கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, July 30, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைத் தேர்வு சூலை 2023 விடைக் குறிப்பு விருதுநகர் மாவட்டம் 10th tamil answer key

 

பத்தாம் வகுப்பு

தமிழ்

முதல் இடைத் தேர்வு சூலை 2023

விடைக் குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                 8x1=8  தமிழ்த்துகள்

1. அ. வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்            1

2. ஈ. பாடல், கேட்டவர்                                                        1

3. இ. காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்                    1

4. அ. மலேசியா                                                                  1

5. ஆ. 3, 1, 4, 2                                                                   1

6. அ. நற்சொல்                                                                  1

7. ஆ. இன்மையிலும் விருந்து                                            1        தமிழ்த்துகள்

8. இ. அன்மொழித்தொகை                                                1

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க                           3x2=6

9.       1.        உயிரைக் காக்கும் காற்றே

உறவறியாக் காற்றே

மரம் அசைந்தால் மலர்ந்திடுவாய்.                                                                      1

2.       மரம் இல்லையேல் காற்று இல்லை

காற்று இல்லையேல் நாம் இல்லை                                                                    1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

10.      நன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரை, அங்கே நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச்சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள் எனக்கூறி வழிப்படுத்துதலாகும்.                                                2

தமிழ்த்துகள்

11. பொருள் – திருமால்                                                                                   1

இலக்கணக்குறிப்பு - செய்யுளிசை அளபெடை                                                    1

தமிழ்த்துகள்

12.      1.விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்று இல்லை. 

2.விருந்தோம்பலுக்கு மனம் மட்டும் இருந்தால் போதும்.

3.தம்மிடம் உள்ளது கொண்டு அகம் மகிழ்ந்து அளித்தலே சிறந்த விருந்தோம்பலாகும். 2

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x2=4

13.கலைச்சொற்கள்

அ.புயல்                                                                                               1

ஆ.நிலக்காற்று                                                                                     1

 

14. “தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை

தேரும் சிலப்பதி காமதை            

ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம்

ஓதி யுர்ந்தின் புறுவோமே”                                                         2

 

15. அ வளி வீசியதால் வாளி கீழே விழுந்தது.                                             1

ஆ. தொடு என்று காதில் அணியும் தோடு ஒன்றை நீட்டினாள்.                      1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க                   3x3=9

16. பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்                                                     3

தமிழ்த்துகள்

17. இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் 􀁊யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,

“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்

வருவீர் உளீ ரோ”

என்ற குறுந்தொகை அடிகள் புலப்படுத்துகின்றன.                                               3

தமிழ்த்துகள்

18. 1.   தமிழ் இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது.

2.       கடல் முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது.

3.       தமிழ் முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.

4.       கடல் வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூவகைச் சங்குகளைத் தருகின்றது.

5.       தமிழ் ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாய்ப் பெற்றது.

6.       கடல் மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது.                     3

 

19. 1.கண்ணே கண்ணுறங்கு         -     விளித்தொடர்

2.காலையில் நீ எழும்பு        -    வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

3.மாமழை பெய்கையிலே    -     உரிச்சொற்றொடர்

4.மாம்பூவே கண்ணுறங்கு    -    விளித்தொடர்

5.பாடினேன் தாலாட்டு        -    வினைமுற்றுத்தொடர்

6.ஆடி ஆடி                        -    அடுக்குத்தொடர்

7.ஓய்ந்துறங்கு                    -    வினையெச்சத்தொடர்                                         3

 

20. 1.   நெல் நாற்று நன்றாக வளர்ந்துள்ளது.

2.       தென்னம் பிள்ளைக்குத் தண்ணீர் விட்டேன்.

3.       மாங்கன்று தளிர்விட்டது.

4.       வாழைக்குருத்து மழையின்றி வாடியது.

5.       பனைவடலி கோடையிலும் பசுமையாக இருந்தது.                                      3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

விடை அளிக்க                                                         2x5=10

21. அ பொன்னிறச் சூரியன் அதிகாலையிலேயே எழுந்து ஒளிமிக்க கதிர்களால் இருளை மங்கச் செய்கிறது. பால்போன்ற வெண்மேகங்கள் அலைகளாகத் தவழ்கின்றன. வண்ணமயமான பறவைகள் தங்களது காலைப்பொழுதை இசை, தாளத்துடன் தொடங்குகின்றன. அழகான பட்டாம்பூச்சிகள் மலர்களைச் சுற்றி நடனமாடுகின்றன. பூக்களின் மணம் தென்றலை நிரப்புகின்றன. காற்று மெதுவாக எல்லா இடங்களிலும் வீசி எங்கும் இனிமையான நறுமணம் பரப்பும்.                                                      5

தமிழ்த்துகள்

அல்லது

. முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகள்

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான முல்லைப்பாட்டு 103 அடிகளைக் கொண்டது. நப்பூதனாரின் வரிகள் கார்காலச் செய்திகளைக் கவி மழையாய்ப் பொழிந்துள்ளன.

நிமிர்ந்த மாஅல் போல

வலம்புரிச் சங்கு பொறித்த கைகளையுடைய திருமால் குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்போது மண்ணுக்கும் விண்ணுக்கும் கொண்ட பேருருவமாய் உயர்ந்து நின்றது மழை மேகம்.

