வினாத்தாள்👇
தமிழ்த்துகள் விடைக்குறிப்பு
I பலவுள் தெரிக. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 8 x 1 = 8
1) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
2) அங்கு வறுமை இல்லாததால்
3) கொடை
4) அறியா வினா, சுட்டு விடை
5) இறைவனிடம் குலசேகர
ஆழ்வார்
6) பால் வழுவமைதி, திணை வழுவமைதி
7) செய்குதம்பிப் பாவலர்
8) கால வழுவமைதி
II எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்கவும்.
16ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்கவும். 6 x 2 = 12
9. முதற்பொருள் :
நிலம் - காடு
சிறுபொழுது - மாலை
பெரும்பொழுது - கார்காலம் (மழைக்காலம்)
கருப்பொருள் :
உணவு - வரகு
இவையனைத்தும் முல்லை
நிலத்திற்குரியவை.
10. ஆரல்வாய்மொழிக்குச்
“செல்வேன்” என்று எதிர்காலத்தில் தான் வரவேண்டும்.
ஆனால் செல்வதன்
உறுதித்தன்மை காரணமாக “செல்கிறேன்” என்று நிகழ்காலத்தில் வந்துள்ளதால், இது
காலவழுமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.
11. வினா ஆறு வகைப்படும்.
அவை, அறிவினா, அறியா வினா, ஐயவினா , கொளல்
வினா, கொடை வினா , ஏவல் வினா.
12. மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால்
அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்கின்ற நோயாளி அம்மருத்துவரை
நேசிக்கின்றார்.
அத்துடன்
அம்மருத்துவர் நோயை குணமாக்கிவிடுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.
இங்கு
மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் நோயாளியைக் குணப்படுத்துகிறது.
13. சோலைகள்,
செண்பக காடுகள், பொய்கைகள், புது மணல் தடாகங்கள், கமுகந் தோட்டங்கள், நெல்வயல்கள்.
14. எழுவாய்களுக்கு ஏற்ற
செழுமை செய்திருப்பின் மதிப்பெண் வழங்கவும்.
15. பொருத்தமாக
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கவும்.
16. குன்றேறி யானைப்போர்
கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.
III எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்கவும்.
22ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்கவும். 4 x 3 = 12
17. உடலில் ஏற்பட்ட புண்ணை
மருத்துவர்தம் கத்தியால் அறுத்துச்சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி
அவரை நேசிப்பார்.
அடித்தாலும் அன்னையின் கை
பிடித்து அழும் குழந்தை போல, இறைவன் தமக்குத்தரும் துன்பமும் நன்மைக்கே எனக் கருதி
இறைவனிடம் பற்றுக் கொள்வதாகக் குலசேகராழ்வார் கூறியுள்ளார்.
18. பொருள்கோள் வகை –
ஆற்றுநீர்ப் பொருள்கோள்
இக்குறட்பாவில் முயற்சி
செல்வத்தை உண்டாக்கும், முயற்சியின்மை வறுமைக்குள் தள்ளிவிடும் என்று நேரிடையாக
ஆற்றின் நீரோட்டத்தைப்போல் பொருள் கொள்ள முடிகிறது.
எனவே, இது ஆற்றுநீர்ப்
பொருள்கோளாகும்.
19. திணை – சிறுபொழுது
குறிஞ்சி – யாமம்
முல்லை – மாலை
மருதம் – வைகறை
நெய்தல் – எற்பாடு
பாலை – நண்பகல்
20. குளிர்ந்த சோலைகளில் மயில்கள் அழகுற ஆட, விரிதாமரை
மலர்கள், ஏற்றிய விளக்குகள் போல் தோன்ற, சூழும் மேகங்கள் மத்தள ஒலியாய் எழ, மலரும்
குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பதுபோல் காண, நீர்நிலைகள் எழுப்பும் அலைகள்
திரைச்சீலைகளாய் விரிய, மகர யாழின் தேனிசைபோல் வண்டுகள் ரீங்காரம் பாட மருதம்
வீற்றிருக்கிறது.
21.ஆள் / வினை / யும் – நேர் நிரை நேர் - கூவிளங்காய்
ஆன் / ற – நேர் நேர் - தேமா
அறி / வு – நிரை நேர் - புளிமா
மென / விரண் / டின் – நிரை நிரை நேர் - கருவிளங்காய்
நீள் / வினை / யால் – நேர் நிரை நேர் - கூவிளங்காய்
நீ / ளும் நேர் நேர் - தேமா
குடி. – நிரை – மலர்
22. நீதிவெண்பா
அருளைப் பெருக்கி அறிவைத்
திருத்தி
மருளை அகற்றி மதிக்கும்
தெருளை
அருத்துவதும் ஆவிக்கு
அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே
போற்று. - கா.ப.செய்குதம்பிப்
பாவலர்.
அல்லது
கம்பராமாயணம்
வெய்யோனொளி தன்மேனியின்
விரிசோதியின் மறையப்
பொய்யோவெனு மிடையாளொடு
மிளையானொடும் போனான்
மையோமர கதமோமறி கடலோமழை
முகிலோ
ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான். - கம்பர்.
IV அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 2
x 5 = 10
23. அ
பொருத்தமாக
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கவும்.
ஆ.
ஏற்புடைய நயங்கள்
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கவும்.
24.
அ.
பொருத்தமாக
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கவும்.
ஆ.
மலர் – தேவி, நீ அறையை
விட்டு வெளியேறும் போது விளக்கை அணைத்து விடு.
தேவி – ஆம், நாம்
மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும்.
மலர் – நம் நாடு இரவில்
நம் வீதிகளில் விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் அதிக மின்சாரத்தைச் செலவழிக்கிறது.
தேவி – யாருக்குத்
தெரியும் ? வருங்காலத்தில் நம் நாடு இரவு வெளிச்சத்திற்காக ஒரு செயற்கை நிலாவையே
வானிற்கு அனுப்பலாம்.
மலர் – நான்
படித்திருக்கிறேன், சில நாடுகள் இவ்வகையான செயற்கைக் கோள்களை விண்ணிற்குச்
செலுத்தும் நிலை வருங்காலத்தில் வரும்.
தேவி – அருமையான செய்தி,
நாம் செயற்கை நிலாவைச் செலுத்தினால் இயற்கைப்பேரிடர் மீட்புப் பணிகளின் போது
மின்சாரம் இல்லாத இடங்களில் அவைகளால் ஒளி தர இயலும்.
V விரிவான விடையளிக்கவும். 1
x 8 = 8
25. அ.
கட்டுரை அமைப்பில்
உட்தலைப்பிற்குக் கீழ் பொருத்தமான செய்திகள் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கவும்.
ஆ.
நூலின் தலைப்பு - 1
நூலின் மையப்பொருள் - 1
மொழி நடை – 1
வெளிப்படுத்தும் கருத்து – 1
நூலின் நயம் – 1
நூல் கட்டமைப்பு - 1
சிறப்புக்கூறு - 1
நூல் ஆசிரியர் - 1