தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Monday, September 30, 2024
Sunday, September 29, 2024
Saturday, September 28, 2024
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அரசு வினாத்தாள், விடைகள் 2023
Tamil Talent Scholarship Exam Tamil moli Ilakkiya Thiranari Thervu 2023 Govt Question Answer
Friday, September 27, 2024
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத் தேர்வு ஆங்கில வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் pdf 2024
10th social science quarterly exam english medium question paper virudhunagar district pdf 2024
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத் தேர்வு தமிழ் வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் pdf 2024
10th social science quarterly exam tamil medium question paper virudhunagar district pdf 2024
பத்தாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு ஆங்கில வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் pdf 2024
10th science quarterly exam english medium question paper virudhunagar district pdf 2024
பத்தாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு தமிழ் வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் pdf 2024
10th science quarterly exam tamil medium question paper virudhunagar district pdf 2024
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அரசு வினாத்தாள், விடைகள் 2022
Tamil Talent Scholarship Exam Tamil moli Ilakkiya Thiranari Thervu 2022 Govt Question Answer
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் மாதிரி காலாண்டுத் தேர்வு வினாத்தாள் ஆங்கில வழி pdf மதுரை மாவட்டம்
பதிவிறக்கு/DOWNLOAD
10th social science model quarterly exam question paper English medium madurai district pdf 2024
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-09-2024. வெள்ளி
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-09-2024. வெள்ளி
திருக்குறள் :
பால்: பொருட்பால் ;
இயல்: நட்பியல் ;
அதிகாரம் : நட்பு ஆராய்தல் ;
குறள் எண் : 795.
குறள் :
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்குஅறிய வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.
பொருள்:
நன்மையில்லாத செயலைக் கண்டபோது வருந்தும் படியாக இடித்துச் சொல்லி, உலக நடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
பழமொழி :
எறும்பு ஊரக் கல்லும் தேயும்.
Persistence never fails.
இரண்டொழுக்க பண்புகள்:
1) தேர்வுகள் எழுதுவது எனது கற்றல் திறனை நானே அறிந்து கொள்ள
உதவும். எனவே தேர்வுக்கு நன்கு படித்து தயாராவேன்.
2) கையெழுத்து அழகாக இருந்தால் நான் எழுதும் விபரம் பிறருக்கு நன்கு புரியும். எனவே எப்போதும் அழகாக எழுதுவேன்.
பொன்மொழி :
எடுத்தால் குறைவது செல்வம், கொடுத்தால் வளர்வது கல்வி.
பொது அறிவு :
1. மையோப்பியா என்ற நோய் மனிதனின் எந்த உடல் உறுப்பை தாக்குகிறது?
கண்கள்.
2. கடல் சிங்கங்கள் எங்கு காணப்படுகின்றன?
அண்டார்டிகா.
English words & meanings :
Intend - கருத்து,
Plan - திட்டம்
வேளாண்மையும் வாழ்வும் :
மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன.
செப்டம்பர் 27 - உலக சுற்றுலா நாள்
உலக சுற்றுலா தினம்
செப்டம்பர் 27
✓ உலக சுற்றுலா நாள்
(World Tourism Day)
உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
✓ 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
✓சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
நீதிக்கதை
நரியும் புலியும்
ஒரு அடர்ந்த காட்டிற்குள் பல விலங்குகள் வசித்து வந்தன. அங்குள்ள அனைத்து விலங்குகளுக்கும் புலியை கண்டால் மிகவும் பயம். தூரத்தில் புலி வருவதை பார்த்தாலே இவர்கள் அனைவரும் பயந்து ஓடுவார்கள். ஒருநாள் புலி வந்து கொண்டிருக்கும்போது, மற்ற விலங்குகள் அந்த புலியை பார்த்து பயந்து ஓடுவதை நரி ஒன்று பார்த்துக் கொண்டு இருந்தது.
அந்த நரிக்கு புலியின் மேல் பொறாமை உண்டு, "இந்த விலங்குகள் எல்லாம் புலியை மட்டும் பார்த்து பயப்பட்டு ஓடுகிறார்கள், ஆனால் என்னை பார்த்து யாரும் பயப்படுவதில்லையே" என்று எண்ணி நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் அது முடிவெடுத்தது. நானும் புலியைப் போல் மாறினால் என்னையும் பார்த்து எல்லாரும் நிச்சயமாக பயப்படுவார்கள், என்ற எண்ணத்தில், வண்ணம் பூசுபவனிடம் சென்ற நரி "எனக்கு புலியைப் போல் தோற்றம் வேண்டும் எனவே என் மீது வண்ணம் பூசு என்றது". அவனும் சரி என்று சொல்லிக்கொண்டு அந்த நரியின் மேல் வண்ணத்தை பூசினான்.
அந்த நரி பார்ப்பதற்கு புலியைப் போல் தோற்றம் கொண்டிருந்தது. இந்த நரி "இனிமேல் எல்லோரும் நிச்சயமாக என்னை பார்த்து பயப்படுவார்கள்" என்று சிரித்துக்கொண்டே காட்டுக்குள் சென்று ஊளை இட ஆரம்பித்தது. என்னதான் அது புலியை போல் வண்ணம் பூசி இருந்தாலும், அதன் குரல் நரியை போல் தான் இருந்தது. புலியை போல் அதனால் சத்தம் இட முடியவில்லை.
இதன் சத்தத்தை கேட்டு மற்ற எல்லா விலங்குகளும் ஓடி வந்தன. மற்ற விலங்குகள் நரியை பார்த்து ஆச்சரியப்பட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் பயங்கரமான மழை ஆரம்பித்தது. அந்த மழையில்
நனைந்த நரியின் வேஷம் அனைத்தும் கலைந்து போயின. அந்த நரி
மீண்டும் பழைய நிலைமைக்கே வந்தது. இதை பார்த்த மற்ற எல்லா
விலங்குகளும் ஏளனமாக சிரித்தன.
நீதி: நாம் நாமாக இருப்பதே நல்லது.
இன்றைய செய்திகள் 27.09.2024
* பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் 1,400 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு நவம்பர் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் 40 மாதங்களில் 17.5 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
* மண்ணில் குழி தோண்டி விளையாடிக் கொண்டிருந்தபோது முதலாம் ராஜராஜசோழன் (கி.பி.985-1012) பெயர் பொறித்த 1000 ஆண்டுகள் பழமையான ஈழக்காசை ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவிகள் கண்டெடுத்துள்ளனர்.
* சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட, 2024-25-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு செப்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
* விவசாயத்துக்கு மின்விநியோகம் செய்ய தனி வழித்தடம் அமைக்கும் பணியை தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கியுள்ளது.
* மும்பையில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
*உக்ரைனைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தீவிர தாக்குதல் நடத்தப்படுமானால், அணுஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தயங்காது என்று ஐரோப்பிய நாடுகளுக்கு அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
* மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 2-வது
சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
* சீன ஓபன் டென்னிஸ்: ஜானிக் சினெர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.
* இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் நேற்று தொடங்கியது.
Today's Headlines - 27. 09. 2024
Payments for 1,400 temporary graduate teachers working in the school education sector till November have been released.
Food Minister Chakrapani said that 17.5 lakh people have been given family cards in 40 months in Tamil Nadu.
A 1000-year-old Esakasai inscribed with the name of Rajarajacholan I (985-1012 AD) was found by the girls of Tirupullani Government School of Ramanathapuram district while playing in a hole in the soil.
Chennai District Collector Rashmi Siddharth Jagade said that they should apply for the best girl child award for the year 2024-25 under Chennai district by September 30.
The Tamil Nadu Electricity Board has started the work of setting up a separate channel for power distribution to agriculture.
Normal life of people affected due to heavy rains in Mumbai.
President Vladimir Putin has warned European countries that Russia will not hesitate to use nuclear weapons if there is a serious attack on Russia using Ukraine.
Macau Open International Badminton: Indian player Srikanth qualified for 2nd round.
Chinese Open Tennis: Janic Siner advances to next round.
The 2nd Test between Sri Lanka and New Zealand started yesterday.
