பத்தாம்
வகுப்பு
தமிழ்
முதல்
இடைத் தேர்வு சூலை 2023
விடைக் குறிப்பு
விருதுநகர்
மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 8x1=8 தமிழ்த்துகள்
1. அ. வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும் 1
2. ஈ. பாடல், கேட்டவர் 1
3. இ. காசி நகரத்தின் பெருமையைப் பாடும்
நூல் 1
4. அ. மலேசியா 1
5. ஆ. 3, 1, 4, 2
1
6. அ. நற்சொல் 1
7. ஆ. இன்மையிலும் விருந்து 1 தமிழ்த்துகள்
8. இ. அன்மொழித்தொகை 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
9. 1. உயிரைக் காக்கும் காற்றே
உறவறியாக் காற்றே
மரம் அசைந்தால் மலர்ந்திடுவாய். 1
2. மரம் இல்லையேல் காற்று இல்லை
காற்று இல்லையேல் நாம் இல்லை 1
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
10. நன்னனைப் புகழ்ந்து
பாடிப் பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரை, அங்கே நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும்
தினைச்சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள் எனக்கூறி வழிப்படுத்துதலாகும். 2
11. பொருள் – திருமால் 1
இலக்கணக்குறிப்பு - செய்யுளிசை அளபெடை 1
12.
1.விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்று இல்லை.
2.விருந்தோம்பலுக்கு மனம் மட்டும் இருந்தால்
போதும்.
3.தம்மிடம் உள்ளது கொண்டு அகம் மகிழ்ந்து
அளித்தலே சிறந்த விருந்தோம்பலாகும். 2
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x2=4
13.கலைச்சொற்கள்
அ.புயல் 1
ஆ.நிலக்காற்று 1
14.
“தேனிலே ஊறிய
செந்தமிழின் - சுவை
தேரும்
சிலப்பதி காரமதை
ஊனிலே எம்முயிர் உள்ளளவும்
- நிதம்
ஓதி யுணர்ந்தின்
புறுவோமே” 2
15. அ வளி வீசியதால் வாளி கீழே விழுந்தது. 1
ஆ. தொடு என்று காதில்
அணியும் தோடு ஒன்றை நீட்டினாள். 1
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x3=9
16. பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம் 3
17. இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு
முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,
“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீ ரோ”
என்ற குறுந்தொகை அடிகள் புலப்படுத்துகின்றன. 3
18. 1. தமிழ் இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது.
2. கடல் முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது.
3. தமிழ் முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.
4. கடல் வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூவகைச் சங்குகளைத் தருகின்றது.
5. தமிழ் ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாய்ப் பெற்றது.
6. கடல் மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது. 3
19. 1.கண்ணே கண்ணுறங்கு - விளித்தொடர்
2.காலையில் நீ எழும்பு - வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
3.மாமழை பெய்கையிலே - உரிச்சொற்றொடர்
4.மாம்பூவே கண்ணுறங்கு - விளித்தொடர்
5.பாடினேன் தாலாட்டு - வினைமுற்றுத்தொடர்
6.ஆடி ஆடி - அடுக்குத்தொடர்
7.ஓய்ந்துறங்கு - வினையெச்சத்தொடர் 3
20. 1. நெல் நாற்று நன்றாக
வளர்ந்துள்ளது.
2. தென்னம்
பிள்ளைக்குத் தண்ணீர் விட்டேன்.
3. மாங்கன்று
தளிர்விட்டது.
4. வாழைக்குருத்து
மழையின்றி வாடியது.
5. பனைவடலி
கோடையிலும் பசுமையாக இருந்தது. 3
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
விடை அளிக்க 2x5=10
21. அ பொன்னிறச் சூரியன் அதிகாலையிலேயே
எழுந்து ஒளிமிக்க கதிர்களால் இருளை மங்கச் செய்கிறது. பால்போன்ற வெண்மேகங்கள் அலைகளாகத்
தவழ்கின்றன. வண்ணமயமான பறவைகள் தங்களது காலைப்பொழுதை இசை, தாளத்துடன் தொடங்குகின்றன. அழகான பட்டாம்பூச்சிகள்
மலர்களைச் சுற்றி நடனமாடுகின்றன. பூக்களின் மணம் தென்றலை நிரப்புகின்றன. காற்று மெதுவாக
எல்லா இடங்களிலும் வீசி எங்கும் இனிமையான நறுமணம் பரப்பும். 5
அல்லது
ஆ. முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகள்
பத்துப்பாட்டு
நூல்களுள் ஒன்றான முல்லைப்பாட்டு 103 அடிகளைக் கொண்டது. நப்பூதனாரின் வரிகள் கார்காலச்
செய்திகளைக் கவி மழையாய்ப் பொழிந்துள்ளன.
நிமிர்ந்த மாஅல் போல
வலம்புரிச்
சங்கு பொறித்த கைகளையுடைய திருமால் குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத்
தரும்போது மண்ணுக்கும் விண்ணுக்கும் கொண்ட பேருருவமாய் உயர்ந்து நின்றது மழை மேகம்.
கடலின் குளிர் நீரைப் பருகி பெருந்தோற்றம்
கொண்டு வளமாய் எழுந்து மலையைச் சூழ்ந்து வேகத்துடன் பெருமழை பொழிகிறது.
விரிச்சி
ஏதேனும் ஒரு
செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள் ஆரவாரமற்ற ஊர்ப் பக்கம் சென்று தெய்வம் தொழுது
ஊரார் சொல் கேட்பர்.
தலைவிக்கு நற்சொல் கேட்கும் பொருட்டுச்
சென்றபோது பெண்கள் மலர்ந்த முல்லைப் பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் தெய்வத்தின்
முன் தூவி நின்றனர்.
நற்சொல் கேட்டல்
"வளைந்த
கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் ஓடிவர, உன் தாய்மார் வருவர்; உன் துயரம் தீரும் வருந்தாதே!"
என்று பசியால் வாடிய இளங்கன்றுக்கு இடை மகள் நற்சொல் கூறினார்.
"நின் தலைவன் பகைவரை வென்று திறைப்
பொருளோடு வருவது உறுதி. மனத்தடுமாற்றம் கொள்ளாதே தலைவியே!", என ஆற்றுப்படுத்தினர் முது பெண்டிர். 5
22. அ. இடம் நாள் ½
விளி ½
செய்தி 2
முடிப்பு 1
உறைமேல் முகவரி 1
அல்லது
ஆ.அனுப்புநர் ½
பெறுநர் ½
விளி ½
பொருள் ½ தமிழ்த்துகள்
செய்தி 1½
முடிப்பு ½
இடம் நாள் ½
உறைமேல் முகவரி ½
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
விடை அளிக்க 1x8=8
23. தமிழ்ச் சொல்வளம் 8
அல்லது
24.அன்னமய்யா 8
அடிபிறழாமல் எழுதுக. 3+2=5
25. அ. அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும்
முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக்
குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி
அரசிருந்த மண்ணுலகப் பேரரசே! 3
ஆ. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். 2
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்