தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Friday, January 31, 2020
Wednesday, January 29, 2020
Monday, January 27, 2020
Sunday, January 26, 2020
மலாலா - MALALA - வகுப்பு 9 தமிழ் இயல் 5 கல்வியிற்சிறந்த பெண்கள்
9TH STANDARD TAMIL UNIT 5 KALVIYIRSIRANTHAPENGAL - MALALA YOUSAFZAI
Thursday, January 23, 2020
Wednesday, January 22, 2020
Tuesday, January 21, 2020
Monday, January 20, 2020
Sunday, January 19, 2020
Saturday, January 18, 2020
Thursday, January 16, 2020
ஏறு தழுவுதல்
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம்அவனியாபுரம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும்,திருச்சி பெரிய சூரியூர்,நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி ,கூலமேடு , தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம்,புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை,வேலூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.
பெயர்க்காரணம்
சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது.
வகைகள்
சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது.
- வேலி ஜல்லிக்கட்டு
வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.
- வாடிவாசல் ஜல்லிக்கட்டு
மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.
- வடம் ஜல்லிக்கட்டு
வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.
வரலாறு
பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆயர்கள்/யாதவர்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல்
சங்க இலக்கியமான கலித்தொகை
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய - உயிர்துறந்து நைவாரா ஆய மகள் தோள்.
என்றுரைக்கிறது. அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரை: "கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்." என்பதாகும். பாடலின் இறுதியில் அடக்கப்பட்ட மற்றும் அடக்கப்படாத காளைகள் தொழுவத்தைக் கடந்து வயல்வெளிகளுக்கு ஓடிவிட்ட பின்னர் காளைகளும் ஆயர்குல மகளிரும் ஆட்டம் ஆடும்போது திருமாலையும் அரசனையும் வாழ்த்துகின்றனர்.
பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது. ஆயர் குல இளைஞர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் ஆயர் குலப் பெண்.
ஆயச்சியர் குரவைக் கூத்தும் ஏறு தழுவுதலும்
ஏறு தழுவலுக்கும் குரவைக் கூத்திற்கும் தொடர்பிருந்தது . குரவைக் கூத்து ஏறு தழுவலுக்குரிய நாளுக்கு முதல் நாள் மாலையிலாவது, ஏறு தழுவும் நாளின் மாலையிலாவது ஊர் பொதுமன்றே நிகழும். முதல் நாளாயின் தம் காதலரை ஏறு தழுவுவதற்குத் தூண்டும் பாட்டுகளையும், ஏறுதழுவிய நாளாயின் தம் காதலர் வெற்றியைக் கொண்டாடும் பாட்டுகளையும் ஆயர் குல மகளிர் பாடுவர். ஏறுதழுவுதல் மண வினையுடன் தொடர்புடையதாய் அமைந்திருந்தது. காளையை அடக்கிய மணமாகா இளைஞர் பெண்ணினைப் பரிசாகப் பெறுவதுண்டு. இன்று ஏறு தழுவுதல் என்ற பெயர் வழக்கில் இல்லை. இருப்பினும் ஏறுதழுவலின் எச்சமாக இன்றைய சல்லிக்கட்டு விளங்குகிறது.
ஏறுதழுவுதலும் ஜல்லிக்கட்டும்
ஏறு தழுவுவதற்கும் சல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. முல்லை நிலத்து மக்களாகிய ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம்பெற்றது. தற்போது சல்லிக்கட்டில் ஆயர் மட்டுமின்றிப் பல திறத்தவரும் பங்கேற்கிறார்கள். இருப்பினும் சல்லிக்கட்டில் வென்றவர் பணமுடிப்பினைப் பரிசாகப் பெறுதல் ஆயரிடம் பெரும்பான்மையாக உள்ளது. சல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழா போல் கொண்டாடப்படுகிறது. ஏறு தழுவுதல் விழா தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் சல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிபாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும், மழையில்லா வறட்சிக் காலங்களிலும், பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும். இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று சல்லிக்கட்டுகிறோம் என்பதே வேண்டுகோளாய் அமைகிறது.
மற்ற நாடுகளில் காளைப்போர்
ஸ்பெயின், போர்ச்சுகல், மெக்சிகோ நாடுகளில் காளைப் போர் முக்கியமான தேசியப் பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டிச் சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைப் போரின் நோக்கம். இம்மேனாட்டுக் காளைப் போரும் சல்லிக்கட்டும் ஒன்று போலத் தோன்றினாலும், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை ஆகும்.
தென்மாவட்டங்களின் பங்கேற்பு
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் போன்ற இடங்களிலும், சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டைமாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது. மேலும், திருச்சி, தேனி போன்ற தென் மாவட்டங்களிலும் இவ்விளையாட்டு நிகழ்கிறது.
