கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, June 30, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-06-2025. திங்கள்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

30-06-2025. திங்கள்.

திருக்குறள் :

பால் : அறத்துப்பால் ; 

இயல்: இல்லறவியல்;

அதிகாரம் : அன்புடைமை ; 

குறள் எண் : 074.

குறள் :

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு.

விளக்கம் :

அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

பழமொழி :

கற்றல் என்பது ஓட்டப்போட்டி அல்ல, ஒரு பயணம்."

Learning is a journey, not a race.

இரண்டொழுக்க பண்புகள்:

1. பெரியோர், பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

+ மக்கள் சமுதாயத்தில் புரட்சிகள் உண்டாகும் போது, அந்தச்

சமுதாயம் பழையன களைந்து புது வாழ்வு தொடங்க ஏதுவாகிறது ரூசோ.

பொது அறிவு :

01. தஞ்சை பெரிய கோயில் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்த ஆண்டு எது?

1987 ஆம் ஆண்டு

02. இந்தியாவில் உப்பு நீர் அதிகம் ஏரிகள் உள்ள மாநிலம் எது?

ராஜஸ்தான் (Rajasthan)

English words:

economy.

பொருளாதாரம்

genuine

நேர்மையான

அறிவியல் களஞ்சியம் :

முத்துச்சிப்பி கடலடியில் வாழ்வதால், அதனுள் செல்லும் மணல் ஒன்றின்மீது, முத்துச் சிப்பியுள் சுரக்கும் சுரப்புநீர் படிந்து படிந்து முத்தாக மாறுகிறது. மணலை ஆதாரமாகக் கொண்டு சுரப்புநீர் படிந்தே முத்தாக உருவாகிறது.

ஜூன் 30 மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் அவர்களின் பிறந்த நாள்

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் ||

பிறப்பு ஜூன் 30, 1985, பால்ட்டிமோர், மேரிலன்ட்.

பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் ஆவார்.

28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களைப் பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார்.

நீதிக்கதை - மனத்திருப்தி

ஒரு கோவிலில் கல்தச்சர்களின் முயற்சியால் சிற்பங்கள், சிலைகள், விக்ரகங்கள் வடிவமைக்கப் பட்டுக்கொண்டு இருந்தன. ஒரு கல்தச்சர் ஒரு சிலையை உருவாக்கிக்கொண்டு இருந்தார். அவரின் அருகில் ஒரே மாதிரியான இரண்டு சிலைகள் இருந்தன. எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருந்தன. அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர், "ஒரே விக்ரகத்திற்கு இரண்டு சிலைகளை உருவாக்குகிறீர்களா அய்யா?" என்றார்.

கல்தச்சர் சொன்னார், "எங்களுக்கு ஒரே ஒரு சிலையே போதுமானது ஆனால் முதலில் செய்யப்பட்ட சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இரண்டாவது சிலையை உருவாக்குகிறேன் வழிப்போக்கர் நன்றாக இரண்டு சிலைகளையும் உற்றுக் கவனித்துவிட்டுச் சொன்னார் "எந்த சேதமும் எனது கண்ணுக்குத் தெரியவில்லையே". தனது வேலையில் கவனத்துடன் இருந்த கல்தச்சர் சொன்னார் "அந்தச்சிலையின் மூக்கின் அருகில் ஒரு சிறிய சேதமுள்ளது." என்றார்.

"இந்தச் சிலையை எங்கே நிர்மாணிக்கவிருக்கிறீர்கள்?" என்றார் வழிப்போக்கர். "50 அடி உயரத்தில் மேலே நிர்மாணிக்க இருக்கிறோம்" என்றார் கல்தச்சர். அதற்கு "ஐம்பதடி உயரத்தில் இருக்கப்போகிற சிலையின் மூக்கினருகில் இருக்கும் இந்தச் சிறிய சேதத்தை யார் கவனிக்கப் போகிறார்கள்?" என்றார் வழிப்போக்கர். தனது வேலையை சற்று நிறுத்திவிட்டு வழிப்போக்கரிடம் புன்னகையுடன் கல்தச்சர், சொன்னார் "யார் கவனிக்கப் போகிறார்கள்? எனக் கேட்கிறீர்கள். வேறு யாருக்கும் அந்தச் சேதம் தெரிவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

எனது கடமையில் இப்படி ஒரு சேதத்தை நான் உருவாக்கியதை அடுத்தவரிடம் மறைப்பது எனக்குப் பிடிக்கவில்லை. சேதம் சிறியதா? பெரியதா? என்பது பற்றிக் கவலையில்லை. செய்யும் தொழிலில் பிழையேற்படலாம். ஆனால் பிழையை மறைக்காமல் வெளிப்படையாக இருக்கவே விரும்புகிறேன்".

