கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, September 09, 2020

இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும் வகுப்பு 9 இயல் 4 IYANTHIRANGALUM INAIYAVALI PAYANPADUM 9TH TAMIL

 இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்

1. ஒளிப்படி இயந்திரம் (photo copier) :
இதை ஜெராக்ஸ் (Xerox) என்று பொதுவாகக் கூறுவது புழக்கத்தில் உள்ள சொல்.
நியூயார்க்கைச் சேர்ந்த காப்புரிமைச் சட்ட வல்லுநரும் பகுதிநேர ஆய்வாளருமான செஸ்டர் கார்ல்சன் கந்தகம் தடவிய துத்தநாகத் தட்டைக்கொண்டு, 1938 இல் உலகின் முதல் ஒளிப்படியை எடுத்தார்.
கிரேக்க மொழியில் சீரோகிராஃபி என்றால் உலர் எழுத்துமுறை என்று பொருள்.
அவரால் 1959 இல் இந்த இயந்திரம் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
2. தொலைநகல் இயந்திரம் (Fax):
1846 இல் ஸ்காட்லாந்துக் கண்டுபிடிப்பாளர் அலெக்சாண்டர் பெயின் என்பார் குறியீடுகளை மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றிகண்டு அதற்குரிய காப்புரிமையைப் பெற்றார்.
இத்தாலி நாட்டு இயற்பியல் அறிஞர் ஜியோவான்னி காசில்லி பான்டெலிகிராஃப் என்ற தொலைநகல் கருவியை உருவாக்கினார்.
அவருடைய கண்டுபிடிப்பைக் கொண்டு 1865 இல் பாரிஸ் நகரிலிருந்து லியான் நகரத்துக்குத் தொலைநகல் சேவை தொடங்கப்பட்டது.
தொலைபேசியைக் கண்டுபிடிப்பதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே இந்நிகழ்வு நடந்தது.
1985 இல் அமெரிக்காவின் ஹாங்க் மாக்னஸ்கி என்பவர் கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தார். அந்த இயந்திரத்திற்கு காமா ஃபேக்ஸ் என்று பெயரிட்டு விற்பனைக்குக் கொண்டு வந்தார்.
3. நான் இங்கிலாந்திலோ உலகின் எந்த மூலையிலோ இருந்தாலும் என் வங்கிப் பணத்தை எடுத்துப் பயன்படுவதற்கொரு வழியைச் சிந்தித்தேன். சாக்லேட்டுகளை வெளித்தள்ளும் இயந்திரத்திலிருந்து யோசனை கிடைத்தது.; அங்கு சாக்லேட் இங்கே பணம். - ஜான் ஷெப்பர்டு பாரன்.
4. தானியக்கப் பண இயந்திரம் (Automated Teller Machine):
இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளரான ஜான் ஷெப்பர்டு பாரன் என்பவர் தலைமையிலான குழுவொன்று பார்க்லேஸ் வங்கிக்காக இலண்டனில் 1967 ஜூன் 27 இல் தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியது.
5. ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு என்பவர் 1962 இல் கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றிருந்தார். ஆரம்பத்தில் பெட்ரோல் தருவதற்குப் பயன்படுத்தவே காப்புரிமை தரப்பட்டது. அதுவே பின்னர் அனைத்துப் பயன்பாட்டிற்குமான காப்புரிமையாக மாற்றப்பட்டது.
6. இணைய வணிகம்:
இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஆல்ட்ரிச் 1979 இல் இணைய வணிகத்தைக் கண்டுபிடித்தார்.
1989 இல் அமெரிக்காவில் இணையவழி மளிகைக்கடை தொடங்கப்பட்டது.
1991 இல் இணையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.
7. 1990 இல் டிம் பெர்னெர்ஸ் லீ வையக விரிவு வலை வழங்கியை (WWW-Server) உருவாக்கினார்.
8. " இணையத்தில் இது இல்லையெனில் உலகத்தில் அது நடைபெறவேயில்லை!" என்பது லீயின் புகழ்பெற்ற வாசகம்.


















































































தமிழ்த்துகள்

Blog Archive