உலக அளவில் சிறப்பு வாய்ந்தது அலங்காநல்லூர் சல்லிக்கட்டு ஆகும். ஆண்டுதோறும் இவ்விழாவைக் காண வெளிநாட்டவர் உட்பட பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் அலங்காநல்லூரில் குவிவது வழக்கம்.
Wednesday, January 15, 2020
ஆசிரியர்கள் ஆசிரியைகளின் நலனுக்கான முக்கிய குறிப்புகள்
1. வகுப்பில் நிற்கும் போது நேராக நிற்க
வேண்டும். (Maintain a good posture).
2.ஆசிரியர்கள் /ஆசிரியைகள் பள்ளி க்கு வரும் அவசரத்தில் பொதுவாக காலை உணவை சாப்பிடாமலேயே /தவிர்த்து வருவதினால் அவர்களின் உடல் எடை குறைந்து எளிதில் நோயுற முடியும். எனவே அவர்கள் தங்களது வயதுக்கு ஏற்ற உடலின் எடை தங்களுக்கு உள்ளதா என்று அடிக்கடி சோதனை செய்து கொள்ள வேண்டும்.( Keeping a check on your weight ).
3.தொடர்ந்து ஒரேயிடத்தில் நிற்பதினாலோ அல்லது உட்கார்ந்து யிருப்பதினாலோ ஏற்படும் கழுத்து வலி, முதுகு வலி வருவதை தவிர்க்க தங்களால் செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் கழுத்து வலியையும் முதுகு வலியையும் ( neck and pack pain ) தவிர்க்க லாம்.
4.அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை நிற்கும் நிலையை அல்லது அமர்ந்திருக்கும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். கைகால் களை நீட்டி உதைத்து சிறு பயிற்சியை மேற்கொள்ளுவது நலம். (Exercise regularly)
5. நாள் முழுவதும் தொடர்ந்து சத்தமாக பேசுவதினால் கற்றுக் கொடுப்பதினால் தொண்டை வறண்டு விடும். தொண்டை வலி தொண்டை புண் ஏற்படும். அதனால்
குரல் நாண்கள் (vocal chords)பாதிக்
கப்படும். இதை தவிர்க்க அடிக்கடி தண்ணீரை சிறிதளவு உறிஞ்சி குடிக்க வேண்டும்( take a sip of water frequently ).
6. தொடர்ந்து அதிக சத்தமாய் பேசாமல் , கொஞ்ச நேரம் வாய்க்கு ஓய்வு தரும் போது குரல் தொடர்பான பிரச்சினை
களை தவிர்க்கலாம்.(not talking loudly and give rest to your voice will avoid voice related problems).
7. ஒவ்வொரு ஆசிரியரும்/ஆசிரியையும் குறைந்த பட்சமாக எட்டு மணிநேரம் நன்கு தூங்கியெழும்போது அடுத்த நாள் அவர்கள் தாங்கள் புத்துணர்ச்சியுடன் யிருப்பதை அவர்கள் உணருவார்கள்.( Getting sleep for eight hours so as to fresh for next day).
8. ஆசிரியர்கள்/ஆசிரியைகள் தங்களது கால்களுக்கு ஏற்ற பொருத்தமான வசதியான செருப்புகளை, ஷூக்களை (Comfortable chappals /shoes ) அணிவதன் மூலமாக கணுக்கால் சுளுக்கு ,கால் வலி (ankle sprain & foot pain ) ஆகியவைகளை தவிர்க்கலாம்.
- இந்த பதிவு ஒரு ஆங்கில செய்தித்தாளில் வந்த " Appreciating Mentors : Teachers, it is important to take care of yourselves " என்ற கட்டுரையின் அடிப்படையில் எழுதப்பட்ட தாகும்.
வேண்டும். (Maintain a good posture).
2.ஆசிரியர்கள் /ஆசிரியைகள் பள்ளி க்கு வரும் அவசரத்தில் பொதுவாக காலை உணவை சாப்பிடாமலேயே /தவிர்த்து வருவதினால் அவர்களின் உடல் எடை குறைந்து எளிதில் நோயுற முடியும். எனவே அவர்கள் தங்களது வயதுக்கு ஏற்ற உடலின் எடை தங்களுக்கு உள்ளதா என்று அடிக்கடி சோதனை செய்து கொள்ள வேண்டும்.( Keeping a check on your weight ).
3.தொடர்ந்து ஒரேயிடத்தில் நிற்பதினாலோ அல்லது உட்கார்ந்து யிருப்பதினாலோ ஏற்படும் கழுத்து வலி, முதுகு வலி வருவதை தவிர்க்க தங்களால் செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் கழுத்து வலியையும் முதுகு வலியையும் ( neck and pack pain ) தவிர்க்க லாம்.
