கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, September 15, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.09.2025 திங்கள்

School morning prayer activities 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் -

15.09.2025 திங்கள் 

திருக்குறள்:

குறள் 545:

இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு.

விளக்க உரை:

நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

பழமொழி :

Learning is a treasure that follows its owner everywhere.

கற்றல் என்பது எங்கு சென்றாலும் உரிமையாளருடன் செல்லும் பொக்கிஷம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்லாது நாம் ஆழ்ந்து சிந்திக்கவும் தூண்டுவது.]

2. எனவே தேவையில்லாத பேச்சைக் குறைத்து அமைதி காக்க முயல்வேன்.

பொன்மொழி :

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் - அறிஞர் அண்ணா

பொது அறிவு:

01.சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார்?

சர் ஐசக் பிட்மேன்

Sir Isaac pitman

02. இந்தியாவின் முதல் முதலில் கப்பல் கட்டும் தொழிற்சாலை எங்கு அமைக்கப்பட்டது?

விசாகப்பட்டினம்

Vishakhapattanam

English words:

shut down - turn off, close.பணிநிறுத்தம், மூடல், அல்லது இயக்க நிறுத்தம்.

Grammar Tips:

"i before the letter e except before c"

ie makes e sound in words like

Ex: Thief, believe, Chief

But in words like receive, deceive, ceiling, receipt the same'e' sound but 'ie' becomes 'ei'

Reason

Whenever there is 'c' we have to write 'ei' only

அறிவியல் களஞ்சியம்:

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த மரபுசாரா எரிபொருள் உற்பத்தி நிறுவனமான 'இகோட்ரிசிட்டி,' சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத 'ஈகோஜெட்' விமானத்தை இயக்க திட்டமிட்டுள்ளது. ஹைட்ரஜன் வாயுவிலிருந்து மின்சாரம் தயாரித்து இதை இயக்க உள்ளனர். 2025ம் ஆண்டு இது பயன்பாட்டுக்கு வரும். விமானத்தின் உள்ளேயும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத உணவு, தொழிலாளர் உடைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.

செப்டம்பர் 15

அனைத்துலக சனநாயக நாள்

அனைத்துலக சனநாயக நாள் செப்டெம்பர் 15 அன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 8, 2007 இல் நடந்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்தில் இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சனநாயகத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும் அபிவிருத்தி செய்யவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் முகமாக ஐநா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் அனுமதித்துள்ளன.

நீதிக்கதை

கிடைத்ததில் சம பங்கு

ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களும் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால், தெனாலிராமன் இருந்தால் நிகழ்ச்சி நடைபெறாமல் போய்விடுமோ, என எண்ணி தெனாலிராமனை மட்டும் உள்ளே விட வேண்டாமென்று வாயிற்காவலளியிடம் கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.

ஆனால் தெனாலிராமன் எப்படியாவது உள்ளே சென்று விடவேண்டும். என தீர்மானித்துக் கொண்டான். உள்ளே செல்ல முற்பட்ட தெனாலிராமனை, வாயிற்காவலளி தடுத்து நிறுத்தி விட்டான். இந்நிலையில் தெனாலிராமன் ஐயா, என்னை உள்ளே செல்ல அனுமதித்தால் என் திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன் என்றான். இதைக் காவலாளி முதலில் சம்மதிக்காவிட்டாலும், பிறகு சம்மதித்துவிட்டான். இதைப் போல் இன்னொரு வாயிற் காப்போனும் சம்மதித்துவிட்டான்.

பிறகு தெனாலிராமன் ஒருவருக்கும் தெரியாமல் உள்ளே சென்று ஓர் மூலையில் அமர்ந்து கொண்டான். அப்போது கிருஷ்ணன் வெண்ணை திருடி கோபிகைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

உடனே தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம் அணிந்தவனை கொம்பால் அடித்தான். இதைப்பார்த்த மன்னர் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை ஏன் இவ்வாறு செய்தாய் என்றார்.

அதற்குத் தெனாலிராமன் கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான் என்றான். இதைக் கேட்ட மன்னர், தெனாலிராமன் மீது கடும்கோபம் கொண்டு 30 கசையடி தருமாறு உத்தரவிட்டார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் அரசே இப்பரிசை எனக்கு தர வேண்டாம். எனக்குக் தர வேண்டியப் பரிசை ஆளுக்குப் பாதியாக, தருகிறேன், என்று நம் இரண்டு வயிற்காப்போன்களிடம் வாக்கு கொடுத்துவிட்டேன் என்றான்.

அதனால் இந்த பரிசை, அவர்கள் இருவருக்கும் சமமாக பங்கிட்டுத் தாருங்கள் என்றான். உடனே மன்னர் அவ்விருவரையும் அழைத்து இது குறித்து விசாரித்தார். அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டாதால் அவர்கள் இருவருக்கும் தலா 15 கசையடி தருமாறு உத்தரவிட்டார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தை பாராட்டி அவருக்கு பரிசு வழங்கினார்.

இன்றைய செய்திகள்

15.09.2025

22-ந்தேதி முதல் அமல்..!-கடைகளில் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு பட்டியல் வைக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அசாமில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. நில அதிர்வால் மக்கள் அச்சம்

நேபாளத்தில் இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.

ஓ விளையாட்டுச் செய்திகள்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றார்.

துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Today's Headlines

Implementation from 22nd GST reduction list should be kept in shops, said minister Nirmala Sitharaman.

5.8 magnitude earthquake in Assam., so that people were get fear due to earthquake.

Former Chief Justice of the country's Supreme Court, Sushila Karki (73), was sworn in as the interim Prime Minister of Nepal.

*SPORTS NEWS*

World Boxing Championship: Indian athlete Jasmine Lamboria won gold.

India and Pakistan will clash in the 6th league match in Dubai.

தமிழ்த்துகள்

Blog Archive