தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Thursday, March 17, 2022
Wednesday, March 16, 2022
பண்புத்தொகை, வினைத்தொகை தமிழ் இலக்கணக்குறிப்பு PANBUTHOGAI VINAITHOGAI TAMIL ILAKKANAKURIPPU
Tuesday, March 15, 2022
Sunday, March 13, 2022
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாள் 100 மதிப்பெண்கள் இயல் 4,5,6 pdf 10th tamil unit 4,5,6 II revision exam model question paper
100 மதிப்பெண்கள் 10ஆம் வகுப்பு தமிழ் வினாத்தாள் இயல் 4,5,6 குறைக்கப்பட்ட பாடத்திட்டம் pdf👇
Thursday, March 10, 2022
Wednesday, March 09, 2022
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4,5,6 மாதிரி வினாத்தாள் 100 மதிப்பெண்கள் pdf 10th tamil unit 4,5,6 II revision exam model question paper
ஆக்கம்
ச.சேட்டு மதார்சா,
தமிழாசிரியர்,
ஈ.கே.எம்.அ.க.மதரஸா இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி,
ஈரோடு.
Tuesday, March 08, 2022
பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதி கவிதை MAHAKAVI BHARATHIYAR KAVITHAI
பைந்தமிழ்த்
தேர்ப்பாகன் பாரதி
அச்சமில்லை
என்று சொல்லி
ஆண்மை
வளர்த்தவன் - தமிழ்
உச்சி
மீது நின்றிருந்து
புகழ்
விளைத்தவன்
அடிமை
வாழ்வின் விலங்கொடிக்க
அறம்
பாடியவன்
ஆங்கிலேயரை
விரட்டிடவே
மறம்
தேடியவன்
ஆத்திரம்
கொண்டவர்க்கே எதற்குச்
சாத்திரம்
என்றவன் - ஒளவை
ஆத்திசூடியைப்
புதிதாய்
மாற்றி
எழுதியவன்
ரௌத்திரம்
பழகென்று நமக்குச்
சொல்லிச்
சென்றவன் - கேவலம்
பௌத்திரம்
அடிமை வாழ்வென்றே
கிள்ளி
எறிந்தவன்
பாதகஞ்
செய்பவரைக் கண்டால்
உமிழச்
சொன்னவன் - பாப்பாப்
பாட்டிலும்
வீரத்
தமிழைச்
சொன்னவன்
பேச்சினிலே
விழி பிதுங்கி இருக்கும்
மூச்சிலே
தமிழ் கலந்து இருக்கும் - கொல்லன்
காய்ச்சிய
உலையாய்க் கவிதைக்
கனல்
கொப்பளிக்கும்
நாணும்
அச்சமும் நாய்கட்கென்றே
நல்வழி
சொன்னவன் - பெண்மை
பூணும்
கொடுமையெல்லாம் அன்றே
கொன்று
புதைத்தவன்
நிமிர்ந்த
நடையும் ஞானச் செருக்கும்
புதுமைப்பெண்
என்றவன் - தலை
கவிழ்ந்து
கிடக்க பெண்ணொரு
பதுமையோ
என்றவன்
ஏறுபோல்
நடையினராய் வீர
இளைஞர்களை
அழைத்தவன் - நாட்டைக்
கூறு
போட்ட கூட்டத்தை
வேரோடு
அழித்தவன்
வீரத்தில்
குஞ்சென்றும் மூப்பென்றும்
இல்லை
என்றவன் - அக்கிரகாரத்தில்
பிறந்தாலும்
தீண்டாமை
எல்லை
தாண்டியவன்
எரிதழல்
கொண்டு
கதிரை
வைத்திழந்தவன் கையெரிக்கச் சொன்னவன்
தருமத்தின்
வாழ்வுதனைச் சூது கவ்வும்
தருமம்
மறுபடி வெல்லும் என்றவன்
அச்சம்
தவிர்
ஆண்மை
தவறேலென்றவன் - கோபம்
மிச்சம்
வைக்காமல் கவிதையில்
அனலைக்
கலந்தவன்
அடடா
கோபம் எதற்கென்றே
அசட்டுத்தனமாய்க்
கேட்போருக்கு
எடடா
கோலை எழுத - வாழ்வு
சிறக்கட்டும்
சின்னக் கோபத்தாலென்றவன்.
பண்பாட்டின்
அடையாளமாம்
ஜல்லிக்கட்டை
மீட்டதுவும்
பரவும்
நஞ்சைக் கலந்த ஆலை
பெரிய
பூட்டுப் போட்டதுவும்
பயிர்
விளைப்போர் உழைப்புறிஞ்சும்
வேளாண்
சட்டம் விட்டதுவும்
சின்னக்
கோபம் தமிழனுக்கு
சீறிப்
பாய்ந்த வழிதானே?
