கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, September 02, 2024

நான் ஆசிரியரானால்... தமிழ்க் கட்டுரை, பேச்சு ஆசிரியர் தினம்

 If I am a teacher... Tamil Essay, Speech Teacher's Day

நான் ஆசிரியரானால்...

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

முன்னுரை                     தமிழ்த்துகள்

கேடில் விழுச்செல்வம் கல்வி என்றும் கண்ணுடையர் என்பவர் கற்றோர் என்றும் கூறுகிறார் திருவள்ளுவர். கல்வியைப் பரப்புகிறவன் தேவனால் போற்றப்படுகிறான் என்கிறது விவிலியம். கல்வியைப் பரப்புகிறவன் பாவங்களிலிருந்து விடுதலை பெறுகிறான் என்பது நபிகள் வாக்கு. எனவே நான் ஆசிரியர் பணியை விரும்புகிறேன். நான் ஆசிரியரானால் எவ்வாறெல்லாம் செயல்படுவேன் என்பதை இக்கட்டுரையில் காண்போம். தமிழ்த்துகள்

ஒழுக்கத்திற்கு முதலிடம்                   தமிழ்த்துகள்

            ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்றார் வள்ளுவர். ஓதலின் சிறந்தன்று ஒழுக்கமுடைமை என்கிறது முதுமொழிக்காஞ்சி. எனவே மாணவர்களை ஒழுக்கத்தில் சிறந்து விளங்கச்செய்வேன். ஒழுக்கம் தவறும் மாணவரை பெற்றோர் உதவியுடன் கண்டிக்கத் தயங்கமாட்டேன்.         தமிழ்த்துகள்

நற்பண்புகள் தமிழ்த்துகள்

காலந்தவறாமை, கடமையுணர்வு, நேர்மை, பணிவு, நல்லன செய்வதில் துணிவு, பிறரிடம் அன்பு, சுறுசுறுப்பு போன்ற நற்பண்புகளை மாணவரிடையே வளரச் செய்வேன். இயன்றவரை பிறருக்கு உதவுதலை இயல்பான குணமாக மாற்றுவேன். நற்பண்புகள் நிறைந்த மாணவர்களை உருவாக்க முயல்வேன்.             தமிழ்த்துகள்

படிப்பில் கவனம்                       தமிழ்த்துகள்

மாணாக்கர் சிலரின் உடல்மட்டும் வகுப்பில் இருக்கும். கண்ணும், கருத்தும். எங்கெங்கோ அலையும். எனவே மாணவர்களை ஒழுங்காக அமரச் செய்து பாடத்தைக் கவனிக்கச் செய்வேன். படிப்பில் முழு கவனமும் செலுத்துமாறு கற்றுத் தருவேன். மாணவர்கள் விரும்பும் முறையில் கற்பிப்பேன்.                     தமிழ்த்துகள்

பயிற்சி              தமிழ்த்துகள்

கற்பித்த பாடங்களில் இருந்து நாள்தோறும் பயிற்சிகளைக் கொடுத்து செய்து வருமாறு கூறுவேன். வாய்மொழித் தேர்வுகளும் வாரத் தேர்வுகளும் நடத்தி, மாணவர்கள் பாடங்களில் தெளிவுபெற பயிற்சி அளிப்பேன்.

பெற்றோருடன் தொடர்பு                    தமிழ்த்துகள்

படிப்பில் பின் தங்கும் மாணவர்களை முன்னேற்ற அவர்களின் பெற்றோரை அழைத்து வருமாறு கூறுவேன். அவர்களிடம் மாணவர்கள் நிலை பற்றிக் கூறி, அவர்களின் ஒத்துழைப்புடன் மாணவரின் கல்வி முன்னேற்றத்திற்கு வழி செய்வேன். இல்லத்தில் மாணவர்களின் கற்றலைக் கவனிக்க பெற்றோருக்கு வழிகாட்டுவேன். தமிழ்த்துகள்

பிற சாதனைகள்                                       தமிழ்த்துகள்

            கல்வித்துறையின் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்கச் செய்து வெற்றி பெற வழிகாட்டுவேன். ஊக்கத்தொகை பெற நடைபெறும் திறனறித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றிபெற பயிற்சி அளிப்பேன். கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற பிற சாதனைகளைச் செய்ய அனைத்து ஆசிரியர்களுடன் இணைந்து பயிற்சி அளிப்பேன். மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்த உதவுவேன்.                    தமிழ்த்துகள்

முடிவுரை                         தமிழ்த்துகள்

'செய்யும் தொழிலே தெய்வம்' என்பதற்கேற்ப ஆசிரியர் பணியாற்றி என் மாணாக்கரை அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கச் செய்வேன். ஆசிரியர் பணி அறப் பணி, அதற்கு உன்னை அர்ப்பணி என்பார்கள். எனவே ஆசிரியர் பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை மனப்பான்மையுடன் செய்து சிறந்த தலைமுறையை உருவாக்குவேன்.    தமிழ்த்துகள்

 

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive