எட்டாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
28-11-2022 முதல் 2-12-2022
2.பாடம்
தமிழ்
3.அலகு
7
4.பாடத்தலைப்பு
பாருக்குள்ளே
நல்ல நாடு – உரைநடை உலகம், விரிவானம், கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
பாரத ரத்னா
எம்.ஜி.இராமச்சந்திரன், அறிவுசால் ஔவையார், வல்லினம் மிகும் இடங்களும் மிகா
இடங்களும்
6.பக்கஎண்
150 - 166
7.கற்றல் விளைவுகள்
T-809 படித்தனவற்றைப் பற்றி
நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்,
8.திறன்கள்
நாட்டுக்கு
உழைத்த நல்லோரின் வாழ்க்கையை அறிந்து பின்பற்றுதல்.
நாடகத்தைப்
படித்துக் கதையைப் புரிந்துகொள்ளும் திறன் பெறுதல்.
வல்லினம் மிகும்
இடங்கள், மிகா இடங்கள் அறிந்து பயன்படுத்துதல்.
9.நுண்திறன்கள்
எம்.ஜி.இராமச்சந்திரன்
குறித்து அறியும் திறன்.
ஔவையார்
குறித்து அறியும் திறன்.
10.கற்பித்தல்
உபகரணங்கள்
இணைய வளங்கள்
11.ஆயத்தப்படுத்துதல்
எம்.ஜி.ஆர்.
குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.
ஔவையார்
குறித்து மாணவர்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
வல்லினம் மிகும்
இடங்களை அறிமுகப்படுத்துதல்.
வல்லினம் மிகா
இடங்களை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல்
கற்பித்தல் செயல்பாடுகள்
எம்.ஜி.இராமச்சந்திரன் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல். ஔவையார்
நாடகத்தின் கதையைக் கூறுதல். புலவர்களின் திறமையை உணரச் செய்தல். வல்லினம் மிகும்
மிகா இடங்களை உதாரணங்களுடன் விளக்குதல்.
மனவரைபடம் மூலம்
பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர்
உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப்
பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
எம்.ஜி.இராமச்சந்திரன் குறித்துக் கூறுதல். தமிழ்ப்புலவர்கள்
குறித்துக் கூறுதல். வல்லினம் குறித்துக் கூறுதல்.
15.மதிப்பீடு
LOT – ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்
..............................
எம்.ஜி.ஆருக்கு
அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம் .....................................
MOT
– சந்திப்பிழை என்றால் என்ன?
எம்.ஜி.ஆர். நாடகத்துறையில் ஈடுபடக் காரணம் என்ன?
HOT
– அறிவுசால் ஔவையார் நாடகத்தைக் கதையாக எழுதுக.
வல்லினம் மிகாத்
தொடர்கள் 5 எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
ஔவையாரின் பாடல்களைப் பட்டியலிடுக.
எம்.ஜி.ஆர் குறித்து இணையம் மூலம் அறிதல்.