கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, February 01, 2026

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மகனுக்கு எழுதிய கடிதம் tamil model notes of lesson

9th tamil model notes of lesson

lesson plan February 9

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

09-02-2026 முதல் 13-02-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

7

4.பாடத்தலைப்பு

என்தலைக் கடனே – விரிவானம்.

5.உட்பாடத்தலைப்பு

மகனுக்கு எழுதிய கடிதம்

6.பக்கஎண்

161 - 163

7.கற்றல் விளைவுகள்

T-9031 கடித இலக்கிய வகையைப் படித்துப் பொருளுணர்ந்து எழுதுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

செப்பமான மொழிநடையைப் பயன்படுத்தி படித்துச் சுவைத்தல் பல்வேறு கடித உத்திகளையும், வடிவங்களையும் அறிந்து எழுதுதல்.

9.நுண்திறன்கள்

கடிதம் எழுதுவதன் பல்வேறு படிநிலைகளை எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_18.html

https://tamilthugal.blogspot.com/2023/01/9-9th-big-question-answer-namuthukumar.html

https://tamilthugal.blogspot.com/2021/05/namuthukumar-makanukku-eluthiya-kaditham.html

https://tamilthugal.blogspot.com/2020/08/8-9-maganukku-ezhuth.html

https://tamilthugal.blogspot.com/2020/06/9-na-muthukumar.html

https://tamilthugal.blogspot.com/2020/02/9_9.html

https://tamilthugal.blogspot.com/2019/01/9-1-qr-code-video_15.html

https://tamilthugal.blogspot.com/2019/01/9-2-qr-code-video_15.html

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்களை அவர்களின் தந்தை குறித்துக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

நா.முத்துக்குமார் பற்றிக் கூறி பாடப்பொருளை அறிமுகம் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          கவிதை பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          மகனுக்கு எழுதிய கடிதம் குறித்து விளக்குதல்.

அணிலாடும் முன்றில் புத்தகம் குறித்துப் பேசுதல்.

மாணவர்கள் குழுக்களாக தந்தை குறித்து உரைத்தல்.

பிடித்த கவிதைகள் குறித்துப் பேசுதல்.



மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          கடிதம் பற்றி மாணவர்களை அறியச் செய்தல்.

          கவிதையின் சிறப்புகளை அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       மகனுக்குக் கடிதம் எழுதியவர் ...............................

          ந.சி.வி – மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக் கொண்டிருக்கும் தன்மகனுக்கு நா.முத்துக்குமார் எழுதியுள்ள கடிதச் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

உ.சி.வி – உங்கள் தந்தை குறித்து ஒரு கவிதை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          வகுப்பில் உள்ள உன் நண்பனின் நற்குணங்களைப் பற்றி ஒரு கடிதம் எழுதுக.

          நண்பன் குறித்து ஒரு கவிதை எழுதுக.

தமிழ்த்துகள்

Blog Archive