எண்ணம்
யாவும் திண்ணம் உறவே
சின்னக்
கோபம் கொண்டிடுவோம்
எட்டயபுரத்து
அக்கினிக் குஞ்சை
எட்டும்
அறிவினில் வைத்திருப்போம்!
எட்டும்
அறிவினில் என்றும் வைத்திருப்போம்!
- கவிஞர் கல்லூரணி முத்து முருகன்.
வகுப்பு 10 தமிழ் இயல் 4,5,6 மாதிரி வினாத்தாள் 2 விடைக்குறிப்பு 10th tamil II revision exam model question paper Answer key 50 மதிப்பெண்கள்
வினாத்தாள்👇
தமிழ்த்துகள் விடைக்குறிப்பு
I பலவுள் தெரிக. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 8 x 1 = 8
1) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
2) அங்கு வறுமை இல்லாததால்
3) கொடை
4) அறியா வினா, சுட்டு விடை
5) இறைவனிடம் குலசேகர
ஆழ்வார்
6) பால் வழுவமைதி, திணை வழுவமைதி
7) செய்குதம்பிப் பாவலர்
8) கால வழுவமைதி
II எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்கவும்.
16ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்கவும். 6 x 2 = 12
9. முதற்பொருள் :
நிலம் - காடு
சிறுபொழுது - மாலை
பெரும்பொழுது - கார்காலம் (மழைக்காலம்)
கருப்பொருள் :
உணவு - வரகு
இவையனைத்தும் முல்லை
நிலத்திற்குரியவை.
10. ஆரல்வாய்மொழிக்குச்
“செல்வேன்” என்று எதிர்காலத்தில் தான் வரவேண்டும்.
ஆனால் செல்வதன்
உறுதித்தன்மை காரணமாக “செல்கிறேன்” என்று நிகழ்காலத்தில் வந்துள்ளதால், இது
காலவழுமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.
11. வினா ஆறு வகைப்படும்.
அவை, அறிவினா, அறியா வினா, ஐயவினா , கொளல்
வினா, கொடை வினா , ஏவல் வினா.
12. மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால்
அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்கின்ற நோயாளி அம்மருத்துவரை
நேசிக்கின்றார்.
அத்துடன்
அம்மருத்துவர் நோயை குணமாக்கிவிடுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.
இங்கு
மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் நோயாளியைக் குணப்படுத்துகிறது.
13. சோலைகள்,
செண்பக காடுகள், பொய்கைகள், புது மணல் தடாகங்கள், கமுகந் தோட்டங்கள், நெல்வயல்கள்.
14. எழுவாய்களுக்கு ஏற்ற
செழுமை செய்திருப்பின் மதிப்பெண் வழங்கவும்.
15. பொருத்தமாக
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கவும்.
16. குன்றேறி யானைப்போர்
கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.
III எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்கவும்.
22ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்கவும். 4 x 3 = 12
17. உடலில் ஏற்பட்ட புண்ணை
மருத்துவர்தம் கத்தியால் அறுத்துச்சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி
அவரை நேசிப்பார்.
அடித்தாலும் அன்னையின் கை
பிடித்து அழும் குழந்தை போல, இறைவன் தமக்குத்தரும் துன்பமும் நன்மைக்கே எனக் கருதி
இறைவனிடம் பற்றுக் கொள்வதாகக் குலசேகராழ்வார் கூறியுள்ளார்.
18. பொருள்கோள் வகை –
ஆற்றுநீர்ப் பொருள்கோள்
இக்குறட்பாவில் முயற்சி
செல்வத்தை உண்டாக்கும், முயற்சியின்மை வறுமைக்குள் தள்ளிவிடும் என்று நேரிடையாக
ஆற்றின் நீரோட்டத்தைப்போல் பொருள் கொள்ள முடிகிறது.
எனவே, இது ஆற்றுநீர்ப்
பொருள்கோளாகும்.
19. திணை – சிறுபொழுது
குறிஞ்சி – யாமம்
முல்லை – மாலை
மருதம் – வைகறை
நெய்தல் – எற்பாடு
பாலை – நண்பகல்
20. குளிர்ந்த சோலைகளில் மயில்கள் அழகுற ஆட, விரிதாமரை
மலர்கள், ஏற்றிய விளக்குகள் போல் தோன்ற, சூழும் மேகங்கள் மத்தள ஒலியாய் எழ, மலரும்
குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பதுபோல் காண, நீர்நிலைகள் எழுப்பும் அலைகள்
திரைச்சீலைகளாய் விரிய, மகர யாழின் தேனிசைபோல் வண்டுகள் ரீங்காரம் பாட மருதம்
வீற்றிருக்கிறது.
