கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, July 23, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஜூலை 22

 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

22-07-2024 முதல் 26-07-2024

2.அலகு

1, 2

3.பாடத்தலைப்பு

முதல் இடைப்பருவத் தேர்வு பாடப்பகுதிகள்

4.திருப்புதல் வினாக்கள்

‘இறடிப் பொம்மல் பெறுகுவிர்’ - இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.

குறிப்பு வரைக – வசன கவிதை.                                

இரட்டுறமொழிதலை விளக்குக.

பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.

‘தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி, விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

காய்ந்த அடியின் பெயர்களை எழுதுக.

’புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’

இதுபோல் இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.    

கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலை கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?

தொழிற்பெயர்க்கும் வினையாலணையும் பெயர்க்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.

தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.

தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.                        

உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

மாஅல் - பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.

பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

‘வேங்கை’ என்பதைத் தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

தொழிற்பெயரை வகைப்படுத்துக.   - சொட்டு     

இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக. மலை – மாலை      

கலைச்சொல் தருக. - conversation                                                        

மொழிபெயர்க்க.                                                                                     If you talk to a man in language he understands, that goes to his head. If you talk to him in his own language that goes to his heart. -Nelson Mandela

Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going. – Rita Mae Brown.                                                        

சான்றோர் வளர்த்த தமிழ் – கட்டுரை எழுதுக.                                  

அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

 

தமிழ்த்துகள்

Blog Archive