நீதி: உயர்ந்த தரம் என்பது அடுத்தவரின் பார்வையில் இருந்து வரவேண்டியது இல்லை. அது தனக்குள்ளேயே இருந்து வரவேண்டும். அடுத்தவருக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் இன்பத்தை விட தன் மனத்திருப்திக்காக வேலைசெய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்.

இன்றைய செய்திகள் -30.06.2025

* பேருந்துகளில் படிக்கட்டில் நின்றும், தொங்கியபடியும் பயணம் செய்பவர்கள் (மாணவர்கள்) மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு. சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு.

* இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் டஜன் கணக்கான உயிர்களைக் கொன்றன. காசாவில் சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் பொதுமக்களை இழந்துள்ளன.

விளையாட்டுச் செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸில் 25வது ஸ்லாம் பட்டத்தை வெல்ல நோவக் ஜோகோவிச் இலக்கு.

கிரிகெட்-

செயின்ட் லூயிஸ் கார்டினல்ஸ் அணி 1-6 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் இருந்த நிலையில், கிளீவ்லேண்டை 9-6 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Today's Headlines - 30.06.2025

The Madurai bench of the High Court has ordered the police to register case and take action against those (students) who travel by standing on the stairs of bus or hanging on the buses.

Public exams for class 10 students to be held twice a year from now on. CBSE announcement.

Israeli airstrikes kill dozens. Recent Israeli airstrikes in Gaza have claimed the lives of civilians

SPORT SPORTS NEWS

Novak Djokovic aims for 25th Slam title at Wimbledon.

Cricket- St. Louis Cardinals came from 1-6 down to beat Cleveland 9-6.

Sunday, June 29, 2025

காமராஜரின் எளிமையும் வலிமையும் தமிழ்ப்பேச்சு கட்டுரை Kamaraja's Simplicity and Strength Tamil Speech


Kamaraja's Simplicity and Strength Tamil Speech

KAMARAJARIN ELIMAIYUM VALIMAIYUM

காமராஜரின் எளிமையும் வலிமையும் தமிழ்ப் பேச்சு கட்டுரை pdf Kamaraja's Simplicity and Strength

 பதிவிறக்கு/DOWNLOAD


Kamaraja's Simplicity and Strength Tamil Speech Essay

KAMARAJARIN ELIMAIYUM VALIMAIYUM TAMIL PECHU KATTURAI

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 2 நெடுவினா விடை 9th tamil big question answer unit 2


 9th tamil big question answer unit 2 new syllabus 2025

Saturday, June 28, 2025

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் தமிழ்ப் பேச்சு, கட்டுரை PIRAPPOKKUM ELLA UYIRKKUM TAMIL SPEECH



PIRAPPOKKUM ELLA UYIRKKUM TAMIL SPEECH essay

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் தமிழ்ப் பேச்சு, கட்டுரை PDF PIRAPPOKKUM ELLA UYIRKKUM

 பதிவிறக்கு/DOWNLOAD


For all life, from birth to death. TAMIL SPEECH ESSAY


PIRAPPOKKUM ELLA UYIRKKUM

இந்திய அரசியலமைப்புச் சட்டம் தமிழ்ப் பேச்சு, கட்டுரை inthiya arasiyalamaippu sattam tamil speech


 inthiya arasiyalamaippu sattam tamil speech

இந்திய அரசியலமைப்புச் சட்டம் தமிழ்ப் பேச்சு, கட்டுரை pdf inthiya arasiyalamaippu sattam tamil speech essay

 பதிவிறக்கு/DOWNLOAD


inthiya arasiyalamaippu sattam tamil speech essay

Constitution of India


அயல்நாடுகளில் அம்பேத்கரின் உயர்கல்வி தமிழ்ப் பேச்சு கட்டுரை Ambedkar's higher education tamil speech