21.ஆள் / வினை / யும் – நேர் நிரை நேர் - கூவிளங்காய்
ஆன் / ற – நேர் நேர் - தேமா
அறி / வு – நிரை நேர் - புளிமா
மென / விரண் / டின் – நிரை நிரை நேர் - கருவிளங்காய்
நீள் / வினை / யால் – நேர் நிரை நேர் - கூவிளங்காய்
நீ / ளும் நேர் நேர் - தேமா
குடி. – நிரை – மலர்
22. நீதிவெண்பா
அருளைப் பெருக்கி அறிவைத்
திருத்தி
மருளை அகற்றி மதிக்கும்
தெருளை
அருத்துவதும் ஆவிக்கு
அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே
போற்று. - கா.ப.செய்குதம்பிப்
பாவலர்.
அல்லது
கம்பராமாயணம்
வெய்யோனொளி தன்மேனியின்
விரிசோதியின் மறையப்
பொய்யோவெனு மிடையாளொடு
மிளையானொடும் போனான்
மையோமர கதமோமறி கடலோமழை
முகிலோ
ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான். - கம்பர்.
IV அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 2
x 5 = 10
23. அ
பொருத்தமாக
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கவும்.
ஆ.
ஏற்புடைய நயங்கள்
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கவும்.
24.
அ.
பொருத்தமாக
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கவும்.
ஆ.
மலர் – தேவி, நீ அறையை
விட்டு வெளியேறும் போது விளக்கை அணைத்து விடு.
தேவி – ஆம், நாம்
மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும்.
மலர் – நம் நாடு இரவில்
நம் வீதிகளில் விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் அதிக மின்சாரத்தைச் செலவழிக்கிறது.
தேவி – யாருக்குத்
தெரியும் ? வருங்காலத்தில் நம் நாடு இரவு வெளிச்சத்திற்காக ஒரு செயற்கை நிலாவையே
வானிற்கு அனுப்பலாம்.
மலர் – நான்
படித்திருக்கிறேன், சில நாடுகள் இவ்வகையான செயற்கைக் கோள்களை விண்ணிற்குச்
செலுத்தும் நிலை வருங்காலத்தில் வரும்.
தேவி – அருமையான செய்தி,
நாம் செயற்கை நிலாவைச் செலுத்தினால் இயற்கைப்பேரிடர் மீட்புப் பணிகளின் போது
மின்சாரம் இல்லாத இடங்களில் அவைகளால் ஒளி தர இயலும்.
V விரிவான விடையளிக்கவும். 1
x 8 = 8
25. அ.
கட்டுரை அமைப்பில்
உட்தலைப்பிற்குக் கீழ் பொருத்தமான செய்திகள் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கவும்.
ஆ.
நூலின் தலைப்பு - 1
நூலின் மையப்பொருள் - 1
மொழி நடை – 1
வெளிப்படுத்தும் கருத்து – 1
நூலின் நயம் – 1
நூல் கட்டமைப்பு - 1
சிறப்புக்கூறு - 1
நூல் ஆசிரியர் - 1
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson lesson plan October 5 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2...
-
9th tamil model notes of lesson lesson plan October 5 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 ...
-
பதிவிறக்கு/DOWNLOAD Tenth tamil quarterly exam question paper pdf virudhunagar district 2025
-
8th tamil model notes of lesson lesson plan October 5 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2....
-
6th tamil model notes of lesson lesson plan October 5 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2....
-
Tenth Tamil Quarterly Exam Question Paper Model 1 sslc September 2025 virudhunagar district பதிவிறக்கு/DOWNLOAD
-
7th tamil model notes of lesson lesson plan October 5 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2.பர...
-
10th tamil model notes of lesson lesson plan september 7 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 07-09-2026 முதல் 11-09-2026 ...
-
sslc tamil Quarterly exam question 10th important questions Pdf DOWNLOAD LINK
-
9th Tamil Quarterly Exam Question Paper Model 1 September 2025 virudhunagar district பதிவிறக்கு/DOWNLOAD
Blog Archive
-
▼
2026
(1573)
-
▼
October
(6)
- குடும்ப விளக்கு ஒன்பதாம் வகுப்பு தமிழ் FULL AI VID...
- உயிர்வகை ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 4 UYIR VAGAI ...
- பத்தாம் வகுப்பு தமிழ் முத்தொள்ளாயிரம் Full AI VIDE...
- பத்தாம் வகுப்பு தமிழ் சங்க இலக்கியத்தில் அறம் FULL...
- பத்தாம் வகுப்பு தமிழ் அகப்பொருள் இலக்கணம் full ai ...
- பத்தாம் வகுப்பு தமிழ் தேம்பாவணி FULL AI VIDEO 10th...
-
▼
October
(6)
