8th tamil model notes of lesson
lesson plan February 23
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
23-02-2026 முதல் 27-02-2026
2.பாடம்
தமிழ்
3.அலகு
7
4.பாடத்தலைப்பு
அறத்தால் வருவதே இன்பம் – கற்கண்டு, திருக்குறள்
5.உட்பாடத்தலைப்பு
வேற்றுமை, திருக்குறள்.
6.பக்கஎண்
144 - 154
7.கற்றல் விளைவுகள்
T-816 மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து
அவற்றைத் தம் மொழியில் எழுதும்போது பயன்படுத்துதல் (சொற்களை மாற்றுவதன் மூலம்
பாடலின் சந்தத்தில் ஏற்படும் ஓசை நயத்தைப் புரிந்துகொள்ளுதல்).
T-810 பல்வேறு வகை படித்தல் பகுதிகளில்
காணப்படும் சொற்கள், தொடர்கள், மரபுத்தொடர்கள் அவற்றைப் புரிந்துகொண்டு நயம்பாராட்டுதல்.
8.கற்றல் நோக்கங்கள்
கொடுக்கப்பட்ட சொற்றொடர்களில் எழுவாய், செயப்படுபொருள் பயனிலைகளை அட்டவணைப்படுத்தி
எழுதுதல்.
அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்று அவை கூறும் கருத்துகளைப் பின்பற்றுதல்.
9.நுண்திறன்கள்
வேற்றுமை உருபுகளையும் அவற்றின் பொருள்களையும்
அட்டவணைப்படுத்தி எழுதுதல்.
திருக்குறளின் பெருமை பற்றியும் திருவள்ளுவரின் பெருமை பற்றியும் பேசுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/08/4-vetrumai-8th-tamil-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2020/02/vetrumai.html
https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_54.html
https://tamilthugal.blogspot.com/2020/01/8-2-1.html
https://tamilthugal.blogspot.com/2026/02/blog-post_19.html
https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_6.html
https://tamilthugal.blogspot.com/2018/12/thiruvalluvar.html
11.ஆயத்தப்படுத்துதல்
வேற்றுமை உருபுகள் இல்லாத தொடர்களைக் கூறி பொருள்
வேறுபடுவதை உணர்த்துதல்.
மாணவர்கள் அறிந்த திருக்குறள்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
வேற்றுமை வகைகளை அறிமுகப்படுத்துதல்.
திருக்குறளின் பெருமைகளைக் கூறுதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
வேற்றுமை குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். வேற்றுமை
வகைகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
வேற்றுமை வரும் பொருள்களை மாணவர்களுக்குப் புரிய வைத்தல்.
வேற்றுமை உருபுகளையும் சொல்லுருபுகளையும் பொருளையும்
மாணவர்களுக்கு விளக்குதல்.
திருக்குறளைப் பொருளுடன் விளக்குதல். வாழ்வில் குறள்
நெறிகளைப் பின்பற்றப் பழகுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
வேற்றுமையின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்தல்.,
திருக்குறளின் சிறப்புகளை உணர்த்துதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – பெயர்ச்சொல்லின்
பொருளை வேறுபடுத்துவது ..............................
ந.சி.வி – உடனிகழ்ச்சிப்
பொருள் என்றால் என்ன?
எழுவாய் வேற்றுமையை விளக்குக.
உ.சி.வி – நட்பு,
நட்பு ஆராய்தல் அதிகாரங்களிலுள்ள 2 குறள்களுக்கு விளக்கம் தருக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
நான்காம் வேற்றுமைக்குப் புதிய எடுத்துக்காட்டுகளை எழுதுக.
திருவள்ளுவர் குறித்த செய்திகளைத் திரட்டுக.

