6th tamil model notes of lesson
lesson plan February 9
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
09-02-2026 முதல் 13-02-2026
2.பருவம்
3
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
எல்லாரும்
இன்புற – உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
நிலம்
பொது
6.பக்கஎண்
7.கற்றல் விளைவுகள்
T-602 தாங்கள் பார்த்த, கேட்ட உள்ளூர் சமூக
நிகழ்வுகள், செயல்பாடுகள். சடங்குகள் போன்றவற்றைப்
பற்றித் தயக்கமின்றி வினா எழுப்பவும், கலந்துரையாடவும்
செய்தல்.
8.கற்றல் நோக்கங்கள்
இயற்கை
வளங்கள் சிதையாமல் காக்கப்பட வேண்டும் என்பதை உணர்தல்.
9.நுண்திறன்கள்
பழங்குடியினரின்
நாட்டுப்பற்றை உணரும் திறன்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய
வளங்கள், விளக்கப்படம்
https://tamilthugal.blogspot.com/2023/07/8th-tamil-mind-map-nilam-pothu.html
https://tamilthugal.blogspot.com/2022/07/2-8th-tamil-mindmap-unit-2-nilam-pothu.html
https://tamilthugal.blogspot.com/2021/07/8th-tamil-nilam-pothu.html
https://tamilthugal.blogspot.com/2021/04/8th-tamil-urainadai-ulagam-nilam-pothu.html
https://tamilthugal.blogspot.com/2021/03/96-land-names-in-tamil.html
https://tamilthugal.blogspot.com/2024/11/1.html
11.ஆயத்தப்படுத்துதல்
பழங்குடியினர்
குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
இயற்கை
வளங்கள் குறித்துத் தங்கள் அனுபவங்களைப் பகிரச் செய்தல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
நிலம் மிகவும்
புனிதமானது. இயற்கை வளங்கள் அனைத்தும் பழங்குடியினரின் உறவுகள். விலங்குகளை
வேட்டையாடக் கூடாது. நிலத்தை நேசிக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.
சியாட்டல் போன்ற தலைவர்கள் குறித்து மாணவர்கள் கலந்துரையாடுதல்.
மனவரைபடம்
மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
நிலத்தின்
இன்றியமையாமையை மாணவர்களுக்குக் கூறுதல்.
இயற்கை
வளங்களைப் பாதுகாக்கும் எண்ணத்தை ஏற்படுத்துதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – நிலத்திற்கும்
செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?
ந.சி.வி – தொடரில் அமைத்து எழுதுக.
வேடிக்கை,
உடன்பிறந்தார்
நீர்நிலைகள்
குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.
உ.சி.வி – நிலவளத்தினைக்
காப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீங்கள் கருதுவன யாவை?
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும்
மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
நிலம்
குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் செய்ய வேண்டியவற்றைப்
பட்டியலிடுதல்.
நிலவளத்தைப் பாதுகாக்க நாம் செய்ய
வேண்டிய இன்றியமையாப் பணிகளைத் தொகுத்தல்.