Ambedkar's higher education tamil speech

அயல்நாடுகளில் அம்பேத்கரின் உயர்கல்வி தமிழ்ப் பேச்சு கட்டுரை pdf Ambedkar's higher education abroad tamil speech

 பதிவிறக்கு/DOWNLOAD


Ambedkar's higher education abroad tamil speech essay

ayalnadukalil ambedkarin uyarkalvi


Friday, June 27, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-06-2025. வெள்ளி

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

27-06-2025. வெள்ளி 

திருக்குறள் :

பால் : அறத்துப்பால் ; 

இயல்: இல்லறவியல்; 

அதிகாரம் : அன்புடைமை ; 

குறள் எண் : 072.

குறள் :

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.

விளக்கம் :

அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்

பழமொழி :

> அடக்கமுடைமை சிறந்த பண்பாகும்.

Humility is the best virtue.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கல்வியும் ஒழுக்கமும் என் வாழ்வை மேம்படுத்தும்.

2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.

பொன்மொழி :

நூறு முட்டாள்களுக்கு தலைவனாக இருப்பதைவிட ஒரு அறிவாளிக்கு அடிமையாக இருப்பது மேல். - ஸ்டீபன் ஸ்மித்

பொது அறிவு :

01. 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற்றது?

பாரிஸ்-பிரான்ஸ் Paris- France

02. சென்னையில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம் எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

கொசஸ்தலை ஆறு -திருவள்ளூர்

Kosasthalaiyaru - Thiruvallur

English words & Tips :

calamity

பேரழிவு

barriers

தடைகள்

Grammar Tips:

Collective nouns refer to groups of people, animals, or things considered as a single unit. So they often take a singular verb when referring to the group as a whole, but can take a plural verb when referring to the individual members.

Singular verb e.g., "The team is playing well".

Plural verb: when referring to the individual members within the group

Eg. "The team members are arguing about strategy".

அறிவியல் களஞ்சியம் :

மூளையின் அடிப் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது.

ஜூன் 27 பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களின் பிறந்த நாள்

84 27

இந்தியாவின் தேசியப் பாடல்

வந்தேமாதரம்

இயற்றிய பங்கிம் சந்திர சட்டோ பாத்யாய

பிறந்த தினம்

பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay பிறப்பு ஜூன் 27, 1838 இறப்பு ஏப்ரல் 8, 1894) ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார். இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.

ஜூன் 27 ஹெலன் கெல்லர் அவர்களின் பிறந்தநாள்

សំ (Helen Adams Keller)

பிறப்பு ஜூன் 27, 1880 -இறப்பு ஜூன் 1, 1968 புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண்மணி ஆவார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே இருந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்

ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு தன்து 24 ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காதும் கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார். 1903 இல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்' என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார்.

ஜூன் 27

பி. டி. உஷா அவர்களின் பிறந்தநாள்

. 19. உஷா கேரளாவைச் சேர்ந்த விளையாட்டாளர் ஆவார். 1979ஆம் ஆண்டிலிருந்து ஓர் இந்திய தடகள இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் "இந்தியத் தட களங்களின் அரசி" எனக் குறிப்பிடப்படுகிறார். இவர் பய்யோலி எக்சுபிரசு என்றும் அழைக்கப்படுகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிக்கதை -வலிமை!

சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம். கழுதைப்புலியோ "நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?" என்று கேட்டது. குட்டி கழுதைப்புலி சொல்லியது: "நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வரமுடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்" அதைக்கேட்ட கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது.

சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. "ஏன் இங்கே வந்தாய்?" கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது. பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: "ராஜ சிங்கமே ! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்."

குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது. பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே? "மகனே... சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக" என்றது தாய் கழுதைப்புலி.

நீதி :நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.

இன்றைய செய்திகள் 27.06.2025

* தமிழகத்தில் உள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சைகளைத் தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

* அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

* டிரம்பை சந்திக்க உள்ளார் ஜெலன்ஸ்கி நெதர்லாந்தில் 2 நாட்கள் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில், டச்சு மன்னர், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு. உக்ரைன் விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர, டிரம்புடன், ஜெலன்ஸ்கி சந்தித்து பேச உள்ளதாக தகவல்.

