7th tamil model notes of lesson
lesson plan February 23
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
23-02-2026 முதல் 27-02-2026
2.பருவம்
3
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
ஒப்புரவு
ஒழுகு – கற்கண்டு, வாழ்வியல்
5.உட்பாடத்தலைப்பு
இலக்கணம்
– பொது, திருக்குறள்
6.பக்கஎண்
7.கற்றல் விளைவுகள்
T-716 மொழி மரபின் நுட்பமான பயன்பாட்டுக் கூறுகளையும் பாடல்களில் படித்த
ஒரு குறிப்பிட்ட சொல், சொற்றொடர்கள் போன்றவற்றின்
பொருண்மை உணர்ந்து அவற்றையும் தமது உரையாடலில் வெளிப்படுத்துதல்.
8.கற்றல் நோக்கங்கள்
சொற்களின்
தன்மையினை மொழியில் அடையாளம் கண்டு பயன்படுத்துதல்
திருக்குறள் அறக்கருத்துகளை அறிதல்.
9.நுண்திறன்கள்
இரட்டைக்கிளவி,
அடுக்குத்தொடர் குறித்து அறிதல்.
இரட்டைக்
கிளவியைப் பயன்படுத்தி உரையாடல் உருவாக்குதல்.
நாடு, அரண், பெருமை பற்றிய திருக்குறள்களை அறிதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய
வளங்கள், விளக்கப்படம்
https://tamilthugal.blogspot.com/2023/07/4-10th-tamil-teaching-aid-ilakkanam-pal.html
https://tamilthugal.blogspot.com/2018/05/thinai.html
https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_18.html
https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_6.html
https://tamilthugal.blogspot.com/2018/12/thiruvalluvar.html
11.ஆயத்தப்படுத்துதல்
திணை,
பால் பற்றிக் கூறச்செய்தல்.
அறிந்த திருக்குறள்களைப் பொருளுடன் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
இலக்கணம்
பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
திருக்குறளின் பெருமைகளைக் கூறுதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
திணை, பால், எண்,
இடம் குறித்து விளக்குதல். எடுத்துக்காட்டுகளை மாணவர்களுடன் பகிர்தல்.
இரட்டைக்கிளவி பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடுதல். அடுக்குத்தொடர் பற்றி அறியச்
செய்தல். காலம் வகைகளை விளக்குதல்.
இரட்டைக்கிளவி குறித்து மாணவர்களைப்
பேசச் செய்தல். அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்
சொற்களைப் பட்டியலிடுதல்.
வினைசெயல் வகை, அவைஅஞ்சாமை,
நாடு, அரண், பெருமை போன்ற அதிகாரங்களிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள குறள்களை
விளக்குதல். குறளின் பொருளையும் அணி நயத்தையும் விளக்குதல். குறள் கூறும்
அறக்கருத்துகளை வாழ்வில் பின்பற்றுமாறு அறிவுறுத்தல்.
மனவரைபடம்
மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
மூவிடம்
குறித்துப் பேசுதல். புதிய சொற்களுக்கு அகராதி மூலம் பொருள் அறிதல்.
குறளின் சிறப்புகளை விளக்குதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – செல்கின்றன என்பதற்கு உரிய பால் ................................
............................... ஒரு நாட்டின் அரணன்று
ந.சி.வி – இரட்டைக்கிளவிக்கு இரண்டு சான்றுகள் தருக.
உ.சி.வி – அடுக்குத்தொடர் – இரட்டைக்கிளவி – ஒப்பிட்டு எழுதுக.
நீங்கள் விரும்பும் குறள் குறித்து எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும்
மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள்
மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
நீ
அறிந்த அடுக்குத்தொடர்கள் 5 எழுதுக.
திருக்குறள் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

