவர்கள் உண்ணவில்லை,
இலந்தை, மஞ்சனத்தி, கள்ளிப் பழங்கள், அத்திப்பழங்கள் என்று இயற்கையாகக் கிடைத்த அனைத்தையும் உண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல : இறைச்சி
வகையில் கோழி, ஆடு, பன்றி,
முயல், உடும்பு என்று ஒரு பட்டியலே இருக்கிறது. தமிழ்த்துகள்
கடல் உணவு நெய்தல் நிலத்து மக்களின் முக்கிய உணவாக இருந்திருக்கிறது.
மருத நிலத்தில் கிடைக்கக்கூடிய நெத்திலி மீன், அயிரை
மீன், விரால் மீன் ஆகியவையும் உள்நாட்டு மீன் பிடிப்பு மூலம் கிடைக்கக்கூடியதாக இருந்தது. இவற்றையும்
சமைத்து நம் முன்னோர் உண்டு இருக்கிறார்கள். எள்ளு
ரசம், கொள்ளு ரசம், வேப்பம்பூ
ரசம், பருப்பு ரசம், மிளகு ரசம் என்று ரசத்தில் பல வகை வைத்து நம் முன்னோர் உண்டு இருக்கிறார்கள். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்தமிழ்த்துகள்
நல்விருந்து வானத்தவர்க்கு என்று விருந்தோம்பல் செய்பவனை தேவாதி தேவர்கள் வரவேற்கத் தயாராக இருப்பார்கள் என்று
கூறுகிறார் திருவள்ளுவர். தமிழ்த்துகள்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை நாம் அறிவோம்: அதே நேரத்தில் ஒவ்வொரு உணவையும் எவ்வளவு சாப்பிட வேண்டும்
என்பதையும் நாம் அறிந்து சாப்பிட வேண்டும். அதற்காகத்தான் நம் முன்னோர் அருந்துதல், உண்ணல், உறிஞ்சல்,
குடித்தல், தின்னல், நக்கல்,
நுங்கல், பருகல், மாந்தல்,
மெல்லல் விழுங்கல் என்று உண்பதற்குப்
பெயர் வைத்திருக்கிறார்கள். தமிழ்த்துகள்
சிறிய அளவு உண்பதை அருந்துதல் என்கிறோம் ; உண்ணல் என்பது பசி தீர உண்ணலாகும்; நீரியற்
பண்டத்தைக் குடிப்பது உறிஞ்சல்; கஞ்சி போன்றவற்றைப் பசி நீங்கக்
குடிப்பதே குடித்தல், தின்பண்டம் தின்பது தின்னல், சுவையூற நாக்கால் ஒற்றிச் சாப்பிடுவது நக்கல், முழுவதையும்
ஒரு வாயால் ஈர்த்து உறிஞ்சி உட்கொள்வதே நுங்கல் என்கிறோம். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
நீரியற்பண்டத்தைச் சிறுகச் சிறுக உறிஞ்சிக் குடிக்கும் போது
அது பருகல் எனப்படுகிறது. பெருவேட்கை கொண்டு மடமட என்று சாப்பிட்டால் அதற்கு மாந்துதல்
என்று பெயர். கடித்துத் துதைத்து உட்கொண்டால் அது மெல்லல் ஆகும். அப்படியே தொண்டைக்
குழிக்குள் இறக்கி உண்ணுதல் விழுங்கல் எனப்படும். எத்தனை சொற்களஞ்சியம் தமிழில் இருக்கிறது. தமிழ்த்துகள்
உண்பதற்கு வாழை இலை விரித்துப் பரிமாறக்கூடிய
முறை தமிழர்கள் வைத்திருக்கிறார்கள். இலையில் உள்ள பச்சையம் உண்ணும் உணவோடு கலந்து
உடலுக்குள் சென்று நல்ல செரிமானம் தருகிறது. உண்ட பின் வெற்றிலை
பாக்கு போடும் வழக்கம் இருந்திருக்கிறது. கடல் உணவு, இறைச்சி, மரக்கறி, சிறப்பு உணவுகள் என்று எதையும் குறை வைக்காமல் சாப்பிட்டவர்கள் நம் தமிழர். தமிழ்த்துகள்
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று என்று திருக்குறள் விளக்குகிறது. தமிழ்த்துகள்
2200 கலோரிக்கும் குறைவாக உண்பவர்கள் தமிழ்நாட்டில் 35% இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. சோடியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செம்பு ஆகிய தாது உப்புகள் நிறைந்த உணவையே நாம் உண்டிருக்கிறோம். வைட்டமின் ஏ அதிகம் உள்ள