* வேலூரில் ரூ.198 கோடியில் கட்டப்பட்ட அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

விளையாட்டுச் செய்திகள்

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் தடகளம்; தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.

Today's Headlines - 27.06.2025

A Tamil Nadu government order has been issued approving the start of dialysis treatments in 50 primary health centers in Tamil Nadu.

The Tamil Nadu government has issued a government order providing 4% quota for the differently abled in government job promotions.

Chief Minister M.K. Stalin inaugurated the government multi-purpose high-speciality hospital built at a cost of Rs. 198 crore in Vellore.

Zelensky is reportedly set to meet with Trump at the two-day NATO summit in the Netherlands.

SPORTS NEWS

Ostrava Golden Spike Athletics; Neeraj Chopra wins gold.

திருக்குறள் 169 அவ்விய... குறளும் விளக்கமும் thirukural Explanation tamil & english - avviya...


thirukural Explanation tamil & english - avviya...

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

Thursday, June 26, 2025

ஆசிரியர் பொதுமாறுதல், பணிநிரவல் கலந்தாய்வு உத்தேச அட்டவணை.


Transfer counselling schedule time table surplus 

பத்தாம் வகுப்பு தமிழ் 4 படிவங்கள் பயிற்சிக்காக 2025 புதிய பாடத்திட்டம் Tenth Tamil new Empty Forms 4


Tenth Tamil new Empty Forms 4 

பத்தாம் வகுப்பு தமிழ் 4 படிவங்கள் பயிற்சிக்காக pdf புதிய பாடத்திட்டம் Tenth Tamil new Empty Forms

 பதிவிறக்கு/DOWNLOAD


Tenth Tamil new Empty Forms pdf 2025 for practice

முதல் இடைப் பருவத் தேர்வு பாடத்திட்டம் வகுப்பு 11, 12 விருதுநகர் மாவட்டம்


First mid term exam syllabus 11th, 12th +1, +2 virudhunagar district 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-06-2025. வியாழன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

26-06-2025. வியாழன்

திருக்குறள் :

பால் : அறத்துப்பால் ; 

இயல் : பாயிரம் ;

அதிகாரம் : நீத்தார் பெருமை 

குறள் எண் : 021.

குறள் :

ஒழுக்கத்து நீத்தார். பெருமாமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு

விளக்கம் :

ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

பழமொழி :

கவனம் தான் வெற்றிக்குப் பின்னாலிருக்கும் அமைதியான சக்தி.

Focus is the quiet power behind success.

இரண்டொழுக்க பண்புகள்:

1. கல்வியும் ஒழுக்கமும் என் வாழ்வை மேம்படுத்தும்.

2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.

பொன்மொழி :

புத்திசாலிகள் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

பிரான்சிஸ் பேகன்.

பொது அறிவு :

01. தமிழ்நாட்டில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் எங்குள்ளது?

ஆனைகட்டி- கோயம்புத்தூர் Anaikatti- Coimbatore

02. மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

 (Godavari)

English words & Tips :

+ abstain

விலகி இரு

+ decency.

கண்ணியம்

Grammar Tips :

When G is followed by e,I and u. It makes the sound/j/

Gem, giant, gym

அறிவியல் களஞ்சியம் :

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.

நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.

நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.

ஜூன் 26

ஜூன் 26 அன்று சர்வதேச போதைப்பொருள் முறையற்ற பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட இந்த நாள், போதைப்பொருள் இல்லாத உலகத்தை நோக்கி நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு முயற்சிகளை ஆதரிக்கிறது.

நீதிக்கதை

புத்திசாலி புலவரும் நெல்மணிகளும்

அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். சில மாதங்களுக்கு பிறகு, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது மேலும் இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று புலவர் யோசித்துக்கொண்டு இருந்தார். புலவரின் நிலையைப் பார்த்த அந்த கிராமத்தின் தலைவர் புலவரிடம் சென்று, "நம் நாட்டின் அரசரை புகழ்ந்து பாடும் புலவருக்கு கேட்கும் பரிசினை கொடுக்கிறார். அந்த பரிசினைப் பெறுவதற்கு நீயும் முயற்சிக்கலமே" என்று கூறினார்.

இது சரியான தருணம் என்று கருதிய புலவரும் மன்னரை பார்க்க அரண்மனை நோக்கி பயணித்தார். மன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக சென்ற புலவர் அரண்மனையை அடைந்தார். மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் புகழ்ந்து பாடினார். புகழ்ந்து பாடிய புலவரின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவனிடம், "உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்" என கூறினார்.

புலவரும் இதுபோன்ற வறுமை எப்பொழுதும் என் குடும்பத்தை பாதிக்கக் கூடாதென்று யோசித்தார். பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்க பலகை இருப்பதைப் பார்த்தார். "அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் அங்கே சதுரங்க பலகை ஒன்று இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைத்த பின் ஓவ்வொரு கட்டத்திற்கும் அதனை இரட்டிப்பாகினால் அதை தக்க பரிசாக ஏற்றுகொள்வேன்" என்று கூறினார். மன்னர் புலவரைப்பார்த்து, "நெல்மணிகள் போதுமா? தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா?" என்று கேட்டார்.

புலவரோ "அரசே எனக்கு நெல்மணிகள் மட்டும் போதும்" என்று கூறிவிட்டார். பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என கூறிவிட்டார். பின்னர் அரசர் அரண்மனை சேவகர்களிடம், " புலவர் கேட்ட நெல்மணிகளை எடுத்து வாருங்கள் " என்று கட்டளையிட்டார். சேவகர்களும் சதுரங்கப் பலகையில் புலவர் கூறியபடியே நெல்மணிகளை சதுரங்க பலகையின் மேல் அடுக்கினர். 1ம் கட்டத்தில் 1, 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 4, 4ம் கட்டத்தில் 8 என நெல்மணிகளை அடுக்கினர். 10ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 512 என ஆனது. 20ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 5,24,288 என அதிகரித்தது.

பாதி தூரம் அதாவது 32வது கட்டத்தை அடைந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 214,74,83,648 ஆக பெருகியது. விரைவில் நெல்மணிகளின் எண்ணிக்கை கோடனகோடிகளை தாண்டியது. இதனால் அரசன் தன் ராஜ்ஜியம் முழுவதையும் அந்த புத்திசாலி புலவரிடம் இழக்கும் நிலை ஏற்பட்டது. புலவரின் புத்தி சாதுரியத்தையும், தான் செய்த தவறை உணர்ந்த அரசர் புலவரிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு என்னைவிட இந்த புலவருக்கு அதிக திறமை உள்ளது என்று சபை முன் கூறிவிட்டு அரசர் பதவியை புலவரிடம் ஒப்படைத்தார்.

நீதி:

கூட்டுப்பலனின் பெருக்கும் சக்தியை எப்பொழுதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

இன்றைய செய்திகள் 26.06.2025

* சென்னையில் உள்ள பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளிலும் மிதக்கும் சோலார் பேனல்கள் அமைத்து மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு முடிவு திட்டமிட்டுள்ளது.

* காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 20,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 25,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

* விண்வெளிக்கு சென்றார் இந்திய விண்வெளி வீரர்"சுபான்ஷூ சுக்லா".

தீவிளையாட்டுச் செய்திகள்

*இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் திலீப் ஜோஷி காலமானார்.

கிரிக்கெட் முதல் டெஸ்ட் போட்டி : இங்கிலாந்து அபாரம்.

Today's Headlines 26.06.2025

The Tamil Nadu government has decided to install floating solar panels in all three lakes in Chennai Poondi, Puzhal and Chembarambakkam to generate electricity.

Due to continuous rains in the Cauvery catchment areas, the water inflow to Kabini Dam has increased. While 20,000 cubic feet of water is coming in, 25,000 cubic feet of water is being released. Due to this, the water inflow in the Cauvery river at Okenakkal has increased.

Indian astronaut "Subhanshu Shukla" went to space.

SPORTS NEWS

Former Indian cricketer Dilip Joshi passes away.

Cricket First Test Match: England is amazing.