Thursday, September 26, 2024
10ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழி காலாண்டுத்தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2023
10th social science quarterly exam question paper english medium Virudhunagar district 2023
பத்தாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு ஆங்கில வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் pdf 2024
பதிவிறக்கு/DOWNLOAD
10th maths quarterly exam question paper virudhunagar district pdf English medium 2024
பத்தாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு தமிழ் வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் pdf 2024
பதிவிறக்கு/DOWNLOAD
10th maths quarterly exam tamil medium question paper virudhunagar district pdf 2024
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.09.2024
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.09.2024
திருக்குறள்:
பால்: பொருட்பால்
அதிகாரம் :நட்பு ஆராய்தல்
குறள் எண்:794
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
பொருள் :உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ள வேண்டும்.
பழமொழி :
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
Don't measure the worth of a person by their size.
இரண்டொழுக்க பண்புகள் :
* தேர்வுகள் எழுதுவது எனது கற்றல் திறனை நானே அறிந்து கொள்ள உதவும். எனவே தேர்வுக்கு நன்கு படித்து தயாராவேன்.
* கையெழுத்து அழகாக இருந்தால் நான் எழுதும் விபரம் பிறருக்கு நன்கு புரியும். எனவே எப்போதும் அழகாக எழுதுவேன்.
பொன்மொழி :
நேர்மறை எண்ணங்களே சாதனைக்கு வழிகாட்டும் ---ஹெலன் கெல்லர்
பொது அறிவு :
1. கீரின்விச் கோட்டிற்கு மேற்கே செல்லச்செல்ல
விடை: நேரம் குறையும்.
2. நான்கு பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி
விடை: தீவு
English words & meanings :
burning-எரித்தல்,
caustic-நாசமாக்குகிற
வேளாண்மையும் வாழ்வும் :
மடையர்கள்*
ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் "மடை"
செப்டம்பர் 26
மன்மோகன் சிங் அவர்களின் பிறந்தநாள்
மன்மோகன் சிங் (Manmohan Singh, பஞ்சாபி: ਮਨਮੋਹਨ ਸਿੰਘ, பிறப்பு: செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் 14 ஆவது, பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார்
1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது
நீதிக்கதை
விதியை மாற்றி அமைக்கலாம்
ஒருமுறை ஒரு ராஜா பெரிய ராணுவப்படை ஒன்றை தயார் செய்து போருக்கு தயாரானார் எப்படியும் இந்த போரில் தாம் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்.
ஆனால் அந்தப் படை வீரர்களோ பெரும் சந்தேகத்துடனே இருந்தார்கள். மேலும் சோர்ந்து போய், நம்பிக்கையற்று இருந்தார்கள்.
அதனால் அந்த ராஜா தனது தனது வீரர்களுக்கு நம்பிக்கையூட்ட,தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று யோசனை கேட்க ஒரு ஜென் துறவியை பார்க்க புறப்பட்டார்.
அப்போது துறவி ராஜாவிடம் ஒரு யோசனை கூறினார். அதேபோல் ராஜாவும் செய்தார்.
அது என்னவென்றால், அந்த ராஜா போருக்கு செல்லும் வழியில் உள்ள கோவிலில் பூஜை செய்துவிட்டு ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களிடம் காண்பித்து "நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன் தலை விழுந்தால் நாம் போரில் ஜெயிப்போம் இல்லையெனில் தோற்போம்" என்று துறவி கூறியதை படைவீரர்களிடம் கூறினார்.
"நம் தலைவிதி இந்த நாணயத்தை பொறு த்து அமையட்டும்" என்று மன்னர் கூறியபடி நாணயத்தை சுழற்றினார். அனைவரும் ஆர்வத்துடன் நாணயத்தை பார்த்திருந்தனர்.
தலை விழுந்தது. அந்த வீரர்கள் மிகவும் சந்தோஷத்துடன் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் போர்க்களத்தை நோக்கி புறப்பட்டனர்.
போர்க்களத்தில் வெற்றியும் பெற்றனர். அப்போது துணை தளபதி அவர்கள் "பார்த்தீர்களா!மன்னா நாம் தான் வெற்றி பெற்று பெறுவோம் என்று இருக்கிறது. நாம் தான் வெற்றி பெற்றுள்ளோம். விதியை யாராலும் மாற்ற முடியாது" என்று கூறினார்.
அப்போது மன்னரோ, தன்னிடம் இருந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை காண்பித்தார். இதைக் கொண்டே துறவி கூறியபடி,தாம் தம் படைவீரர்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்ததாக
விளக்கினார்.