4.அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை நிற்கும் நிலையை அல்லது அமர்ந்திருக்கும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். கைகால் களை நீட்டி உதைத்து சிறு பயிற்சியை மேற்கொள்ளுவது நலம். (Exercise regularly)
5. நாள் முழுவதும் தொடர்ந்து சத்தமாக பேசுவதினால் கற்றுக் கொடுப்பதினால் தொண்டை வறண்டு விடும். தொண்டை வலி தொண்டை புண் ஏற்படும். அதனால்
குரல் நாண்கள் (vocal chords)பாதிக்
கப்படும். இதை தவிர்க்க அடிக்கடி தண்ணீரை சிறிதளவு உறிஞ்சி குடிக்க வேண்டும்( take a sip of water frequently ).
6. தொடர்ந்து அதிக சத்தமாய் பேசாமல் , கொஞ்ச நேரம் வாய்க்கு ஓய்வு தரும் போது குரல் தொடர்பான பிரச்சினை
களை தவிர்க்கலாம்.(not talking loudly and give rest to your voice will avoid voice related problems).
7. ஒவ்வொரு ஆசிரியரும்/ஆசிரியையும் குறைந்த பட்சமாக எட்டு மணிநேரம் நன்கு தூங்கியெழும்போது அடுத்த நாள் அவர்கள் தாங்கள் புத்துணர்ச்சியுடன் யிருப்பதை அவர்கள் உணருவார்கள்.( Getting sleep for eight hours so as to fresh for next day).
8. ஆசிரியர்கள்/ஆசிரியைகள் தங்களது கால்களுக்கு ஏற்ற பொருத்தமான வசதியான செருப்புகளை, ஷூக்களை (Comfortable chappals /shoes ) அணிவதன் மூலமாக கணுக்கால் சுளுக்கு ,கால் வலி (ankle sprain & foot pain ) ஆகியவைகளை தவிர்க்கலாம்.
- இந்த பதிவு ஒரு ஆங்கில செய்தித்தாளில் வந்த " Appreciating Mentors : Teachers, it is important to take care of yourselves " என்ற கட்டுரையின் அடிப்படையில் எழுதப்பட்ட தாகும்.
Subscribe to:
Posts (Atom)
தமிழ்த்துகள்
-
9th Tamil Model Notes Of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு ...
-
8th Tamil Model Notes Of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு ...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பாடம் தமிழ் 3.அல...
-
7th Tamil Model Notes Of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பருவம் 3 3.அலகு 1 4....
-
6th Tamil Model Notes Of Lesson ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பருவம் 3 3.அலகு 1 4...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
நாள் - 20-01-2025 - 24-01-2025 வகுப்பு - 10 பாடம் - தமிழ் தலைப்பு - திருப்புதல் முதல் திருப்புதல் தேர்விற்கான பயிற்சி வினாக்கள் 1. சான்ற...
-
9th Tamil Model Notes Of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 27-01-2025 - 31-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
6th Tamil Model Notes of Lesson ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பருவம் 3 3.அலகு 1...
-
7th Tamil Model Notes of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பருவம் 3 3.அலகு ...
Blog Archive
-
▼
2020
(1294)
-
▼
January
(62)
- பத்தாம் வகுப்பு தமிழ் PTA வினாத்தாள்6
- பத்தாம் வகுப்பு தமிழ் PTA வினாத்தாள்5
- பத்தாம் வகுப்பு தமிழ் PTA வினாத்தாள்4
- பத்தாம் வகுப்பு தமிழ் PTA வினாத்தாள்3
- பத்தாம் வகுப்பு தமிழ் PTA வினாத்தாள்2
- பத்தாம் வகுப்பு தமிழ் PTA வினாத்தாள்1
- மாதிரி பாடக்குறிப்பு தமிழ் வகுப்பு 7 பருவம் 3 இயல் 2
- வகுப்பு 9 இயல் 5 சொல் இலக்கணம்
- பத்தாம் வகுப்பு தமிழ் தருமபுரி வினாத்தாள் முதல் தி...
- பிறந்தநாள் விழாவிற்கு நண்பனை அழைத்துக் கடிதம் - வக...
- மலாலா - MALALA - வகுப்பு 9 தமிழ் இயல் 5 கல்வியிற்ச...
- அறம் செய விரும்பு - ஆறாம் வகுப்பு தமிழ்க்கட்டுரை
- தேசியஒருமைப்பாடு - ஆறாம் வகுப்பு தமிழ்க்கட்டுரை pd...
- ஐந்தாம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாள் pdf
- நாட்டமறித் தேர்வு மாதிரி வினாத்தாள் Aptitude test ...