பப்பாளி நம் உணவில் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது. தமிழ்த்துகள்
வெயிலோடு விளையாடி வெயிலிலேயே வேலை செய்யும் உழவுத் தொழில் நம்
தொழில் என்பதால் வைட்டமின் டி பெறுவதில் சிரமம் இல்லை. ஆனால், இன்றோ வறுத்த பொறித்த உணவு வகைகளை அதிகம் உண்கிறார்கள். 100 டிகிரி
அளவில் இறைச்சியை வறுக்கும்போது ஹைட்ரோ சைக்ளிக் அமீன் என்ற வேதிப்பொருள் அதிலிருந்து தோன்றுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அது
புற்று நோய்க்கு வித்திடுகிறது என்பதை பலர் அறிய மாட்டார்கள். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எல்டிஎல் என்று சொல்லப்படும்
கெட்ட கொழுப்பு குடல் நோயை மட்டுமல்ல: இதய நோயையும் தருகிறது. தீட்டப்பட்ட அரிசியில்
தையமின் என்று சொல்லப்படக்கூடிய வைட்டமின் பி1 இருக்காது
என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதனால் நமக்கு பெரிபெரி நோய்
ஏற்படும். கெட்டித் தயிர் சேர்த்து சாப்பிடும் வழக்கம் நம் முன்னோரிடம் இருந்திருக்கிறது. தமிழ்த்துகள்
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கலாஅது உடீஇ என்ற குறுந்தொகைப் பாடல் தலைவியின் மோர்க் குழம்பு சமையலை விளக்குகிறது. தமிழ்த்துகள்
சமையலில் சிறந்தவனாக நள
மகாராஜா இருந்ததாக நாம் அறிகிறோம். அதனால் தான் சமையலை
நள பாகம் என்று சொல்வதும் உண்டு. பெண்கள் மட்டுமே அடுப்படிக்குச் சொந்தக்காரர்கள் அல்ல:
என்பதை இன்றைய நவீன சமுதாயம் உணர்ந்து விட்டது, இருந்தாலும் ஆயத்த உணவுகளை உண்பதால்
பல்வேறு ஆபத்துகள் காத்திருக்கின்றன. தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
சுவையூட்டிகளும் நிறமூட்டிகளும் நமக்குப் புற்றுநோயைத்
தருவதற்குக் காத்திருக்கின்றன. தவியாய்த் தவிக்கின்றன. வெங்காயம், பச்சை மிளகாய் கடித்துக்கொண்டு பழைய சோறு சாப்பிடுவதில்
உள்ள சுவை இன்றைய நவீன உணவுகளில் இல்லை என்பது கண்கூடான உண்மை. தமிழ்த்துகள்
சாப்பிட்ட உணவு செரித்து விட்டதா? என்பதை அறிந்து உண்ண வேண்டும் என்று எச்சரிக்கிறார் திருவள்ளுவர்
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியதுதமிழ்த்துகள்
அற்றது போற்றி
உணின் என்ற அவருடைய குறட்பா விருந்தையும் போற்றுகிறது
மருந்தையும் சொல்கிறது.
பசித்துப் புசி என்ற முதுமொழி நமக்கு நினைவிருக்கலாம், பசி
வந்தால் பத்தும் பறந்து போகும் அதனால்தான் பசியைப் பிணி என்று சொல்லுகிறோம். உயிர்கள் உண்ண உணவளிப்பவன்
பசிப்பிணி மருத்துவன் என்று அழைக்கப்படுகிறான். இரவலர் கேட்கும் போது ஈயும் எவரும் கடவுளராவர் என்பது
கண் கூடு. தமிழ்த்துகள்
தமிழர்களின் பாரம்பரியமும் பண்பாடும் நம்முடைய
உணவு முறைகளில் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. உண்ணும் உணவும் பருகும் நீரும் உயிரை
வளர்ப்பன. வரும் தலைமுறைக்கு அதை எடுத்துச் செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
தமிழரின் பாரம்பரிய உணவு முறைகளைப் போற்றுவோம் அவற்றை உண்டு பண்புள்ள மனிதர்களாக இப்பாரினில்
உயர்வோம்:
மு.முத்து முருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி. 9443323199 தமிழ்த்துகள்