நீதி: நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் முடிக்கலாம்.விதியையும் மாற்றி அமைக்கலாம்.
இன்றைய செய்திகள்
26.09.2024
*50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை உருவாக்க இலக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
* அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12 வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு நடந்து வரும் நிலையில் , காலாண்டு விடுமுறை நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கும்.
*அரசுப் போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் தேர்வாக வேண்டும் என்பதை மையமாக வைத்து, ஆண்டுதோறும் 200 பேருக்கு சிறப்பு பயிற்சி வழங்க ₹12.90 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியீடு!
*மயிலாப்பூரில் உள்ள எஸ்.ஐ. காது கேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில் முதல்கட்ட வகுப்புகள் நடத்தப்படும்.
* ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடு இந்தியா: லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவிப்பு!!
* இந்திய விமானப் படை துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் எஸ்.பி. தார்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
* பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல்வர் ஊக்கத் தொகை வழங்கி கவுரவிப்பு.
* ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய இணை சாம்பியன் பட்டம் வென்றது.
* ஐ.எஸ்.எல். கால்பந்து ; ஐதராபாத் அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி.
* ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் அஸ்வின்.
Today's Headlines
* Chief Minister M. K. Stalin's said the government's target is to create jobs for 50 lakh youth.
* While the quarterly examination for classes 1 to 12 is going on in government, government-aided and private schools, an announcement has been made regarding the extension of the quarterly vacation. Schools will re open on October 7.
*Focusing on the fact that disabled persons should be selected in large numbers in government competitive examinations,₹12.90 lakh is allotted to provide special training to 200 people every year.
* First Stage classes will be held in the SI Higher Secondary School for the Deaf in Mylapore.
* India is Asia's 3rd most powerful country: Loewy Ratings Announces!!
* Air Marshal S.P. Darkar is appointed as the Deputy Commander of the Indian Air Force.
* Those who won the Medal at the Paris CM Stalin has awarded the winners with incentives.
*India won the men's doubles co-champion title at the Hangzhou Open tennis tournament.
*ISL football; Punjab won by defeating Hyderabad.
* ICC Test rankings: Ashwin continues at number one.
Wednesday, September 25, 2024
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2024. புதன்
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2024. புதன்
திருக்குறள் :
பால் : பொருட்பால் ;
இயல்: நட்பியல் ;
அதிகாரம் : நட்பு ஆராய்தல் ;
குறள் எண் : 793.
குறள் :
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு.
பொருள்:
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ள வேண்டும்.
பழமொழி :
> புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
A person never loses his/her nature no matter how hard-pressed.
இரண்டொழுக்க பண்புகள் :
1) தேர்வுகள் எழுதுவது எனது கற்றல் திறனை நானே அறிந்து கொள்ள உதவும். எனவே தேர்வுக்கு நன்கு படித்து தயாராவேன்.
2) கையெழுத்து அழகாக இருந்தால் நான் எழுதும் விபரம் பிறருக்கு நன்கு புரியும். எனவே எப்போதும் அழகாக எழுதுவேன்.
பொன்மொழி :
நம்பிக்கை போன்ற சிறந்த மருந்து வேறு எதுவுமில்லை.
ஒரிசன் ஸ்வெட் மார்டென்.
பொது அறிவு :
1. பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?
லூயி பாஸ்டியர்
2. சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?
தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள்
English words & meanings :
Awful - மோசமான,
Biting - கடித்தல்
வேளாண்மையும் வாழ்வும் :
இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை.
செப்டம்பர் 25 - சதீஷ் தவான் அவர்களின் பிறந்த நாள்
சதீஷ் தவான்
பிறப்பு 25 செப்டம்பர் 1920 - இறப்பு 3 சனவரி 2002.
ஓர் இந்திய ராக்கெட் ஆராய்ச்சியாளர் ஆவார்.
சிறீநகரில் பிறந்த இவர் இந்தியாவிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் கல்வி பயின்றுள்ளார்.
1972-இல் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார்.
இவரது நினைவாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இசுரோ ஆய்வு மையத்துக்கு இவருடைய பெயர் இடப்பட்டுள்ளது.
