ஏழாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
28-11-2022 முதல் 2-12-2022
2.பருவம்
2
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
கலை வண்ணம் –
உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
பேசும்
ஓவியங்கள்
6.பக்கஎண்
53 - 58
7.கற்றல் விளைவுகள்
T-706 பல்வேறு கலைகளில் (கைத்தொழில், கட்டிடக்கலை,
உழவுத்தொழில், நாட்டியம் போன்றவை)
பயன்படுத்தப்படும் சொற்கள் பற்றி அறிய பேரார்வம் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்ள
முயலுதல்.
8.திறன்கள்
ஓவியக்கலையின்
மேன்மையையும் அது மனித வாழ்வோடு இணைந்துள்ள நுட்பத்தையும் உணர்ந்து போற்றும்
திறன்.
9.நுண்திறன்கள்
ஓவியக்கலையை
அறிதல்.
ஓவிய வகைகளை
அறிதல்.
10.கற்பித்தல்
உபகரணங்கள்
இணைய வளங்கள்
தமிழ்த்துகள்: ஓவியத்தைக் குறிக்கும் சொற்கள் OVIYAM TAMIL
WORDS OF DRAWING (tamilthugal.blogspot.com)
11.ஆயத்தப்படுத்துதல்
பிடித்த
கலைகளைக் கூறச்செய்தல்.
மாணவர்கள்
அறிந்த ஓவிய வகைகளைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
ஓவியம் பற்றிக்
கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல்
கற்பித்தல் செயல்பாடுகள்
குகை ஓவியம், சுவர் ஓவியம், துணி ஓவியம் குறித்து விளக்குதல். கலையை உணர்தல்.
தமிழர்களின் ஓவியக்கலையை உணர்த்துதல். ஓலைச்சுவடி ஓவியம், செப்பேட்டு ஓவியம், தந்த
ஓவியம், கண்ணாடி ஓவியம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். தாள் ஓவியம்,
கருத்துப்படம், நவீன ஓவியம் குறித்து விளக்குதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர்
உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். ஓவியக்கலையை உணர்தல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
ஓவிய வகைகளை அறியச் செய்தல். ஓவியக்கலைகள் குறித்து
விளக்குதல்.
15.மதிப்பீடு
LOT – நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம்
..............................
கருத்துப்படங்களை
அறிமுகப்படுத்தியவர் ....................................
MOT
– ஓவியங்களின் வகைகள் யாவை?
கேலிச்சித்திரம் பற்றி எழுதுக.
HOT – தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுவது ஏன்?
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும்
பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
பென்சில் ஓவியம் வரைந்து வருதல்.
இயற்கைக் காட்சி வரைந்து வருதல்.