கடலின் குளிர் நீரைப் பருகி பெருந்தோற்றம் கொண்டு வளமாய் எழுந்து மலையைச் சூழ்ந்து வேகத்துடன் பெருமழை பொழிகிறது.

விரிச்சி

ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள் ஆரவாரமற்ற ஊர்ப் பக்கம் சென்று தெய்வம் தொழுது ஊரார் சொல் கேட்பர்.

தலைவிக்கு நற்சொல் கேட்கும் பொருட்டுச் சென்றபோது பெண்கள் மலர்ந்த முல்லைப் பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் தெய்வத்தின் முன் தூவி நின்றனர்.

நற்சொல் கேட்டல்

"வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் ஓடிவர, உன் தாய்மார் வருவர்; உன் துயரம் தீரும் வருந்தாதே!" என்று பசியால் வாடிய இளங்கன்றுக்கு இடை மகள் நற்சொல் கூறினார்.

"நின் தலைவன் பகைவரை வென்று திறைப் பொருளோடு வருவது உறுதி. மனத்தடுமாற்றம் கொள்ளாதே தலைவியே!", என ஆற்றுப்படுத்தினர் முது பெண்டிர்.      5

தமிழ்த்துகள்

 

22. அ. இடம் நாள்                       ½

விளி                               ½

செய்தி                             2

முடிப்பு                             1

உறைமேல் முகவரி           1

 

அல்லது

 

ஆ.அனுப்புநர்                    ½

பெறுநர்                            ½

விளி                               ½

பொருள்                           ½                  தமிழ்த்துகள்

செய்தி                            

முடிப்பு                             ½

இடம் நாள்                        ½

உறைமேல் முகவரி           ½

தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

விடை அளிக்க                                                          1x8=8

23. தமிழ்ச் சொல்வளம்                                                                          8

அல்லது

                             தமிழ்த்துகள்

24.அன்னமய்யா                                                                                   8

 

அடிபிறழாமல் எழுதுக.                                                 3+2=5

 

25. அ. அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!                                        3

 

ஆ. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.                                                               2

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைத் தேர்வு வினாத்தாள் 2023 pdf கள்ளக்குறிச்சி 10th tamil first mid term exam question paper kallakurichi

பதிவிறக்கு/DOWNLOAD

Wednesday, July 26, 2023

Tuesday, July 25, 2023

2023 வகுப்பு 8 தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் 8th tamil I mid term model question

2023 வகுப்பு 8 தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் pdf விருதுநகர் 8th tamil I mid term model question Virudhunagar District

8th tamil I mid term model question paper pdf  Virudhunagar District

பதிவிறக்கு/DOWNLOAD

2023 வகுப்பு 9 தமிழ் முதல் இடைப் பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் 9th tamil I mid term model question

2023 வகுப்பு 9 தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் pdf விருதுநகர் 9th tamil I mid term model question Virudhunagar District

 9th tamil I mid term model question Virudhunagar District


பதிவிறக்கு/DOWNLOAD

Monday, July 24, 2023

2023 வகுப்பு 10 தமிழ் முதல் இடைப்பருவ வினாத்தாள் 2 விருதுநகர் 10th tamil I mid term model question 2

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் 2 விருதுநகர் மாவட்டம் pdf 10th tamil model question paper july 2023

 பதிவிறக்கு/DOWNLOAD

2023 வகுப்பு 10 தமிழ் முதல் இடைப் பருவ வினாத்தாள் 1 விருதுநகர் 10th tamil I mid term model question1

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் 1 விருதுநகர் மாவட்டம் pdf 10th tamil model question paper july 2023

 பதிவிறக்கு/DOWNLOAD

Sunday, July 23, 2023

சிறுதானிய உணவு செந்தமிழர் மரபு தமிழ்ப் பேச்சு உரை Siruthaniya Unavu Senthamilar Marabu tamil speech

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஜூலை 22

 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

22-07-2024 முதல் 26-07-2024

2.அலகு

1, 2

3.பாடத்தலைப்பு

முதல் இடைப்பருவத் தேர்வு பாடப்பகுதிகள்

4.திருப்புதல் வினாக்கள்

‘இறடிப் பொம்மல் பெறுகுவிர்’ - இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.

குறிப்பு வரைக – வசன கவிதை.                                

இரட்டுறமொழிதலை விளக்குக.

பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.

‘தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி, விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

காய்ந்த அடியின் பெயர்களை எழுதுக.

’புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’

இதுபோல் இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.    

கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலை கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?

தொழிற்பெயர்க்கும் வினையாலணையும் பெயர்க்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.

தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.

தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.                        

உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

மாஅல் - பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.

பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

‘வேங்கை’ என்பதைத் தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

தொழிற்பெயரை வகைப்படுத்துக.   - சொட்டு     

இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக. மலை – மாலை      

கலைச்சொல் தருக. - conversation                                                        

மொழிபெயர்க்க.                                                                                     If you talk to a man in language he understands, that goes to his head. If you talk to him in his own language that goes to his heart. -Nelson Mandela

Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going. – Rita Mae Brown.                                                        

சான்றோர் வளர்த்த தமிழ் – கட்டுரை எழுதுக.                                  

அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

 

தமிழ்த்துகள்

Blog Archive