நீதிக்கதை -நாக்கு
பேரரசன் ஒருவரிடம் வலிமைமிக்க யானை ஒன்று இருந்தது. போர்க்களம் செல்லும் போதெல்லாம் அதன் உடல் முழுவதும் கவசங்களால் மூடப்பட்டிருக்கும். அதன் வாலிலும் இரும்பு குண்டு ஒன்று பிணைக்கப்பட்டிருக்கும். போர்க்களத்தில் அம்பு படாமல் இருக்க தனது தும்பிக்கையை வெளியே நீட்டாமல் நன்றாக உள்ளே சுற்றி வைத்துக் கொள்வதற்கு பழகி இருப்பார் பாகன்.
ஒரு நாள் போர்க்களத்தில் எதிரிப்படைக்கு பேரழிவை தந்து கொண்டிருந்தபோது, அதனுடைய உடலில் பொருத்தப்பட்டுள்ள ஆயுதம் ஒன்று கீழே விழுந்தது. அதை எடுக்க தனது தும்பிக்கையை நீட்டியது யானை. அதைக் கண்ட பாகன் எதிரிகளின் ஈட்டி தும்பிக்கையில் படாமல் இருக்க யானையை விரைவாக போர்க்களத்தில் இருந்து வெளியில் அழைத்து வந்தார். அரண்மனையில் அரசரை சந்தித்த பாகன், "அரசே இன்று போர்க்களத்தில் தான் சுருட்டி வைத்திருந்த தும்பிக்கையை வெளியே நீட்டி விட்டது யானை. எனவே, இனி போருக்கு பயன்படாது" என்று கூறினார்.
தும்பிக்கையை சுருட்டி வைத்திருக்கும் வரை தான் யானைக்கு வலிமை மற்றும் பாதுகாப்பு. அதுபோல மனிதர்கள் தங்களுடைய நாவை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவர்களின் சொல்லுக்கு மதிப்பு. கோபத்திலும், வெறுப்பிலும் ஏன் சந்தோஷத்திலும் கூட வார்த்தைகளை அளந்து தான் பேச வேண்டும். தேவையில்லாத இடங்களில் தும்பிக்கையை யானை சுருட்டி வைத்துக் கொள்வது போல, தேவையில்லாத இடங்களில் நாமும் நாவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய செய்திகள் 25.09.2024
* தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும், கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் முழுமையாக மாற்றப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எஸ்ஐஆர் - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் நிறுவன நாளை முன்னிட்டு பொதுமக்கள் அதன் ஆய்வகங்களை இலவசமாக நேரில் பார்வையிடலாம் என அதன் இயக்குநர் அழைப்பு விடுத்துள்ளார்.
* மன அழுத்த மேலாண்மை பற்றி சொல்லித் தர வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.
கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் 60 புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
*இந்திய இளம் பெண் ஊழியர்கள் வாரத்துக்கு சராசரியாக 55 மணி நேரம் வேலை செய்கின்றனர், இது உலகிலேயே அதிகம் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
* ஸ்பேஸ் எக்ஸ் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லா விண்கலன் அனுப்ப எலான் மஸ்க் திட்டம்.
* ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்திய மோகன் பகான் அணி.
*மகளிர் டி20 தொடர்: நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா.
Today's Headlines- 25.09.2024
In all 38 districts of Tamil Nadu, the IAS officers appointed as Vigilance Officers have been completely transferred and new ones have been appointed.
As the Nipah virus has been detected in Kerala, the health department is conducting intensive surveillance at the checkpoints along the Kerala border in Coimbatore, Tirupur and Nilgiri districts.
On the occasion of the foundation day of SIR - Structural Engineering Research Centre, the director has invited the public to visit its laboratories for free.
Union Minister Nirmala Sitharaman has urged educational institutions to teach about stress management.
The central government has announced that 60 new medical colleges have been set up across the country in the last one year.
Indian young female workers work an average of 55 hours per week, the highest in the world, according to an International Labor Organization report.
Elon Musk plans to send an unmanned rover to Mars with Space X.
ISL Football Series; Mohan Baghan's team beat Northeast United.
Women's T20 series: Australia whitewash New Zealand.
Tuesday, September 24, 2024
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.09.2024
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.09.2024
திருக்குறள்:
பால் பொருட்பால்
அதிகாரம் :நட்பு ஆராய்தல்
குறள் எண்:792
ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
பொருள்: ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்குக் காரணமான துயரத்தை உண்டாக்கிவிடும்.
பழமொழி :
தவளையும் தன் வாயால் கெடும்.
Know when to keep quiet.
இரண்டொழுக்க பண்புகள் :
* தேர்வுகள் எழுதுவது எனது கற்றல் திறனை நானே அறிந்து கொள்ள உதவும். எனவே தேர்வுக்கு நன்கு படித்து தயாராவேன்.
* கையெழுத்து அழகாக இருந்தால் நான் எழுதும் விபரம் பிறருக்கு நன்கு புரியும். எனவே எப்போதும் அழகாக எழுதுவேன்.
பொன்மொழி :
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வது தான் உங்கள் வளர்ச்சியின் அடையாளம். ----காமராஜர்
பொது அறிவு :
1. இலங்கையின் புதிய ஜனாதிபதி யார்?
விடை : அநுர குமார திஸ்ஸநாயக.
2. இந்தியாவின் மிக பெரிய நதி எது.?
விடை : கங்கை
English words & meanings :
aching-வழியேற்படுத்தும்,
arduous- கடினமான
வேளாண்மையும் வாழ்வும் :
இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெருக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்.
செப்டம்பர் 24
2014 – மங்கல்யான் விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டத்தில் செலுத்தப்பட்டது
நீதிக்கதை
கஷ்டம்
பேரறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா தன்னுடைய முதுமையின் காரணமாக ஒரு நாள் உடல் வலியால் அவதிப்பட்டபோது தன்னுடைய மருத்துவருக்கு போன் செய்தார்.
தனக்கு உடலின் வலி மிகவும் அதிகமாக இருப்பதாகவும், விரைவாக தனது வீட்டிற்கு வரும்படியும் அழைத்தார்
மருத்துவர், தனது மருத்துவமனையில் நிறைய நோயாளிகள் இருப்பதாகவும் அதனால் தன்னால் தற்போது வர இயலாது என்றும் கூறினார்
மேலும், பெர்னாட்ஷாவை தன்னுடைய மருத்துவமனைக்கு வருமாறு கூறினார்
அதற்கு பெர்னாட்ஷா "தன்னால் எழுந்து நிற்க கூட முடியவில்லை, தனக்கு ஒரு காபி கூட தயாரிக்க இயலவில்லை, சிறிது தூரம் கூட நடக்க முடியவில்லை" என்று கூறினார்.
எனவே மருத்துவரும் வீட்டிற்கு வந்தார். வீட்டின் மேல் மாடியில் இருந்த பெர்னாட்ஷாவை பார்க்க மாடிப்படி ஏறி வந்து சேர்ந்தார். முதியவர் ஆன மருத்துவருக்கு மூச்சிரைக்க,நெஞ்சை பிடித்தபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.
அதை பார்த்த பெர்னாட்ஷா உடனடியாக மருத்துவதற்கு காப்பி தயாரித்துக் கொண்டு வந்து பருக கூறினார்.
காபியை பருகிய மருத்துவர் தன்னுடைய பில் புத்தகத்தை எடுத்து 300 ரூபாய்க்கு பில் எழுதி பெர்னாட்ஷாவிடம் கொடுத்தார்.
அதைப் பார்த்த பெர்னாட்ஷாவிடம் "எனக்கு மருத்துவம் பார்க்க வந்த தங்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட நான்தான் பணிவிடை செய்தேன் தற்போது எனக்கே பில் கொடுக்கிறீர்களா? என்று கேட்டார்.
அதற்கு மருத்துவர் தங்களுக்கு வைத்தியம் பார்த்ததற்கான தான் இந்த தொகை என்றார்.
மேலும் மருத்துவர் தொடர்ந்து "போனில் தங்களால் என்னென்ன செய்ய இயலாது என்று கூறினீர்களோ அதெல்லாம் தற்போது செய்தீர்கள் அல்லவா? தங்களால் நடக்க முடியாது என்றீர்கள் எனக்காக நடந்து சென்றீர்கள். தங்களால் காபிக்கு போட்டு குடிக்க முடியவில்லை என்றீர்கள்.ஆனால் எனக்காக காபி தயாரித்து கொண்டு வந்தீர்கள் மேலும் சிறிது நேரம் நிற்க முடியவில்லை என்றீர்கள் ஆனால் தற்போது அரை மணி நேரமாக நின்று கொண்டு தான் இருக்கிறீர்கள் என்று கூறினார்.
