10th tamil model notes of lesson
lesson plan January 12
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
2.அலகு
1 - 7
3.பாடத்தலைப்பு
7 இயல்கள்
முதல் திருப்புதல் தேர்வுக்குத் தயார் செய்தல்.
மாதிரி வினாத்தாள்
https://tamilthugal.blogspot.com/2025/11/10-2025_27.html
https://tamilthugal.blogspot.com/2025/11/5_21.html
https://tamilthugal.blogspot.com/2025/11/4_20.html
https://tamilthugal.blogspot.com/2025/11/3_19.html
https://tamilthugal.blogspot.com/2025/11/2_18.html
https://tamilthugal.blogspot.com/2025/11/1.html
4.திருப்புதல் வினாக்கள்
வீட்டு எண் 52, பாரதியார் தெரு, சிலம்பு நகர், விருதுநகர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பினை நிறைவு செய்த சிதம்பரநாதனின் மகன் கலைச்செல்வன் எழுத்தர் பணியில் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னைக் கலைச்செல்வனாகக் கருதி கொடுக்கப்பட்டுள்ள தன் விவரப் படிவத்தை நிரப்புக
."பிரும்மம்" கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர் போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க
காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக
அ.மாவட்ட
அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் எனும் தலைப்பிலான கட்டுரைப்போட்டியில்
வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக. தமிழ்த்துகள்
அல்லது
ஆ. உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் வரைக
அ.போராட்டக் கலைஞர் - பேச்சுக் கலைஞர் -
நாடகக் கலைஞர் - திரைக் கலைஞர் - இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு
கட்டுரை ஒன்று எழுதுக. தமிழ்த்துகள்
அல்லது
ஆ. பாய்ச்சல் கதையின் மையக் கருத்தைக் குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி எழுதுக
உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக
வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக
வெய்யோனொளி... எனத் தொடங்கும் கம்பராமாயண மனப்பாடப்பாடலை எழுதுக
கிடைப்பதற்கரிய
திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக. அல்லது
ஆ. குறிப்புகளைக்
கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.
மாணவன் - கொக்கைப் போல, கோழியைப் போல - உப்பைப் போல - இருக்க வேண்டும் - கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் - குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி - கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணர முடியும் - ஆசிரியர் விளக்கம் - மாணவன் மகிழ்ச்சி.
பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக
உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால், இரவில் சாலையில் நடந்துசெல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக
கவிதையில் உள்ள திரண்ட கருத்து, பொருள் நயம், சொல்
நயம், சந்த நயம், தொடை நயம், அணி நயம் ஆகியவை இடம்பெற வேண்டும். தமிழ்த்துகள்
கோடையிலே
இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே
ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே
வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே
எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. – வள்ளலார்