Wednesday, June 25, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள் pdf விழுப்புரம் மாவட்டம் 2025 ஜூன்

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth tamil slip test question paper Villupuram district pdf new syllabus 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல்கள் முழுவதும் 2025 - 10TH STANDARD TAMIL ALL MEMORY POEMS SONGS


10TH STANDARD TAMIL ALL MEMORY POEMS SONGS

பத்தாம் வகுப்பு தமிழ் மனப்பாடப் பாடல்கள் முழுவதும் pdf 2025 புதிய பாடத்திட்டம்

 பதிவிறக்கு/DOWNLOAD


tenth tamil all memory poem full pdf new syllabus 2025

பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு 2 இயல் 2 மதிப்பெண்கள் 25 pdf 2025

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth tamil unit test question paper unit 2 marks 25 pdf new syllabus 

ஒன்பதாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு 1 வினாத்தாள் pdf 2025

பதிவிறக்கு/DOWNLOAD 

9th tamil unit test question paper unit 1 pdf new syllabus 2025

Hitech lab assessment schedule time table and instructions

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-06-2025. புதன் கிழமை

School morning prayer activities 

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

25-06-2025. புதன் கிழமை 

திருக்குறள் :

பால் : அறத்துப்பால் ; 

இயல் : பாயிரம் ;

அதிகாரம் : வான் சிறப்பு ; 

குறள் எண் : 019.

குறள் :

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்

வானம் வழங்கா தெனின்.

விளக்கம் :

மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

பழமொழி :

> புறதோற்றத்தைப் பார்த்து உள்ளதைக் கணிக்காதே.

Don't judge a book by its cover.

இரண்டொழுக்க பண்புகள்:

1. கல்வியும் ஒழுக்கமும் என் வாழ்வை மேம்படுத்தும்.

2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.

பொன்மொழி :

+ புத்திசாலித்தனம் பெரிய வேலைகளை ஆரம்பித்துத் தான் வைக்கிறது. அதை முடித்து வைப்பது உழைப்புதான். கோபர்ட்.

பொது அறிவு :

01. இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?

(Uttar pradesh)

02. உலகிலேயே அரிசி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் நாடு எது?

சீனா(China)

English words & Tips :

angry

கோபம்

agent

முகவர்

Grammar Tips :

Use preposition

⇒ at for places (small areas and location)

In. for places (large area)

அறிவியல் களஞ்சியம் :

பால் கொதித்தால் பொங்குகிறது. ஆனால் தண்ணீர் அப்படி ஆவதில்லை. இதற்கு காரணம் பால் கொதிக்கும்போது அதிலுள்ள கொழுப்பு, புரதம் போன்றவை அடர்த்தி குறைவு என்பதால் பாலின் மேற்புறத்தில் பாலாடையாக படர்கின்றன. இது பாலில் உள்ள நீர் கொதிநிலையை அடைந்ததும் நீராவியாக மேலே எழுவதை தடுக்கிறது. எனினும் அடர்த்தி குறைவான நீராவி, பாலாடையை தள்ளி மேலே எழும்பி வெளியேறுகிறது. இதைத்தான் 'பால் பொங்குகிறது' என்கிறோம். அடுப்பின் வெப்பத்தைக் குறைத்தால் நீர் கொதிநிலையை அடையும் வேகம் குறைந்து பொங்குவது அடங்கும்.

ஜூன் 25

வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாள்

விஸ்வநாத் பிரதாப் சிங்

பிறப்பு சூன் 25 1931 - இறப்பு நவம்பர் 27, 2008.

இந்தியக் குடியரசின் 7 ஆவது இந்திய பிரதமர் ஆவார். இவர் வி.பி. சிங் என அறியப்படுபவர். டிசம்பர் 2, 1989 லிருந்து நவம்பர் 10 1990 வரை இவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார். 2023-இல் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்குக்கு முழு உருவச் சிலை அமைக்கும் அறிவிப்பை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்.

வி. பி. சிங்கை "இந்தியத் தலைமை அமைச்சர்களிலேயே மிகவும் அரிதான தலைமை அமைச்சராக இருந்தவர்" எனப் புகழ்ந்தார் தமிழறிஞர் கி.குணத்தொகையன்.


நீதிக்கதை -செய்யும் செயலில் கவனம் வேண்டும்

ஒரு ஊரில் ஒரு இளம் பெண் பால் விற்று வாழ்க்கை நடத்தி வந்தாள். அவள் தினமும் தன்னிடம் இருந்த ஒரு பசு மாட்டிலிருந்து பாலைக் கறந்து அதை ஒரு குடத்திலிட்டு தன் தலையில் வைத்து எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்தாள். தான் ஏழையாக இருப்பதனாலே இப்படி தினமும் பால் விற்று வாழ்க்கை நடத்த வேண்டி உள்ளது. என் போன்ற மற்றப் பெண்களெல்லாம் விதம் விதமாக ஆடை அணிந்து எடுப்பாகச் செல்கிறார்களே என தன்னுள் கவலையுடன் இருந்தாள்.