மேலும் மருத்துவர்,"அப்போது தங்களுடைய கஷ்டத்தை மட்டும் பார்த்தீர்கள் உங்களால் முடியவில்லை தற்போது என்னுடைய கஷ்டத்தை பார்க்கும் பொழுது உங்களுடைய கஷ்டம் குறைந்து விட்டது" என்றார். மேலும் மருத்துவர்
இன்றைய செய்திகள்
24.09.2024
* மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வங்கி சார்பில் ஆயுள் காப்பீட்டுதிட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
* திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
* இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சென்னை மெரினாவில் அக்டோபர் 6-ம் தேதி பிரம்மாண்ட விமான சாகச காட்சி நடைபெற உள்ளது.
* பண்டிகைக் காலம் நெருங்கி வருகிற நிலையில், ரயில்களில் டிக்கெட் சோதனைக்கு என்று சிறப்புக் குழுவை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவு.
* இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திஸ்ஸநாயக
* கலப்பு தற்காப்பு கலை போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த இந்திய மல்யுத்த வீரர் சங்ராம் சிங்.
* நியூசிலாந்து மகளிர் அணிக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி: பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக புகார்.
Today's Headlines
* The bank has introduced a life insurance scheme for the employees of the Municipal Transport Corporation.
* Light tremors were felt in Tirunelveli and Tenkasi districts along the Western Ghats.
* To celebrate the 92nd anniversary of the Indian Air Force, a grand air show will be held at the Chennai Marina on October 6.
* The festive season is approaching Meanwhile, the Ministry of Railways has ordered the formation of a special committee to check tickets in trains.
* Anura Kumara Dissanayake was sworn in as the 9th President of Sri Lanka.
* Sangram Singh is an Indian wrestler who won the mixed martial arts competition.
* New Zealand women's team fined by ICC for taking too long to bowl.
Monday, September 23, 2024
Subscribe to:
Posts (Atom)
தமிழ்த்துகள்
-
9th Tamil Model Notes Of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு ...
-
8th Tamil Model Notes Of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு ...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பாடம் தமிழ் 3.அல...
-
7th Tamil Model Notes Of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பருவம் 3 3.அலகு 1 4....
-
6th Tamil Model Notes Of Lesson ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பருவம் 3 3.அலகு 1 4...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
நாள் - 20-01-2025 - 24-01-2025 வகுப்பு - 10 பாடம் - தமிழ் தலைப்பு - திருப்புதல் முதல் திருப்புதல் தேர்விற்கான பயிற்சி வினாக்கள் 1. சான்ற...
-
6th Tamil Model Notes of Lesson ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பருவம் 3 3.அலகு 1...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
-
7th Tamil Model Notes of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பருவம் 3 3.அலகு ...
Blog Archive
-
▼
2024
(1680)
-
▼
September
(226)
- சிந்தனைத் துளி செல்போன்
- பெற்றோர்களே உஷார் அலைப்பேசி என்னும் போதை
- 10ஆம் வகுப்பு ஆங்கிலம் காலாண்டுத் தேர்வு வினாத்தாள...
- 10ஆம் வகுப்பு ஆங்கிலம் காலாண்டுத் தேர்வு வினாத்தாள...
- தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு மாதிரி வினாத்த...
- வாத்து குடும்பம் Duck family
- தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு மாதிரி வினாத்த...
- சிந்தனைத் துளி ஒவ்வொரு நாளும்
- உணவுக்கு ஓடி வரும் எங்கள் வீட்டுக் காவலர்கள்
- தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அரசு வினாத்தா...
- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழி வினாத்தாள...
- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தமிழ் வழி வினாத்தாள்...
- எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் தமிழ் வழி வினாத்தாள்...
- எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழி வினாத்தாள...
- ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழி வினாத்தாள் ...
- ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் தமிழ் வழி வினாத்தாள் வ...