- நாட்டமறித் தேர்வு APTITUDE TEST INSTRUCTIONS PDF
- பத்தாம் வகுப்பு தமிழ் நூல் -ஆசிரியர்-சிறப்புப் பெய...
- திருப்புதல் 2 - வகுப்பு 10 தமிழ் தஞ்சாவூர் வினாத்த...
- பத்தாம் வகுப்பு தமிழ் தஞ்சாவூர் வினாத்தாள் திருப்ப...
- பத்தாம்வகுப்பு தமிழ் - கற்றல் குறைவான மாணவர்களுக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் நாமக்கல் வினாத்தாள் PDF முதல...
- மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 7 பருவம் 3 இயல் 1 விர...
- பத்தாம் வகுப்பு தமிழ் திருநெல்வேலி வினாத்தாள் முதல...
- Income tax automatic calculator new version 20.0 x...
- பத்தாம் வகுப்பு தமிழ் தூத்துக்குடி வினாத்தாள் முதல...
- பத்தாம் வகுப்பு தமிழ் நாகப்பட்டினம் வினாத்தாள் முத...
- பத்தாம் வகுப்பு தமிழ் திருவண்ணாமலை வினாத்தாள் முதல...
- பத்தாம் வகுப்பு தமிழ் பெரம்பலூர் வினாத்தாள் முதல் ...
- பத்தாம் வகுப்பு தமிழ் தேனி வினாத்தாள் pdf முதல் தி...
- குடியரசு நாள் விழா உரை வீச்சு REPUBLIC DAY SPEECH ...
- பத்தாம் வகுப்பு தமிழ் மதுரை முதல் திருப்புதல் தேர்...
- பத்தாம் வகுப்பு தமிழ் விருதுநகர் முதல் திருப்புதல்...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 தமிழ்ச்சொல் வளம் TENT...
- HIGH TECH LAB USER MANUAL PDF
- பயிற்சித் தேர்வு வினாத்தாள் பத்தாம் வகுப்பு தமிழ் ...
- ஏறு தழுவுதல்
- ஆசிரியர்கள் ஆசிரியைகளின் நலனுக்கான முக்கிய குறிப்ப...
- அணி இலக்கணம் வகுப்பு 8 இயல் 9 ANI ILAKKANAM 8TH TA...
- யாப்பு இலக்கணம் வகுப்பு 8 இயல் 8 TAMIL ILAKKANAM Y...
- வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் வகுப்பு 8...
- தமிழ் இலக்கணம் வகுப்பு 8 இயல் 6 புணர்ச்சி 8TH TAMI...
- தமிழ் இலக்கணம் வகுப்பு 8 இயல் 5 தொகைநிலை,தொகாநிலைத...
- தமிழ் இலக்கணம் வகுப்பு 8 இயல் 4 வேற்றுமை 8TH TAMIL...
- தமிழ் இலக்கணம் வகுப்பு 8 இயல் 3 எச்சம் 8TH TAMIL I...
- வகுப்பு 8 தமிழ் இலக்கணம் இயல் 2 வினைமுற்று VINAIMU...
- தமிழ் வகுப்பு 8 இயல் 1 இலக்கணம் எழுத்துகளின் பிறப்...
- தைப்பொங்கல்
- ஏழாம் வகுப்பு பருவம் 3 தமிழ் இலக்கணம் 3 இயல்கள்
- போகி - BHOGI
- மெல்லக் கற்போர் வழிகாட்டி pdf தமிழ் வகுப்பு 10 slo...
- மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 7 பருவம் 3 இயல் 1 உரைநடை
- திருவிழாவைக் காண உறவினருக்கு அழைப்புக் கடிதம் வகுப...
- ஒற்றுமையே உயர்வு கட்டுரை வகுப்பு 7 பருவம் 3
- என்னைக் கவர்ந்த நூல் கட்டுரை pdf வகுப்பு 7 பருவம் ...
- உழைப்பே உயர்வு கட்டுரை வகுப்பு 8 இயல் 9
- புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினருக்குக் கடிதம் வ...
- நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு - கட்டுரை ...
- புதுமை விளக்கு மனப்பாடப்பாடல் வகுப்பு 7 பருவம் 3
- ஒன்றேகுலம் மனப்பாடப்பாடல் வகுப்பு 8 இயல் 8 தமிழ் 8...
- படைவேழம் மனப்பாடப்பாடல் வகுப்பு 8 இயல் 7 PADAI VEZHAM
- கலைச்சொல் அறிவோம் - பத்தாம் வகுப்பு தமிழ் KALAICHO...
- மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 7 தமிழ் பருவம் 3 இயல்...
-
▼
January
(62)