ஒருநாள் அவள் வழக்கம் போல் பாலைக் கறந்தெடுத்து குடத்தினுள் விட்டு அதனை விற்பதற்காக வீதி வழியே சென்று கொண்டிருந்த போது தன் வாழ்க்கைத் தரத்தை எப்படி முன்னேற்றலாம் என கற்பனை செய்தாள். இன்று பாலை விற்று வரும் பணத்தில். சில கோழிக் குஞ்சுகள் வாங்குவேன். அவை வளர்ந்து பெரிதானதும்..அவைகளை விற்று வரும் பணத்தில் இரண்டு ஆட்டுக் குட்டிகள் வாங்குவேன்.. அவை வளர்ந்ததும் அவற்றை விற்று இன்னொரு பசு மாடு வாங்குவேன்.. அவற்றைக் கொண்டு ஒரு பெரிய மாட்டுப் பண்ணை வைப்பேன். அதில் வேலை செய்ய பல பெண்களை வேலைக்கு அமர்த்துவேன்.

வருமானம் பெருகவே பலவிதமான ஆடை அணிகளையும் நகைகளையும் வாங்கி அவற்றை அணிந்து கொண்டு மற்றப் பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து அதிசயிக்க தக்கதாக உல்லாசமாக இப்படி நடப்பேன், என தலையில் பால் குடம் இருந்ததை மறந்து அதைப் பிடித்திருந்த கையை எடுத்து வீசி ஒய்யாரமாக நடக்க ஆரம்பித்தாள். என்ன பரிதாபம் அவள் நடந்த நடையில் தலையில் இருந்த அனைத்து பாலும் கீழே கொட்டியது. குடமும் உடைந்தது.

அவளுக்கு அன்றைய பால் வியாபாரம் நஷ்டமடைந்ததுடன்..பால் குடமும் வேறு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதுதான் அவள், எந்த ஒரு காரியமும் நடந்து முடிக்கும் முன், அதை எண்ணி திட்டங்கள் போடக் கூடாது என்பதை உணர்ந்தாள். எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும்..அதை முதலில் கவனமாக முடிக்க வேண்டும். இடையில் வேறு நினைவுகள் வந்தால் நஷ்டமே செய்யும் செயலில் கவனம் வேண்டும். இல்லையேல் பெருநஷ்டம்.

இன்றைய செய்திகள்

25.06.2025

* 9 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு.

* சென்னையில் இருந்து 2 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலம் காட்பாடி பயணம்: வேலூர், திருப்பத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

* பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் சுமார் 1,07,677 வண்டல் வடிகட்டி தொட்டிகளை தூர்வாருதல் மற்றும் கழிவுகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விளையாட்டுச் செய்திகள்

ஹெடிங்லி டெஸ்ட்: இந்தியா VS இங்கிலாந்து -5வது நாள் த்ரில் தொடர்கிறது.

ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா செக் குடியரசின் ஆஸ்ட்ராவாவில் நடைபெறும் மதிப்புமிக்க கோல்டன் ஸ்பைக் போட்டியில் இடம்பெறுகிறார்.

Today's Headlines - 25.06.2025

Tamil Nadu government ordered 55 IAS officers, including 9 district collectors tobe transferred:

Tamilnadu state Chief Minister M.K. Stalin will travel by train from Chennai to Katpadi for a 2-day trip: He will participate in various programmes in Vellore and Tirupattur.

As a precautionary measure for the monsoon, dredging and waste removal work is being carried out in water bodies, canals, rainwater drains and in approximately 1,07,677 sediment filter tanks, in the Chennai Corporation areas.

SPORTS NEWS

Headingley Test: India VS England - 5th Day thrill continues.

Javelin thrower Neeraj Chopra will feature in the prestigious Golden Spike tournament in Ostrava, Czech Republic.

திருக்குறள் 168 அழுக்காறு... குறளும் விளக்கமும் thirukural Explanation tamil & english - alukkaaru


thirukural Explanation tamil & english - alukkaaru

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.

தமிழ்த்துகள்

Blog Archive