- சிந்தனைத் துளி காலம்
- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத் தேர்வு ஆங...
- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத் தேர்வு தம...
- பத்தாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு ஆங்கில ...
- பத்தாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு தமிழ் வ...
- தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அரசு வினாத்தா...
- தேன்சிட்டு 2024 செப்டம்பர் மாத இதழ் 2 வினாடி வினா ...
- தேன்சிட்டு 2024 செப்டம்பர் 16-30 மாத இதழ் வினாடி வ...
- ஆறாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு தமிழ் வழி...
- ஆறாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு ஆங்கில வழ...
- ஏழாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு தமிழ் வழி...
- ஏழாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு ஆங்கில வழ...
- ஒன்பதாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு தமிழ் ...
- எட்டாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு ஆங்கில ...
- எட்டாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு தமிழ் வ...
- ஒன்பதாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு தமிழ் வழ...
- ஏழாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு தமிழ் வழி வ...
- ஏழாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு ஆங்கில வழி ...
- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் மாதிரி காலாண்டுத் தே...
- விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழா நிகழ்ச்சி ந...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-09-2024. ...
- 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழி காலாண்டுத்த...
- 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் தமிழ் வழி காலாண்டுத்தே...
- 10ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் ப...
- எட்டாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு தமிழ் வழி...
- ஆறாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு ஆங்கில வழி ...
- ஆறாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு வினாத்தாள் ...
- பத்தாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு ஆங்கில வழ...
- பத்தாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு தமிழ் வழி...
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.09.2024
- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் 100 ஒரு மதிப்பெண் வி...
- 10ஆம் வகுப்பு அறிவியல் காலாண்டுத்தேர்வு ஆங்கில வழி...
- 10ஆம் வகுப்பு அறிவியல் தமிழ் வழி காலாண்டுத்தேர்வு ...
- 10ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் த...
- சிந்தனைத் துளி கற்றல்
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2024. ...
- 10ஆம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி காலாண்டுத் தேர்வு ...
- 10ஆம் வகுப்பு கணக்கு தமிழ் வழி காலாண்டுத் தேர்வு வ...
- 10ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் க...
- 10ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் க...
- சிந்தனை வரிகள் வளர்ச்சி
- பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.09.2024
- ஆறாம் வகுப்பு ஆங்கிலம் காலாண்டுத் தேர்வு வினாத்தாள...
- எட்டாம் வகுப்பு ஆங்கிலம் காலாண்டுத் தேர்வு வினாத்த...
- பத்தாம் வகுப்பு ஆங்கிலம் காலாண்டுத் தேர்வு வினாத்த...
- பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு இயல் 4 மதிப்பெண...
- 10ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் வ...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-09-2024.த...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
- எட்டாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள...
- ஆறாம் வகுப்பு முதல் பருவம் தொகுத்தறித் தேர்வு வினா...
- ஆறாம் வகுப்பு முதல் பருவம் தொகுத்தறித் தேர்வு வினா...
- ஏழாம் வகுப்பு முதல் பருவம் தொகுத்தறித் தேர்வு வினா...
- ஏழாம் வகுப்பு முதல் பருவம் தொகுத்தறித் தேர்வு வினா...
- ஏழாம் வகுப்பு முதல் பருவம் தொகுத்தறித் தேர்வு வினா...
- சிந்தனை வரிகள் காலம்
- ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 1 துன்பம் வெல்லு...
- ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 1 மூதுரை கற்பித்...
- ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 1 கவின்மிகு கப்ப...
- ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 1 கலங்கரை விளக்க...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5 பாடறிந்து ஒழுகுதல் கற...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5 திருக்கேதாரம் கற்பித்...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 5 கல்வியில் சிறந்த பெண...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 உரைநடை சிற்றகல் ஒளி க...
- ஆறாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு விருதுநகர் வி...
- ஏழாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு விருதுநகர் வி...
- எட்டாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு விருதுநகர் ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் காலாண்டுத்தேர்வு விருதுநகர்...
- எட்டாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
- எட்டாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
- எட்டாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
- எட்டாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
- எட்டாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு விடைக்குறி...
- எட்டாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு விடைக்குற...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்21-09-2024. ச...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்...
-
▼
September
(226)