கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, June 26, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-06-2025. வியாழன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

26-06-2025. வியாழன்

திருக்குறள் :

பால் : அறத்துப்பால் ; 

இயல் : பாயிரம் ;

அதிகாரம் : நீத்தார் பெருமை 

குறள் எண் : 021.

குறள் :

ஒழுக்கத்து நீத்தார். பெருமாமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு

விளக்கம் :

ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

பழமொழி :

கவனம் தான் வெற்றிக்குப் பின்னாலிருக்கும் அமைதியான சக்தி.

Focus is the quiet power behind success.

இரண்டொழுக்க பண்புகள்:

1. கல்வியும் ஒழுக்கமும் என் வாழ்வை மேம்படுத்தும்.

2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.

பொன்மொழி :

புத்திசாலிகள் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

பிரான்சிஸ் பேகன்.

பொது அறிவு :

01. தமிழ்நாட்டில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் எங்குள்ளது?

ஆனைகட்டி- கோயம்புத்தூர் Anaikatti- Coimbatore

02. மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

 (Godavari)

English words & Tips :

+ abstain

விலகி இரு

+ decency.

கண்ணியம்

Grammar Tips :

When G is followed by e,I and u. It makes the sound/j/

Gem, giant, gym

அறிவியல் களஞ்சியம் :

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.

நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.

நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.

ஜூன் 26

ஜூன் 26 அன்று சர்வதேச போதைப்பொருள் முறையற்ற பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட இந்த நாள், போதைப்பொருள் இல்லாத உலகத்தை நோக்கி நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு முயற்சிகளை ஆதரிக்கிறது.

நீதிக்கதை

புத்திசாலி புலவரும் நெல்மணிகளும்

அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். சில மாதங்களுக்கு பிறகு, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது மேலும் இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று புலவர் யோசித்துக்கொண்டு இருந்தார். புலவரின் நிலையைப் பார்த்த அந்த கிராமத்தின் தலைவர் புலவரிடம் சென்று, "நம் நாட்டின் அரசரை புகழ்ந்து பாடும் புலவருக்கு கேட்கும் பரிசினை கொடுக்கிறார். அந்த பரிசினைப் பெறுவதற்கு நீயும் முயற்சிக்கலமே" என்று கூறினார்.

இது சரியான தருணம் என்று கருதிய புலவரும் மன்னரை பார்க்க அரண்மனை நோக்கி பயணித்தார். மன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக சென்ற புலவர் அரண்மனையை அடைந்தார். மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் புகழ்ந்து பாடினார். புகழ்ந்து பாடிய புலவரின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவனிடம், "உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்" என கூறினார்.

புலவரும் இதுபோன்ற வறுமை எப்பொழுதும் என் குடும்பத்தை பாதிக்கக் கூடாதென்று யோசித்தார். பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்க பலகை இருப்பதைப் பார்த்தார். "அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் அங்கே சதுரங்க பலகை ஒன்று இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைத்த பின் ஓவ்வொரு கட்டத்திற்கும் அதனை இரட்டிப்பாகினால் அதை தக்க பரிசாக ஏற்றுகொள்வேன்" என்று கூறினார். மன்னர் புலவரைப்பார்த்து, "நெல்மணிகள் போதுமா? தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா?" என்று கேட்டார்.

புலவரோ "அரசே எனக்கு நெல்மணிகள் மட்டும் போதும்" என்று கூறிவிட்டார். பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என கூறிவிட்டார். பின்னர் அரசர் அரண்மனை சேவகர்களிடம், " புலவர் கேட்ட நெல்மணிகளை எடுத்து வாருங்கள் " என்று கட்டளையிட்டார். சேவகர்களும் சதுரங்கப் பலகையில் புலவர் கூறியபடியே நெல்மணிகளை சதுரங்க பலகையின் மேல் அடுக்கினர். 1ம் கட்டத்தில் 1, 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 4, 4ம் கட்டத்தில் 8 என நெல்மணிகளை அடுக்கினர். 10ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 512 என ஆனது. 20ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 5,24,288 என அதிகரித்தது.

பாதி தூரம் அதாவது 32வது கட்டத்தை அடைந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 214,74,83,648 ஆக பெருகியது. விரைவில் நெல்மணிகளின் எண்ணிக்கை கோடனகோடிகளை தாண்டியது. இதனால் அரசன் தன் ராஜ்ஜியம் முழுவதையும் அந்த புத்திசாலி புலவரிடம் இழக்கும் நிலை ஏற்பட்டது. புலவரின் புத்தி சாதுரியத்தையும், தான் செய்த தவறை உணர்ந்த அரசர் புலவரிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு என்னைவிட இந்த புலவருக்கு அதிக திறமை உள்ளது என்று சபை முன் கூறிவிட்டு அரசர் பதவியை புலவரிடம் ஒப்படைத்தார்.

நீதி:

கூட்டுப்பலனின் பெருக்கும் சக்தியை எப்பொழுதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

இன்றைய செய்திகள் 26.06.2025

* சென்னையில் உள்ள பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளிலும் மிதக்கும் சோலார் பேனல்கள் அமைத்து மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு முடிவு திட்டமிட்டுள்ளது.

* காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 20,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 25,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

* விண்வெளிக்கு சென்றார் இந்திய விண்வெளி வீரர்"சுபான்ஷூ சுக்லா".

தீவிளையாட்டுச் செய்திகள்

*இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் திலீப் ஜோஷி காலமானார்.

கிரிக்கெட் முதல் டெஸ்ட் போட்டி : இங்கிலாந்து அபாரம்.

Today's Headlines 26.06.2025

The Tamil Nadu government has decided to install floating solar panels in all three lakes in Chennai Poondi, Puzhal and Chembarambakkam to generate electricity.

Due to continuous rains in the Cauvery catchment areas, the water inflow to Kabini Dam has increased. While 20,000 cubic feet of water is coming in, 25,000 cubic feet of water is being released. Due to this, the water inflow in the Cauvery river at Okenakkal has increased.

Indian astronaut "Subhanshu Shukla" went to space.

SPORTS NEWS

Former Indian cricketer Dilip Joshi passes away.

Cricket First Test Match: England is amazing.

தமிழ்த்துகள்

Blog Archive