கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, November 16, 2022

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு விருதுநகர் 9th tamil question paper second mid term exam

 ஒன்பதாம் வகுப்பு 

தமிழ் 

இரண்டாம் இடைப்பருவத்தேர்வு 

வினாத்தாள்


விடைக்குறிப்பு 

விருதுநகர் மாவட்டம்


சரியான விடை

5✖1=5

1.ஈ. எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை

2.௧ அ-3, ஆ-4, இ-1, ஈ-2

3.ஈ. கெடுதல்

4.அ. மாமல்லபுரம்

5. இ.கடல்


எவையேனும் நான்கு

4✖2=8


6. 

o   பெண்கள் முன்னேற்றத்தின் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம்.

o   எனவே அதைத் தடுக்க 1929 ஆம் ஆண்டு சாரதா சட்டம் இயற்றப்பட்டது.


7.

திருக்குறள், அக்பர் பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், அக்னிச்சிறகுகள்.


8.

போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும்.

 அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப்பெறும்.

தமிழரின் தொடக்ககாலச் சிற்பக்கலைக்குச் சான்றாக இதையும் 

குறிப்பிடலாம்.


9.

   சோழர்காலத்தில் மிகுதியான செப்புத் திருமேனிகள் உருவமைக்கப்பட்டன.

   கடவுளின் உருவங்களும், மனித உருவங்களும் மிகுந்த கலைநுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டன.

சோழர்காலம் செப்புத்திருமேனிகளின் பொற்காலம் என்று அழைக்கப்படும் அளவிற்கு அவை அழகுற அமைந்துள்ளன.


10. கட்டாய வினா

அன்புநாண்   ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண்.



எவையேனும் 5

5✖2=10


11. பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.


12.அ தன்னார்வலர்

ஆ. புணர்ச்சி


13.

மொழித்தேனைப் பவளவாய் திறந்து படித்தாள்.


14. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.


15. 

அலுவலர் வந்ததால் அனைவரும் பதற்றம் அடைந்தனர்.


16. இயல்புப் புணர்ச்சி

விகாரப்புணர்ச்சி


எவையேனும் 2

2✖3=6


17.

ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தியார், வெண்ணிக்குயத்தியார், பொன்முடியார், அள்ளூர் நன்முல்லையார், நக்கண்ணையார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார், காவற்பெண்டு, நப்பசலையார்.


18. o   ஆடும் இளம் பெண்கள் கைகளில் கதிரவன் போன்ற ஒளியை உடைய விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர்கொண்டு அழைக்கிறார்கள்.

o   மதுரையை ஆளும் மன்னனாம் கண்ணன் பாதுகைகளை அணிந்துகொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்.

o   மத்தளம் முதலான இசைக்கருவிகள் முழங்க வரிகளை உடைய சங்குகளை நின்று ஊதுகின்றனர்.

o   அத்தை மகனும் மது என்ற அரக்கனை அழித்தவனுமான கண்ணன் முத்து மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான்.

o   இக்காட்சியைக் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்.


19. o   இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் மருத்துவர் முத்துலட்சுமி அவர்கள்.

o   இவரே சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராகவும் சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் ஆவார்.

o   தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமாக இருந்தவர்.

o   அடையாற்றில் 1930 இல் ஔவை இல்லம், அடையாற்றில் 1952 இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர் இவர்தான்.


20.

5 மதிப்பெண்கள்


சிறுபஞ்சமூலம்

பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,

மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,

விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு

உரையாமை செல்லும் உணர்வு.                                                       - காரியாசான்

2✖8=16


நெடுவினா

21

22


பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

Blog Archive